ஹாய் பிரெண்ட்ஸ்,
சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது.
இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு. 25 and 26 பகுதிகளோடு வந்துவிட்டேன். வேலை அதிகமிருப்பதால் பதிவுகள் என்றாவது தாமதமானால் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
திருமணம் முடிந்தவுடன் ஜிஷ்ணு முதன் முறையாக அவனது சரயுவுடன் பேசுகிறான். சரவெடி சொன்ன வார்த்தைகள் ஜிஷ்ணுவின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. சரயுவை நினைத்து விஷ்ணு/ ஜிஷ்ணு மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வது ‘நீக்கோசம் எதைனா சரி’. கட்டாயமும் வற்புறுத்தலும் அவன் உடலை வேண்டுமானால் ஜமுனாவுக்குப் பெற்றுத் தரலாம், ஜிஷ்ணுவின் மனதை? உடலால் ஆண், பெண் என்று இயற்கை பிரித்திருந்தாலும் மனம் என்பது இருவருக்கும் ஒன்றுதான். காதலில்லா வாழ்வு பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் வேதனையே. ஜமுனாவுடனான அவனது வலி நிறைந்த வாழ்க்கையை நீங்களும் உணருவீர்கள் என்று நம்புகிறேன்.
படிங்க படிச்சுட்டு உங்க உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்,
தமிழ் மதுரா.

Tamil Mathura
இரண்டு பகுதிகளைப் பற்றிய எண்ணங்களைத் தனித் தனியாகப் பகிர்ந்தால் மகிழ்வேன்.
தமிழ் மதுரா