Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’

22 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

“எக்ஸாம் ரிசல்ட்க்கு வெயிட் பண்ணுற மாதிரி ஏன் இவளோ டென்ஷன இருக்க…ஜஸ்ட் பீ ரிலாக்ஸ்…”

“கிண்டல் பண்ணாத ஆதி….அக்கா ஓகே சொல்லிடுவாள்ல? சிவா எதுவும் கோபப்பட்டு வரமாட்டான்ல?”

வெளியே வந்த சிவா “அதான் நீ அவ்ளோ சொல்லி அனுப்பிச்சியே…அதுக்கப்புறமும் நான் எப்படி பெயில் ஆவேன்..”

மித்து ஆச்சரியமாக “அப்போ ஓகே ஆகிடுச்சா?” என

சந்தியா சிவா இருவரும் சிரிக்க

மித்து “தேன்ங் காட்….” என ஓடிச்சென்று இருவரையும் கட்டிகொண்டவள் சந்தியாவிடம் “யூ சோ ஸ்வீட் கா…” என முத்தமிட சிவாவிடம் திரும்பி “ஆனா சிவா, கஷ்டமேயில்லாம இந்த வீட்டுக்கே மாப்பிளை ஆகிட்ட..”

சிவா “ம்ம்ம்….உன்கிட்ட நடந்த இன்டெர்வியூ விட உன் அக்காகிட்ட பரவால்ல..” அவள் செல்லமாக அடித்துவிட்டு “சரி எப்போ மேரேஜ் பிளான் பண்ணிருக்கிங்க?”

சந்தியா சிவாவை பார்த்துவிட்டு “அது உன் இஷ்டப்படியே நடக்கட்டும்னு விட்டுட்டோம்..நீ எப்போ சொன்னாலும் எங்களுக்கு ஓகே..” என மித்து ஆச்சரியமாக “நிஜமாவா?..அப்போ சீக்கிரம்..” என்றவள் பாதியில் நிறுத்திவிட்டு மித்ரனை பாவமாக பார்க்க அதை புரிந்துகொண்டவன் புன்னகையுடன் “இருந்து கல்யாணம் முடிச்சிட்டே போலாம்…” என்றதும் “தேங் யூ சோ மச் ஆதி..லவ் யூ..” என கட்டிகொண்டாள்..

வெங்கடாச்சலம் கவிதாவிடம் ஆசீர்வாதம் வாங்க அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..

 

நண்பர்கள் அனைவர்க்கும் சொல்ல அடுத்த 2 வாரத்தில் சந்தியா சிவா திருமணம் நடந்தேறியது..”என்ன இருந்தாலும் உனக்கு மித்ரன் தான் ஸ்பெஷல்ல..இவளோ பிரெண்ட்ஸ் நாம எல்லாம் இருந்தும் சிவா ஆதிகிட்ட தான் அவன் லவ் விஷயத்தை சொல்லிருக்கான்..அவங்களுக்குள்ள என்னவோ ஓடுதுனு சொன்னா யாராவது நம்புறீங்களா?” என அவள் மீண்டும் கிளப்பிவிட

சிவா “டேய் அப்டி இல்லடா..மித்ரன் பாத்ததும் புரிஞ்சுகிட்டான்டா..அவனா தான் என்கிட்ட கேட்டான்..நான் ஆமானு சொன்னேன்..அப்புறம் தான் எல்லாமே பேசுனோம்…நானா சொல்லல…”

“அப்டியான்னு கேட்டதுக்கே நீ எல்லாமே சொல்லிட்ட…? உன் பீலிங்க்ஸ் அவனுக்கு மட்டும் தான் புரியிதுனு சொல்ல வரியா?” என குணா கேட்க “உனக்கு அவன் தான் ஸ்பெஷல்..” என சந்தியா உட்பட அனைவரும் கிண்டல் செய்ய

 

மித்து தனியே வந்ததும் “எல்லாம் உன் வேலைதானா? எப்படி கிண்டல் பண்றானுங்க பாரு..” என இருவரும் மாற்றி மாற்றி கத்த என்றும் இல்லாத இன்று அவள் அமைதியாக கேட்டுகொண்டிருக்கவே சந்தேகத்துடன் இருவரும் மௌனமாகி திரும்பி பார்க்க அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்..

“திட்றதுல கூட அப்டி ஒரு வேவ்லென்த் உங்களுக்குள்ள..நீ நிறுத்துனதும் அவன் கத்துறான்..அவன் முடிச்சதும் நீ..” என நகர்ந்துவிட மித்து கெத்தாக “ஓகே நீங்க 2 பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருங்க..எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு..” என மெதுவாக வெளியே வர …சிவா, மித்ரன் பெருமூச்சுடன் வெளியே வந்தனர்..

சிவா “சரி நான் சொன்னேன்..அப்டிபாத்தா 4 வருஷம் முன்னாடி அவன் தான் ஊரைவிட்டு போகும்போது என்னை கூப்பிட்டு முதல பேசுனான்…சொல்லிட்டு போனான்..அப்போ என்ன சொல்லுவீங்க?” என ஒரு வேகத்தில் சொல்லிவிட அதன்பின்னே தான் கூறியதை உணர்ந்தவன் திரும்பி பார்க்க சுற்றி இருந்த அனைவரும் அவனை நம்பாமல் பார்க்க, அப்டியே மித்ரனை பார்க்க அவன் மௌனமாக உள்ளே சென்றதும் ராஜீவ், மகேஷ் “இவளோ நாள் கூட டவுட் தான்..இனி கன்பார்ம்..” என

குணா “துரோகிங்களா…உங்களை இரு மித்துகிட்ட சொல்ற..” என அறைக்குள் நுழைய சிவா உட்பட அனைவரும் “டேய் அவகிட்ட வேண்டாம் சொன்னா கேளு..” என முடிப்பதற்குள் “மித்து, இதை கேட்டியா? மித்ரன் ஊரை விட்டு போகும்போது சிவாகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான்….2 பேரும் நம்மகிட்ட மறச்சிட்டானுங்க…” என்றதும் சிவா மித்ரன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள மித்து கையில் புடவைகளை எடுத்துபடி அறையை விட்டு வெளியே வந்தவள் அனைவரின் அதிர்ந்த முகத்தை பார்த்தபடி  “என்னாச்சு எல்லாரும் பேயறைஞ்ச மாதிரி இருக்கிங்க? ம்ச்…என்னவ?..ஆதி,சிவா இது இரண்டுல எது எனக்கு எது அக்காவுக்கு…சூஸ் பண்ணுங்க..”

குமார் சிவாவிடம் மெதுவாக “டேய் அவ கவனிக்கல போல…பதில் சொல்லு..” என தட்ட அவன் “ஆ..இது சந்தியாக்கு..இது உனக்..”

மித்து “ஆ..நீ உன் பொண்டாட்டிக்கு மட்டும் சூஸ் பண்ணு..எனக்கு எப்போவுமே ஆதி தான் சூஸ் பண்ணனும்…” என்றதும்

ஆதி முன்னே வந்து புடவையை எடுத்து தர நைஸ்..மாத்திட்டு வரேன்…சீக்கிரம் ரெடி ஆகுங்க..கோவிலுக்கு போகணும்ல.. என அவள் உள்ளே சென்றுவிட அனைவரும் பெருமூச்சுவிட்டபடி “நல்லவேளை கேட்கல…எல்லா இந்த குணாவால அடிங்கடா அவனை..”

“டேய் நீங்க தானடா மறைச்சிங்க..என்னை எதுக்கு அடிக்கிறிங்க..”

“டேய் மத்த விஷயம் கிண்டல் பண்றது வேற..ஆனா இது தெரிஞ்சா அவ பீல் பண்ணமாட்டாளா? சிவாகிட்ட நம்மகிட்ட சொல்லி எவ்ளோ பீல் பண்ணிருப்பா..அவனை பத்தி விசாரிக்க முடியுமா, அவன் பேசுனானா? ஏன் இங்கிருந்து அதுவும் சொல்லாம போனான்னு ஏதாவது தெரிஞ்சதானு  எப்படி எல்லாம் கேட்டிருப்பா..? அப்போ எல்லாம் விட்டுட்டு இத்தனை வருஷம் கழிச்சு சிவாக்கு விஷயம் தெரிஞ்சிருக்குனு சொன்னா இவனை அவனும் பேசிருக்கானுங்கனு தெரிஞ்சா அவ இவங்களோட சண்டை போடமாட்டாளா..”

குணா திருதிருவென முழிக்க “நல்லா முழி..உங்க அப்பா உனக்கு இந்த வருஷம் கல்யாணம் வேற பண்ணனும்னு சொல்லறாரு..சரியான அவசரகுடுக்கடா நீ..” என ராஜீவ் சேர்ந்து திட்ட

சிவா “சரி விடுங்கடா…ஏதோ நல்ல நேரம் மித்து இவன் பேசுனதை கவனிக்கல..”

மகி மித்ரனை காட்ட அவன் மௌனமாக இருக்க அனைவரும் அவனிடம் “டேய் என்னாச்சு..அதான் அவ கேட்கலையே..எந்த பிரச்னையும் இல்லைடா..விடு..”

மித்ரன் “அவ கேட்டு சண்டை போட்டு இருந்தாகூட இவளோ கில்ட்டியா இருக்காது…அதோட அவ கண்டிப்பா கேட்டிருப்பானு தோணுது..”

“இல்லடா..அவ ஜாலியா தானே பேசிட்டு போனா..அவ கவனிச்சிருக்க மாட்டா..நீ எதுவும் நினைச்சுக்காத..” என

மித்ரன் ஒரு மெலிதான புன்னகையுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்..அனைவரும் வர கோவிலுக்கு சென்று வந்தனர்..இரண்டு நாட்கள் எப்படி போனது என தெரியாத அளவிற்க்கு மகிழ்ச்சியில் இருந்துவிட்டு அன்று மித்ரனும், மித்துவும் மீண்டும் கனடா திரும்பினர்..

சந்தியாவை 12த் எக்ஸாம் மட்டும் எழுதவைத்துவிட்டு காலேஜ் சேர்த்திவிட, அவளுக்கு பிடிச்சமாதிரி படிக்கட்டும், இன்னும் கொஞ்சம் உடம்பும் தேறட்டும்..தனி வீட்ல இருந்தா எனக்கும் அவளை தனியா விட்டுட்டோம்னு இருக்கும்..நான் இங்கேயே வந்து பாத்துக்கறேன்..அவளும் கொஞ்ச நாள் உங்ககூட இருந்த மாதிரி இருக்கும்..அவ படிப்பு முடிஞ்சப்புறம் வேணா வேற வீடு பாத்து கூட்டிட்டு போறேன்..என்று சிவா விட

கவிதா,வெங்கடாச்சலம் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

சந்தியா அறிவாள் ‘தான் அம்மா அப்பாவோட இருக்கவே முடியாத மாதிரி இருக்கு’ என வருத்தப்பட்டதை எண்ணி தனக்காக தான் அவன் இப்டி ஒரு முடிவெடுத்திருகிறான் என்பதை..அவளுக்கும் சிவாவை நினைத்து பெருமையாக இருந்தது..

அவ்வப்போது போன் கால், ஆரம்பித்தால் மணிக்கணக்கில் மித்துவுடன் பேசினர். மித்ரனோட ஒருசில வார்த்தைகள்..ஆனால் வேலையில் மித்து எந்த குறையும் வைக்கவில்லை…அவர்களுக்கு அடுத்தடுத்த ப்ராஜெக்ட் வர வாழ்க்கை எப்போதும் போல ஓடிகொண்டிருந்தது..

 

ஒரு நாள் மாலை மித்ரன் “தியா..”

“ம்ம்..”

“நாம இந்தியா போலாமா?”

“ஐ..எப்போ போறோம்..?”

“உன்கிட்ட கேட்டுட்டு தான் பிளான் பண்ணலாம்னு இருக்கேன்..ஏன்னா இந்த டைம் நாம போனா திரும்பி வரப்போறதில்லை…”

மித்து அதிர்ச்சியா, ஆச்சரியமா என பிரிக்க முடியாதபடி கண்களை விரித்தபடி “நாம அங்கேயே செட்டில் ஆகப்போறோமா?” என்றாள்..

அவன் புன்னகையுடன் தலையசைக்க அடுத்தநொடியே “ஆனா ஆதி, உனக்கு இங்கதானே கரீயர் நல்லாயிருக்கு..நிறையா ப்ரொஜெக்ட்ஸ்..எக்ஸ்போஸர் எல்லாம் இங்க தானே உனக்கு செட் ஆகிருக்கு…”

மித்ரன் அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி “பட் உனக்கு ஊர்ல எல்லார்கூடவும் இருக்கனுன்னு தானே ஆசை..”

மித்து புன்னகையுடன் “அட இதுக்கு போயா மாறுவாங்க..அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆதி..நீ எதுவும் நினைக்காத..”

“இருந்தாலும் நீ இங்க தனியா..”

அவள் நேரே வந்தவள் அவன் மடிமீது அமர்ந்து “உனக்கு என்னாச்சு…இங்க நான் தனியா இருக்கேனு யாரு சொன்னது..ஒர்க், பிரண்ட்ஸ், இந்த பெட்ஸ், அந்த செடி, நினைச்சா வெளில எப்போ வேணாலும் போலாம், ஒரு லாங் டிரைவ், யாரும் இங்க டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க, முக்கியமா நான் எவ்ளோ நேரம் தூங்குனாலும் யாருமே திட்ட மாட்டாங்க…எனக்கு இங்க செட் ஆகிடுச்சு..எல்லாத்துக்கும் மேல என்னை ரொம்ப பாசமா பக்குவமா பாத்துகிற என் ஆதி வேற என்ன வேணும்…இயர்லி ஒன்ஸ் ஆர் டிவைஸ் ஊருக்கு போறோம்..போதும்..அதோட இங்க வா என ரகசியம் போல “அப்போஅப்போ போனா என்னை எல்லாம் தான் வீட்ல மதிப்பாங்க..தினமும் பாக்குற மாதிரி இருந்தேன் என்னை மம்மி எல்லாம் கண்டுக்க கூட மாட்டாங்க..” என சொல்ல அவன் சிரித்ததும் மித்து “குட்” என தலையில் முட்டி “இப்டி ஹாப்பியா உனக்கு பிடிச்ச இடத்துல உன் லைப்க்கு எது தேவையோ அத பண்ணு..மத்தது எல்லாம் யோசிச்சு குழப்பிக்காத…” என அவள் எழப்போக

அவன் அவளை எழவிடாமல் மடியிலேயே இருத்திகொண்டான்.. அவளின் காதோரம் முடியை ஒதுக்கியபடியே “அதான் நானும் சொல்றேன்…எனக்கு தோணுறதை செய்ய சொன்ன..எனக்கு இது தான் சரினு படுது…ஊர்ல நாம ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணிடலாம்..சிவாகிட்ட பேசிருக்கேன்..அங்க போயிட்டு தான் செய்ய வேண்டியது நிறையா இருக்கு…அதுக்கு உன் சப்போர்ட் எனக்கு முழுசா வேணும்..அதான்..அங்கேயே போய்டலாமா தியா?” என அவள் கையை பிடித்தபடியே கேட்க சரி என தலையசைத்தாள்..ஆனால் கண்டிப்பாக வெளியே தான் வீடு எடுத்து தங்கவேண்டும் என கூறிவிட்டாள்..எதனால் அவள் இவ்வளவு தயங்குகிறாள் என்பது மட்டும் ஆதியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை..மற்றபடி சொன்னபடி அடுத்த ஒரு மாதத்திற்க்குள் இருவரும் இந்தியா வந்தனர்..ஆபீஸ்க்கு அருகிலேயே வீடு ஒன்றை பார்த்து இருந்தனர்..வாரம் ஒருமுறை வீட்டிற்க்கு வந்தனர்..மித்துவிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை..தோணும்போது எல்லாம் அம்மாவீட்டிற்கு போகலாம்..கம்பெனி, கன்ஸ்ட்ரக்ஷன் என வேலைகள் இருப்பினும் மித்ரன் ஆட்டோமொபைல் ஷாப் ஒன்றை ஆரம்பித்தான்…யாருக்காக எதர்க்காக இப்டி ஓடி ஓடி உழைக்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை..மித்துவும் எதுவும் குறை கூறவோ சண்டையிடவோ இல்லை…இரண்டரை வருடங்கள் ஓடியதே தெரியாத அளவிற்க்கு அனைத்தும் வேகமாக செல்ல மித்து கருவுற்றிருக்க முதல் 5 மாதம் மித்ரனே அவளுக்கு வேண்டும் அனைத்தையும் செய்தான்..முடிந்தளவு எப்போதும் உடன் இருந்தான்..அனைவரும் இப்போதான் அவன் வீட்ல இருக்கிறதையே பாக்க முடியுது என கிண்டல் செய்யும் அளவிற்க்கு அவன் கவனித்துகொண்டான்..அவன் புன்னகைப்பானே தவிர வேறு எதுவும் கூறமாட்டான்..

 

மித்து தானே அம்மா வீட்டிற்க்கு செல்லவேண்டுமென கேட்க மித்ரனும் சரி என்றான்.. மித்துவிடம் அவளது அம்மா, அக்கா, மகி அனைவரும் “என்ன டி அங்க போர் அடிக்கிதா? 5 மாசம் முடிஞ்சதுமே வந்துட்ட..?”

“எல்லா பொண்ணுங்களும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி தான்…அம்மா வீட்டுக்கு போக என்னடா காரணம் கிடைக்கும்னு பாத்திட்டு உடனே வந்திடவேண்டியது..” என கிண்டல் செய்ய

சிரித்தபடியே மித்து “அது..ஆதி எல்லா வேலையும் விட்டுட்டு இப்டி என்னவே பாத்துட்டு இருக்கிறது ஒரு மாதிரி இருந்தது அதான் இங்க வந்துட்டேன்..இப்போ அவன் கொஞ்சம் ரிலாக்ஸ வேலைய பாப்பான்ல..”

“என்ன டி ஒளற…மித்ரனே இப்போதான் உன்னை கவனிச்சுகிறான்…உன்கூட டைம் ஸ்பென்ட் பண்றான்.. நீ ஏன் அவொய்ட் பண்ணிட்டு வேண்டாம்னு வர..?”

“அப்டியில்லை…என்னால அவன் பகல்ல வேலை கெடறது, அதுக்காக அவன் சரியா தூங்காம ராத்திரி ரொம்ப நேரம் வேலை பாத்து உடம்பை கெடுத்துகிறது பிடிக்கில..நானே பாத்துகறேன்னு சொன்னாலும் தனியா என்னை விடமாட்டான்..சொல்றதை கேட்கவும் மாட்டான்..அதான் இங்க வந்துட்டா அந்த டென்ஷன் அவனுக்கு இருக்காதில்ல..” என

சந்தியா பெருமூச்சுடன் “அவனுக்காக பாத்துட்டு இங்க வந்தும் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு அவனையே நினச்சு திங் பண்ணிட்டு இருக்க…உன்னை வெச்சுகிட்டு என்ன பண்றதோ தெரில..ஆனா அவன் வேலை வேலைனு சுத்திட்டு இருக்கான்..யாருக்..”

“அக்கா ஆதி ரொம்ப நல்லவன்..என்மேல அவனுக்கு ரொம்ப பாசம்க்கா..ஆனா அதை அவனுக்கு எக்ஸ்பிரஸ் பண்ணத்தான் தெரியாது..வேலைல அவன் கவனம் செலுத்தினாலும் என்னை அவன் கவனிக்காம விட்டதில்லை..அவனை குறையே சொல்லமுடியாதுகா” என அவனுக்காக சப்போர்ட் பண்ண கவிதா, மகி சந்தியா மூவரும் தங்களுக்குள் பார்த்துகொண்டு சிரிக்க மித்து அருகே வந்த சந்தியா தங்கையை தன்னோடு அணைத்தபடி “நீ சந்தோசமா இருந்தா எங்களுக்கு அதுவேபோதும்டா..மத்தபடி உன் ஆதியை நாங்க எதுவும் குறை சொல்லலப்பா..” என கிண்டல் செய்யதபடியே சென்றனர்.

மித்ரன்  கொண்டுவந்து விட்டதும் அனைவரும் நினைத்தது எப்போதும் போல மாமியார் மாமனார் வீட்டிலேயே மித்ரன் தங்க யோசிப்பான். அவன் இத்தனை நாள் போல அவ்வப்போது வரப்போக பார்க்க என்றுதான் இருக்கப்போகிறான் என எண்ணினர்..ஆனால் மித்ரன் அங்கேயே தங்கினான்..ஆபிஸ் சென்றாலும் இடையில் வந்து பார்த்துவிட்டு போனான். அது எத்தனை வேலை இருந்தாலும் அவன் இடையில் வருவதை மாற்றிகொள்ளவில்லை.. அனைவருக்கும் மித்ரனா இப்டி என  ஆச்சரியமாக இருந்தது. எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்…தான் குழந்தை தன்னோட இரத்தம்னா மட்டும் பாசம் பொங்கிவந்திடும்..என கிண்டல் செய்தனர்..

வளைகாப்பிற்கு ஒரு மாதம் இருக்க திடீரென ஒருநாள் மித்ரன் நேரே மித்துவிடம் வந்தவன் ஒரு கவரை நீட்ட அவள் வாங்கி என்னவென்று கேட்க “பிரிச்சு பாரு..” என்றான்.

பார்த்தவள் கண்கள் விரிய “ஆ..ஆதி…Business and Trade ல Young Achiever award.. சூப்பர் ஆதி…எவ்ளோ பெரிய விஷயம்..கங்கிராஜுலேஷன்…எனக்..I’m so happy for you ஆதி என்றவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு “இதை இப்போவே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்..” என அவள் கர்ப்பமாக இருப்பதையும் மறந்து ஓடினாள்..

“ஹே தியா பாத்து மா..” என கூற அவள் கவனிக்க கூட இல்லாமல் அத்தனை மகிழ்ச்சியாக சென்று அனைவரிடமும் பகிர்ந்துகொண்டாள்..எல்லோரும் வாழ்த்து கூற அதை புன்னகையுடன் ஏற்றுகொண்டவன் மித்துவிடம் “நீ ஹாப்பியா?” என்றான்..

அவளும் “ரொம்பபப..உனக்கான ரெகக்னிஸன் இங்க எந்த அளவுக்கு கிடைக்க போகுதோனு ஒரு சின்ன உறுத்தல் இருந்திட்டே இருந்தது…பட் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதி…You deserve for this award..”என கட்டிகொண்டாள்..

 

அவளது வளைகாப்பிறகு முந்தியநாள் மித்ரனுக்கு விருது வழங்கல், அதோடு பாராட்டி ஒரு விழா, இன்டெர்வியூ அனைத்தும் அன்று மாலையே இருந்தது..அதுவும் நேரலை ஒளிபரப்பு என கூற மித்து உட்பட அனைவரும் டிவியின் முன் அமர்ந்தனர்.. சிந்து, சங்கர் இருவரும் மித்துவுடன் வம்பிழுத்தபடி “அக்கா அங்க மாமாகிட்ட கேக்குற கேள்விக்கு நீ இங்க மாமா என்ன பதில் சொல்லுவாருனு கெஸ் பண்ணி உடனே சொல்லணும்..நீ மாமாவை எவ்ளோ புரிஞ்சுவெச்சிருகேன்னு இதுல நாங்க டெஸ்ட் பண்ணப்போறோம்..அதை ரெகார்ட் பண்ணி மாமாகிட்ட காட்டபோறோம்” என அனைவரும் ஒப்புகொள்ள மித்துவும் “அதெல்லாம் சூப்பரா சொல்றேன் பாரு..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’

18 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சந்தியா “நம்ம ஊர்ல பழைய வீட்ல இருந்தோம்லப்பா..பாலகிருஷ்ணன் அங்கிள் கூட அங்க தானே முதல ஆசிரமம் ஆரம்பிச்சிருந்தாரு..நீங்க நம்ம மித்து குட்டியோட பஸ்ட் பெர்த்டே சமயம் பாம்பேல வேலை விஷயமா ஒரு ட்ரெயினிங்னு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’

4 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   குணா “நீங்க எல்லாரும் என்ன ஜென்மங்கடா.. அவ அந்த திட்டு திட்றா.. கொஞ்சமாவது வந்து ஹெல்ப் பண்ணலாம்ல..” சிவா “நாங்க சொன்னோம்டா. ஆனா மித்து தான் வேணாம்னு சொல்லிட்டா..” “அவ சொன்னா

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’

32 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மித்ராவிடம் கேட்க எப்போதும் போல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல..உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே நாம போலாம் ஆதி..என முடிவை அவனிடமே விட்டுவிட முதலில் தயங்கினாலும் இறுதியாக மித்ரன் செல்ல ஒப்புக்கொண்டான்.. அங்கே