யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 27

நிலவு 27

 

“என் மகன் ஆரவுக்கும், என் மருமகள் கிறுஸ்திகாவுக்கும் நான் முன்னாடி நின்று கல்யாணத்தை நடத்துகிறேன். ஆரவ் உனக்கு அப்பா, அம்மா நாங்க இருக்கோம்” என்றார் அருணாச்சலம். 

 

அனைரின் மனதும் இன்பத்திலும், நிம்மதியிலும் நிறைந்து இருந்தது.

 

“தேங்க்ஸ் அங்கிள்” என்று ஆரவ் கண் கலங்கி கூற,

 

“அங்கிள் இல்லைப் பா அப்பா” என்றார் சிரித்தவாறே.

 

அவனும் சிரித்து தன் கையின் பெரு விரலைத் தூக்கிக் காட்டினான். 

 

அவன் ‘கிறுவுடன் திருமணம்’ என்று கூறிய பிறகு தன் மனம் நிம்மதி, சந்தோஷம் அடைந்ததை நன்றாகவே உணர்ந்தான்.

 

அஸ்வின்,” இதை கிறு இடம் இப்போவே சொல்லலாம்” என்று கூற,

 

“வேண்டாம், ஒரு சப்ரைசா இருக்கட்டும்” என்றான் ஆரவ்.

 

அவர்களும் ஆமோதித்தனர். ஆனால் அவர்கள் யாரும் அறியவில்லை, கிறு அதற்காக சாமி ஆடப்போகிறாள் என்று. 

 

கண்களைத் துடைத்துக் கொண்டு கிறு உள்ளே வந்தாள்.

 

கிறு, ” இன்னும் டிரஸ் எடுக்க போக ரெடியாகாமல் எதுக்கு வட்ட மாநாடு போட்டு இருக்கிங்க, சீக்கிரம் கிளம்புங்க” என்று விரட்டினாள்.

 

இதுவே அனைவருக்கும் சரி என்று பட்டது. இல்லையெனில் பேசிப் பேசியே இவள் விஷயத்தைக் கறந்து விடுவாள் இல்லையா?

 

அவர்களின் கார்கள் சென்று நின்றது ஒரு பெரிய ஆடையகத்தின் முன்னே. அனைவரும் கீழே இறங்கி வர அனைவருக்கும் கடை முதலாளியினால் அமோகமான வரவேற்பு கிடைத்தது. வந்திருப்பது இந்தியாவின் முதலாவது இடத்தில் இருக்கும் பணக்காரர் அல்லவா? அவர்களுக்காக விசேட கவனிப்பும் இருந்தது. கடையில் வேலை செய்யும் நபர்களைத் தவிற ஒருவரும் அங்கு  இருக்கவில்லை. இதை அரவிந் தனது செகரட்ரியின் மூலம் கடை முதலாளிக்கு தெரிவித்தமையால் இவ்வாறு இருந்தது. அக்கடையைச் சூழ இவர்களின் கார்ட்சும் நின்று இருந்தனர் இவர்களின்  பாதுகாப்பிற்காக.

 

கிறு ஆடைத் தெரிவு செய்வதில் எந்த ஆர்வமும் காட்டாமல் மொபைலில் ஏதோ தீவிரமா டைப் செய்துக் கொண்டு இருந்தாள். 

 

” அடியேய் நீ மட்டும் இங்கே என்ன பன்ற? எங்க கூட டிரஸ் சிலெக்ட் பன்னேன் டி” என்று தர்ஷூ கூற

 

“போடி எனக்கு இப்போ முக்கியமான வேலை இருக்கு. நீங்களே எனக்கும் சேர்த்து டிரஸ் எடுங்க” என்று மொபைலில் டைப் செய்துக் கொண்டே கூறினாள்.

 

“இவளுங்க இவளுங்களுக்கு எடுக்கவே பல மணி நேரம் எடுப்பாங்க, இந்த லட்சணத்துல இந்த சொர்ணாக்காவிற்கும் எடுக்கனுமாம்” என்று கவின் கூற, 

 

“மிஸ்டர் கவின், நான் உன் பின்னாடி தான் இருக்கேன்” என்றாள் ஜீவி.

 

“ஐயோ தங்கம் உன்னை இல்லை மா. மத்தவங்களை சொன்னேன்” என்று கூறும் போதே மற்றவர்கள் இருவரும் அங்கு வந்தனர்.

 

மூவரையும் பார்த்து, “மச்சான் காப்பாத்துடா” என்று அங்கிருந்து அவன் ஓட அவனை திரட்டினர் மூவரும். 

 

பெரியவர்கள் இதைப் பார்த்து சிரித்தனர்.

 

ஆனால் கிறுவோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. ஏதோ ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டனர் மற்ற நால்வரும். 

 

இல்லையெனில் இவளை சொர்ணா அக்கா என்றதற்காக கவினுடைய தலை நிச்சயமாக உடைந்திருக்குமே.

 

அஸ்வின், “என்ன கிறு அவளோ சீரியசா பன்னிட்டு இருக்க?” என்று கேட்க,

 

“என் பிரன்ட பற்றின டீடைல்சை ஒரு டிடெக்டிவ் கிட்ட தேட சொல்லி இருந்தேன், அதான் கிடைச்சிருச்சான்னு மெஸேஜ் பன்னி கேட்டுட்டு இருந்தேன்” என்று கூற

 

“அதை நீ போன் பன்னியே கேட்கலாமே” என்று கூற அவள் வினோவைப் பார்த்தாள்.

 

வினோ “இப்போ எதுக்கு நம்மளை பார்க்குறா? ஒரு வேளை சொல்லிருவாளோ” என்று பயத்தில் அவளைப் பார்த்தான்.

 

“இல்லை அஸ்வின், நான் பேசுறது சரியா வராது. என்னை பொருத்தவரைக்கும் டீடைல்ஸ் எல்லாமே சீக்ரட்டா தான் இருக்கனும்” என்று ஒரு வித தீர்க்கமான குரலில் கூற அனைவருமே அவளை வித்தியாசமாகப் பார்த்தனர். 

 

அதை உணர்ந்தவள் முகபாவனையை மாற்றி, “இல்லை போன் பேசுறது சேப் இல்லை” என்று சமாளித்தாள்.

 

இதை மற்றவர்கள் உணர்ந்துக் கொண்டார்களோ இல்லையோ ஆரவ் இதை நன்றாகக் கவனித்தான்.  

 

அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான் ஆரவ். 

 

கிறு மொபைலை வைத்து விட்டு கடையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள் தனியாக. அவள் சிறிது தூரம் செல்ல, 

 

வினோ,” தேங்ஸ் டி என்னை நல்ல வேளை காப்பாற்றின, நான் அவ கிட்ட என் லவ்வை சொன்னதுக்கு அப்பொறமா தான் வீட்டில் சொல்லலாம்னு இருக்கேன்” என்றான்.

 

கிறு,” விடு டா இப்போ நீ என் கூட தனியா பேசுறதை அவனுங்க பார்த்தானுங்க உன் வாயில இருந்தே போட்டு வாங்குவானுங்க, அதனால் போ” என்றாள். அவனும் அங்கு இருந்து சென்றான்.

 

கிறு, “சொரி டா வினோ, எங்களை பற்றின எந்த டீடெய்ல்சும் யாருக்கும் கிடைகக் கூடாதுடா, இது நாங்க ஐந்து பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. அதனால் இந்த மூன்று வருஷமா நாங்க யாருமே கன்டெக்ல இல்லை. நாங்களே தேடினா கூட கிடைக்கக் கூடாதுன்னு உறுதியா இருந்தோம் டா அதான் இந்த நிமிஷம் வரைக்கும் சௌமி பற்றி எந்த டிடெய்ல்சும் கிடைக்க இல்லை. அந்த விஷயத்திற்காக தான் நான், சௌமி, ஜெசி, கீது எல்லோருமே எங்க உயிரான நெட்போலையே கைவிட்டோம்” என்று தன்னுள்ளே பேசிக் கொண்டாள்.

 

அவள் தொடர்ந்து ஒவ்வொரு இடமாக பார்க்கும் போது ஒரு இடத்தில் ஸ்போர்ட்ஸ் டீசர்டை  பார்த்தவள் தன் கைகளைக் கொண்டு அதை வருட அவள் கண்ணில் கண்ணீர் சுரந்தது. அதை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள். 

 

அவளுக்கு பிடித்த நிறத்தைக் கேட்பதற்காக வந்த ஆரவ் இதைக் கவனித்தான். அவனோ சிறிது நேரம் யோசித்தவன் ‘அவளிடம் ஸ்போர்ட்சைப் பற்றி பிறகு பேச வேண்டும்’ என்று முடிவெடுத்து அவள் அருகில் சென்றான்.

 

ஆரவ்,”கிறு இங்க என்ன பன்ற? அங்க வா எல்லாரும் தாவணி எடுக்குறாளுங்க, நீயும் வந்து எடு” என்று கூற, 

 

“ஆரவ் எனக்கு இப்போ ஐடியா இல்லை நீ போ” என்று கூற,

 

“நீ வாரியான்னு நான் கேட்க, இல்லை கிறுஸ்தி, வான்னு சொன்னேன்” என்றான்.

 

“யேன்டா நீ இப்படி இருக்க?” என்று அவள் கூற அவன் அவளை முறைத்தான்.

 

எதுவும் கூறாமால் அவள் முன்னே செல்ல ஆரவ் உள்ளே சிரித்து அவள் பின்னே சென்றான்.

 

அங்கே சென்று தனக்கு பிடித்தமான நிறங்களில் மூன்று தாவணி செட் வாங்கினாள். அப்போது அவளுக்கு, ஆரவுடனான திருமணம் நினைவு வர அவள் முகத்தில் கலவரம் ஏற்பட்டது. அவள் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்து அவளை பட்டு புடவையின் பக்கம் அழைத்துச் சென்றான் ஆரவ். 

 

அவனே அவளது நிறத்திற்கேற்ப முகூர்தத்திற்கான புடவையையும் எடுத்து வேறு மூன்று பட்டு புடவையையும் எடுத்தான். 

 

கிறுவோ ஆனந்த அதிர்ச்சியில் இருந்ததால் இது எதையுமே கவனிக்கவில்லை. அவன் இழுத்த இழுப்பிற்கு மந்திரித்து விட்ட கோழிப் போலச் சென்றாள். அப்போது கவனித்து இருந்தால் கூட தனக்கு திருமணம் நடைப் பெறப் போகின்றது என்பதைப் புரிந்துக் கொண்டு இருப்பாள். 

 

மீராவிடம்,அஸ்வினிடமும் ரிசப்ஷனிற்கான ஆடை முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் பொறுப்பாக வழங்கினர். 

 

கவின், மாதேஷிடம் வரவேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்பாக்கினர். திருமணம் வரையான அனைத்து வைபவங்களுக்கான ஆடை, அணிகலன்கள் மற்றைய ஏற்பாடுகளைப் பொறுப்பாக வழங்கினர். 

 

பெரியவர்கள் அனைவரும் வரவேற்புக்கு அழைப்தற்கான கார்டுகள், மற்றும் அழைக்க வேண்டியவர்களை பட்டியல்படுத்தி அவர்களை அழைக்கும் பொறுப்பை ஏற்றனர்.

 

இதை எதையுமே அறியாத மணப்பெண்ணோ மணாளன் இழுத்த இழுப்பிற்கு அவனது வசீகர மாயப்புன்னகையை ஒரு முறை சிந்தியதால் அதில் கட்டுண்டுக் கிடந்தாள். ஆரவ் இதையே சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி திருமணத்திற்கான நகைகள், அவள் அணிவதற்காக வேறு சில நகைகளையும் வாங்கிக் கொண்டான். அனைத்து பேச்சர்சுகளையும் முடித்தவர்கள் அன்று இரவே வீடு வந்து சேர்ந்தனர்.

 

கிறு வீட்டிற்கு வந்த பிறகு கவினின் கத்தலிலேயே தன்னிலைக்கு மீண்டாள். 

 

‘தான் ஏன் இவ்வாறு இத்தனை நேரமும் இருந்தோம்’ என்பதை அவள் யோசிக்கவில்லை. அவள் கவினை மாத்திரமே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

“எதுக்கு எருமை கத்துன? என் காது சவ்வு கிழிஞ்சது” என்றாள் கிறு.

 

“அடியேய் காத்து கறுப்பு ஏதாவது உனக்கு அடிச்சிருச்சா?” என்று மாதேஷ் கேட்க, அவனை முறைத்தாள் கிறு.

 

“பின்ன என்ன டி? மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே இவளோ நேரமா இருந்த அதான் கவின் கத்தினான்” என்றான் அஸ்வின்.

 

கிறு ஆரவைப் பார்க்க அவனின் நமட்டுச்சிரிப்பில் நடந்தது நினைவுக்கு வந்தது. 

 

‘ஆனால் அவன் தன் கைகளைப் பிடித்து எங்கே அழைத்துச் சென்றான்? இடையில் அவனுடைய மாயப்புன்னகையும் நினைவுர அதற்குப் பிறகு என்னவாயிற்று?’ என்று சிந்தித்தவளுக்கு பதில் இல்லை. 

 

‘இது என்ன? அவன் பக்கத்துல இருந்தா அவனை தவிற எனக்கு வேற எதுவுமே ஞாபகத்தில் நிற்க மாட்டேங்குதே’ என்று தன்னுள் பேச

 

‘கிறு நீ இதை வெளியில் சொன்ன, உன்னை கலாய்ச்சே கொன்றுவானுங்க, உன்னோட இமேஜ் டேமெஜ் ஆகி பீஸ் பீஸா தொங்கும்’ என்று அவளை எச்சரித்தது அவள் மனசாட்சி.

 

அவளும் ‘சரி, ஏதாவது சொல்லி சமாளிப்போம்’ என்று 

 

“ஒன்னும் இல்லை டா ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நடந்தது ஞாபகம் வந்தது அதான்” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே.

 

மற்றவர்கள் அதை நம்ப ஆரவோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான். 

 

“இல்லையே அப்படி நினைவு வந்திருந்தால் நீ வேற மாதிரி ரியெக்ஷனை கொடுத்து இருப்ப” என்றான் வினோ அவளை சந்தேகமாகப் பார்த்து.

 

‘இவன் தேவையான இடத்தில் மூளையை யூஸ் பன்ன மாட்டான். தேவையில்லாத இடத்தில் யூஸ் பன்னுவான். இவனை….’ என்று உள்ளுக்குள்ளே கருவினாள் கிறு.

 

அதைக் கெட்ச் பன்னிய ஆரவுக்கு சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக இருக்க, மாடிப்படிகளில் வேகமாக ஏறி அறையை அடைந்தான் அவன். அதன் பின் வினோ கூறியதை மறந்து அனைவரும் தத்தமது அறைகளுக்குச் சென்றனர். வினோவும் அவளைப் பார்த்துக் கொண்டே அறைக்குச் செல்ல, மீராவும் சென்றாள். 

 

‘அப்பாடா, ஒரு வழியா சமாளிச்சாச்சு. எல்லாம் அந்த பனைமரத்தால தான். பாவிப் பயலே என்னை இப்படி தனியா பொலம்ப வச்சிட்டியேடா, உனக்கு இருக்குடா ஒரு நாளைக்கு’ என்று அவளும் அறைக்குச் சென்றாள். 

 

ஹோட்டலிலேயே அனைவரும் சாப்பிட்டு வந்ததால் களைப்பின் காரணமாக அனைவரும் சீக்கிரமாக உறங்கினர். அடுத்த நாளும் அழகாக விடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

நிலவு 61   ‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி’ என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38

நிலவு 38   அன்றிரவு ஆரவிற்கு கிறுவே ஊட்டி விட்டாள். இருவரும் சிரித்து பேசி உண்டார்கள். கிறு அனைத்து வேலைகளையும் முடித்து உறங்க அறைக்கு வரும் போது, ஆரவ் லெப்டொப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான். இரவு உடைக்கு மாறி வரும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55

நிலவு 55   “என்ன ஆச்சு கண்ணம்மா?” என்று ஆரவ் கேட்க,    “கால் வலிக்குது டா” என்றாள்.   அவள் கால்களைப் பார்க்க வீங்கி இருந்தது.   அவள் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடியின்