யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க, அஸ்வின், ஆரவ் தமதறைக்குச் சென்றனர். சாவி, இந்து அவள் விழித்தவுடன் குடிப்பதற்காக சூப் தயாரிக்கச் சென்றனர்.

 

கிறு சிறிது நேரத்தில் கண் விழித்தாள். சாவி அவளுக்கு சூப்பை புகட்டினார்.

 

“ஏன் டி தனியா போற?” என்று சாவி அவளைத் திட்டத் தொடங்கும் போது, இந்து அவரை அமைதிப்படுத்தினார்.

 

மீரா, “கிருத்தி உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு” என்று கூற,

 

“என்ன?” என்றாள் கிறு.

 

“இன்றைக்கு லஞ்சுக்கு பாரு” என்றாள் மீரா.

 

“என்னடி? எனக்கு தான் சஸ்பனஸ் தாங்காதுன்னு தெரியுமில்லை?” என்று கூற

 

“இன்னும் கொஞ்ச நேரம் தான் பொறுமையா இரு” என்றாள்.

 

கிறுவும் நேரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவர்களின் வீட்டின் முன் இரண்டு கார்கள் வந்து நின்றது. கிறுவும் வாசலிற்கு ஓடி வந்தாள். ஜீவி, தர்ஷூ இருவரும் தத்தமது குடும்பத்தினருடன் வருகை தந்தார்கள். அவர்களை வீட்டின் பெரியவர்கள் வரவேற்றார்கள். தர்ஷூ, ஜீவியின் தந்தைகள் கிறுவின் தந்தையின் நண்பர்கள் நண்பர்கள் அதனால் ஊரில் நடைபெற இருக்கும் மகாபூஜைக்காக  வருகை தந்தார்கள். அவர்கள் இருவருமே வீட்டிற்கு தனிப் பிள்ளைகள். கிறு, மீரா இருவரும் தர்ஷூ, ஜீவியை அணைத்துக் கொண்டனர்.

 

மாதேஷ், கவின், அஸ்வின், ஆரவ் நால்வரும் வெளியே சென்று உள்ளே வரும் போது தர்ஷூ, ஜீவியைக்

கண்டு திகைத்து வாசலில்0 நின்றனர்.

 

“வாங்கடா நல்லவனுங்களா” என்று கிறு அவர்களை உள்ளே அழைத்தனர். பின் ராம் அவர்களை ஜீவி, தர்ஷூ குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினார். பின் அனைவரும் சந்தோஷமாக உணவை உண்டனர். மாலை நேரம் கிறு தனது அறைக்குச் சென்று அவளுடைய ஸ்போர்ட்ஸ் ஷூ ஐத் தேடினாள். அங்கே அது இருக்கவில்லை. வெளியே சென்று பார்க்கும் போது அது வெளியே வாசலில் இருந்தது.

 

அதை எடுத்துக் கொண்டு அஸ்வின் அறைக்குச் சென்றாள். ஆரவ் அறையின் வாசலில் நின்று கதவில்  சாய்ந்தவாறு பேசினான். வந்தவள் ஆரவைக் கண்டு, தடுமாறினாலும்

 

“excuse me மிஸ்டர் பனைமரம்” என்று கூற ஆரவ் அவளை திரும்பிப் பார்த்து முறைக்க,

 

“இங்கே பாரு பனைமரம் இப்போ எனக்கு உன் கூட பஞ்சாயத்து இல்லை. உள்ள இருக்கிறவன் கூட தான். தயவு செஞ்சு வழி விடு” என்றாள்.

 

ஆரவும் அவள் முகத்தில் இருந்த கோபத்தைக்  கண்டு வழிவிட்டான்.

 

“அஸ்வின்” என்று உள்ளே வந்து கத்தினாள் கிறு.

 

“ஏன்டி கத்துற? நான் இங்க தானே இருக்கேன்” என்றான் அஸ்வின்.

 

“யாரைக் கேட்டு என் ஷூவை வெளியில் வச்ச?” என்று கத்த,

 

“இதில் என்ன இருக்கு? ஷூ ன்னா வெளியில் இருக்கனும் வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது” என்றான்.

 

“இதோ பாரு நீ எது மேலே கையை வச்சாலும் பொறுத்துப்பேன், என் ஸ்போர்ட்ஸ் திங்ஸ் மேலே கையை வச்ச அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன் நடக்குறது வேற, உனக்கு நல்லாவே தெரியும் ஸ்போர்ட்ஸ்னா எனக்கு உயிர், நான் நெட்போலை எவளோ லவ் பன்றேன்னு உனக்கு தெரியும். இந்த மாதிரி வேலையை பார்க்காத ஜாக்கிரதை” என்று மிரட்டிச் சென்றாள்.

 

கவின் “என்னடா என்னமோ அவ லவ் பன்ற பையனை மிரட்டுனது போல திட்டிட்டு போறா” என்றான்.

 

அஸ்வின் “அவளுக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிரு. அவ பெஸ்ட் நெட்போல் பிளேயர் அது சம்பந்தமான ஒவ்வோரு பொருளையும் அவளோ பாதுகாப்பா. அதனால் தான் கவின் அவ ஷூவை  வெளியில் வைக்காதன்னு சொன்னேன்” என்றான்.

 

மாதேஷ் “உயிர் இல்லாத ஒரு பொருளையே இவளோ லவ் பன்றான்னா, அவ புருஷனை எவளோ லவ் பன்னுவா” என்று கூற, தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த ஆரவிற்கு புரையேறியது.

 

“பார்த்து குடிடா” என்றனர் மூவரும்.

 

இரவு ஏழு மணியளவில் சாவி சிறியவர்களுக்கு குலாப் ஜாமூன் செய்துக் கொடுத்தார். ஒவ்வொருவரும் இரசித்துச் சாப்பிடும் போது கிறு அஸ்வினின் கையில் இருந்த குலாப்ஜாமுனை பிடுங்கி ஓட அவளைத் துரத்தினான் அஸ்வின். அவள் மொட்டை மாடிக்கு அஸ்வினிடம் தப்பிப்பதற்காக ஓடிய போது முடிவிடத்தில் அவளுடைய டொப் ஆணியில் மாட்டியது. அஸ்வின் வருவதைக் கண்டவள் வேகமாக அதை இழுக்க, டொப் கிழிந்து பெலென்ஸ் தவறி மொட்டை மாடியில் இருந்து விழ அவளது கைகளைப் பற்றினான் ஆரவ்.

 

அஸ்வின் “கிறுஸ்திகா” என்று கத்தினான்.

 

அதைக் கேட்டு மற்றவர்களும் மாடிக்கு ஓடி வந்தனர். முழுமையாக கிறு தொங்கிக் கொண்டு இருக்க ஆரவ் அவளது கைகளை மட்டும் இறுக்கப் பற்றி இருந்தான். கவின், மாதேஷ் ஆரவிற்கு உதவி செய்து கிறுவை மேலே தூக்கினார்கள். மேலே வந்தவள் பயத்தில் இருக்க, ஆரவ் கன்னத்தில் அறைந்தான்.

 

“ஆரவ்” என்று கத்தினார் அரவிந்நாதன். அனைவரும் அமைதியாகினர்.

 

ஆரவ், “சொரி அங்கிள் நான் இவ கிட்ட பேசியே ஆகனும்” என்று பேசினான்.

 

“அறிவில்லையா? இப்படி தான் யோசிக்காமல் எதையாவது பன்னுவியா? ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு உனக்கு தெரியுமா? அதை நான் என் வாழ்க்கையில் நல்லா உணர்ந்து இருக்கேன். விளையாட்டு விபரீதம் ஆக வாய்ப்பு இருக்கு. இப்போ இது தான் உதாரணம். இதற்கப்பொறமா ஒழுங்கா நடந்துக்க” என்று  கூறி தனது அறைக்குச் சென்றான். சாவி கிறுவை அணைத்துக் கொண்டு அழுதார்.

 

அரவிந்தும், ஆரவ் பேசியதன் உண்மையைப் புரிந்துக் கொண்டு அவனிடம் பேசச் சென்றார்.

 

அரவிந், கதைவைத் தட்டி “உள்ள வரலாமா?” என்று கேட்க,

 

“வாங்க அங்கிள்” என்றான் ஆரவ்.

 

“சொரி ஆரவ் நான் கூட கிறுவை அடிச்சது இல்லை. அதான் நீ அடிக்கும் போது கோபம் வந்திருச்சு. கிறு மேலே தான் தப்பு இருக்கு” என்றார்.

 

“ஐயோ அங்கிள் நீங்க எதுக்கு சொரி கேட்குறிங்க? ஒரு அப்பாவா உங்களோட பீலிங்சை எனக்கு புரிஞ்சிக்க முடியிது. நான் அங்கே போயிருக்காவிட்டால் அவளோட நிலமை, அதான் உயிரை பற்றி அக்கறை இல்லன்னு கோபம் வந்திருச்சு. அதான் அறைஞ்சிட்டேன். என்ன இருந்தாலும் அவளை அடிக்கிற உரிமை எனக்கு இல்லை தான் சொரி அங்கிள்” என்றான்.

 

“நீ அடிச்சது தப்பில்லை ஆரவ், கரெக்ட் தான். இதையே நான் அடிச்சு இருந்தா கொஞ்ச நேரம் முகத்தை தூக்கி வச்சி உட்கார்ந்திட்டு இருப்பா. நானும் அதை தாங்க முடியாமல் அவ கூட பேசி அவளை சமாதானம் பன்னி இருப்பேன். அவளும் நோர்மலாகி அவளோட தப்பை மறந்திருவா. பட் நீ அடிச்சதால் அவ அதை மறக்க மாட்டா” என்று புன்னகைக்க, ஆரவும் புன்னகைத்தான்.

 

ஆரவுடன் தொழில் சம்மந்தமாகப் பேசியவர் டினரிற்கு அவனின் தோள் மேல் கை போட்டு கீழே அழைத்து வந்தார். அனைவரும் அதை புன்னகை மாறா முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கிறு மட்டும் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து இருந்தாள்.

 

“அங்கிள் நீங்க என் கூட பேசிட்டு வருகிறது உங்க பொண்ணுக்கு பிடிக்க இல்லை போல” என்று சிரிப்புடன் கூற ,

 

“ஆமா ஆரவ் கொஞ்ச நேரத்தில் அவளே சரியாகிருவா” என்றார்.

 

“என்னப்பா நீங்க அவனை திட்டுவிங்கன்னா பார்த்தால் அவன் கூட சிரிச்சிட்டு வருங்கிங்க” என்று குழந்தையாக புகார் வாசிக்க,

 

“நீ பன்னது சரியா?” என்று அரவிந் கேட்க,

 

“தப்பு தான் பா” என்று தலை குனிந்து சொல்ல,

 

“அப்போ ஆரவ் செஞ்சது சரி தான்” என்றார்.

 

“நீங்க சொன்னால் அது சரி தான், நீங்க எதையும் சிந்திக்காமல் பன்ன மாட்டிங்க” என்று அவரை அணைத்துக் கொண்டாள்.

 

அவர் சிந்தனை தவறாகும் போது குடும்பம் பிளவுபட்டிருக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதுவும் தன் மகளின் விடயத்தில்.

 

அன்றிரவு அனைவருக்கும் நிம்மதியாகக் கழிந்தது.  அடுத்த நாள் கோவிலில் நடக்கவிருக்கும் பூஜைக்கு அணிவதற்காக ஆடைகளை வாங்கச் சென்றனர். கிறு இம்முறையும் சுடி தெரிவு செய்ய மற்றவர்கள் அவளை வற்புருத்தி தாவணியை வாங்கினர்.

 

“போங்கடி, நான் என் கல்யாணதுக்கு தான் சாரி, தாவணி கட்டனும் நினைச்சேன். நீங்க என்னடான்னா இப்போவே வாங்கிட்டிங்க” என்று முணக,

 

தர்ஷூ “இப்போ நீ தாவணி கட்டிக்கிட்டா உனக்கு கல்யாணமா நடக்க போகுது, வா” என்று அழைத்துச் சென்றாள்.

 

அவளுக்கு திருமணம் தான் நடைபெற உள்ளது என்பதை யாரும் அறியவில்லை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44   “என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.   அவளும் கண்மூடி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33

நிலவு 33   ஏ.வி குரூப்ஸ் என்ட் கம்பனி என்று சில்வர் நிறத்தில் அந்தப் பெயர் மிகப் பெரிய பிரம்மாண்டமான கட்டத்தில் பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு மின்னியது. அந்த கட்டடத்தின் முன்னே சென்று நின்றது ஆரவின் கறுப்பு நிற கார். அதிலிருந்து

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

அஸ்வினும், கிறுவும் வீட்டிற்கு வந்தனர்.   இந்து “அண்ணனும் , தங்கச்சியும் எங்க போனிங்க இவளோ நேரமா?” என்று கேட்க,   இந்துவின் அருகில் அமர்ந்தவள் அவர் கன்னத்தைக் கிள்ளி   “இந்துமா, அஸ்வின் என்னை சில்ரன்ஸ் பார்க்கிற்க்கு கூட்டிட்டு போனான்”