Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31

31 – மீண்டும் வருவாயா?

 

விஜய் “ஆனா அதுக்காக நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைப்பியா? இதுக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்..” என அவன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வீம்புடன் அமர அவள் அழைப்பதை பொருட்படுத்தாமல் அவன் இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க கடுப்பானவள் “டேய் நில்லுடா..” என படுமரியாதையாக அழைக்க அவன் அவளை வியப்புடன் திரும்பி பார்க்க “உனக்கு நான் ஒருத்தி பத்தாதுன்னு இன்னொருத்தி கேட்குதா?” என்றதும்

“ஏய் நான் எப்போ அப்டி சொன்னேன்… நீ தான்..” என அவன் முடிப்பதற்குள் அவனின் காதை பிடித்தவள் “சொல்றத காது குடுத்து கேக்கற பழக்கமே இல்ல… அப்புறம் எதுக்கு உனக்கு காது? அன்னைக்கு நான் என்ன சொன்னேன்.. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பன்னா சொன்னேன்? தெளிவா நல்லா யோசி.. வீட்ல அவங்க எல்லாரும் அப்டி ஒரு மைண்ட்செட்ல இருந்தா மறுபடியும் ஒரு ப்ரோப்லேம் ஆர்கியுமென்ட் வரும்னு தானே.. சொன்னேன்..சொல்லு..” என அவள் காதை பிடித்துக்கொண்டே வினவ அவன் “நித்து நித்து வலிக்கிது டி..” என கெஞ்சி அவன் காதை காப்பாற்றியவன் “ஆமா அப்டித்தான் சொன்ன? ஆனா பெருசா என்ன வித்யாசம் அதுக்கு… அவங்க சொன்னா மட்டும் நான் ஒத்துக்குவேனா? சண்டைபோடுவேன் தானே? அத ஏன் நீ யோசிக்கல?” என மீண்டும் கத்த

அவள் முறைக்க மெதுவாக காதை தேய்த்துக்கொண்டே “இல்ல அத யோசிச்சிருக்கலாம்ல?” என சுதியை இறக்க

நித்து “அதான் சண்டை போட்டுட்டு மொத்தமா வந்திடுவீங்கன்னு யோசிச்சதால தான் நான் இங்க வரவேண்டாம்னு முடிவு பண்ணேன்.” அவன் புரியாமல் விழிக்க அவளே அவனது காதை மெதுவாக தேய்த்துவிட்டவள் “எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமில்ல விஜய்..இப்போவும் எப்போவுமே நீங்க எல்லாரும் சேந்து தான் வேணும்.. உங்கள உங்க வீட்ல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயி நாம மட்டும் சந்தோசமா இருக்கமுடியும்னு தோணல. உங்களால மனசார இருக்க முடியுமா சொல்லுங்க?. ஏன்னா நம்ம இரண்டு குடும்பத்தலையுமே ஒருத்தராவது தப்பானவங்களா இருந்திருந்தா நம்மளோட முடிவு அவங்களுக்கு எதிரா இருந்திருக்கும். ஆனா அவங்க உணர்ச்சிவேகத்துல அதிகமான அன்புல தப்பு பண்ணிட்டாங்க..அத புரிஞ்சுக்கிட்டா நம்மள விட வருத்தப்படுறது அவங்களா தான் இருப்பாங்க. அவங்க எல்லாருக்குமே நீங்க நான் நம்ம வாழ்க்கை சந்தோசம் இதுதான் முக்கியம்.. அது உங்களால மறுக்கமுடியுமா?” என அவனும் அதை ஒப்புக்கொண்டு அமைதியானான்.

 

விஜய் “அதென்னமோ உண்மை தான். நீயும் இல்லாம நானும் அவங்ககூட இருக்கமாட்டேனு வந்து ரொம்ப பீல் பண்ணாங்க தான். சில சமயம் நானே அம்மா வருத்தப்பட்டு பேசுறத கேட்டிருக்கேன் என் மருமக என்ன பண்றாளோ எங்க இருக்காளோ? இவன் வேற தேட கூடாதுனு சொல்றான். அவ பத்திரமா திரும்பி வந்தா போதும்னு என் மனசு அடுச்சுக்கிதுனு பொலம்பிருக்கிங்க..” என்றவன் சிரிப்புடன் “எனக்குக்கூட தோணும் என்னடா இது இவளோ பாசமா இப்போவும் அவளை பத்தி நினைக்கிறாங்க. வேற எதனால அன்னைக்கு உன்கிட்ட அவ்ளோ கடுமையா நடந்துக்கிட்டாங்களோனு.. இருக்கும் போது விட்டுட்டு இல்லாத போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்னு நானே மனசுக்குள்ள திட்டிட்டு போய்டுவேன்..”

 

“உண்மை தான் ஆனா அத்தை மாமான்னு வீட்ல எல்லாருக்கும் என் மேல பாசம் அதிகம் தான். அதான் அவங்க அவ்ளோ கத்தும் போதும் என்னால அத ஏத்துக்கமுடில… விட்டு போனதுக்கப்புறம் கூட அவங்கள கஷ்டப்படுத்தவும் பிடிக்கல..அவங்க ஏதோ மனுசுல ஒரு விஷயத்தை நினச்சு நமக்காக ஏதோ நினச்சு, என்னை கண்டிப்பா அங்கிருந்து வெளியே அனுப்பறதுக்காகவே தான் அவ்ளோ கடுமையா நடந்துக்கிட்டாங்கனு தோணிட்டே இருக்கும்..வாணிக்கு முழு பிரச்னையும் தெரிஞ்ச பிறகு அவ அவங்கள திட்டும்போது கூட இதேதான் சொன்னேன்..”

 

விஜய் வியப்புடன் அவளை பார்க்க அவள் கண்களாலையே என்னவென்று வினவ “எங்க அம்மாவை நான் கூட கோபத்துல திட்டிட்டேன்..ஆனா நீ அவங்கள எவ்ளோ புரிஞ்சிட்டிருந்திருக்க.. அப்பாடி இந்த பொண்ணுகளுக்குள்ள தான் எவ்ளோ சீக்ரட்ஸ்?” அவள் சிரிக்க அவனே தொடர்ந்து “போன வாரம் தான் ராஜீம்மா உங்க அம்மாவும் என்கிட்ட பேசுனாங்க.. உனக்கு அடிபட்டு அன்னைக்கு கோவில்ல இருக்கும்போது அம்மா ரொம்ப சங்கடப்பட்டு எல்லாமே பொலம்பிட்டே அழுது சொல்லிருக்காங்க..

நமக்கு டைம் சரி இல்ல குழந்தை மூலமா பிரச்னைனு இப்டி எல்லாம் தெரியவந்ததும் அம்மா மயங்கி விழுந்து வீட்டுக்கு போனதும் எல்லார்கிட்டயும் சொல்லிருக்காங்க..

 

[வசந்தா “எனக்கு என் பையனும் வேணும் என் மருமகளும் வேணும். இரண்டுபேரையும் இழக்க நான் தயாரா இல்லை..  நேத்ராகிட்ட விஷயத்தை சொல்லி இதுக்காக அவ நம்மள விட்டு போகமனசில்லைன்னு சொல்லிட்டா அவளை எப்படி அடிச்சா அனுப்பமுடியும்.. அதோட ஜீவன்க்கு ஏதாவது ஆச்சுன்னா அந்த புள்ளை தாங்கமாட்டா..ஊருக்கு வரேன்னு சொல்லி கொஞ்சம் நேரம் தாண்டுனா கூட அவ முகமே வாடிடும்.. அவன் மேல அவ உயிரையே வெச்சிருக்கா? அவனுக்கு ஏதாவது ஆயிட்டா இவளும் ஒண்ணுமே இல்லாம போய்டுவா..’ என அழுக

குடும்பத்தில் மற்ற அனைவரும் “உண்மை தான்.. வேணா கருவை கலைச்சிட சொல்லலாமா?”

வசந்தா “ஐயோ…குழந்தை மேல அவங்க இரண்டுபேரும் எவ்ளோ உயிரா இருக்காங்க.. வேண்டாம்மா.. என்னால நினைச்சுக்கூட பாக்கமுடில..”

“இல்ல மா, இந்த குழந்தை இல்லாட்டி இன்னொரு குழந்தை ஆனா அவங்களுக்கு ஏதாவது ஆகிட்டா..” என கேட்டும் “இல்லை எனக்கு மனசில்லை..” என மறுத்துவிட

“அவகிட்ட சொல்லலாமா?”

“அவ இத எப்படி ஏத்துக்குவா? என்னனு சொல்ல முடியும்? உன் குழந்தைனால உன் புருஷன்க்கு பிரச்னைன்னா? அவ இரண்டுபேர்ல யாரை பார்ப்பா? பாவம் அந்த புள்ளை கல்யாணம் பண்ணி புருஷனை விட்டு தனியா இங்க நம்மகூட இருந்தாலும் ஒரு நாள் ஒரு பொழுது முகத்தை சுளிச்சதில்லை. நம்ம எல்லார்கிட்டயும் அவ்ளோ பாசமா இருக்கா.. இவ பிரிஞ்சிருந்து கஷ்டப்பட்டாலும் பரவால்லை புருசனோட ஆசை கனவு முக்கியம்னு நினைக்கிறா. அப்டி எல்லாருக்காகவும் யோசிக்கற அவகிட்ட இந்த பிரச்னையை சொன்னா ஒருவேளை ஜாதகத்துல சொன்னமாதிரி என் பையனுக்கு ஏதாவது ஆயிட்டாகூட அவ அடுத்து வாழ்க்கையே வாழாம முடிச்சுக்குவா? என்னால என் மருமகளை அப்டி பாக்கமுடியாது.” என கண்ணீர் வடித்தவர் “கடவுளே என் புள்ளைங்களுக்கு ஏன் இப்டி ஒரு சோதனையை குடுத்த.. இரண்டுபேரோட வாழ்க்கையும் பணயம் வெச்சு எதுக்கு இந்த விஷப்பரீட்சை” என அழுதுகொண்டே இருக்க

“இதுக்கு வேற என்னதான் முடிவு” என மற்றவர்களும் வருத்தத்துடன் கேட்க

இறுதியாக பேசி வசந்தா “நாம் குழந்தை பொறக்குற வரைக்கும் பொறுத்து பாக்கலாம்…ஒருவேளை பையன் பொறந்தா பிரச்சனை இல்லேல? என ஒரு நம்பிக்கையும் இருந்தது.”

“சரி பொண்ணு பொறந்தா… இல்ல ஜீவன் அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்திட்டா?”

“அப்டி ஒரு நிலைமை வந்தா இறந்தவனை நினச்சு உயிரோட இருக்கறவளோட வாழ்க்கையை அழிக்க முடியாது.. அத என் பையனும் விரும்பமாட்டான்..

வேற வழியில்லை நேத்ராவை திட்டி ஏதாவது சொல்லி அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடலாம்.. கொஞ்ச நாள் பொறுத்து அவங்க வீட்ல அவளுக்கு வேற கல்யாணம் பாத்து பண்ணிடுவாங்க தானே.. அவ அந்த வாழ்க்கைளையாவது நல்லா இருக்கட்டும்…நாம பொறுமையா பேசி அவளை அனுப்பறது எல்லாம் சரி வராது. அவ ஏத்துக்கமாட்டா..நம்மள விட்டு போகவும் மாட்டா.. ஒருவேளை குழந்தை அவ வாழ்க்கைக்கு பிரச்னையா இருந்தா அதையும் சண்டை போட்டு நாமளே வாங்கி வளத்துக்கலாம்..” என அழுகையுடன் கூறினார்.]

 

இதுவரை கூறிமுடித்தவன் “அதுக்கப்புறம் தான் நடந்தது உனக்கு தெரியுமே..இதெல்லாமே என்கிட்ட அவங்க சொல்லிட்டு தான் இனிமேலாவது அவங்க கூட இருங்க அவங்க சந்தோசப்படுவாங்க.. உன் அம்மா நல்லது நினச்சு தான் பண்ணிருக்காங்கனு சொன்னாங்க.” என்றவன் அதோடு நிறுத்தி அவளை பார்க்க

 

நித்து “ஆனா நீங்க வீட்டுக்கு திரும்பி வர சரினு சொல்லிருக்கமாட்டீங்க கரெக்ட்டா?” என வினவ

விஜய் “ம்ம்..உனக்கு?” என

“நானும் அதே பதில் தான் சொன்னேன்.”

“நீயுமா? இப்போ நான் சொன்ன விஷயம் இதெல்லாம் உன்கிட்ட சொன்னாங்களா? எப்போ பேசுனீங்க?”

நித்து “இப்போ நீங்க சொன்னதெல்லாம் சொல்லல..ஆனா கூட இருக்க சொல்லி கேட்டாங்க.. அப்போ சொன்னேன்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

23 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த சில நாட்களில் திருமணவேளை குழந்தைகளின் சேட்டை அதோடு வெளியே கூறாவிடினும் இருவரின் அருகாமையை இருவருமே மிகவும் ரசித்தனர். வாரம் ஒருமுறை என்றால் அனைவரும் ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு செல்வது என அனைத்தும் சாதாரணமாகவே

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

14 – மீண்டும் வருவாயா?   விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது. மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான். பெரியர்வர்கள் அனைவரும் மனதார