Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-20

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-20

20 – மீண்டும் வருவாயா?

இதுவரை நடந்ததை கூறிமுடித்த வசந்த் வாணியிடம் “ஆனா அதுக்கப்புறம் ஜீவன் அப்பா அம்மான்னு மொத்த குடும்பமும் ரொம்பவே பீல் பண்ணாங்க…பாப்போம் இனி எல்லாமே சரி ஆகிடும்னு நினைக்கிறேன்..நேத்ராவுக்கு அப்போவே இன்னொரு குழந்தை பொறந்தது இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நேத்ரா வீட்லயும் யாரும் சொல்லல. ” இவை அனைத்தையும் கூறிமுடிக்க வாணி “அவங்க முக்கியமா சொன்னதே பெண் குழந்தை பொறந்தா தான் உங்க பிரண்ட்க்கு டைம் சரிஇல்லேனு ..அத நம்பித்தான் இவளோ பிரச்சனை பண்ணிருக்காங்க. இப்போ ஜீவிதா அவங்க பொண்ணுதான்னு தெரிஞ்சா எப்படி மனசார ஏத்துக்குவாங்களா?” என வினவ ராஜியும், வசந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு “தெரிலையே..நீ சொல்றதும் சரிதான்.. நேத்ராவுக்கு பையன் அதோட ஜீவன் திரும்பி வந்திட்டானு தான் பழசை மறந்து எந்த உறுத்தலும் இல்லாம நேத்ரா வந்தா போதும்னு இருந்தாங்க. ஆனா இப்போ ஜீவிதாவை பத்தி தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கனு புரிலையே?” என அனைவரும் கவலையுடன் இருக்க

தூக்கம் வருகிறது என ஜீவாவிடம் முன்னமே கூறிவிட்டு உள்ளே வந்த ஜீவிதா ஓரத்தில் நின்று இவை அனைத்தையும் கேட்டுவிட்டு எதுவும் கூறாமல் உள்ளே சென்று படுத்துகொண்டாள். அவள் வந்ததை யாரும் கவனிக்கவும் இல்லை.

 

விஜய் வீட்டில் :

இங்கே பேசிக்கொண்டிருக்க இறுதியில் கோபமாக எழுந்த விஜய் “நான் அப்டி பண்ணுவேன், விட்ருவேன்னு நீ நினைப்பியா நித்து?” என ஒரு ஏமாற்றத்துடன் கூற நித்ரா “விஜய்..அப்டி சொல்லல…காரணங்கள் சூழ்நிலைகள் அப்டி இருக்கும்போது நாம யாரை குறை சொல்லி என்ன பிரயஜோனம்…” என்றவளை முடிக்கவிடாமல்

விஜய் “போதும்.. இதுக்கு  மேல உன்கிட்ட நான் எந்த விளக்கமும் கேட்கல.. நாம இனி இந்த விஷயமா பேசவே வேண்டாம். நீ இப்டி ஒரு மைண்ட் செட்ல இருந்திட்டு அதுக்கு என்ன விளக்கம் குடுத்தாலும் என்னால அதை ஏத்துக்கமுடியாது. என் நித்து என்னை இப்பிடி நினைச்சாங்கிறதையே என்னால ஒத்துக்கமுடில. அதுக்கு நீ குடுக்கிற விளக்கம் கண்டிப்பா என்னை இன்னும் கஷ்டப்படுத்தும். ”

“விஜய்.. அவசரப்படாதிங்க…நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க… சொல்றதை..”

“வேண்டாம்…ப்ளீஸ் இனி முடிஞ்சதை பத்தி என்கிட்ட எப்போவுமே பேசாத.” என அவளும் அமைதியாக விஜய் “குழந்தைங்களை விட்டு உன்னால இருக்கமுடியாது. என்னால உங்க எல்லாரையும் விட்டுட்டு இருக்கமுடியாது. இது இரண்டுமே உனக்கு தெரியும். நாம ஒண்ணா இனிமேல் இருக்கறதுல உனக்கு பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்.”

நித்ரா “அதென்ன என்னால குழந்தைகளை விட்டுட்டு இருக்கமுடியாது? அப்போ எனக்கு நீங்க வேண்டாமா?”

“நான் இல்லாம தான் உன்னால இத்தனை வருஷம் இருக்க முடிஞ்சதே. வேண்டான்னு தானே போன நேத்ரா?” என ஜன்னல் புறம் அவன் திரும்பி நின்று பேச நித்து என்ற அழைப்பு அனைவரும் அழைக்கும் நேத்ராவானதை குறித்துக்கொண்டு அவனின் இந்த கோபத்தை ரசித்தவள் இருந்தும் அவனது பிடிவாதம் கண்டு கோபமுற்றவள் விடாமல் “அப்படித்தான் நினைக்கிறீங்க? இதை நான் நம்பணும்ல?” என, அவன் எதுவும் கூறாமல் அப்டியே நிற்க

பெருமூச்சுடன் “சரி நீங்க சொன்னது கரெக்ட் தான். சோ நாம இனி ஒண்ணாவே இருக்கலாம். குழந்தைங்ககிட்ட சொல்லணும்ல..அண்ணாக்கு கூப்பிட்டு குழந்தைகளை கூட்டிட்டு வர சொல்றேன்.”  என்று அவள் மொபைல் எடுத்துக்கொண்டு நகர

ஜன்னல் கம்மியை இறுக பற்றியவன் “திமிரு… நான் சொன்னது கரெக்ட்டா. அப்போ நான் இல்லாம நீ இருப்பியாடி..என்னை எவ்ளோ மிஸ் பண்ணிருப்ப.. ஆனா அத சொல்லக்கூட உனக்கு தோணாதில்லை… என மனதினுள் திட்டியவன் …ம்ச்..நீதாண்டா அப்டி நினைக்கிற..இனிமேல் இதுதான் உண்மை.. அது உனக்கே சொல்லி நீ புரியவெச்சுக்கோ விஜய்…ம்ம்.. விஜய் என்ன விஜய் எல்லாரும் கூப்பிட்ற மாதிரி ஜீவன் தான் சரி.. இவளுக்காக மட்டும்னு எல்லாமே பாத்து பாத்து வெச்சா வேண்டாம்னு போய்ட்ட.. இப்போ அதுக்கு அவ சொல்ற காரணம்… ச்ச.. இனி அவகிட்ட ஏதும் எதிர்பார்க்கக்கூடாது. குழந்தைங்களுக்காக மட்டும் தான். சோ அவளுக்கு நான் தேவையில்லன்னு முதல நானே எனக்கு சொல்லி ரெடி ஆகிக்கணும். இல்ல மறுபடியும் எதிர்பார்த்து ஏமாந்துடுவேன்… அவளுக்கு எங்க என்னை பத்தி புரியப்போகுது. நான் தான் இனி என்னை பாத்துக்கணும் ” என தன் மனதிற்குள்  கத்திக்கொண்டும் சின்னப்பிள்ளை போல போராடி கொண்டும் இருக்க

 

போனில் பேசிகொண்டே உள்ளே வந்தவள் “லஞ்ச் நான் ரெடி பண்ணிடறேன் அண்ணா.. இங்க வந்துடுங்க..” என கூறிவிட்டு போனை வைத்தவள் “சொல்லிட்டேன். அவங்க வராங்க. நான் போயி லஞ்ச் ரெடி பண்றேன்..” என நகர்ந்தவள் ஒரு நொடி நின்று “அப்புறம் இன்னொரு விஷயம்..எனக்கு நீங்க தேவையில்லேனு உண்மையாவே உங்களுக்கு தோணிருக்காது. அது எனக்கும் தெரியும்.. சோ வீம்புக்காக  இதுக்கு மேல நீங்களே உங்களுக்கே அப்டி ஒரு பொய்யை சொல்லி ஒன்னும் ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்… ரிலாக்ஸ இருங்க. இனி எப்படி இருந்தாலும் ஒண்ணாத்தானே இருக்கப்போறோம். அதனால தேவையில்லாம கொழப்பிக்காதீங்க. சரியா?” என அவள் தெளிவாக கூறிவிட்டு செல்ல விஜய் தன்னை அவள் சரியாக புரிந்துவைத்ததை எண்ணி மெலிதாக புன்னகைத்தாலும் அவள் கூறிய பதில்களை எண்ணியதும் மீண்டும் அமைதியானான்.

 

விஜயும் நித்ராவும் குழந்தைகள் வருவதற்காக காத்திருந்தனர். நித்ரா ஏதோ பதட்டமாகவே இருந்தாள். ஜீவா, ஜீவி இருவரையும் வாணி, வசந்த் இருவரும் அழைத்துவர குழந்தைகள் ஓடிவந்து பெரியோர் இருவரையும் கட்டிக்கொண்டனர்.

குழந்தைகளிடம் தாங்கள் தான் இருவரின் அம்மா அப்பா என கூறினர். ஜீவன் இருவரிடமும் “சில காரணங்களால் நாங்களும் பாக்க முடியாம போயிடிச்சு. இன்னைக்கு தான் நாங்க இரண்டுபேரும் மீட் பண்ணதால தெரிஞ்சது. உங்க 2பேருக்குமே எங்களை பிடிக்கும்னு தெரியும். இருந்தும் உங்களுக்கு நிறையா கேள்விகள் குழப்பம் இருக்கும்னு தெரியும். ஆனா சில பிரச்சனைகளை எங்களால இப்போ சொல்லமுடியல. அத புரிஞ்சுக்க உங்களுக்கும் இப்போ சரியான வயசு இல்ல. அதுக்கான காலம் வரும்போது இந்த பிரச்சனை எல்லாம் ஏன் எதனால என்னனு கண்டிப்பா சொல்றோம். இனிமேல் நம்ம எல்லாரும் ஒண்ணாவே இருக்கலாம். ஹாப்பி தானே?” என வினவ முதலில் சற்று அமைதி காத்தாலும் ஜீவி சிறிது புன்னகையுடன் தனது விருப்பத்தை தெரிவித்தாள். ஆனால் நித்ரா பயந்தது போல ஜீவா அவளை முறைத்துக்கொண்டே இருந்தான்.

நித்ரா “ஜீவா.. கண்ணா ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு.”

ஜீவா “வேண்டாம்..நீங்க என்கிட்ட பேசாதீங்க..”

நித்ரா “ஜீவா.. உன் கோபம் எனக்கு புரியுது. ஆனா சூழ்நிலை அந்த மாதிரி… ப்ளீஸ் ஜீவா… இந்த ஒருதடவை அம்மாவை மன்னிச்சுடு. இனிமேல் உன்னை விட்டு எப்போவும் போகமாட்டேன். ” என அவள் மண்டியிட்டு கெஞ்ச வசந்த், வாணி அனைவரும் சொல்லியும் அவன் கேட்கவில்லை..

ஜீவிதா கோபத்துடன் வந்தவள் நிருவின் கைப்பற்றி “வாங்க மா நாம போலாம். நீங்க ஒன்னும் இவன்கிட்ட கெஞ்ச வேண்டாம்.” என்றாள்.

நித்ரா “ஜீவி என்னாச்சு மா.. நீ புரிஞ்சுப்ப தானே. நீ ஏன் இவளோ கோபப்படுற?” என வினவ

ஜீவி கண் கலங்க “எப்போவும் அழக்கூடாது யாருகிட்டேயும் கெஞ்சக்கூடாதுன்னு நீங்க தானே மா சொன்னிங்க..எனக்கு நீங்க இப்டி அழுகிறது கெஞ்சுறது பிடிக்கலமா.. என் மம்மி காரணம் இல்லாம எதுவும் செய்யமாட்டாங்க..தப்பு பண்ணமாட்டாங்க… அப்புறம் நீங்க ஏன் அவன்கிட்ட சாரி சொல்றிங்க?”

நித்ரா “குட்டிமா.. அப்டி இல்லடா…காரணத்தோட பண்ணாலுமே ஒருத்தரை கஷ்டப்படுத்திறது தப்பு தானே…உன்கிட்ட நான் தப்பு பண்ணா சாரி சொல்லுவேன்ல…ஜீவா என் பையன் தானே…”

“நீ தான் எந்த தப்பும் பண்ணலையேமா?”

“ஆனா அவனை கஷ்டப்படுத்திட்டேனேடா.. மத்தவங்களுக்கும் எனக்கும் இருந்த பிரச்சனைல ஜீவாவை தனியா விட்டது என் தப்பு தானே? …” என கண்கலங்க

ஜீவி “அவன் தான் புரிஞ்சுக்கமாட்டேன்கிறானே மா…நீ தான் அவனை வேண்டாம்னு விட்டுட்டு போனேன்னு தானே நினைக்கிறான். ”

“ப்ளீஸ் செல்லம்.. அம்மா அவன்கிட்ட பேசிட்டு வரேனே?” என  கேட்டுக்கொண்டு மீண்டும் அவனிடம் பேசியும் அவன் ஏற்றுக்கொள்ளாமல் நிற்க

ஜீவன் “ஜீவா என்னடா ஆச்சு உனக்கு… நிரும்மா மாதிரி அம்மா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்ன. இப்போ அவ தான் உன் அம்மானு சொல்றேன். ஏன் கோபப்படுற?”

ஜீவா “நிரும்மா என்கிட்ட பாசமா இருந்தாங்க. எனக்கு தேவைப்படும்போது கூட இருந்தாங்க. நான் நினச்சா வந்தாங்க. அதான் அவங்கள புடிச்சது..

ஆனா என்னை பெத்த அம்மா அவங்களுக்கு நான் வேண்டாம்னு தானே உடனே விட்டுட்டு போனாங்க. என்னை இத்தனை வருஷம் தேடியும் வரல. ஜீவி மட்டும் தான் அவங்க பொண்ணா? என் மேல அப்போ பாசமில்லை தானே? என்றவன் அழுகையுடன் நானும் டாடியும் எவ்ளோ நாள் அம்மாவை மிஸ் பண்ணிருக்கோம் அழுதிருக்கோம் தெரியுமா? எங்களுக்கு தான் அம்மா எங்கனு தெரில. ஆனா அவங்களுக்கு தெரியும்ல நாங்க சென்னைல தான் இருக்கோம்னு. ஏன் முன்னாடியே வரல.. என்னை பாத்துக்கூட அவங்களுக்கு நான் அவங்க பையன் தான்னு தெரில.. அந்தளவுக்கு என்னை கண்டுக்காம தானே இருந்திருக்காங்க..” என அவன் கேட்ட கேள்விகளுக்கு நித்ரா பதிலில்லாமல் நிற்க ஜீவி “ஓகே ஜீவா… இவளோ கேக்றியே.. அம்மா மட்டும் உன்னை விட்டுட்டு ஜாலியாவா இருந்தாங்க? எவ்ளோ நாள் அழுதிருப்பாங்க.. உனக்கு தெரியும்ல நீ கூட அன்னைக்கு பாத்தேல.. அப்புறம் எப்படி பாசமிலேன்னு சொல்ற? அப்பாக்கு நாங்க எங்க போனோம்னு தான் தெரியாது. ஆனா அவரு தேடிருந்தா கண்டுபுடிச்சிருக்கலாம்ல.. அவரும் தானே பண்ணல. அதுக்காக அவரு மோசம்னு சொன்னா நீ ஒத்துக்குவியா? அவருக்கு கூட என்னை அடையலாம் தெரியாம தானே இருக்கு. அப்போ நானும் தானே அப்பா மேல கோபப்படணும்…” என இவளும் கத்த குட்டிஸ் இருவரும் சரிக்கு சரி சண்டைபோட்டுக்கொண்டு முறைத்துக்கொண்டும் நின்றனர்.

பெரியவர்களால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடிந்தது. இறுதியில் நித்ரா ஜீவனிடம் “ஜீவா.. உனக்கு என்கூட இருக்க இஷ்டமில்லேன்னா ஓகே நான் போய்டறேன். ஆனா நான் உன்னை என்னைக்குமே வெறுத்ததும் இல்லை. நினைக்காம இருந்ததும் இல்லை. சில காரணங்களால் பிரிஞ்சு போகவேண்டியதாகிடிச்சு. அத சொல்லி நான் உன்னை விட்டுட்டு போனதை நியாயப்படுத்த விரும்பல. ஆனா அத நான் மனசார செய்யல.. நான் லைப்ல மன்னிப்பு கேட்கணும்னு நினைச்ச ஒரே ஆள் என் பையன் ஜீவா நீ மட்டும் தான். உனக்கு எப்போவாது அம்மாவை மன்னிச்சு பேசணும்னு தோணுச்சுனா சொல்லு. ஆனா எனக்காக நீயும் ஜீவியும் அடுச்சுக்காதீங்க. நீங்க அண்ணன் தங்கச்சியும் இல்லாட்டியும் பெஸ்ட் பிரண்டா இருங்க. என்னால இதுக்கு மேலையும் நீ ஜீவி, உங்க அப்பா யாரும் பிரிஞ்சிருக்க வேண்டாம். ப்ளீஸ்…நான் டிஸ்டர்ப் பண்ணாம போய்டறேன்..” என கூற விஜய்க்கு மீண்டும் ஒரு நிமிடம் உள்ளே ஏதோ இழப்பது போல தோன்ற அவள் மேல் இருந்த கோபத்தை தாண்டி காதல் வெளிவர தன் மௌனத்தை உடைத்து அவன் “நித்து” என அழைக்க அதே நேரம் ஜீவா “அம்மா..” என  அழைத்தான்.

ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதான்.. சற்று ஆசுவாசப்படுத்தியபின் “எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் தான். இப்போவும் இருக்கு.. இருந்தாலும் எனக்கு என் அம்மாவை ரொம்ப புடிக்கும். அப்பா உங்களை பத்தி சொல்லும் போதெல்லாம் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா நீங்க கூட இல்லேனு நினச்சா செம கோபம் வரும். சின்ன சின்ன விசயத்துல கூட ரொம்ப உங்களை மிஸ் பண்ணிருக்கேன். ஸ்கூலுக்கு போகும்போது, விளையாடும்போது சாப்பாடு ஊட்டும் போது, பிரண்ட்ஸ் எல்லாரும் அவங்க அம்மாகூட இருக்கும்போது எல்லாம் அம்மா வேணும்னு தோணும். எனக்கு உடம்பு முடிலேனு டாக்டர்ஸ்கிட்ட எல்லாம் பாத்த போது ஸ்ட்ரென்த் ரொம்ப கம்மியா இருக்கு. தாய் பால் எவ்ளோ மந்த்ஸ் குடுத்தாங்கன்னு கேட்டாங்க பாட்டிஸ் சொல்லுவாங்க இவனுக்கு தாய் பாலே கொடுக்கலனு. அதில ஒரு நர்ஸ் ஆண்ட்டி நான் சேட்டை பண்ணேன்னு என்ன சொன்னாங்க தெரியுமா?.. உனக்கு உங்க அம்மா பாலே குடுக்காம ஸ்ட்ரென்த் இல்லாம கண்டுக்காம விட்டுட்டு போயே இவளோ திமிரு பண்றேன்னா ஒழுங்கா உனக்கு எல்லாமே கிடைச்சிருந்தா எவ்ளோ சேட்டை பண்ணுவ? நீ இப்டி எல்லாம் இருக்கறதால தான் உன் அம்மா உன்னை பாத்ததும் புடிக்காம விட்டுட்டு போய்ட்டாங்கனு” சொன்னாங்க. அப்டியாமா? என்னை உனக்கு பிடிக்காம தான் விட்டுட்டு போனியா?” என அவன் அழுக

நித்ரா “இல்லடா கண்ணா.. அப்படியெல்லாம் இல்லை…” என அழ அவன் “சரி விடுமா நீ அழாத. இனிமேல் எங்களை விட்டு போகமாட்டேல.. நாம எல்லாரும் ஒண்ணாத்தானே இருக்கப்போறோம்? ப்ரோமிஸ்?” என

அவள் மேலும் கீழும் தலையசைக்க ஜீவியும் வந்து கட்டிக்கொள்ள குழந்தைகள் ராமு வந்துவிட வாணி, வசந்த் ராமு என அனைவரும் ஒன்றாக பேசி விளையாட நித்ரா தனியே அறைக்குள் வந்தமர பின்னோடு வந்த விஜய் அவள் தோள் தொட திரும்பியவள் அடக்கமுடியாமல் அவன் தோளில் சாய்ந்து அழத்துவங்கினாள். அவனும் அவளை கட்டுப்படுத்தவில்லை.

“விஜய்.. ஜீவா கேட்டதை பாத்திங்களா?.. எந்த பாவமோ என்ன தப்பு பண்ணேனோ..அவன் இவளோ பீல் பண்ற அளவுக்கு வெச்சுட்டேனே..நான் தெரிஞ்சு எதுமே பண்ணலையே? ஏன் இப்டி ஆச்சு விஜய்?.. ஒரே நாள்ல வாழ்க்கையே மாறுச்சுன்னு சொல்லுவாங்க. அது அன்னைக்கு தான் அனுபவிச்சேன். நீங்க இல்லேனு சொன்ன அந்த நாள், இப்டி என் பையன பாக்கக்கூட இல்லாம இழந்த நாள் என் வாழ்க்கைல வேண்டாம்னு அத அழிக்க சொல்லி வேண்டுறதா? இல்ல நம்ம குழந்தைங்க அப்போதான் பிறந்ததால அந்த நாளை வேணும்னு சொல்றதா?.. இனி எத்தனை வருஷம் ஆனாலும் அவன் பிரச்சனையா புரிஞ்சுக்கிட்டாலும் வளந்தாலும் அவனோட அந்த நேரத்து வலி எப்போவது போகுமா? இனி மாத்த முடியுமா? என்ன தப்பு பண்ணேன்னு தெரில. ஆனா அதுக்கான எந்த தண்டனையும் பாவமும் என்னோட முடிஞ்சிருந்தா பரவாயில்லையே. இப்டி ஒண்ணுமே தெரியாத குழந்தைங்களை தண்டிச்சிட்டுட்டேனா? சொல்லுங்க விஜய்…ஜீவா இப்போ சரினு சொல்லிட்டான். ஆனாலும் அவனுக்கு உங்களுக்கு என் மேல இருக்கற கோபம்…அது இன்னும் மாறலையே? மறுபடியும் அதுனால நான் உங்க இரண்டுபேரையும் இழந்திடுவேனா?”என மார்பில் சாய்ந்து அழ அவனும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளது முகத்தை ஏந்தி நேருக்கு நேர் பார்த்து கூறினான்.

“இங்கபாரு நடந்து முடிஞ்ச எதையும் மாத்தமுடியாது. ஆனா இனி பிரச்னை வந்திடுமோனு பயந்து பயந்தும் எப்போவுமே வாழவும் முடியாது. எது வந்தாலும் அதை சேந்து சமாளிப்போம் அவ்ளோதான். இப்போ போ. குழந்தைங்க முன்னாடி இனி நீ பீல் பண்ணாத. அவங்க இரண்டுபேருக்குமே உன் மேல பாசம் அதிகம். நீ அழுதா ரொம்ப எமோஷனல் ஆகிடறாங்க..”

நித்ரா “குழந்தைங்க மட்டும் தானா? நீங்க இல்லையா?” என அவள் ஒரு எதிர்பார்ப்போடு வினவ

ஜீவன் “குழந்தைங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..வா.” என அவன் கூறிவிட்டு செல்ல

நித்ராவிற்கு தான் விஜயை எண்ணி ஆயாசமாக இருந்தது. தான் வருந்துகிறேன் என அறிந்து தன்னை சமாதானம் செய்ய வந்தான். ஆறுதல் தந்தான். அரவணைத்தான். பிரச்சனை வந்தால் இனி சேர்ந்து சமாளிப்போம் என உடன் இருப்பேன் என்றும் கூறாமல் கூறிவிட்டான். இருந்தும் தன் மேல் கொண்ட கோபம் அவனது இந்த ஒதுக்கம் எப்போது தீருமோ?” என்றிண்ணியவள் அமைதியாக வெளியே வந்தாள்.

 

அனைவரும் சாப்பிட உட்கார ஜீவா “அம்மா ஊட்டிவிடறீங்களா?” என்றான்.

நேத்ரா குழந்தைகளுக்கு உணவு ஊட்ட இருவரும் பேசிக்கொண்டே உண்டனர். அவளிடம் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளாக கேட்க அவளும் பொறுமையாக பதில் கூறிக்கொண்டே சாப்பிட வைத்தாள். அதையே பார்த்துக்கொண்டிருந்த ஜீவனை அழைத்த வசந்த் “என்னடா, நேத்ராவையும் குழந்தைகளையும் இப்போதான் முதல் தடவையா பாக்கறியா என்ன? இப்படி பாத்திட்டே இருக்க. அவ சாப்பிட வெச்சு தூங்கவெக்கவே போய்ட்டா.” என அவன் சிரிக்க ஜீவன் “உண்மைதான்டா. நான் மூணு பேரையும் இப்போதானே ஒண்ணா முதல பாக்குறேன். இத்தனை வருஷம் இவங்க எப்படி பிரிஞ்சிருந்தாங்கனு யோசிக்கிறேன். எவ்ளோ கொடுமைல? இப்போவும் அவ உண்மையான காரணம் இதுதான்னு சொல்லிட்டா குழந்தைங்க வீட்ல எல்லார் மேலையும் கோபப்பட்டு வெறுத்துடுவாங்கனு பீல் பண்றா. ஒரு பக்குவம் வரவரைக்கும் அவங்ககிட்ட உண்மையையும் சொல்லாம சில நேரம் ஜீவா கேட்கற, இந்த மாதிரி பீல் பண்ற விசயத்துக்கு அவ பதிலும் சொல்லமுடியாம கஷ்டப்படுறதை பாத்தா சங்கடமா இருக்குடா. அவ சமாளிப்பா தான். ஆனாலும் இது எல்லாருக்கும் அவங்களோட அவசரம் தான் காரணம்னு நினைக்கும் போது கோபமா வருது…ம்ச்ச்..” என்றவன் மொபைல் எடுத்து வீட்டிற்கு அழைத்தான். “அவர்கள் கேட்டது போல நிருவை கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் என்றான். மறுநாளே கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டான்.” அவர்களுக்கு இவன் சரி என கூறியதே மகிழ்ச்சியாக இருக்க வேறேதும் கேட்காமல் ஒப்புக்கொண்டனர். போனை வைத்ததும் வசந்த் புரியாமல் பார்க்க “நாளைக்கு வரைக்கும் நிரு தான் நேத்ரான்னு அவங்களுக்கு தெரியவேண்டாம்.” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29

29 – மீண்டும் வருவாயா? நேத்ரா அனைத்தும் எடுத்து பேக் பண்ணிவிட்டு விஜயை அழைக்க “என்ன நித்து கிளம்பலாமா?” அவளோ “கடைசிவரைக்கும் எங்க போறோம் எப்போ ரீட்டர்ன்னு தான் சொல்லல..டிரஸ் எடுத்து வெச்சதாவது போதுமா ஓகே வான்னு பாருங்க..” என அவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18

18 – மீண்டும் வருவாயா? அன்புள்ள உறவுகளுக்கு, இந்த லெட்டர் அம்மா அப்பாக்கு மட்டுமில்ல.. ஏன்னா உங்க எல்லாருக்குமே தான் என் மேல பாசம் அதிகமாட்டாச்சே. எல்லாருக்குமே தான் நான் பதில் சொல்லியாகணும். என்னை எல்லாரும் என்னனு நினைச்சீங்கனு எனக்கு தெரில.

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா..