Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த தம்பி மாதிரி தானே மகேந்திரன் அண்ணா நினைச்சாரு. உங்களுக்கு எல்லாமே பாத்து பாத்து செஞ்சு கடைசில அவரு உயிரை எடுக்கற அளவுக்கு என்ன வந்தது உங்களுக்கு. இப்டி ஒரு பணப்பைத்தியமா நீங்க இருப்பீங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கல.  கட்டுன புருஷன் இந்த மாதிரி, பெத்த புள்ளை அதையும் மிஞ்சிட்டான். இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானே உங்க இரண்டுபேருக்கும் விஷத்தை வெச்சிருப்பேன். ச்சா என்ன ஜென்மங்களோ நீங்க இரண்டுபேரும். செல்வம் அம்பிகாவை அதிர்ச்சியாக பார்க்க அம்பிகா “எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு.. இதுக்கு மேல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இனிமேலும் மறச்சு நீங்க எதையும் சாதிக்கப்போறதில்லை.. அதோட உங்க புள்ளையையும் இங்க வரச்சொல்லுங்க.” என உச்சகட்ட கோபத்தில் கத்தினார். இறுதியில் மனம் வருந்தி கண்ணீர் வடிக்க

 

செல்வம் “நீ அழாத மா.. இவ்வளவும் பண்ணதே என் குடும்பம் புள்ளை மனைவி சந்தோசமா வெச்சுக்கணும் நல்லா இருக்கணும்னு தான். ஆனா இன்னைக்கு உனக்கு அது சுத்தமா பிடிக்காம வெறுக்கற, பையன் அத அனுபவிக்காம மொத்தமா தப்பு பண்ணிட்டு வெளிய இருக்கான்.  தினமும் பயந்து பயந்து சாகுற வாழ்க்கை என்னால முடியல. யாருக்கு இதுனு தெரியாமலே என்ன வாழ்க்கைனு நினைச்சே இப்டி ஆகிட்டேன். ஆதர்ஷ்  நீ கேக்றதுக்கு நான் பதில் சொல்றேன். உனக்கு இப்போ என்ன தெரியணும் சொல்லு.” என்றார்.

 

ஆதர்ஷ், “ருத்திராவுக்கு என்ன கோபம் எங்கமேல அவன் ஏன் அண்ணாவை கொலை பண்ணான்?”

செல்வம் “அது என் மேல தான் தப்பு… ருத்திராகிட்ட நான் அவங்கள திட்டி புலம்பி இப்டியே இருந்திட்டேன். அவனுக்கு அப்போ எல்லாம் அவன் அம்மாதான் எல்லாத்துக்குமே. ஆனா அவ கொஞ்சம் கண்டிப்பு. அதனால ஏதாவது வேணும்னா என்கிட்ட தான் வருவான்..அவனை நான் வெளில கூட்டிட்டு போகும்போது இல்லை தனியா பேசும்போது பொலம்பிட்டு இருப்பேன்  சில நேரம் இவங்க மேல இருக்கற கோபத்துல தனியா தண்ணி அடிச்சுட்டு ரூம்ல பொலம்பிட்டு இருப்பேன். அப்போ எல்லாம் அவன் பாத்திருக்கான்… எனக்கு மனசுல இருக்கற பாரத்தை இறக்கிவெக்கணும்னு தோணுச்சு…அவன்கிட்டேயும் அப்டியே நினைக்கிற கோபம் வெறுப்பு எல்லாமே புலம்பிருக்கேன்.. ஆரம்பத்துல இருந்து உங்க அப்பா பெரியப்பா மேல எனக்கு இருந்து கோபம், என்ன பண்ணாலும் அவங்க தான் முன்னாடி வராங்கனு நினச்சு ஒரு வெறுப்பு வந்திடுச்சு. எங்க போனாலும் அவருக்கு தான் எல்லா மரியாதையும். கம்பெனி வேலை செய்யறவன் கூட அவர்கிட்ட ஒருமாதிரி என்கிட்ட ஒருமாதிரி தான் இருப்பானுங்க. எனக்கு கோபமா வரும். அத நான் அப்போ அப்போ வேலைல கண்டுக்காம வெளிப்படையா காட்ட ஆரம்பிச்சேன். உங்க அப்பாவுக்கு அந்தமாதிரி வேலை கெடுறத பிடிக்கல. என்னை கூப்பிட்டு சத்தம் போட்டுட்டாரு. எனக்கு ரொம்ப அவமானமா போயிடிச்சு. வீட்ல அம்பிகாகிட்ட சொன்னா அவ உங்கள யாரு இப்டி பொறுப்பில்லாம இருக்க சொன்னது.. அண்ணா திட்டினது நியாயம் தானே. எவ்ளோ பெரிய வாய்ப்பு. உங்களால போகுதுன்னா சும்மா இருக்கமுடியுமானு அவருக்கு தான் சப்போர்ட் பண்ணா… அப்போ எல்லாம் ரொம்ப கோபத்துல இருந்தேன். ருத்திராகிட்ட தான் சொன்னேன். நீயும் கொஞ்சம் வளந்ததும் மத்தவங்கள மாதிரி அவங்க தான் முக்கியம்னு போய்டுவ.. நான் ஒண்ணுமே இல்லைடா. உன் அப்பா வேஸ்ட்னு உளறிட்டே இருந்திருக்கேன். அதெல்லாம் எதுவும் இல்லேனு அவன் எவ்ளோ சொல்லியும் நான் கேக்காம ட்ரிங்க் பண்ணிட்டு புலம்பிட்டே மயங்கிட்டேன். ஆனா அவனுக்கு அதெல்லாம் மனசுல பதிஞ்சிருச்சு.. என்னை விட அவன் உங்க குடும்பத்து மேல ரொம்ப கோபமா இருக்கான்னு எனக்கு அப்போ புரியல. பின்னாடி அவன் சொல்லும்போது தான் எனக்கே என் தப்பு புரிஞ்சது. அதோட உங்க அண்ணனை விட அவன் ஒரு வயசு தான் சின்னவன், ஆனா குடும்பத்தோட வெளில போகும்போதும் எல்லாருக்கும் நீ தான் செல்லம், உங்க அண்ணன் தான் பொறுப்பானவன். அதுவும் அவனுக்கு பிடிக்கல. உனக்கு ஞாபகம் இருக்கா ஆதர்ஸ், உன் பொறந்தநாள் அப்போ உன் அண்ணனை அப்பா அம்மா இல்லாதவன், இந்த வீட்டு பையன் இல்லேன்னு நான் குத்திகாமிச்சேன். நீ அத்தனை பேர் முன்னாடியும் என்னை மாட்டிவிட்டுட்ட.. எல்லாரும் என்னை திட்டுனது, என்னை விட அவன் ரொம்ப அவமானமா எடுத்திருந்திருக்கான். வீட்ல வந்தும் எனக்கும் அம்பிகாவுக்கும் கூட அதனால சண்டை. அப்புறம் என் தம்பி உன் சித்திய விரும்பரானு சொல்லியும் கல்யாணி அவனை உதாசீனப்படுத்தினது, நீ விபரம் தெரியலேன்னாலும் எங்களை அவமானப்படுத்துறமாதிரி பேசுனது எல்லாமே அவன் மனசுல வெச்சிட்டு இருந்திருக்கான். எனக்கும் அந்த கோபம் இருந்தது. அப்போதான் நான் கோபத்துல உங்கள கொல்லணும்னு சொன்னேன். அவனே வந்து நீங்க போற வண்டியை ஆக்சிடென்ட் பண்ணிடலாம்னு சொன்னான். முதல எனக்கு என்ன சொல்ரான்னு புரியல.. அப்புறம் சொன்னான் எவ்ளோ நாளைக்குபா இப்டியே இருக்கறது. நீங்க இப்டி புலம்பி பீல் பண்ணி என்னால பாக்கமுடியல. வேலை குடுத்தாங்க, பாத்துக்கிட்டாங்க. அதுக்காக எப்போவுமே அவங்க கால்லையே விழுந்திருக்கணுமா? வேண்டாம் அவங்க நமக்கு… எனக்கு தெரிஞ்ச ஒரு டிரைவர் அங்கிள் இருக்காரு. எப்போவுமே ட்ரிங்க்ஸ் தான். அவரை வெச்சு இந்த வேலைய முடிச்சிடலாம். பிரச்சனை வந்தாலும் தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டிருக்கான் அதனால ஆக்சிடென்ட் ஆகிடிச்சுனு நம்ம பேரு வெளில வராம கேஸ முடிச்சிடலாம்னு சொன்னான். அப்போ அவன் காலேஜ் சேந்த புதுசு… சின்ன பையன்னு நினச்சேன்..ஆனா அப்போவே அவன் எனக்கு மீறி இருந்தான்… அவன் சொன்ன பிளான் அதோட அப்போ எனக்கிருந்த வெறி அதுதான் சரினு பட்டது. அதேமாதிரி செஞ்சோம் ஆனா அதுல மாட்டுனது நீயும், உங்க அம்மாவும் மட்டும் தான். அப்புறம் நிறையா விஷயம் பிளான் பண்ணது எல்லாமே அவன்கிட்ட கேட்டுத்தான் பண்ணேன். ஆனா அவனை தூக்கி வளத்துன அவன் சித்தப்பாவே இறந்தாலும் பரவால்லைனு சொல்லும்போது தான் அவனுக்கு பிடிவாதம், வெறி எந்தளவுக்குனு எனக்கே புரிஞ்சது. அவன் முடிவெடுத்து ஒன்னு பண்ணா அவளோ பக்காவா இருக்கும். ஆனா குறுக்க எந்த பிரச்சனை வந்தாலும் யாரு வந்தாலும் அவன் யோசிக்கவே மாட்டான்..  அப்போ எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனா மறுபடியும் எனக்கு அந்த பெயரளவுல மட்டும் பார்ட்னெர்ஷிப் இல்லாம பிஸ்னஸ பாத்துக்க கொடுப்பினை இல்லை. எனக்கு மேனேஜ்மென்ட் பத்தாது. நானே ஒத்துக்கறேன். இருந்தாலும் அடுத்து என் புள்ளைக்கு வரும்னு நினச்சேன். ஆனா உன் அப்பா ஆனந்தை அடுத்து பிஸ்னஸ் பாத்துக்க கூட்டிட்டு வந்ததும் ருத்திராவுக்கும் எனக்கும் செம கோபம். கேட்டதுக்கு அவன் ரொம்ப ரூடா நடந்துக்குவான்… கொஞ்ச நாள் போகட்டும் அவன் ஒரு நிதானத்துக்கு வரட்டும். எதையும் தெளிவா யோசிச்சு முடிவெடுக்க பழகட்டும். அப்போ பாக்கலாம்னு சொன்னதும் அதுக்கப்புறம் நான் ருத்திராவை தடுக்கறதே இல்லை. அவன் என்ன பண்ணாலும் சப்போர்ட் பண்ணேன். அவன் சொல்றபடி தான் செஞ்சேன். எங்களுக்கு வராத இந்த பிஸ்னஸ் லாஸ் ஆகணும்… இல்லை எங்களுக்கே வரணும் இது இரண்டும் தான் ஆப்ஷன் வெச்சிருந்தோம். அதனால தான் பிஸ்னஸ்ல வந்த ப்ரோப்லேம் அப்புறம் தான் வீட்ல நடந்த பிரச்சனை, உங்க அப்பா அண்ணா சித்தி ஆக்சிடெண்ட்ல இறந்தது எல்லாமே அவனோட பிளான் தான். எங்கேயும் மாட்டிக்காம தான் எல்லாமே போச்சு.

 

நீ வரவரைக்கும் என்றான் ஆதர்க்ஷை பார்த்து… எப்போவுமே ருத்திராவும் உன்னைப்பத்தி சொல்லுவான்.. யாருகிட்ட மாட்டிக்கிறீங்களோ இல்லையோ ஆதர்ஷ்கிட்ட மாட்டிக்ககூடாதுனு சொல்லுவான்… ஏன்னா நீ அவனை மாதிரியாம் உன் வழில குறுக்க வந்தா யாருன்னாலும் நீ பாக்கமாட்ட… அதேமாதிரி தெளிவாமுடிவெடுப்பான்… பாவம் பாரபட்சமே பாக்கமாட்டான்னு சொல்லுவான்.. அது இந்த ஒரு வாரத்துல கண்கூட பாத்துட்டேன். உன்னை விட உன்னை பத்தி அவனுக்கு நல்லாவே தெரியும். எந்தமாதிரி விசயத்துக்கு நீ எப்படி முடிவு பண்ணுவேன்னு அவன் சொல்லுவான். நீ 100% இந்த பிஸ்னஸ் லைன்க்கு வரமாட்டேன்னு தெரிஞ்ச அப்புறம் தான் இவ்ளோவும் பண்ணது… நீ உடனே ஊருக்கு வரமுடியாதுனு தெரிஞ்சு தான் நீ லண்டன் போயிருக்கும் போது ஆக்சிடென்ட் பண்ணது எல்லாமே…அவனோட கணிப்பு இந்த தடவ தான் மிஸ் ஆகிடுச்சு. ஆனா இரண்டு நாள் முன்னாடி நான் பேசும்போது நானே வேண்டாம் விட்டரலாம்னு சொல்லியும் அவன் கேக்கற நிலமைல இல்லை. என்னை பாதில அதுவும் அந்த பொடிப்பையன பாத்து பயந்து போகசொல்றிங்களான்னு கேக்குறான். நான் சொல்ல வரதையே கேக்காம இவளோ நாள் உங்களுக்காகவும் எனக்காகவும் இத செஞ்சிட்டு இருந்தேன். இனிமேல் உங்களுக்கு பிரச்னை வரும்னு பயந்தா இது எனக்காக மட்டும் செஞ்சுக்கறேன். குறுக்க வந்தா அப்பான்னு கூட பாக்கமாட்டேனு சொல்லிட்டான். எனக்கு அந்த அதிர்ச்சி பையன் வாழ்க்கைய நானே கெடுத்திட்டேன்னு நினச்சு தான் ஹார்ட்அட்டாக்கே வந்திடுச்சு.”  என செல்வம் கூறி முடிக்க

ஆதர்ஷ் “சரி, அக்சரா பேமிலி என்ன ஆனாங்க? ஏன் ருத்திரா இங்க வரவே இல்லை?”

செல்வம் “அவன் அக்சராவை பிடிச்சிருக்குனு கேட்டு ஊர்ல இருந்து சண்டைபோட்டுட்டு அம்பிகா அவனை இங்க கூட்டிட்டு வந்துட்டா. ஆனா அவன் அவங்க பேசுனது அடிச்சத மனசுல வெச்சிட்டு அவங்க எல்லாரும் ஈவ்னிங் கிளம்புற வண்டியை ஆக்சிடென்ட் பண்ண சொல்லி ஆள் ரெடி பண்ணிட்டு வந்திருக்கான். அது மலை பகுதி, நிறைய பெண்ட் இருக்கும்… இவன் சொன்னமாதிரி ஆக்சிடென்ட் பண்ணிருக்கானுங்க, வண்டி பள்ளத்துல விழுத்திருக்கு. ஆனா யாருமே அடிபட்டோ, ஏன் அவங்க பாடி கூட கிடைக்கல.. இவன் அடுத்து ஆளுங்க வெச்சு விசாரிச்சிட்டு ஒரு நாள் முழுக்க பாத்திருக்கான். எதுவும் கிடைக்கலேன்னதும் அம்பிகாகிட்ட அக்சராவை பத்தி அவங்க பேமிலி வீட்டை பத்தி எல்லாமே விசாரிச்சிருக்கான். ஆனா அவ சொல்லல. இவனுக்கு அவங்க எல்லாரும் இறந்தாங்களா? இல்லையா? எங்க போனாங்க என்னனு தெரில.. கடைசில என்கிட்ட சொன்னான்.  ஏதாவது கேஸ் ஆகிடுமோனு நான் அவனை உடனே பாரின் அனுப்பிச்சிட்டேன். அவன் இங்க அந்த 3 நாள் இருந்தமாதிரியே காட்டாம எல்லாமே ரெடி பண்ணிட்டேன். அப்புறம் நான் தனியா ஆளுங்க வெச்சு விசாரிச்சு பாத்தாச்சு. அவங்க இறக்கல. அதுமட்டும் தான் தெரியும். ஆனா எங்க போனாங்க என்ன ஆனாங்கனு தெரில. எனக்கு அவங்க பேமிலிவிபரம் தெரியாது. அம்பிகாகிட்ட கேட்டா ஆயிரம் கேள்வி வரும். நம்மளே தேவையில்லாம பிரச்சனை பண்ண வேணாம்னு விட்டுட்டேன். வெளிப்படையா விசாரிச்சாலும் விஷயம் தெரிய சான்ஸ் இருக்குனு ருத்திராவையும் வெளில விசாரிக்க விடல. நானும் விசாரிக்கல. அவங்க பேமிலி எங்கனு தெரில. அந்த பொண்ணும் எங்க போனான்னு தெரில.” என்றார்.

 

அனைவரும் செல்வம் வீட்டில் இருந்து கிளம்பிவந்ததும் வாசுவின் மூலம் அக்சரா ருத்திராவிடம் பேசியது அவன் இந்தியா கிளம்பி வருவது பற்றி கூறினான். ரகு “பாருடா, டேய் ஆதர்ஷ் உனக்கு ஏத்த ஜோடிதான்டா. என்ன பண்ணலாம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி இவன் தான் வேலைய செஞ்சு முடிப்பான்னு பாத்தா உன் ஆளு அப்படியேதான் போல. தேடிப்புடிப்பிங்களாடா?” என கிண்டல் செய்ய

ஆதர்ஷ் புன்னகைத்தான்.

வாசு “அவனை எப்படி வரவெக்கிறதுனு யோசிச்சிட்டு இருந்தோம் இப்போ அதுவும் முடிஞ்சது… சொல்லுங்க சார், இனி அடுத்து என்ன பண்றதா இருக்கிங்க…”

ஆதர்ஸ் “அதான் எல்லாமே தெரிஞ்சிடிச்சு. அவனுக்கு எதிரான எல்லா ஆதாரமும் இருக்கு. இரண்டு தட்டு தட்டுனா போதும் சங்கரமூர்த்தி அப்ரூவர் ஆகிடுவான். செல்வம் இப்போ சொன்ன எல்லாமே எழுதி அவன்கிட்டேயும் சைன் வாங்கிக்கோங்க. ருத்திரா வரும்போது அவனை அர்ரெஸ்ட் பண்ணுங்க mr.போலீஸ் அவ்ளோதான்.” என அவன் சிம்பிளாக சொல்ல ரகு, வாசு, எடின் மூவரும் மாறி மாறி முழிக்க ரகு ” என்னடா, அவனை அர்ரெஸ்ட் பண்றது ஓகே. அது பெரியவிஷயமே இல்லை. ஆனா உனக்கு அவன் மேல இருந்த கோபத்துக்கு நீ இவளோ சாதாரணமா அவனை விடுவேன்னு நினைக்கல.”

வாசு “அதானே, யாருடா அவன், உன் கைல கிடைச்சா அவன் காலினு நாங்க எல்லாரும் நினைச்சிட்டு இருந்தோம். நீ என்ன இப்டி சொல்ற…?”

ஆதர்ஷ் எதுவும் கூறாமல் நிதானமான புன்னகையுடன் வண்டியை ஓட்ட மற்ற அனைவரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர். வீட்டிற்கு வந்ததும் அவன் அம்மா அண்ணியை அழைத்து எல்லா டாக்குமெண்ட்ஸையும் குடுத்தான். வாசு “அம்மா, சொத்து, பிஸ்னஸ் எதுலையும் எந்த பிரச்சனையும் இல்லாம அவங்ககிட்ட எழுதி வாங்கியாச்சு.”

ரகு “அதோட  அங்கிள், அண்ணா எல்லார் சாவுக்கும் காரணமானவங்களை மொத்தமா கண்டுபுடிச்சாச்சு, நாளைக்கு அர்ரெஸ்ட் பண்றது மட்டும் தான் பாக்கி..எல்லா ஆதாரமும் ரெடியா இருக்கு… இனி எந்த பிரச்சனையும் இல்லை நீங்க உங்க குடும்பத்தோட சந்தோசமா இருக்கலாம்… அவனுங்களால எந்த தொந்தரவும் வராது.” என பைரவி ஆதர்சை பார்த்து கண்ணீருடன் “என்னை மன்னிச்சிருடா கண்ணா.. உன்னை நான் அப்டி அன்னைக்கு பேசியிருக்க கூடாது. உனக்கு ஏதாவது ஆகிடும்னு பயத்துல தான் அப்டி கோபமா பேசி அனுப்பிச்சிட்டேன்.” என அழத்துவங்கினர்..

அவனும் “மா, விடுங்க மா… எனக்கு உங்க மேல கோபம் இல்லை. என் பையன் பிரச்சனைய சரிபண்ணிடுவான்னு நீங்க என்னை நம்பலையேன்னு வருத்தம் தான். இப்போ வந்தும் நான் உங்ககிட்டேயும் அண்ணிகிட்டேயும் கோபமா நடந்துக்கிட்டதுக்கு காரணம் சாதாரணமா பேசுனா நீங்க இருக்கற பயத்துல என்னை இங்க இருந்து மறுபடியும் போக சொல்லி அடம்பிடிப்பீங்க. அழுது, கெஞ்சி என்னால அதைத்தான் சமாளிக்க முடியாது. அதான் அப்டி நடந்துக்கிட்டேன். சாரி மா, சாரி அண்ணி..” என அடுத்து செய்யவேண்டிய அனைத்தும் துரிதமாக நடந்தேறியது.

மறுநாள் ருத்திரா வந்ததும் ஏர்போர்ட்டில் இருந்தே அவனை கைது செய்தனர். அவனது அப்பா இறுதியாக அவனை பார்க்க வேண்டுமென கேட்க அவனை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் சென்றனர்.

 

செல்வம் “என்னை மன்னிச்சிரு ருத்திரா, சின்ன பையன்னு பாக்காம உன்கிட்ட தேவையில்லாம வெறுப்பை வளர விட்டு ஏதேதோ பேசி ஆரம்பத்துல இருந்தே உன் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேனோன்னு இப்போ வருத்தப்படுறேன். என்னால என் பையனோட வாழ்க்கை அழிஞ்சுபோச்சுன்னு நினச்சு நினைச்சே நான் இந்த இரண்டுநாளா செத்திட்டு இருக்கேன்..

 

என்னை மன்னிச்சிடுடா..உனக்கு சொத்து பணம் சேத்தி வெச்சு உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு ஆசைப்பட்டு உன் அம்மாகிட்ட இருந்தே உன்னை விலக்கிவெச்சது தப்புதான். என்னை மன்னிப்பியா?” என கேட்டவர் அவ்வாறே உயிர் துறக்க ருத்திரா அம்பிகாவிடம் சென்றவன் “மா” என்றதும் அம்பிகா விருட்டென்று எழுந்துவிட்டு “ஆதர்ஷ், எனக்கு ஒரு பையன் இருந்தான் அவன் செத்துபோய்ட்டான் நான் தான் இவளோ நாள் தெரியாமலே இருந்திருக்கேன். புருசனும் இப்போ போய்ட்டாரு கூட வாழ்ந்த பாவத்துக்கும், பெத்து வளத்த பாவத்துக்கு இறுதி சடங்கு பண்ணனும்… நீ கூட வரியா?” என வினவ ஆதர்ஷ்க்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஆதர்ஷ் “ஆண்ட்டி ருத்திராகிட்ட ஒரு வார்த்தையாவது பேசலாம்ல….?” என

அம்பிகா “உன் அம்மா என்னை உங்ககூட இருக்கசொல்லி வற்புறுத்தனதால உன்கூட வர ஒத்துக்கிட்டேன். ஆனா நீ இப்டி எனக்கு பிடிக்காததை பண்ண சொல்லி வறுபுறுத்துனா நான் வரமாட்டேன். உனக்கு ஒருவேளை பாரமா இருக்கேனு நீ நினைச்சா என்னை விட்று… நான் எங்கேயோ போயி உங்க யாரு கண்ணுலையும் படமா எப்டியோ வாழ்ந்துக்கறேன்.” என கோபத்துடன் கூற

ஆதர்ஷ் எதுவும் கூறும் வழியின்றி நிற்க ருத்திராவை அழைத்து செல்ல போலீஸ் வந்ததும் அம்பிகா “நான் வெளிய நிக்கறேன் நீ பாத்திட்டு வா….” என ஆதர்ஷிடம் கூறிவிட்டு சென்றார்.

ரகு அவனை அழைத்துச்சென்றான்.

 

ருத்திராவிற்கு சிறை தண்டனை உறுதியானதும் ரகு அவனை அழைத்து வரும்வழியில் “ஆனா நீ இத எதிர்பார்த்திருக்க மாட்ட.. ஆதர்ஸோட அப்பா, அண்ணா சித்தி எல்லாரையும் கொன்னுட்டு கடைசில கூட அவனை பாக்கவிடாம பண்ண, அவங்க அம்மா அண்ணி குழந்தைங்கனு எல்லாரையும் பிரிச்சிட்ட.. ஆனா நிலைமை பாத்தியா, உனக்கு உன் அப்பா உன் கண்ணு முன்னாடி இறந்தும் கடைசி காரியத்தை உன்னால செய்யமுடில. அவன்தான் செஞ்சான். உன் அம்மா உன் முன்னாடி இருந்தாலும் உன்னை ஒரு நிமிஷம் கூட பாக்கப்பிடிக்கலனு சொல்லிட்டு போய்ட்டாங்க. உனக்காக பணத்துக்கு வேலை செஞ்சவங்க உன்னை காட்டிகொடுத்திட்டாங்க..எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாம நீ தான் இருக்க.. இத்தனை வருஷம் எதுக்கு கஷ்டப்பட்டியோ அது எதுவுமே இல்லாம போய்டிச்சுல.. உன்னை பத்தி தெரிஞ்சதும் கேட்டதும் அப்போவே கொல்லணும்னு அளவுக்கு கோபம் வந்தது. இப்போவும் இருக்கு. ஆனா…”

 

ருத்திரா “ஆதர்ஷ் வேண்டாம்னு சொல்லிருப்பான்..” என ரகு அவனை ஆச்சரியமாக பார்த்தான்

ருத்திரா “என்ன சரியா? உங்க எல்லாரை விட அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க எல்லாருமே பிரச்சனை தீக்கணும்னு பாப்பிங்க. ஆனா அவன் பிரச்சனையோட ஆணிவேர் எங்கன்னு பாத்து அத சரிபண்ணணும்ணு பாப்பான். நான் இப்டி இருக்கேன், என்னை பிடிக்கலேன்னு மட்டும் தான் உங்க கண்ணக்கு தெரியும், ஆனா நான் ஏன் இப்டி மாறினேன்னு அவன் யோசிச்சிருப்பான். அதனால அடுத்து அவன் இப்படித்தான் திங்க் பண்ணுவான்.” என ஆதர்ஸை பற்றி தெளிவாக கூறினான்.

ஆதர்ஷ் வீட்டில் பைரவி, அம்பிகா, சாந்தி, வாசு, விக்னேஷ், ஆதர்ஸ் அனைவரும் இருக்க ஊரில் இருந்து ரஞ்சித் பிரியாவுடன் குழந்தைகளையும் அனுப்பிவைக்க அவர்களும் இங்கே வந்துவிட வீடே அமர்க்களமாக இருந்தது. அக்சராவை ஊரில் இருந்து அழைத்துவர ஆதர்ஷ் தானே போவதாக கூறினான்.

வாசு, ரஞ்சித், பிரியா, சாந்தி அனைவரும்  “அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்டி தனியா எல்லாம் அல்லோவ் பண்ண மாட்டோம்” என ரகளை செய்ய இறுதியில் அவன் பேசி தான் மட்டுமே சென்று அழைத்துவருவதாக கூறிவிட்டான். போனில் விஷயத்தை கூறியதும் விக்ரம் ” ஒன்னும் பிரச்சனை இல்லை ஊட்டியில் இருந்துதானே ஆதர்ஷ் வந்ததும், நான், சஞ்சு அம்மா,அப்பா, அத்தை நாங்களும் அவங்க கூடவே வருவோம்” என வம்பிழுக்க ஆதர்ஷ் போனை வாங்கி “அதெல்லாம் யாரும் நாட் அல்லோவ்ட். நீங்க நாளைக்கு காலைல  ஊர்ல இருந்து கிளம்புங்க.. நானும் அவளும் மதியம் இல்லை சாய்ந்தரம் கிளம்பி வரோம். ஆனா நானும் அவளும் மட்டும் தான் வருவோம்.. பெரியவர்களும் ஆதர்ஷ், அக்சராவை பற்றி தெரியும் என்பதால் எதுவும் கூறவில்லை. இளையோருக்கும் அவன் அவளிடம் தனியே பேசவேண்டும் என எண்ணுகிறான் என புரிய வம்பிழுப்பதோடு சரி, மத்தபடி அவன் எண்ணப்படியே அனைத்தும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

அடுத்தநாள் அதிகாலையிலேயே விக்ரம், சஞ்சு அனைவரும் அக்சராவை கிண்டல் செய்துவிட்டு “நாங்க கிளம்புறோம் மேடம், அப்புறம் உங்க ஆள் வந்தா எங்களை அடிச்சு அனுப்பிச்சிடுவான்… எங்களுக்கு எதுக்கு ஊர் வம்பு என அக்சரா “இப்டியே பேசிட்டு இரு.. அவரு வந்து அடிக்கறாரோ இல்லையோ நான் அடிக்கப்போறேன்.” என விக்ரம் “என்ன நீ, கொழுந்தன்னு கொஞ்சமாவது மரியாதை பாசம் இருக்கா?”

அக்சரா “ஆஹான்… அப்போ சார்க்கு அண்ணினு கொஞ்சமாவது மரியாதை இருக்கா?” என திருப்பி கேள்வி கேட்க

விக்ரம் “அது எதுக்கு, நீ எனக்கு அண்ணியாகுறதுக்கு முன்னாடியே எனக்கு பிரண்ட்.. ஞாபகம் இருக்கில்ல.. நான் இப்படித்தான் இருப்பேன். திடிர்னு எல்லாம் பழக்கத்தை என்னால மாத்திக்கமுடியாது. எப்போவது தோணுச்சுன்னா கூப்பிடறேன்…”

அக்சரா “சேம் டு யூ…” என புன்னகைக்க சஞ்சு தலையில் அடித்துக்கொண்டு “இரண்டுபேரும் இப்போ என்கிட்ட வாங்க போறீங்க..” அனைவரும் வந்துவிட பின் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 10ராணி மங்கம்மாள் – 10

10. ராஜதந்திரச் சிக்கல்  “கிறிஸ்துவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்” என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்த ரங்ககிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்:   “இதே

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும்

கடவுள் அமைத்த மேடை – 16கடவுள் அமைத்த மேடை – 16

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே? கடவுள் அமைத்த மேடை -16 கதையில் வந்த பாடல்