ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 25

25 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

“டேய் ஆதர்ஷ் கண்ணா கல்யாணம் பண்ணா தான் இந்த மாதிரி பெரிய பேமிலி எல்லாம் வரும்.”

“அப்போ எனக்கு அண்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா பெரிய பேமிலி இருக்கே. அப்புறம் எதுக்கு?”

“இல்லடா, புதுசா பிரண்ட்ஸ் எல்லாம் கிடைப்பாங்க.”

“அது ஸ்கூல்க்கு போனாலே நிறைய பேர் கிடைப்பாங்க. ஊட்டி போனாலும் எனக்கு கிடைப்பாங்க. மேரேஜ் பண்ணாமலே பிரண்ட்ஸ் கிடைப்பங்களே?”

“இல்லடா இப்போ அம்மா எப்படி உங்கள பாத்துக்கறாங்க. அதேமாதிரி உனக்கு அண்ணி வந்தாலும் உன்னை பாத்துப்பாங்க. அண்ணாவையும் பாத்துப்பாங்க.”

“அதான் அம்மாவே எங்கள பாத்துக்கறாங்களே. அப்புறம் எதுக்கு அண்ணி வந்து பாக்கணும்.?”

“அம்மாவுக்கு வயசாயிடிச்சுல்ள … அதான் ஹெல்ப் பண்ண அண்ணிய வரவெக்கிறோம் .”

“ஓஒஹ்ஹஹ்.. அப்போ வர அண்ணிக்கு கொஞ்சம் வருசத்துல வயசாகிட்ட வேற யாரு வருவாங்க? புது அண்ணியா?”

அய்யயோ.. என ஜெயேந்திரன் “ஆனந்த், இவன் உனக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே டைவோர்ஸ் வாங்கிகுடுத்துடுவான் போலவே” என சிரிக்க

தனம் “அதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணிவெச்சிடலாம். உன் பொண்டாட்டி வந்து எல்லாரையும் பாத்துக்க போறா… அப்புறம் எதுக்கு புது அண்ணி?”

“எனக்கா? எனக்கு எதுக்கு கல்யாணம், வொய்ப் வரணும்? இப்போதான் அண்ணாக்கு கல்யாணம் சொன்னிங்க? அதுக்குள்ள எனக்கு சொல்றிங்க? முதல எதுக்கு கல்யாணம், ஏன் பண்ணனும் எல்லாம் சொல்லுங்க. எனக்கு குழப்பிது” என

இறுதியில் பைரவி அவனிடம் வந்து “ஆதர்ஷ் கண்ணா, எல்லாருக்கும் ஒரு ஸ்டேஜ்ல கல்யாணம் பண்ணுவாங்க.  நம்ம லைப்ல இருக்கற பாக்குற எல்லாருமே இன்னொருத்தர சார்ந்து தான் இருப்பாங்க. முக்கியமா எல்லாரும் அந்த அன்புக்காக ஏங்குவாங்க.   என்னதான் நமக்காக அம்மா அப்பா அண்ணா தம்பின்னு குடும்பத்துல பிரண்ட்ஸ்னு எத்தனை பேரு இருந்தாலும் நமக்காக நம்மகூட லைப்ப ஷேர் பண்ணிக்க கணவனோ, மனைவியோ தான் இருப்பாங்க. எங்கேயோ பொறந்து வளந்து எந்த சம்பந்தமும் இல்லாம ஒண்ணா நம்மகூட கடைசி வரைக்கும் வாழறது, நம்மளோட எல்லா சூழ்நிலைலையும், பிரச்னைகளையும் சமாளிக்க கூட இருந்த சப்போர்ட் பண்றது அவங்களாத்தான் இருக்கும். எதுக்கு கல்யாணம் ஏன் பண்ணிக்கனும்னு கேட்டா தெளிவான எந்த பதிலும் இருக்காது.

காரணமே இல்லாம ஒரு அழகான அன்பான வாழ்க்கையை வாழறதுக்கு, நம்மள விட அவங்க ரொம்ப முக்கியம்னு நினைக்கற அளவுக்கு நேசிக்க, மத்தவங்களுக்காக நாம யோசிப்போம், நிறையா அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நமக்கே புரியவெக்க இந்த கல்யாணம், குடும்பம் வாழ்க்கை எல்லாம் நமக்கு சொல்லிகுடுக்கும்..” என

ஆதர்ஷ் ஏதோ ஏஞ்சல் கதை கேட்பது போல ஆச்சரியமாக கேட்டுக்கொண்டு “அப்டின்னா எனக்கு வைஃப் வந்தா என்கூட இருப்பாங்களா? அப்போ எப்போவுமே என்னை விட்டு போகமாட்டாங்களா? நான் எல்லா விஷயத்தையும் பேசலாமா? என்கூட விளையாடுவாங்களா? பத்திரமா பாத்துப்பாங்களா?” என வினா எழுப்ப

அவரும் சிரித்துக்கொண்டே “கண்டிப்பா, ஆனா அவ மட்டுமே உன்னை பாத்துக்கக்கூடாது. நீயும் அவளை பத்திரமா பாத்துக்கணும். எப்போவுமே வைஃப் நமக்காக வராங்க அதனால நம்ம அவங்கள எப்படி வேணாலும் நடத்தலாம்னு நினைக்கக்கூடாது. உன்னை நீ எப்படி நடத்தணும்னு ஆசைப்படறியோ அதேமாதிரி உன் மனைவியையும் நீ மதிச்சு நடத்தணும்.. கஷ்டப்படுத்த கூடாது. சண்டைபோட்டாலும் சீக்கிரம் சமாதானம் ஆகிடனும். எந்த சூழ்நிலையிலும் அவளை நீ விட்ரகூடாது. அவளை நீ எப்போவும் ஒரு பிரண்டா ட்ரீட் பண்ணனும்…சரியா?” என

“ம்ம்ம்… ” என வேகமாக தலையசைத்தவன் “பிரண்ட் மாதிரியா? அப்டின்னா சரி… நாங்க ரொம்ப கிளோஸ் ஆகிடுவோமே. என் வைஃப் எப்போ வருவா?” என

அனைவரும் தலையில் கை வைக்க “போட்ச்சுடா…. டேய் ஆனந்த் நீ இப்போவும் கல்யாணம் வேண்டாம்ங்கிற.. உன் தம்பிய பாரு. இப்போவே என் பொண்டாட்டி எங்கன்னு கேக்குறான்? அவனோட அண்ணனா நீ? என கிண்டல் செய்து சிரிக்க

கல்யாணி “அதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகுமே. உனக்கு இன்னும் கல்யாணம் பண்ற அளவுக்கு வயசு பக்குவம் வரல. இன்னும் கொஞ்சம் வளந்ததும் அத நீயே புரிஞ்சுப்ப.. ”

“இல்லை..ஏன் இப்போவே கூட்டிட்டு வாங்க.. நான் பத்திரமா பாத்துக்குவேன். பாசமா இருப்பேன்..ஏன் அவ்ளோ நாள் வெயிட் பண்ணனும்…” என

கல்யாணி “அது இப்போத்தானே உனக்கு சொல்லிருக்கு. எந்த அளவுக்கு நீ நாங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டேன்னு தெரியாம எப்படி அவளை உன்கிட்ட கூட்டிட்டு வந்து விட முடியும் சொல்லு. சாமி உன்னை செக் பண்ணுவாரு . நீ உன் வைஃப் மேல பாசமா தான் இருப்பியா நல்லா பாத்துக்குவியான்னு. எப்போ நீ அதுக்கு ஓகேன்னு அவரு முடிவு பண்ராரோ அப்போ உன் வைஃப்ப அவரே உன்கிட்ட கூட்டிட்டு வந்து விட்ருவாரு. அதுவரைக்கும் எங்க அவளை வெச்சிருக்காருனு யாருக்கும் தெரியாது… இந்த டெஸ்ட்ல நீ பாஸ் ஆகணும் .. அப்போதான் உனக்கு உன் வைஃப் கிடைப்பா..எப்போவுமே பிரண்டா உன்னை விட்டு போகாம நம்மகூடவே எப்போவும் இருப்பா..” என

“ஓஓ… அப்போ சரி, டெஸ்ட் தானே. நான் பாத்துக்கறேன்..” என

அனைவரும் ஹப்பாடி ஒரு வழியா விட்டுட்டான்டா. சாமீ. என அங்கிருந்து நகர்ந்தனர்.

 

மாலை அவனது பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்ய அங்கே செல்வம் அவரது மனைவி, மகன், தம்பி என குடும்பத்தினரோடு வந்து சேர்ந்தார். செல்வம் மீண்டும் ஆனந்தை குத்திக்காட்டி ஜாடையாக பேச என இருக்க இதை கவனித்த ஆதர்ஷ் வேண்டுமென்றே “ஆனந்த் அண்ணா, இங்க வா, எனக்கு இத சூஸ் பண்ணு. என்ன அங்க கூட்டிட்டு போ, எதை எடுக்கட்டும், எந்த டிரஸ் போடட்டும் என” அனைத்திற்கும் அவனை அழைத்து அவனது முக்கியத்துவத்தை காட்ட செல்வம் “அடேடே, என்ன ஆதர்ஷ், ஆனந்த் உன் சொந்த அண்ணன் இல்லைப்பா. நீ ஏன் அவன்கிட்ட கேக்கற. நம்ம வீட்டு ஆளுங்ககிட்ட போயி கேளு. அவங்க எடுத்து தருவாங்க.” என ஆதர்ஸ்,  செல்வம், ஆனந்த் மூவரும் மட்டும் இருக்கும் தைரியத்தில் அவன் கூறிவிட்டு கீழே சென்றுவிட ஆனந்த் வருத்தப்பட்டாலும் காட்டிக்கொள்ளாமல் நீ வாடா என அவனை அழைத்துக்கொண்டு சென்றான்.

 

ஆதர்ஷ் கீழே கேக் வெட்டி அப்பா, அம்மா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, தம்பி  என அனைவர்க்கும் ஊட்டிவிட அப்போதுதான் அங்கே ஆனந்த் போன் பேசிவிட்டு உள்ளே வந்தான். மகேந்திரன் “செல்வம் நீங்களும் வாங்க. ஆதர்ஷ் அவங்களுக்கும் குடு” என

ஆதர்ஷ் “அப்பா, நம்ம பேமிலில இருக்கறவங்களுக்கு குடுத்துட்டு அப்புறம் குடுக்கலாம்.” என

மகேந்திரன் “என்னாச்சு டா, ஏன் இப்டி சொல்ற. அங்கிள்கிட்ட அப்டி பேசக்கூடாது. அவரு எனக்கு தம்பி மாதிரி தான்.” என

ஆதர்ஷ் “சாரிப்பா, தம்பி மாதிரி தான். தம்பி இல்லேல்ல.. உங்களுக்கு அண்ணா பெரியப்பா மட்டும் தான். இதுதான் என் பேமிலி. புதுசா யாரையும் நான் சேத்திக்க மாட்டேன்” என முகத்திற்கு நேராக பார்த்து கூற

அவனை அனைவரும் அதட்ட “பெரியவங்ககிட்ட இப்படியா பேசுவ.?” என

ஆதர்ஷ் “இல்லம்மா,  செல்வம் அங்கிள் தான் சொன்னாரு. ஆனந்த் அண்ணா என் சொந்த அண்ணா இல்லையாம். டிரஸ் செலக்ட் பண்ண நான் அவர்கிட்ட கேட்கக்கூடாது. பேமிலி ஆள்கிட்ட தான் கேக்கணும்னு. அப்டி பாத்தா இவரும் அப்பா பெரியப்பாக்கு சொந்த தம்பி இலேல்ல? அப்புறம் எதுக்கு நான் இவருக்கு என் பேமிலி மெம்பெர்ஸ்க்கு முன்னாடி கேக் குடுக்கணும்.” என நேரம் பார்த்து போட்டுகுடுக்க அனைவரும் இப்போது செல்வத்தை முறைக்க அவனோ “இல்ல அண்ணா அது வந்து யார் யாரை எங்க வெக்கணும்னு தெரியணும்ல? அதான்”  என இழுக்க

ஜெயேந்திரன் “அதான் எங்க வீட்டு சின்ன பையனுக்கு உன்னை எங்க வெக்கணும்னு தெரிஞ்சிருக்கு. எங்களுக்கு தெரிலேனு சொல்ற?” என வினவ அவன் “அயோ, அண்ணா” என அவன் முடிக்கும் முன்

“போதும் செல்வம், இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும்.” என ஆதர்சிடம் சரிடா கேக் குடு… அதோட இந்த வருஷம் உனக்கு யாரு முதல ஊட்டணும்? என ஆதர்ஷ் நேராக ஆனந்திடம் வந்து அவன் கைப்பற்றி “எல்லாரும் ஒரு ஒரு எனக்கு பஸ்ட் கேக் ஊட்டியாச்சு. கோட்டா முடிஞ்சது. இனிமேல் எனக்கு எல்லா வருஷமும் என் அண்ணா தான் பஸ்ட் ஊட்டணும்…. ” என அனைவர்க்கும் தன் அண்ணன் தனக்கு எஎவ்வளவு முக்கியம் என காட்டிவிட்டான்.

பின் ஆதர்ஷ் இரு பிளேட்டில் கேக் எடுத்துக்கொண்டு அப்பா ப்ளீஸ் அந்த கேக் நீங்க எடுத்துகிறீங்களா? எனக்கு இரண்டு கை தானே இருக்கு. என பாவமாக கூற அவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள செல்வத்தின் மனைவி அம்பிகா, மகன் இருவருக்கும் ஆதர்ஷ் குடுத்துவிட்டு செல்வம் மற்றும் அவரது தம்பி மாணிக்கம் இருவரையும் வேண்டுமென்றே தவிர்த்தான். அது அனைவர்க்கும் புரிந்தாலும் புரியாதது போல அவனது செய்கை இருக்க அவன் குணம் அறிந்து யாரும் எதுவும் கூறவில்லை.

 

உணவிற்கு பின் கல்யாணியுடன் ஆதர்ஷ் இருக்க அவன் ஊட்டிவிட சொல்லி உணவு எடுத்துக்கொண்டு வர செல்ல கல்யாணி மட்டும் இருக்க அங்கே வந்த மாணிக்கம் “என்ன கல்யாணி எத்தனை நாள் இப்டியே இருக்கப்போற?”

“ஏன் எனக்கென்ன?”

“இல்லை உனக்கு தோஷம் அது இதுனு இப்போவே வயசு 27 ஆகப்போகுது. பேசாம நீ ஏன் என்னவே கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?”

“நீங்க ஒன்னும் கவலைப்பட்டு எனக்கு வாழ்க்கை குடுக்க வேணாம்.. யாருமே கல்யாணம் பண்ணிக்க இல்லேனு நிலைமை வந்தாலும் கூட உங்கள நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். எங்க மாமாக்கு இந்த மாதிரி நீ பேசுற விஷயம் தெரிஞ்சது அப்புறம் உன் உயிரு உன் கைல இருக்காது. ”

மாணிக்கம் “ஏய் உன்ன நான்…”

“என்ன பண்ணுவ? என் அப்பா, மாமா, ஜெயேந்திரன் மாமா, என் பசங்க ஆனந்த் ஆதர்ஷ் இத்தனை பேரை தாண்டி உன்னால என்ன ஒன்னும் பண்ணமுடியாது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்தேல்ல?” என

கோபம் கொண்டவன் திரும்பி நடக்க அங்கே ஆதர்ஷ் வர அங்கே வந்த செல்வம் ” என்ன மாணிக்கம், ஓஹ்.. நீயும் கல்யாணியும் பேசிட்டு இருந்திங்களா? சரி சரி நான் அப்புறம் வரேன்..”

கல்யாணி “இருங்க, உங்க தம்பிகிட்ட தனியா பேசுற அளவுக்கு எதுவுமில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பையன் அங்க பேசுனதை பத்தி தான் ஞாபகப்படுத்திட்டு இருந்தேன்.”

செல்வம் சுதாரித்தாலும் கண்டுகொள்ளாமல் “அது விடுமா, ஏதோ சின்ன பையன் அண்ணா மேல இருந்த பாசத்துல யோசிக்காம பேசிட்டான். எத எதை யார் முன்னாடி சொல்லணும்னு பாவம் தெரிஞ்சிருக்காத்தில…”

கல்யாணி “கண்டிப்பா இல்லை. அவன் யோசிக்காம பண்ணமாட்டான். அங்க வெச்சு அந்த விஷயத்தை சொன்னாதான் எல்லாரும் கேள்வி கேப்பாங்கன்னு அவனுக்கு தெரிஞ்சு தான் சொல்லிருப்பான். இல்லையா ஆதர்ஷ்?”

ஆதர்ஷ் ஆமாம் என தலையசைக்க அதோடு “அப்போதானே வேற யாரும் இதேமாதிரி பேசமாட்டாங்க. அதான் ” என அவன் தெளிவாக கூற அவர்களை பார்த்துவிட்டு ஆதரக்ஷை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

இங்கே அண்ணன் தம்பி இருவருக்கும் கோபம் தலைக்கேறியது. இருப்பினும் செல்வம் சொத்துக்காக பொறுமையாக இருந்தான். மாணிக்கம் அண்ணனை போல சொத்து என பார்த்தாலும் அவனுக்கு கல்யாணி மீது தனி அபிப்ராயம் இருக்கவே அவன் இத்தனையும் பொறுத்துக்கொண்டான். இருவரும் அவர்களுக்கான சமயம் பார்த்திருந்தனர்.

 

ஆதர்ஷ்க்கு வந்த கிப்ட் எல்லாமே பத்திரப்படுத்தி வைத்துவிட்டு அதில் இவனுக்கு மிகவும் பிடித்ததை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தான். யாருக்கு என கேட்டால் “என் வைஃப்க்கு என கூறுவான். நான் அவளை பத்திரமா நல்ல பாத்துப்பேன்னு தெரிஞ்சாதானே என்கிட்ட கடவுள் அவளை சீக்கிரம் கூட்டிட்டு வருவார்… நான் எப்படியும் நல்லா பாத்துக்குவேன். அவ திடிர்னு வந்துட்டா அப்போ அவளுக்கு நான் புதுசா உடனே நிறைய வாங்க முடியாதில்லை. அதனால தான், இப்போவே எனக்கு ரொம்ப பிடிச்சதை அவளுக்காக எடுத்து வெக்கிறேன்.” என கூறிய விளக்கம் கேட்டு அனைவரும் சிரித்தனர். அனால் யாரும் அதை தடுக்கவில்லை.

 

அதன் பின் அவரவர் தத்தம் வேலைகளை பார்க்க சில மாதங்கள் அப்டியே மகிழ்ச்சியாக செல்ல கல்யாணி திடீரென தனிமை வாசம் கொள்ள பைரவி அவரிடம் விசாரித்துவிட்டு மகேந்திரனிடம் பேச மூவருக்கும் ஏதோ சண்டை. ஆனால் வெளியே யாரும் காட்டிக்கொள்ளவில்லை..

அன்று மகேந்திரன், பைரவி, ஆதர்ஷ், ஆனந்த் கோவிலுக்கு செல்வதாக இருக்க கடைசி நேரத்தில் ஏதோ வேலை என மகேந்திரன் செல்லமுடியாமல் போக, ஆனந்த் ப்ராஜெக்ட் விஷயமா பேச ப்ரோபெஸோர் கூப்பிட அவனும் கிளம்பிவிட பைரவி, ஆதர்ஸ் மட்டும் செல்ல திரும்பி அவர்களுக்கு வந்த செய்தி விபத்து தான். ஆதர்ஷ்க்கு நல்ல அடி காயங்கள், சரியாகும் வரை மருத்துவனையில் என மூன்று மாதங்கள் சென்றன. அவனை தாத்தா பாட்டி அப்பா அண்ணா அனைவரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். ஆனால் அம்மாவும், சித்தியும் வரவில்லை என கேட்க அவங்க உன்னை பாத்த ரொம்ப எமோஷனல் ஆகிடுவாங்க. அழுவாங்க. பெரியம்மா பெரியப்பா எல்லாருக்கும் வேலை. அதனால தான் வரல என அவனை சமாதானம் செய்தனர்.

மூன்று மாதம் கழித்து வீட்டிற்கு வந்தபிறகு தான் தெரிந்தது.

அம்மாவிற்கு விபத்தில் கால் போய்விட்டது. முதுகு தண்டுவடத்தில் அடி ஏற்பட சில காலம் படுத்த படுக்கை தான். அதைவிட அதிர்ச்சி அப்பாவும், சித்தியும் மணம் செய்துகொண்டது. அதனால் அனைவர்க்கும் மகேந்திரனுடன் சண்டை வர அதில் பெரியப்பா, பெரியம்மா  இருவரும் இனி இந்த உறவே வேண்டாமென சென்றுவிட்டது. அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் பதில் கூறும் நிலையில் ஒருவரும் இல்லை.

பாட்டி, தாத்தா இருவரும் அவ்வப்போது கண்ணீர் வடிக்க இவன் அவர்கள் 2பொண்ணுங்க வாழ்க்கையும் இப்டி என  புலம்புவதை கேட்டிருக்கிறான். அப்பாவிடமும், சித்தியிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டான்.

 

அதோடு ஜெயேந்திரனை அழைக்க அவர் வர மறுத்துவிட பெரியப்பாவிடம் சென்றுவர கேட்டு  மகேந்திரனிடம் அடம்பிடிக்க அவர் மறுக்க அழுதுகொண்டே மாடிக்கு வேகமாக ஓடிச்செல்ல அங்கிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட அவனுக்கு பழையது மறந்துவிட்டது என டாக்டர்ஸ் கூறினர். அதன் பிறகு வீட்டிற்கு வந்ததும் அனைத்தும் புதிதாக அறிமுகமானது. இருப்பினும் வீட்டின் சூழல் அவனுக்கு ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது.

 

“அவனுக்கு பழைய விஷயங்கள் ஞாபகப்படுத்துங்க. கொஞ்சம் கொஞ்சம் அப்டியே ஞாபகம் வர வாய்ப்பிருக்கு. ஆனா ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணவேணாம்.” என டாக்டர் கூறி அனுப்பினார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேந்தர் மரபு – 53வேந்தர் மரபு – 53

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக வேந்தர் மரபு – 53 Download WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload WordPress ThemesDownload WordPress Themes Freeudemy free downloaddownload huawei firmwareFree Download WordPress Themesfree

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18

18 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியும், அர்ஜுனும் அவனது அறையில் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழே இரவு உணவு தயாராக ஈஸ்வரியும், சோபனாவையும் கூப்பிடனும் என்றவுடன் திவி முதல் ஆளாக நான் போறேன் அத்தை என்று கத்த ஒன்னும் வேணாம். போயி நீ

ஒகே என் கள்வனின் மடியில் – 18ஒகே என் கள்வனின் மடியில் – 18

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு ஒகே என் கள்வனின் மடியில் – 18 அன்புடன், தமிழ் மதுரா Free Download WordPress ThemesDownload Premium WordPress