Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 21

21 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அடுத்த வந்த நாட்களில் எல்லோரும் நிச்சயம், விழா என வேலையில் மூழ்கினாலும் அனைவரின் கவனிப்பும் ஆதர்ஷிடமே இருந்தது. அக்சராவிடம் அவன் காட்டும் அன்பு, அவளிடம் அவனது எதிர்பார்ப்பு, அனைவரிடமும் அவன் முன் போல கோபம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டது என அனைத்தும் பார்த்து ஆதர்ஷ் பழையபடி மாறிவிட்டான். அவனிடம் உண்மையை சொல்லிவிட முடிவெடுத்தனர். அதுவும் விழா அன்று அவனுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என முந்தைய நாள் இரவு ஜெயேந்திரன், தனம், விக்ரம், வாசு, பிரியா முடிவெடுத்தனர். ரஞ்சித், சஞ்சனா, அவளது தாய் மரகதம் மூவரிடமும் ஆதர்ஷ் இந்த குடும்பத்தோட வாரிசு தான் என்பது மட்டும் கூறிவிட்டு மீதி நாளைக்கு பங்க்சன் முடிஞ்சதும் சொல்றேன். இது ஆதர்ஷ்க்கு தெரியாம பாத்துக்கோங்க. அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி குடுக்கலாம் என கூறியிருந்தனர்.

 

அக்சரா, ஆதர்ஷ் இருவரும் வெளி வேலை அனைத்தும் முடித்துவிட்டு வீட்டிற்கு வர யாரும் இல்லாமல் இருக்க பிரியாவிற்கு கால் செய்து விசாரித்தாள்.

அக்சரா “அடியேய், எங்க இருக்கீங்க? நீங்க 3 பேரும் ஏன் இன்னும் வரல?”

பிரியா “ஹே, நாங்க இங்க தான் விக்ரம் வீட்ல அவங்களோட தான் …வேலையா இருக்கோம் டி. வர லேட்டாகும்..”

அக்சரா “என்ன வேலையாவா? நாளைக்கு ஈவினிங் பங்க்சன் வெளில அலைஞ்சு திங்ஸ் வாங்குறது,வேலைக்கு ஆளுங்களுக்கு சொல்றது, ரொம்ப பழக்கமானவங்கள நேரா போயி இன்வைட் பண்றதுனு எல்லா வேலையும் நானும், அவருமே பாத்துக்கிட்டோம். நீங்க எல்லாரும் அங்க வெட்டியா என்ன வேலை பண்றிங்க?”

பிரியா “ஆ..அது மட்டுமா வேலை. அது இல்லாம நிறையா இருக்கு.”

போன் ஸ்பீக்கரில் இருந்ததால் வாசு “நாங்க சர்ப்ரைஸ ஏதாவது பிளான் பண்ணுவோம்…”

அக்சரா “யாருக்கு சர்ப்ரைஸ்..”

ரஞ்சித் “அது விக்ரம், சஞ்சனாக்கு தான்”

அக்சரா “அதெப்படி, அவங்ககூட தான் இருக்கேனு இப்போ சொன்னிங்க..எப்படி அவங்களுக்கு தெரிஞ்சே சர்ப்பிரைஸ் பண்ணுவீங்க?” என சந்தேகமாக வினவ

அனைவரும் இவளை வெச்சுகிட்டு என முணுமுணுக்க விக்ரம் “ம்ம்.. பர்த்டே பாய்க்கு கேக் கட் பண்ணனும்னு சர்ப்ரைஸ்ன்னு சொல்லி அவனையே கேக் வாங்கிட்டு வர சொல்லுவோம்ல.. அந்த மாதிரி தான் சர்ப்பிரைஸ் பண்ணப்போறாங்க.” என அவன் கடுப்பில் சொன்ன விதத்தில் அனைவரும் சிரிக்க அக்சராவும் சிரிக்க

விக்ரம் “சிரிக்காத அக்ஸா, ஏன் இப்டி நீ எப்போப்பாரு இன்வெஸ்டிகேட் பண்ணிட்டே இருக்க, பிரண்ட நம்பமாட்டியா? அவங்க எனக்கும் பிரண்ட்ஸ் தான். பத்திரமா அனுப்பிச்சு வெடிச்சிடறேன்.” என

அக்சரா “சரி சரி விக்ரம் கத்தாத, அவங்க உனக்கு பிரண்ட் தான்.. நீ நல்லாத்தான் பாத்துக்குவ. குட்டிஸ்களும் கூட அங்கேயே  தூங்கட்டும் …நான் எதுவும் கேக்கல. சஞ்சீவ் குட்டி புது இடம் செட் ஆகமாட்டானே, திடிர்னு இராத்திரி எழுந்து அவரை கேட்டா என்ன பண்றது, சோ அவனை மட்டும் நானும், அவரும் வந்து கூட்டிட்டு வந்துக்கவா?”

வாசு “என்ன ஆதர்ஷா?” என அதிர்ச்சியோடு கத்த பிரியா அவனது தலையில் தட்டிவிட்டு “இல்ல அக்ஸா, நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்.” என போனை வைத்துவிட்டாள்.

இங்கே அக்சராவிற்கு ஏதோ சரி இல்லை என பட, அங்கே வந்தமர்ந்த  ஆதர்ஷுடம் நடந்தவற்றை சாதாரணமாக கூறினாள். அவனும் மெலிதாக புன்னகைத்து அமைதியாக இருக்க அக்சரா “ஆதவ், எனக்கென்னமோ அவங்க உங்களுக்கு ஏதாவது சர்ப்ரைஸ் குடுக்க பிளான் பண்ராங்களோனு தோணுது.”

அவனும் “எனக்கும் அதேதான் தோணுது. பட் பெருசா என்கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் வராது. எதுக்கு வீணா இதெல்லாம்.”

அக்சரா அருகில் வந்து “எல்லாரும் ஏதோ ஆசைப்படறாங்க, பண்ணிட்டு போகட்டுமே… விட்ருங்க ஆதவ், எதுவும் வேண்டாம்னு சொல்லவேண்டாம். சங்கடப்படப்போறாங்க.”

ஆதர்ஷ் “அவங்க ஆசைக்கு ஏதோ சர்ப்ரைஸ் பண்ராங்கனு விட்டர்லாம். ஆனா அதுக்கான பிரதிபலிப்பு என்கிட்ட இல்லாம போய்டிச்சுனா அது இன்னுமே கஷ்டமா இருக்கும்ல எல்லாருக்கும்.” அவள் அமைதியாக அவனே தொடர்ந்து “நான் உன்கிட்ட நார்மலா இருக்கேன். உன்கிட்ட மட்டும் தான் இருக்கமுடியுது. மத்த யாரா இருந்தாலும் ஏதாவது ஒரு ஏமாற்றம், தயக்கம்னு ஞாபகம் வருது. என் சாரா என்னை ஏமாத்தமாட்டா, என்னை விட்டுட்டு போகமாட்டா, என்னை கஷ்டப்படுத்தமாட்டான்னு என் மனசுல பதிஞ்சிடுச்சு. ஆனா உன்னை தாண்டி யாரையும் பெருசா என்னால கிளோஸ ஏத்துக்கமுடில. இவங்களும் நாளைக்கு விட்டுட்டு தான் போவாங்க, கஷ்டப்படுத்துவாங்கன்னு ஒரு எண்ணம் ஓடிட்டே இருக்கு. இன்னும் சொல்ல போனா அது சஞ்சீவ்கிட்ட கூட தோணுது. ஒருவேளை நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்தா அவங்களையும் நான் இப்டி தான் நினைப்பேனோ என்னவோ.. பெருசானா அவங்கவங்களுக்கு ஒரு தேவை வரும்போது விட்டுட்டு போய்டுவாங்கனு. அத என்னால ஏத்துக்கமுடில…”

அக்சரா “பாருங்க ஆதவ், எல்லாரும் ஒரு கட்டத்துல நம்மள தாண்டி போகத்தானே வேணும்… உங்களுக்கு அந்த தயக்கம் இருந்தாலும் அவங்களுக்கு நீங்க செய்ய வேண்டிய கடமையை செய்யாம இருக்கறதில்லை. அப்புறம் என்ன பிரச்சனை. சரி இப்போ என்ன உங்களுக்கு ‘எல்லாரும் பழகிட்டு விட்டுட்டு போய்டுவாங்க அப்போ அந்த ஏமாற்றத்தை ஏத்துக்க முடில. ஓகே.. அப்டின்னா ஒருத்தர்கிட்ட பழகும்போதே இவங்களும் ஒரு நாள் நம்மள விட்டுட்டு போவாங்கனு சொல்ற உண்மைய ஏத்துக்கிட்டு பழகுங்க.. அவங்களுக்கான வாழ்க்கை வேற இடத்துல இருக்கும். ஒரு ஒருத்தரும் அந்த கட்டத்துல விலகி அவங்க வாழ்க்கையை பாக்க போவாங்க அதுதான் பிராக்டிகல்னு ஏத்துக்கோங்க.” சிம்பிள் என அவள் சாதரணமாக சொல்ல

“நாம வாழ்க்கையில வர யாரு எப்போ போவாங்கனு தெரியாது. ஆனா அத தடுக்கவும் முடியாதுல. சோ அத மனசுல வெச்சுகிட்டு அதனால பழகுற கொஞ்ச காலத்துல நிம்மதிய சந்தோசத்தை குடுக்கற அளவுக்கு பழகுவோம். அவங்க நம்மள விட்டு போனாலும் அவங்க மனசுல நமக்கு எப்போவுமே ஒரு இடம் இருக்குன்னா அதைவிட வேற என்னவேணும் சொல்லுங்க.?”

 

ஆதர்ஷ் “சிம்பிளா சொல்லிட்ட.. அந்த மாதிரி மனச பழக்கப்படுத்திக்கிறது, அவ்ளோ சாதாரணமா எல்லாத்தையும் எடுத்துகிறது ஈசின்னு நினைக்கிறியா?”

சாரா “கண்டிப்பா கஷ்டம். ஆனா என்ன பண்றது, நாம அந்த பழக்கத்தை வெச்சுக்கிட்டா அடுத்து சந்திக்கிற இந்த மாதிரி பிரச்னை எல்லாம் ஈசியாகிடுமே. அதோட நாம எல்லாருமே பொறக்கும்போதே எனக்கு குடும்பம் வேண்டாம், பிரண்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டா வந்தோம், சிலர் குடும்பம் தான் எல்லாமேன்னு சொல்லுவாங்க, சிலர் பிரண்ட்ஸ் தான் எல்லாமேனு சொல்லுவாங்க. ஒவ்வொருத்தரும் அவங்க சந்திச்ச வாழ்க்கைல நடந்த அனுபவவங்களை வெச்சு தானே சொல்ராங்க. அப்டி பாத்தா லைப்ல நம்ம வாழ்க்கைல வரவங்க, அவங்க சில நேரம் சூழ்நிலைனால விட்டுட்டு போறது இதுவும் பிரேக்டிகல, ஒரு அனுபவமா, பாடமா எடுத்துக்கிட்டா என்ன தப்பு. ”

ஆதர்ஷ் பெருமூச்சுடன் “கரெக்ட் தான். ஆனா நான் உன்கிட்ட உடனே உனக்காக எல்லாமே மாத்திக்கிறேன்னு பொய் சொல்லமாட்டேன். ஆனா என் மனசை நான் கண்ட்ரோல் பண்ணல. அதுவா மாறுனாலோ  இல்லை நீ மாத்துனாலோ நான் தடுக்கமாட்டேன்.

ஆனா இப்போ என்னால எல்லாமே நீ சொல்ற மாதிரி சாதாரணமா எடுத்துக்கமுடில. அதுக்கு டைம் ஆகும். அதுவரைக்கும் பேமிலின்னு நீ மட்டும் போதும். மத்தவங்கள நான் விலக்கி வெச்சு ஹர்ட் பண்ணவும் இல்லை. உடனே எல்லார்கூடவும் அட்டாச் ஆகி ஏத்துக்கவும் இல்லை. சோ புரிஞ்சுப்பேனு நினைக்கறேன்.”

அக்சரா “கண்டிப்பா, நீங்க இவளோ தூரம் மத்தவங்களுக்காக யோசிக்கும்போது நாங்க டைம் கூட குடுக்காம இருப்போமா? டேக் யுவர் டைம்.” என கட்டிக்கொள்ள அவனும் புன்னகையுடன்  அணைத்துக்கொண்டான். பின் பிரியா வாசு குழந்தைகள் அனைவரும் வந்துவிட அக்சராவிடம் பேச அவளும் பதில் கூற ஆதர்ஷ் எப்போவும்போல  ஒதுங்கி நின்று அவர்கள் பேசுவதை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து அனைவரும் கிளம்பிவிட சஞ்சனா கால் செய்து “பிரியா, ஆதர்ஷ நேரா கோவிலுக்கு வரவெக்கணும். அங்கிருந்து மண்டபத்துக்கு கூட்டிட்டு போயிக்கலாம். வீட்ல அவர் ஈவினிங் தான் வந்து பாக்கணும். அதுக்கு முன்னாடி வந்தா பிளான் சொதப்பிடும்.” என பிரியா “என்ன டி இப்போ அவங்களும் கிளம்பிட்டாங்களே.. என்ன சொல்றது.. சரி ஏதாவது பண்றேன்.”

 

அக்சராவிடம் வந்தவள் “அக்ஸா, நீயும், ஆதர்ஷ் அண்ணாவும் நேரா கோவிலுக்கு வந்துடுங்க. அப்டியே சாமி கும்பிட்டு மண்டபத்துக்கு போலாம். நாங்க கொஞ்சம் வேலை இருக்கு முன்னாடி போறோம்.”

அக்ஸா “ஓய்ய்ய்… என்னங்க டி எல்லாரும் என்கிட்டேயே மறைக்கிறீங்க? அது சரி, சர்ப்ரைஸ் சஞ்சு, விக்ரம்க்குன்னு சொன்னா நாங்களும் வந்து ஹெல்ப் பண்றதுல ப்ரோப்லேம் இல்லையே. ஒருவேளை ஆதவ்க்கு தான் ஏதாவது பிளான் பண்றிங்களா? என்கிட்ட உண்மைய சொன்னா ஹெல்ப் பண்ணுவேன்… இல்லாட்டி அவர்கிட்ட நீயே பேசிக்கோ.” என அவள் கூற

ப்ரியா பேசாம இவகிட்ட சொல்லியே ஹெல்ப் கேட்டர்லாம் “அக்ஸா, நீ சொன்னது கரெக்ட் தான். அதுக்குதான் வீட்ல இன்னும் கொஞ்சம் அரேஞ்மென்ட்ஸ் இருக்கு. ப்ளீஸ் நீ ஹெல்ப் பண்ணு டியர். ஆதர்ஷ் அண்ணாவை ஈவ்னிங் வரைக்கும் வீட்டுக்கு வரவிடாம பாத்துக்கணும்.” என

அக்ஸாவும் சிரித்துக்கொண்டே “சரி என்ன பிளான்.?”

பிரியா “அது இப்போ சொல்லமாட்டோம். அது உனக்கே சர்ப்ரைஸா இருக்கும்.” என  கூற ஆதர்ஷ் “சாரா, எப்போ கிளம்பனும்,  எல்லாரும் ரெடியா? ஒரு 8க்கு கிளம்புனா சரியா இருக்கும்ல ” என வாசு, ரஞ்சித் “இவன் ஒருத்தன் சரியான டைம் பாம்க்கு தம்பியா இருப்பான் போல கரெக்டா டைம்க்கு வந்துநிக்கிறான்.” என புலம்ப

அக்ஸா “இல்ல, இவங்க எல்லாரும் முன்னாடி போயி வீட்ல இருந்து எல்லாரையும் கூட்டிட்டு வரட்டும். நாம நேரா கோவிலுக்கு போயி எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கான்னு பாத்துக்கலாம். அவன் அனைவரையும் கூர்மையாக பார்க்க அக்சரா தொடர்ந்து “சஞ்சீவ் நைட் நேரமாகி தானே தூங்குனான். அவன் எழுந்ததும் அவனை ரெடி பண்ணியே கூட்டிட்டு போய்டலாம். தூக்கலக்கத்துல ஏன் குழந்தைய அலைய வெச்சு, அப்புறமா அவனை ரெடி பண்ணனும். எப்படியும் எல்லார்கூட இருந்தா விளையாட ஆரம்பிச்சுடுவான். ரெடியாக வரமாட்டான்ல. அதான்.” என அவனும் “ஓகே.. எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை.” என மற்ற அனைவரும் கிளம்பினர்.

 

ஆதர்ஷ் “சரி, அப்போ எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு சஞ்சீவ் எழுந்தா அவனையும் ரெடி பண்றேன். நீயும் ரெடியாகிரு.” என கூறிவிட்டு சென்றவன் அக்சரா சிறிது வேலைகளை முடித்துவிட்டு அவளும் சென்று தயாராக சற்று பொறுத்து வந்த ஆதர்ஷ் புடவையில் அவளை பார்த்து அப்டியே நின்றுவிட அவள் எப்படி இருக்கு என புருவங்களை உயர்த்தி வினவ இமைக்க மறந்தவளின் கண்கள் அவளை ரசிக்கும் வேலையில் முழுமையாக இறங்கிவிட அவள் வெட்கம் கொண்டு திரும்பி உள்ளே சென்றுவிட கண்ணாடியின் முன் சென்று “வேலை முடிஞ்சதா உங்களுக்கு?” என சாதரணமாக கேட்க அவனோ அவளுக்கு பின்னால் வந்துநின்றவன் “ம்ம்.. அங்க எல்லா வேலையும் முடிஞ்சது..” என அவளை பார்த்துக்கொண்டே இருக்க

அக்சரா பூவை வைத்துக்கொண்டே “சஞ்சீவ் எழுந்துட்டானா?” என

ஆதர்ஷ் பின்னால் இருந்து அவளை அணைத்துக்கொண்டு “அவன் ரொம்ப நல்லா தூங்கறான்.”என அவள் தோளில் முகம்புதைக்க கூச்சத்தில் அவள் நெளிய அவனின் அணைப்பின் இறுக்கம் அவளை விலகாமல் வைத்துக்கொள்ள கண்கள் மூடியபடியே”ஆதவ், டைம் ஆகிடும்.. போயி கிளம்புங்க…”

ஆதர்ஷ்  “சாரா கண்டிப்பா போகணுமா? நாமளும் இன்னைக்கு இங்கேயே இருந்தடலாமா?” என

அக்சரா கண்களை திறந்தவள் இதை கேட்டு சிரித்துவிட்டு “ஒழுங்கா விடுங்க. போயி கிளம்புங்க. இங்க இருந்து என்ன பண்ணபோறீங்க. போயி சஞ்சீவ எழுப்பி ரெடி பண்ணுங்க.. போங்க.” என அவள் விரட்ட கண்களை சுருக்கி பார்த்தவன் “அப்போ என்னை போக சொல்றியா?” கோபமாக கேட்க

அவள் சாதரணமாக “ஆமா, இப்போ போகத்தான் சொல்றேன். கிளம்பணும். போங்க..” என அந்த இப்போவில் அழுத்தம் குடுக்க அவனும் சிரித்துவிட்டு நகர்ந்தவன் அடுத்து நிமிடம் மீண்டும் வந்து அவளை பின்னால் இருந்து அணைத்து அழுத்தமாக கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் சஞ்சீவுடன் ஆதர்ஷ் வர “குட்டி செல்லம் வாங்க வாங்க.. ” என அக்சரா எடுத்துக்கொள்ள சற்று அவனுடன் விளையாடிவிட்டு அவனை ஆதர்ஷ் குளிக்க வைக்க அனுப்பி விட்டு இவள் குழந்தைக்கு உணவு தயார் செய்ய அவனுக்கு ஊட்டிவிட பின் அவனுக்கு துணி மாட்டிவிட என குழந்தையை கவனிக்க அவளை கவனித்த ஆதர்ஷ் அவளும் குழந்தையும் தங்களுக்குள் பேசிக்கொண்டே அனைத்தும் செய்ய “சாரா, நமக்கு குழந்தை பொறந்தாலும் சஞ்சீவ நாமளே வளத்தாலாம்ல?” என வினவ

அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு “எனக்கு சஞ்சீவ் தான் நம்ம முதல் குழந்தைன்னே பிக்ஸ் ஆயிட்டேன். நீங்க என்ன வளத்தரத பத்தி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.?” என அவன் சிரிக்க

அக்ஸா சஞ்சீவிடம் திரும்பி “என் செல்லக்குட்டிக்கு நான் கூட இருக்கனும் தானே…?” என

சஞ்சீவ் தலையாட்டி “மா வேணு,மா வேணு..” என கூறியதும் அக்சரா “என்னங்க சஞ்சீவ் பேசுறான்.” என இருவரும் மகிழ அவனை மீண்டும் பேச சொல்லி கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆதர்ஷ் “சஞ்சீவ் குட்டி யாரு வேணு?” என கேட்க அவன் அக்ஸாவை திரும்பி பார்த்து அவளை தூக்க சொல்லி கை காட்டி அவள் தூக்கியதும் “மா வேணு.” என அவள் தோளில் சாய்ந்துகொள்ள அக்சரா மகிழ்வுடன் “அப்பா சொல்லு அப்பா சொல்லு” என ஆதரக்ஷை காட்டி சொல்ல “பப்பா.. பா..” என மழலை மொழியில் கூற ஆதர்ஷ் இருவரையும் அணைத்துக்கொண்டான்.

(ஒன்றரை வருடமாகியும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என மருத்துவரிடம் காட்டி கேட்க பெருசா எந்த ப்ரோப்லேமும் இல்லை. சில குழந்தைங்களுக்கு லேட்டாகும், சில குழந்தைங்க திக்கி பேசும். பாப்போம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என கூறிவிட்டனர். இங்கு வந்தும் இத்தனை மாதம் கழித்து அவனை எந்த மருத்துவரிடம் கேட்டாலும் இதே பதில், இறுதியில் கொஞ்ச நாள் போகட்டும் என  விட்டுவிட அவன் முதன்முறையாக பேசியது என்றதுமே இருவருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதோடு அவன் அக்ஸாவை அம்மா என்றதும் இருவருக்கும் தலைகால் புரியாமல் அவனை கொண்டாடினர்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: