Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12

12 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

சன்னலின் வழியே சலனமேயில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே சென்ற ஆதர்ஷை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் திரும்பிக்கொள்ள “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் ஏன் இப்படி எல்லாம் பேசணுன்னு உங்கிட்ட காரணம் சொல்றேன். அத ஜஸ்ட் என்னமாதிரி எண்ணத்துல இருந்தேன்னு உனக்கு தெரியப்படுத்த தானே தவிர கண்டிப்பா நான் செஞ்சத நியாயப்படுத்த இல்ல. இன்னைக்கு காலைல நான் அப்டி பேசுனதுகூட தப்புதான். உன்கிட்ட அப்டி கோபப்பட்டிருக்க கூடாது. நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கிறேன். பட் பேசாம இருக்காத.” என

அக்சரா “ம்ம்… உங்கள நான் தண்டிக்கறதா ? அச்சச்சோ உங்களுக்கு தான் எல்லாமே தெரியும். உங்கள போயி எப்படி.?

உங்க பிரண்ட் வாசுகிட்ட அன்னைக்கு என்ன சொன்னிங்க. உங்க தங்கச்சிய தைரியமா, எதையுமே பேஸ் பண்றவளா, தன்னோட பீலிங்க்ஸும் யோசிச்சு பண்றவாள, அதேமாதிரி அடுத்தவங்க பீலிங்ஸ்க்கு மதிப்பு குடுக்கிறவளா வளக்கணும்னு. அதோட

பாசம்னு சொல்லி மத்தவங்க உணர்ச்சியை கட்டிபோடக்கூடாது இப்படியெல்லாம் வளக்கணும்  இல்லையா?

அதெல்லாம் கேக்கும்போது நல்லாத்தான் இருந்தது. ஆனா இன்னைக்கு நீங்க ஸ்கூல்ல பேசுனது ‘இந்த மாதிரி எல்லாம் ஏதாவது பிரச்சனை வரும் அவ அழுவா அதனால தான் டாபிக் கேட்டதும் போட்டிக்கே போகாதேன்னு சொன்னேன்னு சொல்றிங்க’. எப்படி அது மட்டும் சரியாகும்? இதுதான் அவளை தைரியமா வளக்கற அழகா?

என்ன ஒண்ணு பாசம்னு சொல்லி அவ உணர்ச்சிய நீங்க தடுக்கல. ஆனா அட்வைஸ்ங்கிற பேர்ல அவளை தப்பிக்க வெக்கிறதா நினச்சு நீங்களே அவளை பயந்து ஓடவெச்சுட்டு இருக்கீங்க.

இத நான் உங்ககிட்ட இருந்து சுத்தமா எதிர்பார்க்கல. நான் பாத்தவரைக்கும் நீங்க சொல்றது ஒன்னு, செய்றது ஒண்ணுன்னு பண்ற ஆள் இல்லன்னு நினச்சேன். அதனாலையே நீங்க திட்டினா கூட ஒரு காரணம் இருக்கும்ன்னு யோசிப்பேன். ஆனா என்னைக்கு அடுத்தவனுக்க்காக யோசிச்சு நீங்க பின்னாடி வர ஆரம்பிச்சிங்க. அதுவும் அவங்க பேசுறது தப்புனு தெரிஞ்சு…

ரூல்ஸ் எல்லாமே பிசினஸ்ல மட்டும் தான்ல.. பேமிலிக்கு தனி ரூல்லா? நான் உங்கள இத்தனை மாசம் உங்களோட கேரக்டர், பிரச்சனைய சமாளிக்கற விதம் எல்லாமே பாத்து உங்ககிட்ட எதிர்பார்த்தது சிந்துவ அப்டி கேள்வி கேட்டாங்க அவ அழுகறப்போ அவளை கூப்பிட்டு தைரியமா போயி பேசுன்னு சொல்றது, யாருக்காகவும் பயப்படாத, தப்பு செய்யாம தலை குனிஞ்சு நிக்காதான்னு சொல்றது, முதல உன் உணர்ச்சியை மதிக்க தெரிஞ்சுக்கோ, அதுக்கப்புறம் அடுத்தவனை பாருன்னு சொல்லுவீங்கன்னு நினச்சேன்.

ஆனா நீங்க ஒரே செகண்ட்ல எல்லாத்தையுமே ஒடச்சிட்டிங்க. ” என அவள் கூற அவன் ஸ்தம்பித்து நின்றான் “உண்மைதானே… நான் கூறியது என்ன? செய்வது என்ன? எங்கே விட்டேன். ஏன் இவ்வாறு இருக்கிறேன்” என அவன் அமைதிக்காக்க..

 

அக்சராவே தொடர்ந்து “எனக்கு அவங்க யாரு மேலையும் கோபம் இல்லை. உங்க மேல தான். இத்தனை நாள் பாத்த ஆள் வேற. ஆனா குடும்பம்னு வரும்போது நீங்க நீங்களாவே இருக்கறதில்லை. சொல்றது ஒன்னு, செய்றது ஒண்ணு. என்னால உங்கள இப்டி ஏத்துக்கமுடியாது. வேண்டாம். எனக்கென்ன வந்தது. ஜஸ்ட் ஆபீஸ் ஸ்டாப் அவ்ளோதானே. நான் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகணும். இங்கேயே இருந்தா இன்னும் ஏதாவது கத்திடபோறேன். நான் போறேன்.” என அவள் நகர

 

அவனோ அவள் கைகளை பற்றி கொள்ள அவளும் திரும்பாமல் கையை விடுவிக்க முயல முடியாமல் போக அவள் திரும்பி அவனை பார்க்க அவன் முகத்தில் தெரிந்தது வருத்தமா? இயலாமையா? குழப்பமா? தயக்கமா? என பிரிக்க முடியாத கலவையான உணர்வில் இவளும் என்ன கூறுவது என்று தெரியாமல் இருக்க ஆதர்ஷ் “என்னை விட்டு நீயும் போய்டுவியா? நான் வேண்டாமா? ப்ளீஸ் சாரா என்னை விட்டு நீ போகாத.. ” என ஒரு சிறுவனின் ஏக்கத்தில் அவன் வினவ இவளால் அதை காண முடியாமல் அவனிடம் சென்று அவன் கன்னம் தொட்டு “இல்லை ஆதவ் நான் உங்ககூட இருக்கேன். என்னாச்சு என்ன பாருங்க.” என்றதும் அவளை பார்த்தவன் அருகில் இருந்த சோபாவில் அமரவைத்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்  “நீ சொல்றது சரிதான்.. நான் பேமிலி விசயத்துல சொல்றது ஆசைப்படறது ஒண்ணு, ஆனா செய்றது ஒண்ணு. ஆனா அது என் கண்ட்ரோல மீறி நடக்கிது. என்னால யோசிக்க முடில சாரா. பிரண்ட்ஸ் பேமிலின்னு இருக்கணும்னு ஆசையா இருக்கு.ஆனா ஏனோ என்னால அத ஏத்துக்கமுடில. ஒரு தயக்கம் பயம். இவ்ளோ ஏன் இங்க வந்த கொஞ்ச நாள்ல சிந்து, சஞ்சீவ், அனீஸ், ரானேஷ்,பிரியா, வாசு, நீ எல்லாரும் பேசிட்டு விளையாடிட்டு இருந்தீங்க. பாக்க ஒரே குடும்பமா சந்தோசமா இருந்தது. எனக்கு நானும் அங்க இருக்கணும்னு தோணும். கண்டிப்பா நான் வந்தாலும் யாரும் என்னை ஒதுக்கமாட்டிங்க. இருந்தும் என்னால உங்ககூட சேந்து சிரிச்சு  பேசி இருக்க முடியல. ஏதோ ஒரு இறுக்கம். எனக்கு யாருமில்லைங்கிற ஒரு பீல் இருந்திட்டே இருக்கு. அதனாலையே டிபெண்டெனசி இருக்கக்கூடாதுன்னு பாத்து பாத்து இருப்பேன். யாருகிட்டேயும் எதையும் எதிர்பாக்காம எனக்குன்னு ஒரு தனி வாழ்க்கை மாதிரி இருக்கும். என்ன வாழ்க்கைனு கூட தோணும். ஆனா இப்போ உன்கூட கொஞ்சமாவது வாழணும்னு தோணுது.” என்றவன் அவள் கண்களை விரிக்க இவனே தொடர்ந்து பொண்ணுங்ககிட்ட இருந்து ஒதுங்கியே இருக்கணும்னு நினைச்சதால அவளிடம் இருந்து விலகி இருந்தது, பின் வேலை வீடு என அனைத்து இடங்களிலும் அவளின்  அன்பு, தைரியம், பொறுப்பு, செயலை கண்டது, தன்னிடத்தில் அவளுக்கென ஒரு மதிப்பு கொடுத்தது, விக்ரமின் வருகை, அவர்களின் பழக்கம் அன்று நடந்த நிகழ்வுகள் பின் அலுவலகத்தில் நடந்தது என இன்று வரை நடந்த அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்தவன்.

 

“நான் உன்னை தப்பா நினைக்கல சாரா. உண்மைய சொல்லணும்னு உன்ன என்னால தப்பா நினைக்கவே முடில. ஆனா தப்பா காட்டற மாதிரி ஏதாவது விஷயம் நடக்கும்போது அதை ஏத்துக்கமுடியாம நான் உன்கிட்டேயே கோபமா காட்டிறேன். அது தப்பு தான். ஆனா எனக்கு எங்க காட்டணும்னு கூட தெரில. உன்கிட்ட என் கண்ட்ரோல நான் சுத்தமா இழந்துடறேன். என் மேல நிறையா தப்பிருக்கு. முக்கியமா நிறையா குழப்பங்கள் இருக்கு. நான் தப்பா நினைச்ச விஷயங்கள், தப்பா பண்ணிட்டு இருக்கற எல்லா விஷயங்களையும் நீ உனக்கு தெரிஞ்சும், தெரியாமலும் எனக்கு புரியவெச்சுட்டு இருக்க. இனிமேலும் எல்லாமே நீ கூட இருந்து மாத்து. ப்ளீஸ் என்னை விட்டு விலகி போயிடமாட்டாள்லே?” என அவன் மீண்டும் அதே கேள்வியில் வந்து நிற்க

 

அவள் மெலிதாக புன்னகைத்துவிட்டு ” இருக்கேன். ஆனா ஒரு டிமாண்ட்…” என ஆதர்ஷ் என்ன என்பது போல பார்க்க அக்சரா தொடர்ந்து “நீங்க எப்போவுமே நீங்களா இருக்கனும். என்ன தோணுதோ அடுத்தவங்களுக்கு அது பாதிப்பில்லாம இருக்கான்னு மட்டும் யோசிச்சுட்டு மனசார அப்போவே நீங்க செஞ்சிடனும்.. யாருக்காகவும் தேவையில்லாம யோசிச்சு உங்கள மாத்திக்கிட்டு உங்க உணர்ச்சிகளை அடக்கி இதெல்லாம் இருக்கவே கூடாது. எனக்கு ஆதர்ஷ் யாதவ்வ அப்டித்தான் பிடிக்கும்.. இப்டி பீல் பண்ற ஆள் வேண்டாம்…” என அவள் தன்னை ஏற்றுக்கொண்டதோடு கண்டிஷன் என்ற பெயரில் தனக்காகவே பார்க்கிறாள் என்றதும் அவன் நிம்மதி கலந்த மகிழ்ச்சியில் அவளை இடுப்போடு கட்டிக்கொண்டு மடியில் தலை வைத்துப்படுத்துக்கொண்டான்.

 

அவனின் தலையை கோதிவிட்டவள் சிறு நேரத்திற்கு பிறகு “ஆதவ்…”

“ம்ம்…”

“இப்டியே எவ்ளோ நேரம் இருக்க போறீங்க.?”

“தெரில. ஆனா இப்டியே இருக்கேன்.” என அவன் நெருங்கி அமர அவள் சிரித்துக்கொண்டே “சாப்பிட்டீங்களா?” என

“இல்லை.. வேண்டாம். இது மட்டுமே போதும்.” என இவளோ “அதுசரி, எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு…” என்றதும் அவன் விருட்டென்று எழுந்தவன் “அச்சச்சோ, சாரி டா.. மறந்தே போய்ட்டேன். வா முதல போயி சாப்பிடலாம். அப்போவே ப்ரியாவ எடுத்துவைக்க சொல்லிட்டேன்.” என உடனே துரிதப்படுத்த அவளும் தனக்காக என்றால் இவன் ஏன் இப்டி ஆகிவிடுகிறான் என்ற கேள்வியோடு மகிழ்ச்சியுடன் கீழே சென்றாள்.

அவனையும் அழைத்துக்கொண்டு “இருங்க ரொம்ப ஆறிபோயிடிச்சு. நான் சூடு பண்றேன் சாப்பிடலாம்.” என்று அவள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சமயலறைக்கு செல்ல இவனும் எடுத்துக்கொண்டு பின்னோடு சென்று எடுத்துவைத்து உதவி செய்தவன் அருகே இருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன் அவள் ஏதோ கேட்க பேச ஆரம்பித்தவன் இவள் சப்பாத்தி சூடு செய்து குடுக்க குடுக்க பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டே இருந்தான். அவளும் பதில் கூற கேள்வி கேட்க என இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் “ஐயய்யோ, சாரா என்ன எல்லாமே எனக்கே வெச்சுட்ட..நானே சாப்பிட்டேன்.? இன்னும் 2 தான் உனக்கு இருக்கு. சொல்லமாட்டேயா?” என அவன் பொரிய அவளோ சிரித்துக்கொண்டே அவனிடம் வந்தவள் “பசிக்கவேயில்லைன்னு ஒருத்தர் சொன்னாரு யாருன்னு தெரியுமா? ” என்றாள்

அவனோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “நான் வேணும்னே பண்ணல. உன் மடில படுத்திருந்த வரைக்கும் பசியே இல்லை. அப்புறம் பேசிட்டே இருந்ததுல சாப்பிட்டத நான் கவனிக்கவேயில்லை..”  என அவன் முகத்தை தொங்கப்போட அதை கண்டு சிரித்தவள் “சிரிக்காத சாரா, எனக்கு கஷ்டமா இருக்கு.. பசிக்கிதுன்னு வேற நீ சொன்ன…நான் உனக்கு வேற ஏதாவது ரெடி பண்ணவா?”

அக்சரா அவன் நெற்றியோடு முட்டிவிட்டு “அதெல்லாம் எதுவும் வேண்டாம். இது போதும். பால் இருக்கும். எனக்கு அவ்ளோ எல்லாம் பசிக்கல. ” என்றதும் அவன் அவளை முறைக்க “ஆமா சார் காலைல சாப்பிட்டது, அப்டியே போனவர் மதியம் சாப்படல… விக்ரம் வீட்ல இருந்தும் அப்போவே கிளம்பிட்டிங்கன்னு சொன்னாங்க … வெளிலையும் நீங்க அவ்ளோ சீக்கிரம் சாப்பிடமாடீங்க.. சோ கண்டிப்பா இப்போவரைக்கும் அந்த வயித்த காயப்போட்டிருப்பீங்க..பசிக்கும்ல. ஒழுங்கா சாப்பிட கூப்பிட்டா  நீங்க வரல. அதான் எனக்கு பசிக்கிதுன்னு சும்மா சொன்னேன். இல்லாட்டி குசன் சீட்ல இருக்கறமாதிரி நல்லா சவுரியமா அப்டியே செட்டில் ஆகிருப்பிங்க…” என்றதும்

 

“பிராடு… பொய்யா சொல்ற? இரு இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு.” என்றதும் அவள் “இவ்ளோ பசி வெச்சுகிட்டு பசிக்கலேன்னு பொய் சொன்னது யாரு. உங்களுக்கு தான் முதல பனிஷ்மென்ட். எனக்கு ஊட்டிவிடுங்க.” என அவனுக்கு அவள் மிரட்டியது முதல் குடுத்த பனிஷ்மென்ட் நினைத்து சிரிக்க அவனே அவளுக்கு ஊட்டிவிட்டான். இப்போது இவள் விடாமல் பேசிக்கொண்டே அதோடு பாலை காய்ச்ச இங்கே அங்கே என நடந்துகொண்டே வேலை செய்ய இடையில் இவனும் ஊட்டிவிட அவளை  ரசித்தவன் உண்டு முடித்ததும் “சரி சாரா போயி தூங்கறியா?” என்றதும் அவள் வாயை பிதுக்கி “அதுக்குள்ளவா?” என விட்டு செல்ல மனமின்றி “டேய்… இப்போவே மணி 1 அதுக்குள்ளவான்னு கேக்கற? தலைவலின்னு நேத்து கூட நீ சரியா தூங்கலையாம் பிரியா சொன்னா. அதான் சொல்றேன்.. போயி துங்கு. நாம காலைல பேசலாம்..”

அவள் இன்னும் அதே இடத்தில் வாடிய முகத்தோடு இருக்க இவனுக்கு விட்டு செல்ல மனமின்றி “ஏய், ஏண்டி இப்டி பண்ற?”

“…………………………”

“சரி இப்போ என்ன வேணும்னு சொல்லு.” என்றதும்

அவள் “கொஞ்ச தூரம் நடக்கலாமா?” என வினவ அவளின் ஆர்வம் இவனுக்கு சிரிப்பை வரவழைக்க

“வாலு…….வா” என கைபிடித்துக்கொண்டே இருவரும் தோட்டத்தில் நடந்தனர்.

அக்சரா “ஒருவேளை இன்னைக்கு சஞ்சு, விக்ரமுக்கு கல்யாணம் முடிவு பண்ணாட்டி சார் என்கிட்ட பேசிருக்கக்கூட மாட்டிங்கள்ல?” என அவள் ஒரு குறையாக வினவ

அவனும் புன்னகையுடன் “அதான் இல்லை. இன்னைக்கு ஸ்கூல்ல நடந்த விஷயம் அங்கே நீ பேசுனதல இருந்தே எனக்கு உன்கிட்ட இனிமேல் கேக்காம எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதுன்னு நினச்சேன். எல்லா கேள்வியும் உன்கிட்டேயே கேட்றலாம்னு தான் வந்தேன். அதுக்குள்ள ஜெயேந்திரன் அப்பா கூப்பிட்டாரு. மத்த விஷயம் எல்லாமே இன்னைக்கு எதிர்பார்க்காம எனக்கு தெரியவந்தது. ஒருவேளை இதெல்லாம் தெரியாம இருந்திருந்தா நானே உன்கிட்ட கேட்ருப்பேன்.”

 

அவளோ “அப்புறம் ஏன் உடனே வராம விக்ரம் வீட்ல இருந்து அப்டியே ஊர் சுத்தபோனீங்க?” என

ஆதர்ஷ் “அது, எனக்குள்ள பல குழப்பங்கள்… நீ என்னை கேட்டீயே? பேமிலி லைப்ல நீங்க சொல்றது ஒரு மாதிரி செய்றது ஒரு மாதிரி இருக்குன்னு.. உன்கிட்ட காலைல கத்திட்டேன்.. இருந்தும் நீ அங்க போயி பேசும்போது சொன்ன விஷயங்கள் எல்லாமே எனக்குள்ள இதே கேள்விய குடுத்தது.. ஒரு பொண்ணா தைரியமா அந்த பிரச்சனையா எப்படி பாக்கணும்னு நீ சொல்ற, என்னைவிட சின்னவ நீ இவளோ தெளிவா இருக்க, ஒரு முடிவெடுக்கிற..ஆனா நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு யோசிக்கும்போது எனக்கே பதில் இல்லை. நான் என்ன ஆசைப்படறேன் எப்படி இருக்கணும்னு நீ எனக்கு சொன்னமாதிரி இருந்தது. உன் கோபம் ஒதுக்கம் இத என்னால ஏத்துக்கமுடில. உன்கிட்ட பேசணும்னு நினச்சேன். விக்ரம் வீட்டுக்கு போனதும் அங்க இன்னும் சில விஷயம் தெரிஞ்சதும் எனக்குள்ள கேள்விகள் தான்.” என அவன் நிறுத்த

அக்சரா “என்ன கேள்வி, இந்த விஷயம் எல்லாமே கரெக்டா இருக்கா. ஆனாலும் இவளும் ஒரு பொண்ணுதானே..இவ நமக்கு செட் ஆவாளான்னு? யோசிச்சீங்களா?” என அவள் நீட்டி ஏற்ற இறக்கத்தோடு கேட்க அவன் சிரிப்புடன் “நீ சொன்னது நிஜம், ஆனா நான் உனக்கு செட் ஆவேனான்னு யோசிச்சேன்.” என்றதும் அவள் விழியகல அவன் “முட்டைக்கண்ணி.. நார்மலா இரு.” என்றதும் அவள் சிரிக்க

ஆதர்ஷ் தொடர்ந்து “உன் விசயத்துல எனக்கு எல்லாமே ஆப்போசிட் தான் நடக்கும். ஆனா எல்லாமே எனக்கு ஃப்பேவர் தான் பண்ணுவ… கடைசில எனக்கு தேவையானதை தான் நீ குடுத்திருப்ப… சோ நான் தான் உன்னை கஷ்டப்படுத்தறேனோன்னு ஒரு உறுத்தல். என்னோட குழப்பம் செயல் உன்னை பாதிச்சிடுமோன்னு ஒரு பயம். பேசாம உன்னை பாத்திட்டே இப்டியே இங்கேயே மட்டும் இருந்திடலாம்னு கூட நினச்சேன். ஆனா நீ என்கிட்ட கேட்ட கேள்வி என்னை நீ எவ்ளோ நம்புறேன்னு எனக்கு காட்டிடுச்சு. என்னால அதுக்கப்புறம் உன்னை விட்டு விலகி இருக்கமுடியும்னு தோணல. அதான் உடனே உன்கிட்ட கேட்டுட்டேன்.” என்றதும் அவளும் அதை ஏற்றுக்கொண்டு அவனின் கைகளை பற்றிக்கொண்டு திரும்பி வீடு நோக்கி நடந்தனர்.

அப்போது விக்ரம், சஞ்சனா பற்றி பேசிக்கொண்டே செல்ல ஆதர்ஷ் “விக்ரம்க்கு பயங்கரமா புரியவெச்சிருப்ப போல.?” என

அவள் “அது நான் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்” என அவன் ஆச்சரியமாக பார்க்க “ஆமா, சஞ்சு உங்கள பிடிச்சிருக்குனு சொன்னதும் நானும் சப்போர்ட் பண்ணேன் தானே. அப்போ எல்லாம் அத பத்தி பெருசா யோசிக்கல. ஆனா நீங்க சஞ்சுவ வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணிட்டு சொன்ன விஷயங்கள் என்னை யோசிக்க வெச்சது. லைப்ல ஒருத்தர பிடிக்கறதுக்கும், பிடிச்சவங்களோட லைப்ப வாழ்றதுக்கும் இருக்கற வித்யாசம் புரிஞ்சது. கல்யாணம், குடும்பங்கிற வாழ்க்கைக்கு இன்னும் எது தேவை எல்லாமே புரிஞ்சது. அதனால தான் விக்ரம் என்கிட்ட கேட்டதும் அத சாதாரணமா எடுத்துக்கிட்டு அவனுக்கு தெளிவான அதுவும் விக்ரமுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாத ஒரு பதில் சொல்ல முடிஞ்சது.” என கூற அவன் அவளை நிறுத்தி தன்புறம் திருப்பி “யூ சோ ஸ்வீட் டா. சாரா.. நான் சஞ்சனாவுக்கு சொன்னது பதில், அதுவும் என்னோட இடத்துல இருந்து சொன்னது.  ஆனா அதுக்கான விளக்கம் அதுல இருந்து எது தேவை முக்கியம்னு எல்லாமே யோசிச்சிருக்க. எப்போவுமே என்னோட கேள்விகளுக்கு உன்கிட்ட பதில் இருக்குன்னா,  என் பதிலுக்கே எனக்கே தெரியாத தெளிவான விளக்கம் உன்கிட்ட தான் இருக்கு போல….சோ ஹாப்பி டியர்.” என அவன் நெற்றியில் இதழ் பதித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: