Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 6

மேகங்கள் மீண்டு வந்து அவள் சொன்ன கதையை

    மழையாய் நினைவாய் அவனிடம் கூற நனைந்தவன் கேட்டான்!

    காற்றெல்லாம் உன் வாசம்!!!!

    நினைவுகளின் நனைவுகளால் களைத்துவிட மாட்டாயே!

அந்த வார இறுதியில் ஸ்வேதாவிற்கும் ஸ்ருதிக்கும் பீசா சாப்பிட வேண்டும் போல இருக்க, இருவரும் வீட்டில் சொல்லிக் கொண்டு வெளியில் கிளம்பினார்கள்.

பீசா ஹ்ட்டில், சாக்லேட் கேக்கையும் பீசாவையும் இரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர் ஸ்வேதாவும் ஸ்ருதியும்.

“உன்னுடைய மார்டன் ஆர்ட் வெர்ஸஸ் டிரெடிசனல் ஆர்ட் ஆர்டிக்கல் நன்றாக இருந்தது” ஸ்வேதா பராட்டினாள்

“தேங்க்ஸ்”

“ஆமாம் அதென்ன இட்லியையும், நூடுல்ஸையும் வைத்து ஆர்ட்டிக்கலை முடித்திருந்தாய்”

“நன்றாக இருந்ததா?”

“அந்த ஆர்ட்டிக்கலில் அது தான் ஹைலைட். சிம்பிளி சூப்பர்”

“அது என்னுடைய கருத்து இல்லையடி. மாலில் ஒரு சூப்பர் பிகர் சொன்னது”

“வாட்!” ஸ்வேதா கலகலவென சிரித்தாள்.

“எதுக்கடி சிரிக்கிறாய்”

“பொதுவாக பெண்களை தான் சூப்பர் பிகர் என்பார்கள். நீ ஒரு ஆணை சூப்பர் பிகர் என்கிறாய்”

“அவன் அந்த அளவிற்கு ஸ்மார்டாய் இருந்தான் டீ”

“அவனை மட்டும் திரும்பவும் பார்த்தால்……”

“திரும்பவும் பார்த்தால்…”

“கட்டிப்பிடித்து ஐ லவ் யூ சொல்வேன்”

“ஷட் அப்”

“ஸ்வேதா..”

“ஒருத்தன் ஸ்மார்ட்டாய் இருந்தால் அவனை இரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்….

“இல்லை அவனை பார்த்தால் நல்லவனாய் தான் இருந்தான்”

“பார்த்தவுடன் நல்லவனாய் தெரிகிறானா.. நீ யெல்லாம் எப்படி தான் ஐர்னலிசம் படிக்கிறாயோ.

அவனை எங்காவது பார்த்து ஜொள்ளு விட்டுக்  கொண்டு திரிந்தாய் என்றால்.. அவ்வளவு தான் கொன்றுவிடுவேன்”

“சரி, சரி, பேய் மாதிரி கத்திக் கொண்டு இருக்காதே. கிளம்பலாம்”

“நான் இவ்வளவு கத்துகிறேன் எதாவது மதிக்கிறாளா இவள்” ஸ்வேதா முணுமுணுத்துக் கொண்டே எழுந்தாள்.

******

அடுத்து வந்த வாரத்தில் ஒரு நாள், பத்திரிக்கை வேலை விசயமாக ஆட்டோவில் சென்றுவிட்டு, திரும்பி வருவதற்கு கால் டாக்சிக்கு சொல்லி விட்டு காத்திருந்தால் ஸ்ருதி.

சாலையில் ஒரு பெண் வெஸ்பாவை ஸ்டைலாக ஓட்டுவதை ஏக்கத்துடன் பார்த்தாள். “ச்சே இந்த அப்பா கொஞ்சம் மனது வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” ஸ்ருதி முணகிக் கொண்டே வண்டியை வேடிக்கை பார்த்தாள்.

“பெண்களை பெண்களே இப்பொழுதெல்லாம் சைட் அடிக்கிறார்களா என்ன?”

காதுக்கு அருகில் கேட்ட குரலில் துள்ளிக் குதித்தாள் ஸ்ருதி. இது மாலில் கேட்டவன் குரல் ஆயிற்றே. திகைப்புடன் திரும்பினாள் ஸ்ருதி. அவளை ஏமாற்றாமல் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தவன் அவனே தான்.

“இல்லை நான் வண்டியை சைட் அடித்துக் கொண்டிருக்கிறேன்”

“வாட்…

வண்டியை சைட் அடிக்கும் அளவிற்கு என்னம்மா ஆயிற்று….”

“எங்கள் வீட்டில் ஒரு டூவீலர் வாங்கிக் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள்”

“பணப் பிரச்சனையா இருக்கும்”

“அதெல்லாம் இல்லை. அவருக்கு பயம்”

“என்னவென்று”

“ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் உருப்படியாக வீடு செல்ல வேண்டும் என்று தான்…”

“நியாமான கவலை”

ஸ்ருதி புன்னகைத்தாள். “உங்களை இரண்டாவது முறை பார்க்கிறேன். உங்கள் பெயர்?”

“குமார்”

“ஓ! நைஸ் நேம்”

“உங்கள் பெயர்”

“ஸ்ருதி”

“உங்களுடைய மார்டன் ஆர்ட் ஆர்ட்டிக்கல் படித்தேன்…”

“படித்தீர்களா? எப்படி இருந்தது”

“சூப்பர்”

“தேங்கஸ் யூ”

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!”

“எதற்கு?”

“என்னுடைய கருத்தைப் போட்டு தான் ஆர்ட்டிக்கலை முடித்திருந்தீர்கள். அதனால் தான். அதானால் தான் நன்றி!”

“நன்றாக இருந்தது போட்டேன் அவ்வளவு தான்!”

பேச்சு திரும்பவும் இருச்சக்கர வாகனத்தை நோக்கி திரும்பியது.

“ம்… நான் ஒரு ஐடியா தரவா?” குமார் கேட்டான்.

“எதற்கு?”

“உங்கள் அப்பாவை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று?”

“எப்படி?”

“இரண்டு நாள் உண்ணாவிரதம்?”

“வாட்?”

“ஏங்க நானெல்லாம் பிரேக் பஸ்டே இரண்டு தடவை சாப்பிடும் ஆள். தேவையில்லாம் சாப்பாட்டு விசயத்தில் விளையாடாதீர்கள்”

“உங்கள் வீட்டில் உங்கள் அம்மா சப்போர்ட் எப்படி?”

“அதெல்லாம் எப்பவும் இருக்கும்?” இவன் எதுக்கு திடீரென்றும் அம்மாவை பற்றி கேட்கிறான் என்று புரியாமல் பதில் சொன்னாள்

“அப்புறம் என்ன ஐமாய்த்துவிடலாம்!”

“என்னவோ போங்க. எனக்கு பரிட்சை தொடங்க போகிறது. அதை முடித்துவிட்டு, இந்த வண்டி பஞ்சாயதெல்லாம் வைத்துக் கொள்ளலாம்!”

“சரி, பார்க்கலாம்!” குமார் இயல்பாய் டூவிலரில் ஏறினான்

“பார்க்கலாம் என்றால்… எப்படி பார்ப்பது?”

“புரியவில்லை?”

“நீங்கள் வேலை செய்யும் இடம், உங்கள் பெயர் எல்லாம் உங்களுக்குத் தெரியும்!”

“சரி!”

“ஆனால் எனக்கு தெரியாதே”

“நாம் சந்தித்து தான் ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்” குமார் ஸ்ருதியை உற்று பார்த்து கேட்டான்

“அது சும்மா…”

அவளுடைய முகத்தை பார்த்துக் கொண்டே தன்னுடைய கைப்பேசி எண்னை சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் குமார்!

உன் வாசமாவாள்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: