ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய்

திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.”

“அதான் எப்படி? ”

“அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட அவளை கவனிக்க சொல்லி ஹெல்ப் கேட்டேன். அவன் பேரு மதன். மொதல்ல போலீஸ்ல இருந்தான். கொஞ்சம் கரெக்டா இருந்தா. டெபார்ட்மெண்ட்ல நெறைய கேள்வி, சஸ்பென்ஸ், ட்ரான்ஸபெர். அப்புறம் அவனை யாரும் கண்ட்ரோல் பண்றது பிடிக்கலேன்னு சொல்லி தனியா டிடெக்ட்டிவ் ஆபீஸ் நடத்திட்டு ஒர்க் பண்ணிட்டு இருக்கான். அதனால தான் அவன்கிட்ட நம்பிக்கையா ஹெல்ப் கேட்டேன். அப்படி அவன் சோபியை கவனிக்கும் போது தான் இதெல்லாம் தெரிஞ்சது. உண்மையா நடந்தது என்னென்னா சோபி பணம் வேணும்னு ஒருத்தனை பாத்து பேசுனது எல்லாமே நிஜம். அவங்க ஏதோ பிரண்டோட பிரண்ட்னு அவளுக்கு பழக்கம் போல. அவனும் இவகிட்ட அந்த பாக்ஸ்குள்ள என்ன இருக்குனு சொல்லாம இத நான் சொல்ற இடத்துல மட்டும் குடுத்திடுனு ஒரு ஹெல்ப் மாதிரி கேட்டுஇருக்கான். பணம் அங்க ஒரு பிரண்ட் கிட்ட சொல்லிருக்கேன். அவங்க தந்துடுவாங்க. நான் அப்புறம் அவங்களுக்கு திருப்பிக்கொடுத்துக்கறேன்னு சொல்லி சாதாரணமா கடன் வாங்குறமாதிரியே பேசிருக்கான். இவளுக்கு அன்னைக்கு என்ன அவசரமோ என்னவோ ஏதோ கிப்ட் போலன்னு அதுல என்ன இருக்குனு கேக்காம கொண்டு போயி சொன்ன இடத்துல குடுத்திட்டு பணத்தை வாங்கிட்டு வந்துட்டா. இது எல்லாமே தான் ரெகார்ட் பண்ணது. அதுக்கப்புறம் அந்த இடம் இவ்வளோ உள்ள இருக்கு, ஏதோ பாழடைஞ்ச குடோன் மாதிரி இருக்குனு தான் மதன் உள்ள போயி எப்டியோ பாத்திருக்கான். அதுல தான் அந்த போதை பொருள் இருந்தது, பேக்கிங் எல்லாமே தெரிஞ்சிருக்கு. எப்படியோ அவங்க எல்லாரையும் எவிடென்ஸோட மொத்தமா புடிச்சாச்சு. இன்னும் சொல்லப்போனா சோபினால அவளுக்கே தெரியாம ஒரு நல்லதுதான் நடந்திருக்கு. எல்லா ஆதாரமும் இருக்கறதால இவ மேல பெருசா கேஸ் வராது. ஆனாலும் ஒரு போர்மாலிட்டிக்கு என்குயிரி வெச்சு முடிச்சிடலாம்னு தான் மதன் அவகிட்ட பேசணும்னு சொன்னான். இத அவன் என்கிட்ட போன வாரம் சொன்னபோது அப்போதான் அவன்கிட்ட சொன்னேன். இப்போதைக்கு இத வெளில யார்கிட்டேயும் சொல்லவேண்டாம்.. அவ தங்கச்சி கல்யாணம் வரைக்கும் கொஞ்ச பாக்கலாம்னு. அவ ஓரளவுக்காவது மாறுவாளா? இனிமேலாவது தப்ப புரிஞ்சிருப்பாளான்னு பாக்கலாம்னு பாத்தேன். ம்கூம். எதுவும் நடக்கல. சுபி மூலமா எல்லாருக்கு விஷயம் தெறிஞ்சிடுச்சுனு காட்ட அவகிட்ட பேசவெச்சேன், அதுக்கு அவ பெருசா பயப்படல, எல்லாரும் அவளை ஒதுக்கி வெச்சு கண்டுக்காம இருந்தீங்க. அது எதிர்பாக்காதுதான், ஆனா அதுவும் அவ கண்டுக்கல. இங்க வந்த பிறகும் இன்னும் பிரச்சனை பண்றதுக்கு தான் ட்ரை பன்னிட்டு இருந்தா. அதுதான் அவ பண்ணத அவளுக்கே திருப்பி கொடுக்கணும்னு பாத்தேன். இப்போ கொஞ்சம் அமைதியாவான்னு நினைக்கிறேன். அதுதான் இன்னைக்கு நடந்தது. அவகிட்ட அப்படி பேசுனது எல்லாமே.”

“அவ பண்ணதா?”

“ஆமா, வீடியோ காட்டி தானே என் லைப்ல பிரச்சனை பண்ணா, நான் அதுல சொன்ன விஷயம் வேற, ஆனா இவ அதுல கொஞ்சம் கட் பண்ணி என்னை தப்பா காட்டிட்டா, நானும் அவ பேசுனத மட்டும் கட் பண்ணி அந்த வீடியோ காட்டிட்டேன், நாம செய்யாத இல்ல நினைச்சுக்கூட பாக்காத தப்ப பண்ணுறோம்னு சொல்லி அத நம்புற மாதிரி சூழ்நிலை அமையறது, நமம கூட இருந்தவங்களே அத நம்பி நம்ல ஒதுக்கிறது, அந்த நேரத்துல வர ஏமாற்றம், யாருமே நம்ம கூட இருக்கமாட்டாங்கனு நினைக்கும்போது தான் கொஞ்சம் நாம அடங்கணும்னு தோணும். நாம என்ன தப்பு பண்ணோம்னு யோசிக்க தோணும். இத எனக்கு சோபிதான் காட்டுன, நான் நினைச்சது பொய் சொன்னது நல்லதுக்குன்னாலும், ஒரு விஷயத்தை முழுசா புரிஞ்சுக்காம, மத்தவங்க என்ன பன்னிடமுடியும், நான் எது பண்ணாலும் கரெக்ட்டா தான் இருக்கும்னு நினைச்சதை தப்புனு அப்போதான் எனக்கு புரிஞ்சது. no one is right always… எல்லாருக்கும் பிரச்சனை வரும்னு. அந்த over confident தான் எனக்கு இருந்த பிரச்சனை.அதேதான் சோபிக்கும் அதனால தான் அவளுக்கு இப்படி ஒரு பனிஷ்மென்ட்.

அவளுக்கு பணம் சொத்துன்னு ஆடம்பரமா இருக்கணும்னு சொல்லியே வளத்திட்டதால அவ அத மட்டுமே பாக்குற. அதுல பிரச்சனை வரும் அதுக்கு ரியாக்ட் பண்ணிடறா. மத்தபடி அவகிட்ட என்னை குறை. மத்தவங்க பிரச்சனைக்கும் போகமாட்டா, யாரையும் கண்டுக்கறதிலே சரி, மரியாதை குறைவாவும் நடந்துக்கறதில. அவ உண்டு அவ வேலை அவளுக்கு வேணும்கிறதா குடுத்திட்டா சரினு இருக்கா. அவ குணம் அப்டித்தான்னு சொல்லி அவளை அப்டியே ஒதுக்கி இப்போ அதுதான் சரினு சொல்லிட்டு இருக்கா. பணத்தை தாண்டி உலகத்துல நெறைய இருக்கு, பாசம், மனுசங்க நாம வாழ்க்கைல வேணும்னு புரியவெச்சுட்டா போதும் சரி ஆய்டுவா. சோ அதுவரைக்கும் கொஞ்சம் அவளை யாரும் ஏத்திவிடாம யார்கிட்டேயும் நெருங்கவிடாம தனிமைல வெச்சிருந்தா போதும் அவளே யோசிப்பா. அப்போ பாத்துக்கலாம்.”

“ஓ. ..அதுனால் தான் அத்தை அவள பாக்கக்கூடாதுனு சொன்னியா? ”

“ஆமா, ஆண்ட்டி பாட்டுக்கு திரும்ப போயி தத்து பித்துன்னு உளறி அவளை ‘பாரு உன்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்கனு’ ஒரு கம்ப்லைண்டா சொல்லி யோசிக்கவிடாம குழப்பிவிட்ருவாங்க,அவ திரும்பி கிறுக்கி மாதிரி ஏதாவது பண்ணனும், பழிவாங்கணும்னு நினைப்பா.

இதே பாதிக்கப்பட்டவங்களே யோசிக்கும் போது அதே விஷயம் தான் ‘நமக்கு யாருமே உதவி பண்ணலையே… இப்டி ஒத்துக்கிட்டாங்களே… அப்போ அந்த அளவுக்கு நான் தப்பு பன்னிட்டேனான்னு கொஞ்சமாவது யோசிப்பாங்க.’ அதுக்கு தான்…”

“அதுக்குள்ள அவ எதுவும் பன்னிக்கமாட்டாளா? ”

“அதான் எல்லாரும் இங்க இருக்கோம்ல. பிரச்சனைன்னு வந்ததும் அவ சாகுற ஆள் இல்லை. ஆனா யோசிச்சு ஒருவேளை ஒரு நாள் இரண்டு நாள் யோசிச்சு வேற வழியில்லைன்னு நினைக்கும் போது ஏதாவது முடிவெடுப்பாளான்னு சொல்லமுடியாது. ஆனா அதுக்கும் வேற வழி இருக்கு. அது அப்போ புரியும் உங்களுக்கு.”

அவன் இவளது மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே கேட்டான். “இன்னும் என்னவெல்லாம் பண்ணிவெச்சிருக்க நீ? ஒன்னு மன்னிச்சு விடணும், இல்லை கோபப்பட்டு தண்டிக்கணும், நீ ஏன் இரண்டுமே பண்ற? இதெலாம் சும்மா டூ மச்… அப்டி எல்லாம் மாத்தி மாத்தி இருக்கமுடியாது…”

அவளும் சிரித்துவிட்டு “எதுவுமே அளவா தேவைப்படற நேரத்துல குடுக்கணும் ஆதி, மன்னிச்சு விட்டுக்கிட்டே இருந்தா தப்பு பழகிடும், தண்டிச்சுகிட்டே இருந்தா என்ன பண்ணாலும் இப்டித்தான்னு ஒரு கோபம், வெறி வந்திடும். அதனால இரண்டுமே இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதே மாதிரி திட்டுனா அடிச்சா பாசம் இருக்கக்கூடாதா என்ன, அப்டி பாத்தா அன்னைக்கு உங்க வண்டில மோத போகும்போது, நீங்க என்னை அடிச்சீங்க. அது இல்லாம எத்தனை தடவ அடிச்சிருக்கீங்க அப்போ உங்களுக்கு என் மேல பாசமில்லையா? ”

ஆதி “ஹே அதெப்படி, உனக்கு ஏதாவது ஆகிடுமோனு தானே நான் அப்டி அடிச்சேன். ஒரு ஒரு தடவையும் ஏதாவது ஒரு ப்ரோப்ளேம்ல நீ மாட்டிக்கிறமாதிரி இருக்கும் போது வேற என்ன பண்ணமுடியும். அதான் உன்ன அந்த நேரத்துல வெளில கொண்டுவரத்துக்கு அடக்கிறதுக்கு அடிச்சிட்டேன். அண்ட் அடுத்து அதே விஷயம் பண்ணகூடாதில்லை? அதுக்கு தான். மத்தபடி பாசமில்லாம எப்படி?”

திவி “சரி அதுக்கு நீங்க திட்டியே இருக்கலாமே? இதுவே அந்த இடத்துல அம்மு இருந்திருந்தா என்ன பன்னிருப்பிங்க? அடிச்சிருப்பீங்களா? ”

“கண்டிப்பா இல்லை, அம்முவை திட்டுனாலே அவ ரொம்ப பீல் பண்ணுவா, பயந்துடுவா? ஆனா பொறுமையா சொன்னா நீ கேப்பியா? அத சும்மா தட்டிவிட்டுட்டு விளையாட்ட எடுத்துக்கிட்டு போய்டுவ. அதனால தான் உன்னை அதுல இருந்து வெளில கொண்டு வரனும்ல. அசட்டு நம்பிக்கை தைரியம எல்லாத்துலயும் இருக்ககூடாதில்ல? ”

“ரொம்ப கரெக்ட் நீங்க கேட்டத்துக்கான பதில் இதுதான். ஒரே விஷயம் அத பாக்கிற ஆள் நீங்களும் ஒருத்தர்தான். எப்போவுமே அடிப்பேன்னு நீங்க சொல்லல. எப்போவுமே மன்னிச்சு சொல்லிமட்டும் விட்ருவேனும் நீங்க சொல்லல. ஆள பொறுத்து, அவங்க குணத்தை பொறுத்து எப்படி சொன்னா புரிஞ்சுப்பாங்கனு யோசிச்சு பண்றீங்க. அது எப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க நடந்துக்கிறிங்கனு உங்கள குறை சொல்லமுடியுமா? இல்ல திட்றது, அடிக்கறதால பாசமில்லைனு ஆகிடுமா?”

அவனும் சற்று யோசித்துவிட்டு “ஓஒ…. கரெக்ட் தான்….அத இப்டி யோசிப்பியா? ”

அவன் தலையில் கொட்டிவிட்டு “ஆமா, எல்லாருக்கும் எல்லா குணமும் இருக்கு. சில நேரம் சரியா காட்டறதில்லை..இல்லை உணர்ச்சியை மாத்தி காட்டி குழப்பிக்கறாங்க. அதுதான் சொன்னேன். எதுவுமே அளவா தேவைப்படற நேரத்துல குடுக்கணும்னு, அது பாசம்னாலும் சரி, கோபம்னாலும் சரி…” என அவனும் எட்டி அவளுக்கு இதழ் பதித்து விட்டு “சோ ஸ்வீட் டா தியா.எனக்கு ஒரு டவுட். நமக்கு குழந்தை பொறந்தா உன்னமாதிரி இருக்குமா? என்னை மாதிரி இருக்குமா?”என சீரியசாக கேட்க

இவளும் ஒரு நொடி யோசித்துவிட்டு “பாக்க உங்கள மாறி இருக்கும், குணம் திங்கிங் எல்லாம் என்னை மாதிரி இருக்கும்” என்றதும் அவன் எழுந்து உக்கார்ந்து “எது உன்ன மாதிரி யோசிக்குமா? சுத்தம், ஒன்னவே என்னால மேய்க்கமுடியாம இன்னும் இன்டெர்வியூ வெச்சு கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன். இதுல உன்னை மாதிரியே இன்னொன்னா? வேணும்னா ஒரு 5 6 வருஷம் டைம் எடுத்து குழந்தை பெத்துக்கலாம்” என அவன் மிகவும் வருத்தமாக ஆனால் சீரியஸக கூற திவி தலையணை எடுத்து அவனை அடிக்கத்துவங்கினாள்.

பின் அவனும் தடுத்து சிரித்துவிட்டு “சரி சரி, அந்த சத்தியம் பண்ணாமாதிரி இல்லை நான் ஏதாவது இன்வோல்வ் ஆகுற மாதிரி எனக்கு தெரியாம இன்னும் எதாவது வெச்சிருக்கியா மா. திடீர் திடிர்னு சொல்லாத. கொஞ்சம் பதறும். இப்போவே சொல்லிடு. ப்ரீப்பர் ஆய்க்கிறேன். ” என அவன் சொன்ன விதத்தில் இவளும் சிரித்துவிட்டு “எஸ் இன்னும் 2 முக்கியமான விஷயம் இருக்கு. அதுவும் பெருசு தான். ஆனா நீங்க நினச்சா அத முடிச்சுடுவீங்க. அதனால உங்கள வெச்சு தான் அத பிளான் பண்ணிருக்கேன். அது நானே கூடிய சீக்கிரம் கேக்கறேன். ”

“என்னடி அது? பெருசுங்கற, அதுவும் இரண்டா, ஆண்டவா இவளை வெச்சு என்ன பண்றது? ” என

“என்ன ஆதி நீங்க, எனக்கு எல்லாமே நீங்கதான் இருக்கனும், எனக்கு எதுன்னாலும் நான் உங்கள எதிர்பார்க்கணும்னு நினச்சேன்னு சொன்னிங்க. இப்போ உங்கள ஏதோ பிரச்சனைல மாட்டிவிடறமாதிரி ரியாக்ட் பண்றீங்க? ” என அவள் வாட

ஆதி அவளை அணைத்துக்கொண்டு “அதெல்லாம் ஒன்னுமில்ல. உண்மையா சொல்லனும்னா எனக்கு சந்தோசம் தான். இத்தனை வருஷம் உன்கூட எத்தனை பெரு பழகுனாலும் நீ யாருக்கும் கொடுக்காத ஒரு இடத்தை எனக்கு கொடுத்திருக்க, ஏன் உன்னாலையே கண்டிப்பா அத செஞ்சுமுடிக்கமுடியும் இருந்தும் என்னை எதிர்பார்க்குற, என்கிட்ட சொல்றேங்கும்போது எப்படி நான் பீல் பண்ணுவேன். அதுவுமில்லாம என் செல்லம் தியா அவளோட லவ் என்கூடவே இருக்கும்ங்கும் போது எனக்கு என்னை கவலை வரப்போகுது. எதுனாலும் பாத்துக்கிறேன்… பட் எனக்கு ஒரே ஒரு பதில் சொல்லு. அந்த விஷயம் ஷாக்கா? சர்ப்ரைஸ்ஸா?”

இவளும் யோசித்துவிட்டு “மத்தவங்களுக்கு லைட் ஷாக், ஆனா உங்களுக்கு மேபீ ஹாப்பி ஆர் சர்ப்ரைஸ். விஷயம் முடிஞ்சபிறகு எல்லாரும் ஹாப்பியா தான் இருப்பாங்க. சுபி மேரேஜ் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இரண்டுமே சொல்லிடறேன். பீ ரெடி ஓகே?”

அவனும் சிரித்துக்கொண்டே தலையாட்டிவிடு இருவரும் மனதார மகிழ்ச்சியுடன் உறங்க சென்றனர். ஆதியின் மனதில் மத்தவங்களுக்கு ஷாக்னா என்று ஒரு நொடி யோசித்தவன் என்ன இருந்தாலும் தியா சொல்லிடுவா. இல்லாட்டி இவ்ளோ நம்பிக்கையா உள்ள இறங்கமாட்டா. என்ன பண்ணனும்னு அவ சொன்னபிறகு எப்படி பண்றதுனு மட்டும் யோசிச்சா போதும் என நிம்மதியாக உறங்கினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 11KSM by Rosei Kajan – 11

  அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…     Download WordPress Themes FreeDownload WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadFree Download WordPress Themesudemy course download freedownload karbonn firmwareDownload WordPress Themesonline free

காதல் வரம் யாசித்தேன் – 1காதல் வரம் யாசித்தேன் – 1

ஹாய் பிரெண்ட்ஸ். நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த  ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள் அன்புடன், தமிழ் மதுரா. Free

KSM by Rosei Kajan – 21KSM by Rosei Kajan – 21

அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம்..   Download Nulled WordPress ThemesPremium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress Themesudemy paid course free downloaddownload lenevo firmwareDownload WordPress Themes Freedownload udemy