Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 67

67 – மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் வருவதை கண்ட சுபி ஓடிச்சென்று அழைக்க, விசாரிக்க ஏன் என்கிட்ட பேசல என சண்டையிட பிறகு அவளை சமாதானம் செய்து அழைத்து வர “நீ ஏன் அழுகற, அதான் எல்லாருமே வந்திட்டோம்ல, நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குமோ அப்படி நடத்திடலாம். நீ கல்யாண பொண்ணா லக்ஷணமா சமத்தா சந்தோசமா சுத்திட்டு இரு. அதுதான் உன் வேலை ஓகே வா?” என அவளும் தலையசைத்து விட்டு திவியை கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் திவிக்கா இத்தனை வருஷம் எல்லாமே கூட இருந்து பண்ணிட்டு இப்போ யாரும் இல்லை, வாரமாடீங்கனு சொன்னதும் எனக்கு எதுவுமே பிடிக்கல. ரொம்ப அழுதேன். கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என அனைவர்க்கும் சுபியின் மனநிலை புரிந்தது. வீடு, படிக்கற இடம், குடும்பம்னு சுத்தி சுத்தி பாசமா கைக்குள்ளையே வளத்த பொண்ணு, அவளோட ஆசை இதுல இப்டி இருக்கறது நியாயம் தானே. எப்டியோ என அனைவருக்கும் ஏதோ ஒரு மனநிறைவு. பின் ஆளாளுக்கு வீட்டில் வேலைகள் செய்ய, கிராமத்தில் என்பதால் பக்கத்து வீடு, சொந்தம் பந்தம் என அனைவரும் வர போக இருக்க ஈஸ்வரியும், சோபியும் இவர்களை வந்ததாகவே கண்டுகொள்ளவில்லை..

[அவர்களுக்கு சுபியின் மூலம் இவர்கள் வருவது முன்னமே தெரிந்திருக்க, அதுவும் சுபிக்கும் ஈஸ்வரி, சோபிக்கு இடையே வாக்குவாதம் நிகழ சுபி இவர்களை பற்றி அனைத்தும் தெரிந்துவிட்டது. திவி அக்கா மேல தப்பில்லேன்னும் தெரிஞ்சிடிச்சு. இதுக்கு மேல நீங்க ஏதாவது பன்னிங்கன்னா அது உங்களுக்கு தான் பிரச்னை, தாத்தா வீட்டை விட்டே அனுப்பிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை என மிரட்டி வைக்க ஈஸ்வரி சற்று ஆடிபோனார். சோபி முதலில் திகைத்தாலும் உடனே சுதாரித்து கொண்டு விடு மா பாத்துக்கலாம். நான் திட்டுனா கூட வாங்கிட்டு போறவ இந்த சுபி இன்னைக்கு என்னவே எதிர்த்து பேசறாள்ல.

“சோபி அப்படி வீட்டை விட்டு அனுப்பிச்சா என்ன டி பண்றது? ”

“மா, சும்மா புலம்பாத. இப்போ என்ன தெறிஞ்சா உங்க அண்ணங்க வீட்டுக்கு போலாம். அதான் ஒருத்தருக்கு இரண்டு பேரு மாமாங்க இருக்காங்கல்ல. . அதில்லை இப்போ பிரச்சனை. இது எப்போவது தெரியும்னு எதிர்பார்த்தது தான். ஆனா இவ சொல்றத வெச்சு பாத்தா விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல. அதனால தான் அங்க யாருமே கால் பன்னாகூட பிடிக்குடுத்து பேசல. நம்மள வீட்டை விட்டு அனுப்புற மாதிரி இருந்திருந்தா அப்போவே அனுப்பிச்சிருக்கணும். இவ்ளோ நாள் அனுப்பாம இருக்காங்கன்னா அங்க வேற என்னமோ நடந்திருக்கு. அங்க இருந்து எனக்கு வரன் வந்திருக்கு. பெரிய இடம் அது இதுனு அப்பா பில்டப் பண்ணி வரவெச்சாங்க. ஆனா வந்தும் காரணமா சொல்றாரு, தள்ளி போட்றாரு. அவரோட நடவடிக்கை பாத்தா ஆல்ரெடி பாத்து வெச்சுட்டு கூப்பிட்டமாதிரி தெரில. இனிமேல் தான் அதுவும் இப்போ உண்மை தெரிஞ்சிருக்குன்னா நம்மள அங்க இருந்து பிளான் பண்ணி இங்க வரவெச்சிருக்காங்க. இவங்கள எல்லாம் நம்பி ஒண்ணுமே இல்லாதவனை மாச சம்பளத்துக்கு வேலை பாக்கிறவனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அங்க என்ன நடந்தது, ஏன் நம்மள எதுவுமே சொல்லாம இவங்க எல்லாம் ஏதோ மறச்சு செய்றங்கன்னு அப்பா, சுபி சுந்தர் மூணு பேர்ல யாரச்சுகிட்டே இருந்து மொதல்ல அதை கண்டுபிடிக்கணும். அப்புறம் பாத்துக்கலாம். என சோபி முடிக்க அதற்கான வேலையில் இறங்கி ஒருவழியாக அவர்களை கோபப்படுத்தி பேசி விஷயத்தை சுபி மற்றும் பரமேஸ்வரனிடம் இருந்து பெற்ற சோபி கூறினாள்.

“மா, விஷயம் தெரிஞ்சிச்சிடிச்சு. அந்த திவி கிட்டத்தட்ட பைத்தியம் ஆய்ட்டாளாம். அவ பண்ண தப்பு தான் குற்றஉணர்ச்சில இருக்காளாம். அவகிட்ட அந்த பிரச்னை பத்தி பேசுனாலே அவளுக்கு நல்லதில்லை. எந்த அளவுக்கு வேணாலும் போகலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்களாம். அப்போ எப்படியும் நம்மள அங்க போக விடவேமாட்டாங்க. ஆனா சுபி கல்யாணத்துக்கு அவளை வரவெச்சா திரும்ப திரும்ப நடந்ததை பத்தி பேசி குத்திக்காட்டினா அவளும் பீல் பண்ணியே ஒரு வழி ஆய்டுவாள்ல.”

“அது சரி, ஆனா மத்தவங்க எல்லாரும் சும்மா இருக்கணுமே. அவளை இனிமேல் நெருங்கவே முடியாத மாதிரில எல்லாரும் பாத்துகிட்டு இருக்காங்க. நாம அவங்க முன்னாடியே சும்மா பேசுனா கூட எல்லாரும் சண்டைக்கு வருவாங்க. நம்மள தொரத்திடுவாங்களே டி ?”

“அது தெரியும்மா. திவியை பத்தி தப்பா பேசுனா தான் நம்மள திட்டுவாங்க. திவ்விய நீங்க யாருமே இவளோ நாள் பழகி புரிஞ்சுக்கலேன்னு பேசும் போது அவங்களே பதில் இல்லாம அமைதியாதான் இருப்பாங்க. அவங்கள குறை சொல்லியே இவளுக்கு ஞாபகப்படுத்தினா போதும். அவ பைத்தியம் முத்தி போயி மொத்தமா விலகிடுவா.” என

ஈஸ்வரியும் “சரி, இப்போ என்ன பண்றது? ”

“நாம ஒன்னும் பண்ணவேண்டாம். அதான் சுபி எல்லாரும் கல்யாணத்துல வேணும்னு அடம்பண்ராள்ள.. அவளுக்காக ஒத்துக்கிட்ட மாதிரி அமைதியா விட்ருவோம். எப்பிடியும் எல்லாரும் இங்க வந்துடுவாங்க. அப்புறம் பாத்துக்கலாம். ” என்று முடிவெடுத்து அமைதியாக இருந்தனர். ]

குடும்பத்தில் மற்ற அனைவரும் கூட திவியுடனே இருந்தனர். அவளிடம் இவர்கள் பேசுவதை தடுத்துக்கொண்டே இருந்தனர். முக்கியமாக ஆதி குழப்ப போகிறார்கள் என தெரிந்தால் அவளுக்கு வேலை வைத்தோ வெளியே நடந்து வரலாம் என ஏதாவது பேச்சை மாற்றியோ கவனமாக பார்த்துக்கொண்டான். முடிந்த அளவுக்கு சோபியும், ஈஸ்வரியும் பேசவிடாமல், அவர்கள் பேசுவதை கேட்கவிடாமல் செய்துகொண்டே இருந்தனர். அவளும் அனைவரிடமும் நன்றாகவே பேசினாள். சுபி மீராவை அழைத்து கொண்டு திவியிடம் வர “ஹே மீரா எப்படி இருக்க? ”

அவளும் வந்து கட்டிக்கொண்டு “ரொம்ப நல்லா இருக்கேன். என்னோட நியூ அந்த பெஸ்ட் பிரண்ட் ஒருத்திகிட்ட பேசமுடிலேன்னு தான் கவலை. மத்தபடி எல்லாமே ஓகே தான்.” என்று அவள் திவியை குறிப்பிட

அதை புரிந்துகொண்டு “சரி, சரி, சாரி… அதான் இப்போ வந்துட்டேன்ல. பேசமாட்டியா? பிரண்ட் தானே. ப்ளீஸ்” என அவளும் சிரித்துவிட்டு “கண்டிப்பா பேசுவேன். நெறையா சொல்லணும். சண்டை போடணும். அன்னைக்கு வந்திட்டு உடனே கிளம்பவேண்டியதா போயிடிச்சு.

சோ இந்த தடவை வா போலாம். அம்மா எல்லாரும் கூட கேட்டாங்க. உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கேன். வா இப்போவே போலாம். ” என அவளோ “என்னது இப்போவே வா?” ஆமா. நேத்தே ஊருக்கு வந்துட்ட. இன்னைக்கு என்கூட வா.”

அவள் ஆதியை பார்க்க அவனும் தயங்க சுபி “மாமா, இவங்க பெரு மீரா, நம்ம ஊரு ரைஸ் மில் ஓனர் பாண்டியன் இருக்காங்கள்ல.. அவங்க பொண்ணு. போன தடவை வந்த போது கோவில்ல பாத்து எல்லாரும் பிரண்ட் ஆயிட்டாங்க.” என

ஆதி “அது ஓகே மா, ஆனா மேரேஜ் பங்ஸன் முடியட்டும். நானே கூட கூட்டிட்டு போறேன். இந்த வாரம் முழுக்க இங்க தானே இருக்கப்போறோம். ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல. இப்போவே ஏன்னு தான் ” என அவன் இழுக்க

மீரா “திவி ப்ளீஸ்…. ” என அவள் மீண்டும் ஆதியை பார்க்க ஆதி அவளை புரிந்துகொண்டு “உனக்கு போகணுமா? போயிட்டு பத்திரமா வந்தட்ரியா?” என அவளும் “ம்ம்” என வேகமாக தலையாட்ட அவனுக்கும் தான் இல்லாமல் அவளும் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது போல தோன்ற “சரி, பாத்து போயிட்டு வா. எதுனாலும் கூப்டு. நான் வந்துடறேன். மொபைல் எடுத்துக்கோ. ” என அவள் உள்ளே சென்றதும் மீரா ஆதியிடம் வந்து “அண்ணா நீங்க எதுக்கு தயங்கிறீங்கன்னு எனக்கு புரியுது. சுபி எல்லாமே சொல்லிட்டா. என்கூடவே தான் வெச்சுப்பேன் அவளை. யாரும் எதுவும் அவகிட்ட கேக்காதமாதிரி பாத்துக்கறேன்” என அவனது தயக்கத்தை உடைக்க அவனுக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்க “சரி மா, கேட்டதுக்கு பதில் தவிர வேற யார்கூடவும் அவ அதிகம் பேசுறது, வெளில போறதில்ல அதனால தான் நீ கேட்டு அவ ஓகேன்னதும் நானும் சரினு சொல்லிட்டேன். பாத்துக்கோங்க.” என திவி வந்ததும் அடுத்து தெரு தான் என்றாலும் எங்கே வீடு என விசாரித்து விட்டு சீக்கிரம் அனுபிச்சுவெச்சுடுங்க என அவளும் சம்மதித்து சுபியும் வரா அண்ணா, அதனால அவகூடவே தாட்டிவிடறேன், இல்ல நானே கொண்டு வந்து விடறேன் என மீரா, திவி, சுபி மூவரும் கிளம்ப எதிரே சுந்தர் வர மீரா தலையை குனிந்து கொண்டே செல்ல சுந்தர் அவர்கள் செல்வதையே பார்க்க இதை கவனித்தும் எதுவும் கூறாமல் திவி அப்போதைக்கு அமைதியாக சென்றாள்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: