Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 3

“என்னை தொடாதே என்றாய்!

காற்றெல்லாம் உன் வாசம் –சுவாசித்து

என் உயிர் நிரப்பிக் கொள்கிறேன் நான் – உன்னை

தீண்டினால் என்ன!!

தீண்டாவிட்டால் என்ன!!”

 

“அப்பாடி வண்டியை ஒரு வழியாய் டெலிவிரி எடுத்தாகி விட்டது”

ஸ்வேதா புன்னகையுடன் கூறினாள்

ஸ்ருதி ஆசையுடன் தன்னுடய வண்டியை வருடிக் கொடுத்தாள்.

“அடுத்து என்ன பிளான்” ஸ்வேதா வினவினாள்.

“ம்.. கோவிலுக்குபோகலாம்”

“எந்தகோவிலுக்கு?”

“புளியகுளம் பிள்ளையார்கோவிலுக்கு”

**************

கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்ததாக கோவில்களில் ஒன்றாக

அறியப்படுவது இந்த புலியகுளம் கோவில்.

இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த

துணைக்கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை

 19அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.

 

இது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகும்.  இத்தல

விநாயகருக்கு ஸ்ரீ முந்தி விநாயகர் எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

 வாசுகி எனும் பாம்பை தனது வயிற்றைச் சுற்றிலும் வைத்திருப்பதைப் போன்று

காட்சியளிக்கிறார். இதனாலேயே நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து

வழிபட்டு சென்றால், அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக

கருதப்படுகிறது.

 

இங்கு விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப் படும் அந்த நாட்களில் விநாயகரைக் காணக்  கண்கோடி வேண்டும்.

சரஸ்வதி பூஜை நாட்களில் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளும் நாக்கில் பிரணவத்தை (ஓம்) எழுதி செல்வார்கள்.

******

பூஜை முடிந்த வண்டியை சுற்றி சுற்றி வந்து போட்டோ எடுத்தாள் ஸ்ருதி

“புது கல்யாணமான ஜோடியை போட்டோ எடுப்பது போல், ஏன்டி உன் வண்டியை சுற்றி சுற்றி வந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறாய்.

ஒரு வேலை உன்னுடைய she க்கு ஒரு he- தேடுகிறாயா என்ன?” ஸ்வேதா கிண்டலாக வினவினாள்

“வேணும்னா புல்லட் ஒன்னு வாங்கி ரெண்டையும் ஜோடியாக்கி கல்யாணம் பண்ணி வச்சிரலாமா. உன்னோட மஞ்சள் நிற வண்டிக்கு, என்ன நிற புல்லட் வாங்கினால் நன்றாக இருக்கும்!

தாலி மாலை வாங்கி கோவில்ல கல்யாணமா, இல்லை ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம். சாட்சி கையெழுத்து போட நானும் வரணுமா!” ஸ்வேதா தீவிரமாக யோசிக்க, ஸ்ருதி கொலை வெறியானாள். 

“கொழுப்பாடி உனக்கு” ஸ்ருதி குதித்தாள்                                                                                     

“ஆமாம் டி நீ சோறு போட்டு தான் எனக்கு கொழுப்பு ஏறியிருக்கு!” ஸ்வேதா கடுப்படித்தாள். காலையிலிருந்து இங்கும் அங்கும் அலைந்ததில் அவளுக்கு நன்கு பசிக்க ஆரமித்திருந்தது.

 பூஜை எல்லாம் முடித்துவிட்டு சுவாமி தரிசணம் முடித்துவிட்டு இவர்கள் கிளம்பும் போது மணி 1 தொட்டு இருந்தது.

 “பசி வந்தா நீ நீயாக இருக்க மாட்டாய் !”ஸ்ருதி கிண்டலுடன் கூறினாள்.

 ஸ்வாதவின் கோபம் இன்னனும் கொஞ்ச கூட,

“சரி சரி விடும்மா சாப்பிடப் போலாம் வா” ஸ்ருதி அழகாக சரண்டர் ஆனாள்.

இருவரும் தங்களுடைய வண்டியை எடுத்துக்கொண்டு ஒரு புகழ் பெற்ற உணவு விடுதியை நோக்கி சென்றனர்.

ஸ்வேதா மிகுந்த உணவு பிரியை. ஸ்ருதி உணவை இரசித்து உண்பாள். மற்றபடி அவளுக்கு இந்த உணவு தான் வேண்டும் என்றெல்லாம் இல்லை. அதானால் எப்பொழுதும் மெனுகார்ட் ஸ்வேதா கையில் தான்.

மட்டன் பிரியாணியையும் பிஷ் பிங்கரையும் ஆர்டர் செய்தாள்.

“என்னடி சூப் சொல்லலையா? நீ ஆசையாக குடிப்பாயே?”

“ப்ச் பசி கண்ணை கட்டுது டீ, அதனால்தான்!”

“சரி, சரி”

இருவரும் உணவை இரசித்து உண்டார்கள்.

கடைசியா ஒரு ஐஸ்கீரிமை வாங்கி உண்டுவிட்டு வெளியே வந்தார்கள்.

வெளியே வந்து பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போதுதான். ஸ்வேதாவிற்கு திடீரென அவளுடைய வண்டியை ஓட்டிப் பார்க்கும் ஆசை வந்தது.

“சரி நீ அப்ப வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வா”

“ப்ச் அது நன்றாக இருக்காது , அத்தைக்கு நீ தான் ஓட்டிச் சென்று காண்பிக்க வேண்டும்.

“சரி இப்ப அதுக்கு என்ன பண்ணாலாம்!”

“நான் ஒரு தடவை இந்த சாலையிலை வண்டியயை ஓட்டி விட்டு வருகிறேன்!”

“சரி ஹெல்மெட் போட்டுட்டு போ”

“பரவாயில்லை”

“ம்,சரி. பத்திரம் டீ, சீக்கிரம் வா”

தனியாக நிற்பதற்கு இதை செய்வோமென, அவளுடைய இருசக்கர வாகனத்துடன் இவர்கள் எடுத்த புகைப்படங்களை ஃபேஷ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா என்று ஏற்ற ஆரம்பித்தாள்.

என்னவானலும் வரலாறு முக்கியமல்லாவா!

பேஸ்புக்கில் போடாமலும் வெளியில் சென்று வரலாம்! என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னவோ! ஆண்டனுக்கு தான் வெளிச்சம்.

வாட்ஸ் அப்பில், ஸ்ருதி தன் டூவிலரின் படத்தைப் போட்டுவிட்டு நிமிரும் நேரம்….

“அம்மா!” என்ற அலறலில் திகைத்து நிமிர்ந்தாள்.

ஸ்வேதாவின் குரல் போல இருக்கிறதே ஸ்ருதியின் வயிற்றில் பயப் பந்து வேகமாக அடைக்க அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அங்கே சற்று தொலைவில் ஸ்வேதா இரத்த வெள்ளத்தில் கிடக்க, அவள் ஆசையாய் வாங்கிய வெஸ்பா சற்று தூரத்தில் கிடந்து!!!

ஸ்வேதாவை, இரத்த வெள்ளத்தில் பார்த்தவளின் மூளை சில நிமிடங்கள் வேலை நிறுத்தம் செய்து, அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் திகைத்தது.

சட்டென தன்னை உலுக்கிக் கொண்டவள் ஸ்வேதாவை நோக்கி ஓடினாள்!

அங்கே ஸ்வேதாவின் உடல் தன்னுடைய கடைசி நிமிடங்களுக்காக துடித்துக் கொண்டிருந்தது!

அவள் அருகில் செல்லும் போது அந்த கடைசித் துடிப்பும் அடங்கிவிட!!!

கத்தவதற்கு கூட தெம்பில்லாமல் அதிர்ச்சியில் மயங்கி கிழே சரிந்தாள் ஸ்ருதி.

“அய்யோ யாரு பெத்த புள்ளையோ!“ என்று ஒரு முதியவளின் தீனமான குரல் தான் ஸ்ருதி மயக்க நிலை செல்லும் முன் கேட்ட வார்த்தை. 

 

உன் வாசமாவாள்…

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: