ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 43

43 – மனதை மாற்றிவிட்டாய்

அது முடியுமா? கோபம்னாலும் ஆதியோட முடிவுல இருந்த அழுத்தம், உறுதி கண்டிப்பா அவரு மாத்திக்கமாட்டாரு. அர்ஜுன் அண்ணாகிட்ட இத பத்தி பேசலாமா? அவரு ஊர்ல இருக்காருன்னு தானே விட்டோம். ஆனா இப்போ வேற வழியில்லை. சரி மொதல்ல அபி அண்ணிக்கு கூப்பிடலாம். வேண்டாம் அண்ணி ஒருவேளை டென்ஷன் ஆனா குழந்தைக்கும் பிரச்சனா. அரவிந்த அண்ணாக்கு கூப்பிடலாம் என அழைக்க அதை கண்ட அரவிந்த் எடுக்க போக அபி அதை பார்த்து கட் செய்துவிட்டாள். மீண்டும் அழைப்பு வர அரவிந்த்அபி சொன்னா கேளு, என்ன ஏதுன்னு பேசுவோம். அவ கரணம் இல்லாம கூப்பிடமாட்டா. “

அதேதான் நானும் சொல்றேன். என் தம்பிய வேண்டாம்னு சொன்னவ, சொத்துக்காக தான் எங்ககூட பழகுனேன்னு சொன்னவ காரணமில்லாம கூப்பிடமாட்டா. வேற ஏதோ தேவைக்கு இல்லை உங்கள பிரச்சனைல சிக்க வெக்கவாத்தா இருக்கும். சோ வேண்டாம். எடுக்காதிங்க? ” என முடிவாக மறுத்துவிட்டு மீண்டும் கால் வர போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள்.

அடுத்து அம்முவுக்கு போன் வர அவளும் அபியுடன் இருந்ததால்அக்கா அவ எனக்கு கூப்பிட்றா.”

கடுப்பான அபி கட் பண்ண சொல்ல அம்முஅட்டென்ட் பண்ணிபாரு திவி, எங்க யாருக்கும் உன்கிட்ட பேச சுத்தமா இஷ்டமில்லை. சோ நீயா புரிஞ்சுகிட்டு யாரையும் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாத. ” என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்.

திவியிடம் இருந்து மெசேஜ் வந்ததுப்ளீஸ் அம்மு, சொல்றத கொஞ்சம் கேளு. ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும். கால் அட்டென்ட் பண்ணி பேசு. உங்க அண்ணாவை பத்தி கொஞ்சம் பேசணும்என இருக்க

படித்துவிட்டு இவள் மேல் இருந்த கோபத்தில் நம்பரை டெலீட் பண்ணிவிட்டு சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டனர்.

திவிக்கு என்ன செய்வது என புரியாமல் தர்ஷினிக்கும், அவள் அண்ணன் ஷிவாக்கும் அழைக்க அங்கேயும் இதே நிலை தான். அட்டென்ட் செய்து ஷிவா கத்தினான். “இப்போ எதுக்கு திவி கால் பண்ற? எல்லாரும் இருக்கோமா இல்லையான்னு கேக்கவா? “

அண்ணா, சொல்றத கொஞ்சம் கேளுங்க. நான் உங்க யாரையும் அவமானப்படுத்தற மாதிரி எப்போவும் நடந்துக்கமாட்டேன். என்ன நம்புங்க. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அந்தமாதிரி. “

வாயமூடு, பணம் தான் முக்கியம் அதுக்காக தான் அவங்க குடும்பத்தோடவே பழகுனேன்னு சொல்லிட்டு, இப்போ வாய்கூசாம சூழ்நிலை அந்தமாதிரின்னு சொல்ற. பாரு, எங்க யாருக்கும் உன்கூட பேசவே பிடிக்கல. தயவுசெஞ்சு தொல்லை பண்ணாம போய்டு. ” என்று கத்திவிட்டு வைத்துவிட்டான்.

தர்ஷினிக்கு அழைக்க எடுத்த அவளிடம்தர்ஷி, ப்ளீஸ்…. இப்போ பெரிய பிரச்னை. நீயாவது சொல்றத கேளு. ஆதி வீட்ல அரவிந்த் அண்ணா, அம்மு யாராவது இருந்தா அவங்ககிட்ட கண்டிப்பா பேசணும். ஹெல்ப் பண்ணு. ஆதி இப்போ ….” என்று அவள் கூறி முடிக்கும் முன்பே

தர்ஷிஏன் திவி, இங்க சித்திக்கு உடம்பு முடியல. அவங்கள பத்தி கேக்கல. அப்பா, அம்மா, சித்தப்பா யாரும் சாப்பிடாம பேசாம எப்போவும் எதையோ பறிகொடுத்தமாதிரி இருகாங்க. யாருமே இங்க நிம்மதியா இல்ல. இங்க இருக்கறவங்க யாரை பத்தியும் ஒருவார்த்தை கேக்காம இந்த நிலமைலையும் உனக்கு ஆதிய பத்தி அவங்க வீட்ல நடக்குற விஷயம் பத்தி தெருஞ்சுக்கணுமா? அந்த அளவுக்கு உனக்கு பணம் முக்கியமா போட்ச்சா? உன்ன என் அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருக்கு டிஎன கூறிவிட்டு வைத்துவிட்டாள்.

அந்த நேரம் பார்த்து அபி, அம்மு அங்கே வர தர்ஷி அழுதுகொண்டு இருக்க, ஷிவா, அவன் மனைவி ரஞ்சி அவளை சமாதான படுத்திகொண்டு இருந்தனர். நடந்ததை அறிந்த அவர்களும் கோபத்துடன் திவியை திட்ட தங்களுக்கும் கூப்பிட்டு இருந்தாள் என்றதுடன் அவளை காண சென்றது திவி இவர்களை கவனிக்காமல் கனவுலகில் கையில் யாரோ புகைப்படம் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தது என அனைத்தும் கூறினார்கள். கேட்ட அனைவர்க்கும் அதிர்ச்சி திவிக்கு தயா ன்னு யாரும் தெரிஞ்சவங்க இருந்தமாதிரி இல்ல அண்ணி, ஆனா அவ லவ் பண்ணிருக்கான்னா நம்பவே முடில. என கூற

ஷிவாஇந்த விஷயம் நம்மளோடவே இருக்கட்டும். பெரியவங்க யாருக்கும் தெரியவேண்டாம். ரொம்ப வருத்தப்படுவாங்க. அம்மு, உங்க அம்மா, அப்பாவுக்கும் தெரியாதில்ல?”

இல்ல அண்ணா, எனக்கு, அக்கா, மாமா 3 பேருக்கு மட்டும் தான் தெரியும். ரொம்ப கோபம், சங்கடமா இருந்தது. இவ வேற ஒருத்தன லவ் பண்ரான்னு தெரியாமலே அண்ணா இவ மேல உயிரையே வெச்சுஇருக்கான். இவளும் அத அக்செப்ட் பண்றமாதிரி தானே நடந்துக்கிட்டா. பிடிக்கலேன்னு முன்னாடியே சொல்லிருந்தா இவ்வளோ பிரச்சனை வந்திருக்காது. திவி யாரை லவ் பன்னிருந்தாலும் கண்டிப்பா கல்யாணம் பண்ணி வெச்சுஇருப்பங்கள்ல.” என வருத்தத்துடன் பேச

அவளுக்கு தான் பணம் வேணும், சொத்து வேணும்னு பண்ணிருக்காளே. அப்போ ஏமாத்தாத்தான் செய்வா. நாம எல்லாரும் அவ்வளோ முட்டாளா இருந்திருக்கோம். அவ நிம்மதியா போய்ட்டா. பாவம் நாம முக்கியமா பெரியவங்க எல்லாரும் மனசொடுஞ்சு போய்ட்டாங்க. ” என ரஞ்சி கூற அனைவரும் கவலை கொண்டனர்.

கடைசி முறை என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ராஜலிங்கத்திற்கே கால் செய்தாள் திவி.

ஆனால் மதிய நேரம் என்பதால் பெரியவர்கள் சற்று உறங்கவில்லை எனினும் அறையில் ஓய்வெடுக்க சொல்லி படுக்க வைத்துவிட்டு வந்ததால் தர்ஷி வரும்போதே அவர்கள் போனை வெளியே கொண்டு வந்துவிட்டாள். தொந்தரவாக இருக்குமென. அதனால் இப்போது திவி கால் வருவதை கண்டு அவள் கோபத்துடன் இருக்க அவளிடம் வந்தவர்கள் போனை எடுத்துஉனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? திருந்தவே மாட்டியா? உன்ன பத்தி ஒன்னு ஒண்ணா தெரிய வர அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா இருக்கு. இதெல்லாம் எங்கனாலையே தாங்கிக்க முடில. அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லாரும் கேட்டா அவ்ளோதான். இனிமேல் அம்மா, அப்பா எல்லாரும் அடலீஸ்ட் உயிரோடவாது இருக்கணும்னு நாங்க எல்லாரும் ஆசைப்படறோம். நீ பண்ணவேலைக்கு அவங்க யாரும் பேசுற மனநிலைல கூட இல்ல. அவங்க பிபி ஏத்தமா இரு. திவி இதுவரைக்கும் உன்ன நாங்க எல்லாரும் நம்புனது தப்பு தான். தயவுசெஞ்சு விட்று. எங்க லைப் இருந்து நீ மொத்தமா போய்டு திரும்ப தொந்தரவு பண்ணாத. ” என ஆளாளுக்கு பொரிந்து தள்ளிவிட்டு வைத்துவிட்டனர்.

தோய்ந்து போன திவி அத்தை, மாமாவுக்கு ஆதி இப்படி ஒரு முடிவு எடுத்துஇருக்காருனு தெரிஞ்சாலே தாங்கமாட்டாங்க. வேற யாருமே நான் சொலவரத கூட கேக்கமாட்டேங்கிறாங்களே. அங்க போயும் பேசமுடியாது. ஆதி வந்தா ரொம்ப பிரச்சனை. ஈஸ்வரி ஆண்ட்டி, சோபி இருந்தா சொல்லவே வேண்டாம். கடவுளே என எண்ணியவள் அர்ஜுனுக்கு இறுதியாக அழைக்க காது கொடுத்து கேட்கக்கூடிய அவனுக்கோ சுவிட்ச் ஆப் என வந்தது.

இதற்கு மேல் நம் கையில் எதுவுமில்லை என எண்ணியவள் வருத்தத்துடன் அமர்ந்துவிட்டாள்.

திவியிடம் கூறிவிட்டு வெளியே வந்த ஆதியோசாரி டி, உன்கிட்ட பொறுமையா சொன்னா நீ கேக்கமாட்டா. அதேமாதிரி உன்ன விட எனக்கு மனசில்லை.

உண்மைதான். நமக்குள்ள நெறைய சண்டை, பிரச்னை, இன்னும் புரிஞ்சுக்காம, முக்கியமா அந்த விடியோக்கான பதில் எதுவுமில்லாம, எத பத்தியு முழுசா தெரியாம இந்த வாழ்க்கைல இணையப்போறோம். அத தெரிஞ்சுக்கற பொறுமையும் இப்போ எனக்கில்லை. ஏனோ இப்போ இல்லாட்டி நீ எனக்கு கிடைக்கவேமாட்டேனு தோணுது. இவ்ளோ குழப்பத்தோட இருந்தாலும் பரவால்ல. எனக்கு அத பத்தி எல்லாம் கவலையில்ல. நீ என் பக்கத்துல இருப்ப. அது போதும். நீ என்ன தான் லவ் பண்ற எனக்கு இன்னு நம்பிக்கை இருக்கு. உனக்கு ஒருவேளை பணம் தான் முக்கியம்னாலும் அதைவிட என் காதல் பெருசுன்னு நான் உனக்கு புரியவெக்கறேன் தியா. நமக்குள்ள இருக்குற காதல் நம்மளகண்டிப்பா இந்த எல்லா பிரச்சனையும் தாண்டி சேத்திவெச்சுடடும்.” என தனக்குள் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேந்தர் மரபு 60வேந்தர் மரபு 60

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு 60 அடுத்த அத்தியாயம் உங்களுக்காக Download Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreeFree Download WordPress Themeslynda course free downloaddownload mobile firmwarePremium

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51

51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது?” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது..

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36

36 – மனதை மாற்றிவிட்டாய் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு மண்டபத்திலேயே இரு குடும்பத்தினர் மட்டும் வைத்து நிச்சயம் செய்ய திட்டமிட்டனர். உடன் ஊர் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். அபி தாம்பூலத்தட்டில் மாலையுடன் நிச்சய மோதிரம் சேர்த்து சாமியிடம் வைத்துவிட்டு எடுத்துக்கொண்டு