Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.               அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து “என்னப்பா அப்படி பார்க்கிறீர்கள் உங்கள் மகன் அவ்வளவு அழகாக இருக்கிறேனா” என்று கண்ணடித்து சிரித்தான்.அவர் ஒன்றும் சொல்லாமல் கிண்டலாக சிரிப்பதை பார்த்து “எதுக்கு பா சிரிக்கிறீங்க” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே நகுலுக்கு காபி எடுத்து கொண்டு வந்த சுந்தரி மகனை பார்த்து திகைத்து “இது என்னடா கோலம்” என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

 

இவர்கள் என்ன சொல்கிறார்கள் புரியாமல் முழித்து கொண்டு இருந்தவனை பார்த்த அர்ஜூனுக்கும் சுதிக்கும்கூட அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“டேய் முதலில் போய் கண்ணாடியை பார்”.  அஜூ.

 

“எதுக்கு?”என்று கேள்வி கேட்டாலும் வேகமாக கண்ணாடியை சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.

“அடி பாவி நேத்து உன்ன பாத்து சிரிச்சதுக்கு இப்புடி மொத்த குடும்பமும் என்னை பார்த்து சிரிக்க வச்சிடியே” என்று மனதில் நொந்து கொண்டவன் அங்கு இருந்தவர்களை பார்த்து அசடு வழிந்து விட்டு விறு விறுவென தன் அறைக்கு சென்று தன் முகத்தில் கீதா உதட்டின் அச்சு போல் லிப்ஸ்டிக்கில் ஒட்டி வைத்ததை சுத்தம் செய்தவன் தன் முகத்தில் அங்கு அங்கு ஒட்டி இருந்த மையையும் துடைத்து எடுத்தான்.

“பாவி இத எல்லாம் எங்க இருந்துதான் யோசிச்சு செய்யறாலோ தெரியல.இப்புடி அப்பி வச்சிருக்கா. உண்மையாலுமே முத்தம் கொடுத்த மாதிரி வரைஞ்சிருக்கா மை எல்லாம் கூட அப்புடிதான் இருக்கு இவ வரையறது கூட தெரியாம தூங்கிய தன்னை நினைத்து வெட்க்கியவன் உனக்கு இருக்குடி” என்று நினைத்து கொண்டே குளிக்க சென்றான்.

“அவ பண்ண வேலைக்கு ஏதாவது சொல்லுவேன்னுதான் மகாராணி இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டா போல” என்று அவனும் ஆபிஸ் கிளம்பினான்.

மாலையும் ஆபிஸில் இருந்து லேட்டாக வந்தவள்.அபியுடன் விளையாண்டுவிட்டு அவனுடனே படுத்து தூங்கிவிட்டாள்.அவளது அறையில் படுக்க சொல்லி எழுப்ப போன சுதி அவள் அசந்து தூங்குவதை பார்த்து அதிக வேலை போல என்று நினைத்து கொண்டு அவளை எழுப்பாமல் சென்றுவிட்டாள்.இப்படியே மூன்று நாட்கள் நகுலின் கண்ணில் படாமல் ஒழிந்து விளையாடியவளின் விளையாட்டை முடிக்கும் நேரமும் வந்தது.அவளது அம்மா ரூபத்தில்.                      ஆபிஸில் கீதா வேலை செய்து கொண்டு இருக்கும் போது போன் செய்த சுவாதி “சீக்கிரம் வீட்டிற்கு வா” என்று கூறி போனை வைத்தாள்.

 

“யாருக்கு என்னாச்சு திடிர்னு போன் பண்ணி இப்படி வர சொல்கிறாளே” என்று பயந்தவள் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினாள்.            வீட்டிற்கு வந்த கீதா வள்ளி வந்திருப்பதை உணர்ந்து “அம்மா” என்று துள்ளி சென்று அவளை அணைத்து கொண்டாள். அவளை அணைத்து கொண்ட வள்ளியை கொஞ்ச நேரம் கொஞ்சியவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக சுதியை பார்த்து முறைத்தாள்.

“என்னை எதுக்கு டி இப்ப முறைக்கற?”         சுதி.

“அம்மா வந்திருக்காங்கனு சொல்ல வேண்டியது தானேடி.நீ உடனே போன கட் பண்ணவும்,நான் யாருக்கு என்னாச்சோனு பயந்து போய் ஓடி வந்தேன்”.         கீதா.

“அப்புடி கட் பண்ணுனதால தான் மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்தீங்க.இல்லனா எப்ப பாரு வேல வேலனு இப்பலாம் நீ லேட்டா வந்து டயர்டுல சாப்படாம கூட தூங்கிற்ற அதனாலதான் அப்படி செஞ்சேன்”.                சுதி.

“ஹய்யோ……. நளன்கிட்ட இன்னைக்கு வசமா சிக்கிருவேன் போலவே” என்று மனதுக்குள் புலம்பியவள். “சரி விடு கீது எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா” என்று தன்னை தானே சமாளித்து கொண்டு வள்ளியுடன் பேச ஆரம்பித்தாள்.

நகுலனும் அன்று சீக்கிரம் வந்தவன்.கீதாவை நக்கலாக பார்த்து வைத்தான்.அவன் பார்வையே கீதாவிற்கு உணர்த்தியது “இன்னைக்கு நீ வசமா மாட்டுனடி” என்று.அவனின் மன ஓட்டத்தை உணர்ந்தவள் எப்படி தப்பிப்பது என்று திட்டமிட ஆரம்பித்தாள்.இரவு உணவை அனைவரும் முடித்து படுக்க செல்லும் போது அபியை தாஜா செய்ய ஆரம்பித்தாள்.

“அபி கண்ணா இன்னைக்கு நீ கீதாமா கூட படுத்துக்கிறீயா. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா வள்ளி பாட்டிக்கூட கதை கேட்டுக்கிட்டு தூங்கலாம்”.         கீதா.

“ஹோ மேடம் எஸ்கேப் ஆக அபியை கதைனு சொல்லி மயக்க பாக்கறாளா.சரியான ஆளுடி நீ யாருக்கு எது வீக் பாயிண்டுனு தெரிஞ்சு அத பாத்து அடிக்கற” என்று மனதுக்குள் தன் மனைவியை மெச்சினாலும் அவள் அன்று செய்த வேலைக்கு அவளிடம் கொஞ்சமாவது விளையாட வேண்டுமே என்று யோசித்தவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு தன் அண்ணனை பார்த்தான்.

“ஏதாவது உதவுடா அண்ணா” என்று சைகையில் கேட்க பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதற்கு இணங்க அவனின் சைகையை சரியாக புரிந்து கொண்ட அர்ஜூன்.

“இல்ல, கீது அபி இன்று எங்களுடனே படுக்கட்டும் நான் அவனுக்கு புது கதை சொல்வதாக சொல்லி இருந்தேன்.பாவம் அத்தை மாத்திரை போட்டதால் தூக்கம் வரும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.நீ உன் அறையில் போய் படு காலையில் பேசி கொள்ளலாம்” என்றவன் மகனை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

“ஹய்யோ இந்த ஆப்சனும் போச்சா.இவனை எப்படி சமாளிப்பது” என்று யோசித்து கொண்டே மெதுவாக படிகளில் ஏறினாள்.எவ்வளவு மெதுவாக ஏறினாலும் செல்ல வேண்டிய இடம் வந்துதானே ஆகும் அவர்களது அறையும் வந்தது.மெதுவாக அறையை திறந்து உள்ளே நுழைந்தவளை கதவின் பின் இருந்து அணைத்தான் அவளது கணவன்.

“என்ன பண்றீங்க.கையை எடுங்க என்று கத்தியவளை கண்டு கொள்ளாமல் அவளை அப்படியே தூக்கியவன் கட்டிலில் சென்று உட்கார வைத்தான்”.

“என்ன மேடம் ரெண்டு,மூணு நாளா கண்ணுலயே படாம இருந்தீங்க இப்ப மாட்டிக்கிட்டமேனு தோணுதா”.        நகுல்.

அவனது பேச்சிலும் செயலிலும் பயந்து போய் இருந்தாலும் அதை வெளி காட்டாமல். “நான் என்ன தப்பு செஞ்சேன் உங்களிடம் இருந்து தப்பிக்க”.         கீதா.

“ஹோ……மேடம் எந்த தப்பும் செய்யல?”    நகுலன்.

 

“இல்லை.எனக்கு ஆபிஸில் வேலை அதிகம் அதனால் சீக்கிரம் வர முடியவில்லை.நீங்கள் என்னவென்றால் உங்களுக்கு பயந்து கொண்டுதான் நான் வரவில்லை என்று சொல்லுகிறீர்கள். நான் எதற்கு உங்களை பார்த்து பயப்படனும்”.        கீதா.

 

“நீ என் மேல் படம் வரைந்து வைத்தது தப்பு இல்லை அப்படிதானே”.         நகுல்.

“ஆமாம்.உங்களால்தான் அன்னைக்கு எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள்.அது போல் உங்களை பார்த்து சிரிக்க வைக்க நினைத்தேன்.இதில் என்ன தப்பு”.        கீதா.

“அது தப்பு இல்லை பேபி.ஆனால் அது வரைந்தது என்று உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்.மற்றவர்களுக்கு அது எப்படி என் முகத்துக்கும் கழுத்துக்கும் வந்தது என்று கற்பனையில் நினைத்து பார்த்து இருப்பார்களே அது பரவாஇல்லையா”.        நகுல்.

 

“அட கடவுளே………..அவனை அசிங்கபடுத்த வேண்டும்” என்று தான் செய்த ஒரு செயல் தன்னையும் அசிங்க பட வைத்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொண்டவள்.

“ச்ச….. எப்புடி இதை யோசிக்காமல் போனேன்” என்று தன் மூளையை கசக்கி கொண்டு இருக்க தனது கழுத்தில் சூடான மூச்சு காற்று படவும் தன்னிலை திரும்பியவள்.இப்போது நகுலை பயத்தோடு பார்த்தாள்.            “அவர்கள் எப்படி கற்பனை செய்திருப்பார்கள் என்று நான் செய்து காட்டவா” என்று அவளை மேலும் நெருங்கி வர கீதாவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.பயத்தில் கண்களை இறுக மூடி கொண்டாள்.

கீதாவின் கண்களில் இருக்கும் அலைப்புறுதலை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு ஒண்ணும் செய்யாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

வெகு நேரம் ஆகியும் எதுவும் நடக்காமல் இருக்கவும் கண்களை திறந்த கீதாவை பார்த்தவன் “என் லட்டு கோவிச்சுக்குவா.அதனால இந்த முறை உன்னை விடுகிறேன்.இன்னொரு முறை இப்படி லூசுதனமாக செய்யாதே” என்று கூறியவன் வேகமாக அவனது அறையில் இருக்கும் மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டான்.

கீதாவை அவ்வளவு பக்கத்தில் பார்த்துவிட்டு தன்னுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் அவன் அந்த அறைக்கு சென்றான்.

கீதாவிற்குதான் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.அவனது செயல் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றம் தன்னை சூழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.அதே சமயம் அந்த உணர்வு ஏன் என்றும் அவளால் அப்போது யோசிக்க முடியவில்லை.         இது போல் சின்ன சின்ன விளையாட்டுகளின் மூலம் கீதா நகுலனின் மேல் இருக்கும் தனக்கான உரிமையை காட்டி கொண்டு இருந்தாள் அவளையும் அறியாமல்.                              இப்போது எல்லாம் கீதா நகுலனை கவனிக்க ஆரம்பித்தாள்.ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தவன் ஆணழகனாக இப்போதெல்லாம் அவள் கண்களுக்கு தெரிந்தான்.தன் தாய்,தந்தையிடம் நடந்து கொள்ளும் முறை. அவளிடம் காட்டும் அக்கறை.அவளிடம் அவன் செய்யும் சீண்டல்கள் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கணவனாக கீதாவை ஈர்த்தான்.ஆனால் இது காதல்தான் என்பதை அவள் அறிந்து கொள்ள வேண்டிய சமயம் விரைவில் வந்தது.

“தன் தோழியின் திருமணத்திற்கு போக வேண்டும்” என்று கீதா சொல்லி கொண்டு இருந்தாள்.அங்குதான் அவளின் காதலை அறிய போவதை அறியாமல்.

“நகுலன்,நகுலன்”……கீதா.

“ஸ்…..ப்ப்பா…எதுக்கு பேபி இப்படி கத்துற”. நகுலன்.

“நான் உங்களை எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.பேபினு சொல்லாதீங்கனு ஆபிஸ்லயும் எல்லாரும் என்னை சின்ன புள்ள போய் லாலிபாப் வாங்கி சாப்புடு.உன்னை கட்டிக்கிட்ட அந்த மனுசன்தான் பாவம்னு சொல்றாங்க.நீங்களும் பேபினு சொல்றீங்க.எனக்கு இருபத்தி இரண்டு வயசு ஆகுது இனிமே அப்படி கூப்பிடாதீங்க”.

 

“நீ பேபியா இல்லையானு நான் கன்பார்ம் பண்ணி பாத்துட்டுதான் ஒத்துக்குவேன்.நீ சொல்வது எல்லாம் ஒத்து கொள்ள முடியாது”.

“அதுக்காக என்னோட பர்த் சர்ட்டிபிகேட் கொண்டு வந்து காட்டவா?”

“ம்ம்ம்…..கஷ்டம்”.வாய்க்குள் முணுமுணுத்து கொண்டவன். “அது எனக்கு தோணும் போது கன்பார்ம் பண்ணிக்கிறேன்.இப்ப எதுக்கு என் பேர ஏலம் விட்டுகிட்டு இருந்தனு சொல்லு”.

“என்னோட ஆபிஸ்ல ஒர்க் பண்ற பொண்ணுக்கு மேரேஜ்.எல்லாரும் அவங்க பேமியோட வரணும்னு சொல்லியிருக்கா.உங்களையும் கண்டிப்பா கூட்டி வர சொன்னா.சரி நம்ம ரெண்டு பேரும் போலாம்னு பாத்தேன். நீங்க வெளியே எங்கயோ கிளம்புறீங்க போல இருக்கு” என்று மென்று முழுங்கினாள்.

“அய்யோ லட்டு உன் புருஷன்கிட்ட பேச ஏன்டி இப்புடி மென்னு முழுங்கற.எப்பத்தான் என்கிட்ட உரிமையா பேச போறியோ தெரியல என்று மனதுக்குள் பேசி கொண்டவன் அவளிடம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குமா நாளைக்கு வந்துடுவேன் என்றான்”.

“நாம ரெண்டு பேரும் போகலாம்னு நெனச்சேன்.சரி பரவால்ல விடுங்க நான் அவள சமாளிச்சுக்கிறேன்” என்று ஏமாற்ற குரலில் கூறினாள் கீதா.

“ம்….. என்று யோசித்தவன் சரி எப்ப மேரேஜ்”.  நகுலன்.

 

“நாளைக்கு பத்து டூ பன்னிரண்டு” .  கீதா.

“சரி நாளைக்கு சீக்கிரம் மீட்டிங் முடிச்சு நேரா நான் மேரேஜ் ஹால் வந்துவிடுகிறேன்.நீ இங்கிருந்து கிளம்பி அங்கு வந்துவிடு.ஓகேவா”.

அவன் சொல்வதை கேட்ட கீதாவின் முகம் பூவாய் மலர்ந்து தலையாட்டினாள்.”சரி நீங்கள் சொல்வது போல் செய்யலாம்” என்று சென்று விட்டாள்.

“மற்றவர்களுக்காக நான் வர வேண்டும் என்று நினைக்கிறாயா?இல்லை உனக்கே நான் வர வேண்டும் என்று தோன்றுகிறதா?லட்டு” என்று தனக்குள் கேட்டு கொண்டான்.

அடுத்த நாள் பிறந்த நாளுக்கு ஆபிஸ் தோழி வாங்கி தந்த லெஹன்காவை போட்டு கொண்டு கிளம்பிவிட்டாள்.மண்டப வாசலில் நகுலனுக்காக காத்திருந்தாள்.அவள் காத்திருப்பை பொய்யாக்காமல் சரியாக பத்து மணிக்கு மண்டபத்துக்குள் நுழைந்தான்.

வாசலில் தனக்காக காத்திருக்கும் மனைவியை கண்டவனின் உள்ளம் துள்ளியது.அவளின் ஆடையை கவனித்தவன் “ஏய் லட்டு யாருடி உன்ன இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் போட சொன்னா. உன்னை பாத்த எவனாவது கல்யாணம் ஆன பொண்ணுனு சொன்ன ஒத்துக்குவானா படுத்துறடி” என்று தனக்குள் பேசி கொண்டு அவளை நெருங்கி போகலாமா என்று கேட்டான்.                                             வேகமாக அவள் தலையாட்டவும் இருவரும் ஜோடியாக உள்ளே நுழைந்தனர்.இருவரையும் பார்த்த அனைவரும் இவர்களின் ஜோடி பொறுத்தம் பார்த்து அசந்து நின்றனர்.

“நகுலன் நீங்க இங்க உட்காருங்க.நான் போய் என் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன்”.   கீதா.

“சரி.நான் இங்கு இருக்கிறேன் நீ போய் வா”…நகுலன்.

கீதா சென்றவுடன் வந்திருப்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நகுலன் ஒரு குழந்தை தத்தி நடந்து வருவதை பார்த்து கொண்டும் அவனுக்கு நேர் பின்னாடி அமர்ந்திருந்த இளவட்டங்கள் சொல்லும் கிண்டல்களை ரசித்து கொண்டு இருந்தான்.

திடீர் என்று அந்த இளவட்டத்தில் ஒருவன் “டேய் மச்சான்…….என்று கத்தவும் நகுலனே எதற்கு இவன் இப்படி கத்துகிறான்” என்று ஒரு நிமிடம் அதிர்ந்து என்ன சொல்கிறான் என்பதை கவனிக்க ஆரம்பித்தான்.

“டேய் மச்சான் அங்க பாருங்கடா….கல்யாண பொண்ணு பக்கத்துல நிக்கற பிகர செம்மயா இருக்கால்ல,அவளுக்குனே செஞ்ச மாதிரி இருக்கு இந்த டிரெஸ்.அவளோட ஸ்ட்ரெச்சர பாருங்கடா ம்ம்ம்…..எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ” என்று பெரு மூச்சு விட்டான்.அவனை தொடர்ந்து அவன் நண்பர்களும் அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் பெருமூச்சு விடவும்.இவர்கள் யாரை சொல்கிறார்கள் என்று திரும்பி பார்த்த நகுலன் அதிர்ந்தான்.ஏனெனில் அவர்கள் சொன்னது கீதாவை.

நகுலனுக்கு கோபம் திகு திகுவென ஏற அவர்களை பார்த்து திரும்பி அமர்ந்து.அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, “ஹாய் பிரண்ட்ஸ்…….தேங்ஸ் பார் யுவர் காம்ப்லிமண்ட் என்றான்”.வாய்தான் சிரித்ததே தவிர கண்கள் அவர்களை முறைத்து கொண்டு இருந்தது.

 

“யார் சார் நீங்க?எதுக்கு எங்களுக்கு தேங்ஸ் சொல்றீங்க?”

“அது வேற எதுக்கும் இல்ல இப்ப நீங்க வர்ணிச்சீங்களே பொண்ணு அது என்னோட மனைவி.நீங்க கொடுத்து வச்சவன்னு சொன்னது என்னைதான் அதனால இந்த தேங்ஸ்”… நகுலன்.          “சார் சாரி சார் ஏதோ தெரியாம சொல்லிட்டோம்.நீங்க சிஸ்டர்கிட்ட போங்க சார்” என்று அங்கிருந்து அனைவரும் ஜகா வாங்கினர்.

“லூசு பசங்க சைட் அடிக்கவே கல்யாணத்துக்கு வருவாங்க போல இருக்கு.இவங்கள சொல்லி என்ன பிரயோஜனம் அவள சொல்லனும் ஒரு சேரி கட்டிட்டு வந்திருந்த இப்படி பேசுவானுங்களா?”           “நா பாத்து ரசிக்க வேண்டியத எவன் எவனோ பாக்கறான்.இவள,லட்டு…….எங்க இவ” என்று சுற்றும் முற்றும் பார்க்க மாடியில் இருக்கும் அறை நோக்கி அவள் போவதை பார்த்தவன் தானும் அவள் பின்னாடியே சென்றான்.

 

தேங்காய் பழ பையை எடுக்க வந்தவள் கதவை யாரோ தாழ் போடும் சத்தம் கேட்டு யார் என்று வேகமாக திரும்பினாள்.

“நான்தான்….நீ ஏன் இன்று புடவை கட்டவில்லை” என்று கோபம் போல் கேட்டான்.

“அய்யோ …..இவனுக்கு இதே வேளை எப்ப பாரு புடவை கட்டு புடவை கட்டுனு.இப்ப இவன்கிட்ட மாட்டுனோம் அட்வைஸ் பண்ணியே கொன்னுடுவான் பேசாமல் இங்கிருந்து ஓடி விடுவதுதான் கீது உனக்கு நல்லது என்று தனக்குள் பேசி கொண்டவள்” வேகமாக கதவு இருக்கும் பக்கம் போக அவளின் எண்ண ஓட்டத்தை திருதிருவென அவள் விழித்து கொண்டு இருக்கும் போதே கண்டு கொண்ட நகுலன்.அவளின் வெற்றிடையில் கை வைத்து இழுத்து அருகில் நிறுத்தி கொண்டான்.

“நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.நீ எங்கே ஓட பார்க்கிறாய்”.

“இல்லை நளன் அ..அத்தையும் சுதியும் கோ..கோவிலுக்கு போய் இருந்தார்கள்.நா…நான் கிளம்பும் போது யா…யாரும் இல்லை புடவை கட்டிவிட அ….அதுதான் நான் இந்த டி…டிரெஸ் நன்றாக இருக்கிறதே என்று இ..இதை போட்டு வந்தேன் என்று திக்கி திணறினாள்”.

அவளது வெற்றிடையில் அவனது கைகள் அழுந்த பற்றியிருக்க.கீதாவின் உடலில் ஒருவித அனல் பரவ துவங்கியது அவன் உள்ளங்கையின் சூட்டை அவளால் உணர முடிந்தது.இயற்கையாக அவளது பெண்மை விழித்து கொள்ள அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.அவள் விலக முயற்சிப்பதை உணர்ந்த நகுலன் அவன் பிடியை மேலும் இறுக்கினான்.

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன்.அவள் தன்னையும் அறியாமல் அவனை நளன் என்று அழைத்ததை நினைத்து மனதுக்குள் நகைத்து கொண்டு.

“இந்த டிரெஸ் போட்டது பரவா இல்லை அந்த ஷாலையாவது தாவணி போல் போடு”.   நகுலன்.                                                                                                                                                                                                            “அய்யோ நகுலன் இது லெஹன்ஹா…இப்படிதான் போட வேண்டும்.தாவணி போல் போட இது ஒண்ணும் தாவணி இல்லை”.                                                                                                                                               “அப்படிங்களா மேடம் என்று அவளை தன்னை நோக்கி திருப்பியவன்.அவள் கண்களை பார்த்து கொண்டே.உன் அழகை அதன் சொந்தகாரன் மட்டும் பார்க்க வேண்டியதை மற்றவர்களுக்கு காட்சி பொருள் ஆக்குகிறாய்.இப்போது கணவனாக நான் உன்னை பார்த்து சொல்கிறேன் நன்றாக இருக்குமா?இருக்காதா என்று? அது வரை நீ அசையாமல் இருக்க வேண்டும் என்ன புரிந்ததா” என்றவன்.அவளின் இடையில் ஒரு கையைமட்டும் வைத்து கொண்டு மற்றொரு கையால் அவளது ஷாலை எடுத்து தாவணி போல் நன்றாக போட்டு அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துவிட்டு இது நன்றாக தான் இருக்கிறது.

“என்ன இந்த அழகுதான் இப்போது மறைந்திருக்கிறது” என்று அவளது இடையின் இரு பக்கமும் கைகளை வைத்து சொன்னவன் “இதை மாற்ற கூடாது.இங்கிருந்து போகும் வரை நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லி வெளியே சென்று விட்டான்”.                                                 கீதாவின் நிலைதான் பரிதாபமாக இருந்தது.அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் தன்னுடைய பெண்மையை உணர்ந்தாள்.அவனது கூர்மையான பார்வையில் வெட்கத்தை உணர்ந்தாள்.யாரிடமும் கண்ணை பார்த்து பேசும் தன் குணம் அவனிடம் மட்டும் பழிக்காமல்,அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் ஒருவித வெட்கம் சூழ்கிறதே எதனால் என்று யோசித்து கொண்டு இருந்தவளின் காதில் விழுந்தது அந்த பாடல்.

“வாலாட்டும் வேலை எல்லாம் மூட்ட கட்டிக்கோ                                                                                                பூவுனா வண்டு வரும் புரிஞ்சு நடந்துக்கோ                                                                                                பொண்ணுனா வெட்கம் வேணும் தெரிஞ்சு நடந்துக்கோ..                                                             .           அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்.                                                                                                                                 அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்                                                                                           நான் குழந்தையென்று நேற்று நினைத்திருந்தேன்                                                                                         அவன் கண்களிலே என் வயதறிந்தேன்.                                                                                                                    அவன் பார்த்த்துமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.” என்ற பாடலை கேட்டவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

“ந…நளன் நான் உன்னை விரும்புகிறானா.நான் உன்னை காதலிக்கிறானா.இந்த தடுமாற்றத்திற்கு பெயர்தான் காதலா….என்று மகிழ்ந்து போனவள் கீது உனக்கும் காதல் வந்துவிட்டதே.ஜமாய்”….என்று தனக்குள் பேசி கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தவள் மறந்தும் அவன் இருந்த பக்கம் திரும்பவில்லை புதிதாக முலைத்த காதல் தந்த வெட்கத்தால்.                        வெளியே வந்த கீதா தன்னை பார்ப்பாள் என்று பார்த்து கொண்டே இருந்த நகுலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அந்த ஏமாற்றம் ஒரு கட்டத்தில் கோபமாக மாறி அவளை திட்ட காத்திருந்தான்.

இருவரும் திருமணத்தை முடித்து கொண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.கீதா அவனிடம் எதுவும் பேசாமல் தணது முதல் காதலை நினைத்து இனிய கற்பனையில் ஆழ்ந்திருந்தாள்.

அவளாக ஏதாவது பேசுவாள் என்று காத்திருந்த நகுலன்.பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல் கோபமாக பேச ஆரம்பித்தான்.

“என்ன மேடம் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு. நமக்கு டைவர்ஸ் ஆன உடனே உனக்கும் நளனுக்கும் எப்படி திருமணம் நடக்கும் என்று இப்போதே கனவு காண ஆரம்பித்துவிட்டீர்களா?எனக்கு பிரச்சனை இல்லை என் லட்டுக்கு எனக்கு எது விருப்பமோ அதுதான் பிடிக்கும்.நான் சிம்பிளாக மேரேஜ் வைத்து கொள்ளலாம் என்று சொன்னால் கூட ஓகே சொல்லிவிடுவாள்”.     நகுலன்.

அவனின் வார்த்தையில் அடிபட்ட பார்வை பார்த்த கீதா எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி “ஆமாம்” என்று சொல்லிவிட்டு கண்களை இருக மூடி கொண்டாள்.

“ஏதாவது வாய தொறந்து பதில் சொல்றாளா பாரு அங்க ரூம்ல மட்டும் நளன்னு கூப்பிட்டாளே இப்ப வாயா திறந்து அது நீ தாண்டானு சொல்றாளா பாரு நீயா சொல்ற வரைக்கும் நான் இப்படிதான் பேசி உன்னை வெறுப்பேத்துவன்டி” என்று தனக்குள் பேசி கொண்டான்.                      வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலன் நான் போய் என் லட்டுவை பாத்துட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள். இரயில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதிசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி

சுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள். சுதி பேசுவதை கேட்டு கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான். “நம்ம விஷயம் சுதிக்கு

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள். கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர்