Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 32

32 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதியை எப்படி நேருக்கு நேர் பார்ப்பது என வெட்கம் எழ அவன் கண்ணில் சிக்காமல் இருக்கவேண்டுமென சுற்றிக்கொண்டே இருந்தாள் திவி. முன்தினம் அவளது உணர்வுகளை அவள் வார்த்தைகளால் கேட்டதே மனதில் ஓடிக்கொண்டிருக்க, அவளை காண தோன்றினாலும் புது ப்ராஜெக்ட் வேலை அதிகம், கால் என அனைத்தும் இருக்க அவன் ரூமை விட்டு வெளியே வரவேமுடியவில்லை. வேலையிலே மூழ்கியும்விட்டான். அரவிந்த்,அபி, நந்து அனைவரும் வர அதே சமயம் அர்ஜுனின் பெற்றோர்களும் வந்தனர். சொந்த ஊர் அவர்களுக்கும் முன்னமே தெரிந்தவர்கள் என்பதால் அனைவரும் சகஜமாக பேசி இறுதியில் கையோடு அர்ஜுன், அம்மு நிச்சயதார்த்தம் மறுநாள் திருவிழாவின் போதே வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு நந்துவுடன், திவி வெளியே சென்றுவிட கீழே வந்த ஆதி அனைவரிடமும் பேசிவிட்டு நிச்சயம் பற்றி அறிய வாழ்த்துக்களை கூறிவிட்டு திவியை தேடினான். அவள் இல்லை என்றறிந்ததும் மீண்டும் ரூமுக்குள் சென்று வேலையை தொடர்ந்தான். இருந்தும் என்ன இவ கண்ணுளையே படமாட்டேங்கிறா? என்னாச்சு இவளுக்கு. நேத்து பேசினது பத்தி எதுவும் கேட்பேன்னு சிக்காம ஓடறாளா? இல்லை எதேச்சியா நடக்கிதா? என யோசித்து கொண்டே வேலை செய்ய மதிய வேளை தாண்டவும் கால் வர அதை எடுத்து பார்த்தவன் புன்னகைத்துக்கொண்டே அட்டென்ட் செய்து அமைதியாக இருக்க மறுபுறமும் அமைதியாக இருக்க இவன் மெதுவாக சிரிக்க பொறுமையிழந்தவள் “ஹலோ, எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? போன் எடுத்தா பேசமாட்டீங்களா? சொல்லித்தரணுமா? ”

“அதேதான் உனக்கும், போன் பண்ணா பேசமாட்டியா? சொல்லித்தரணுமா? ”

அவளோ “ஒன்னும் தேவையில்ல. போன் பேசவெல்லாம் எனக்கு சொல்லித்தர வேண்டாம். “அவள் தலையை சிலுப்பிக்கொள்ள அதை தன் மனக்கண்ணில் யோசித்து பார்த்தவன் மெலிதாக சிரிக்க

“ம்கூம்..வேற என்ன மேடம்க்கு சொல்லித்தரணும். எதுனாலும் நான் ரெடி.” என்றான்

அவளுக்கோ ஏதோ குறுகுறுவென அமைதியாக உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள். எதிர்புறம் அமைதியாக இருக்க ஆதி “ஹலோ, ஹலோ…லைன்ல இருக்கியா?”

“ம்ம். ..”

“என்ன சைலன்ட் ஆயிட்ட? என்ன சொல்லித்தர சொல்லி கேட்கலாம்னு யோசிக்கிறியா? ”

“ஸ்ஸ்ஸ்ஸ். ..பேச்ச மாத்தாதீங்க. நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேச கூப்பிட்டேன். ”

“இதுவும் முக்கியம் தான் மா. ..”

அவள் “ப்ளீஸ் ஆதி, பீ சீரியஸ்” என சிணுங்கிக்கொண்டே சொல்ல

அவனும் சிரித்துவிட்டு “சரி, சொல்லு. ”

“நேத்து, உங்க பிரண்ட் போலீசா இருக்காங்க. அவங்ககிட்ட பேசி ப்ரொடெக்ஷன் குடுக்க ஏற்பாடு பன்றேன்னு சொன்னிங்கள்ல? பேசினீங்களா? ”

“இல்லை, கொஞ்சம் வேலை. …” என முடிப்பதற்குள்

“தெரியுமே, சொலிர்க்கமாட்டீங்கனு… நீங்க நான் சொன்னதை நம்பவே இல்லேல்ல? என் மேல ப்ரோமிஸ். நான் சொன்னது உண்மை. …ப்ளீஸ் அவங்ககிட்ட பேசுங்க….” என அவள் கெஞ்ச

“ஏய். …என்ன இது, நான் நம்பலேனு எப்போ சொன்னேன். அவனுக்கு மோர்னிங் கொஞ்சம் கேஸ் அது இதுனு ஹெக்ட்டிக்கா இருக்கும். எனக்கும் வேலை. சோ மதியம் சொல்லலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட நினச்சேன். நீ கூப்பிட்டு பேசிட்டிருக்க…”

“ம்ம். ..உண்மையா சொல்லிடுவிங்க தானே? ”

“கண்டிப்பா… சொல்லிட்டு உனக்கு இன்போர்ம் பண்றேன்… ஆனா நீ இனிமேல் இந்த மாதிரி எல்லாம் உன் மேல ப்ரோமிஸ் பண்ணாத. ”

“ஏன்? ”

“ம்ம்ம். … நீ வாய தொறந்தாலே பொய் தாறுமாறா வரும். இதுல சும்மா ப்ரோமிஸ் வேற பண்ணி பட்டுனு ஏதாவது ஆயிடிச்சுனா? யாரு பதில் சொல்றது? ”

“போங்க ஆதி, அது சும்மா சொல்றதுதான். மத்தபடி ப்ரோமிஸ்னா நான் அத மீர மாட்டேன். சாமி அதுக்கு அகைன்ஸ்டா ஆசீர்வாதம் பண்ணிடுவாங்கலாம்..சோ ப்ரோமிஸ்ஸே பண்ணமாட்டேன். பண்ணா கரெக்டா இருப்பேன். அதுவும் உங்ககிட்ட அது 200 % கரெக்டா காப்பாத்துவேன்.”

“ஹாஹாஹா. …சரி எங்க இருக்க? ”

“நான் என் பாய் பிரெண்டோட வெளில வந்தேன். இரண்டு பேரும் ஊரு சுத்திட்டு இருக்கோம். ”

அவனுக்கு மெலிதாக கோபம் வர “எதுல விளையாடறதுனே இல்ல உனக்கு. ஒழுங்கா பதில் சொல்லு”

“ஆதி, உண்மையாத்தான். உங்ககிட்ட விளையாட்டுக்கு கூட பொய் சொல்லமாட்டேனு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன். ‘சோ நான் கூறுவது உண்மை உண்மை. ”

அவனும் “ஒழுங்கா உளறாம கிளம்பி வீட்டுக்கு வா. உன்ன பாக்கணும்…” அவனுக்கு சந்தேகம் இல்லை என்றாலும் அவளை பார்க்கும் ஆவலில் கேட்டான்.

“முடியாது. என் பாய் பிரண்டோட தான் இன்னைக்கும் புல்லா இருக்கபோறேன். வேற யாருக்கும் அப்பொய்ன்ட்மென்ட் இல்லப்பா. அவன் பேச்ச மீறி வந்தேன்னு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான். “என சாது போல சொல்ல

“எவன் டி அது, எனக்கு மேல கோபம் வருமா …பாத்திடலாம். நீ இப்போ வர….இல்ல அங்க வந்து அவனை புடிச்சு கை கால ஒடச்சு உன்ன கூட்டிட்டு ….”

“ஐயோ ஆதி போதும். அது நம்ம நந்து”

அவனும் சிரித்துவிட்டு “ம்ம்ம். ..அவனெல்லாம் ஒரு ஆளா? அவன் சொல்றதெலம்கேட்டுகிட்டு, நீ கிளம்பி வா …”

“ஏன் ஏன் ஏன்?. ..நந்து தான் என் பாய் பிரண்ட்… அவனுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அவன்தான் என் ஆளு. ”

“அப்டியே அறைஞ்சேன்னா தெரியும். என்கிட்டேயே உன் ஆளு, பாய் பிரண்ட்னு இன்னொருத்தன சொல்லிறியா? எனைவிட உன்கிட்ட வேற யாராவது அதிகம் உரிமை இருக்குனு வந்துடுவாங்களா? தைரியம் இருந்தா வர சொல்லு பாக்கலாம். ஸீ, சீறிசாவோ, விளையாட்டோ, பெரியவங்க, சின்னவங்கனு எல்லாம் இல்ல. இன்னொரு தடவ விளையாட்டுக்கு கூட உன்ன இன்னோருத்தன்கூட சேத்தி வெச்சு பேசுன, பல்லை தட்டிடுவேன். புரிஞ்சுதா? ”

“ம்ம்…”

“என ம்ம் … நார்மலா இரு. ..உடனே சைலெண்டா எல்லாம் ஆகாத. சரி, கிளம்பி வீட்டுக்கு வா. ”

“சோ, சாரி. .. அது மட்டும் நடக்காது. நான் ஈவினிங் தான் வருவேன் ..நாங்க சுத்திபாக்கணும் ..டாட்டா …” என அழைப்பை துண்டித்தாள்.

“ராட்சஷி…பாக்கணும்னு ஆசையா கூப்பிட்டா இப்டி பண்ராளே..என்ன விட அவளுக்கு ஊர் சுத்தறது முக்கியமா? வரட்டும் கட்டி போடறேன். இல்லை பேசவேமாட்டேன் ” என சிறுபிள்ளை போல அவன் மனது கோபமுற்றது…

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: