Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 30

30 – மனதை மாற்றிவிட்டாய்
ஆதியிடம் வந்த மதியும், அர்ஜுனும் “ஏன் டா, அம்மாகிட்ட கத்திருக்க…. எனக்கு வேற மெஸேஜில திட்டி அனுப்பிச்சிருக்க. ஆனா அவ வந்ததும் ஒன்னுமே சொல்லாம அனுப்பிச்சிட்ட?”

ஆதி சிரித்துக்கொண்டே “டேய் அவ ஆத்துக்கு போயிருக்கான்னு தெரிஞ்சதுமே எப்படியும் அவ இந்தமாதிரி தான் ஏதாவது பண்ணுவான்னு தெரியும்..எதுக்கும் இன்னும் போகாட்டி சொல்லிவெப்போம்னு தான் உனக்கு மெஸேஜ் பண்ணேன். பட் நீ வீட்டுக்கு பக்கத்துல வந்திட்டோம்னு சொன்னதும் இப்படித்தான் இருக்கும்னு என் மைண்ட ப்ரீப்பர் பண்ணிட்டேன்.

பொதுவா எதுக்குடா திட்டுவாங்க. அடுத்த தடவ அத பண்ணும்போது அந்த விஷயம் ஞாபகம் இருக்கனும். அத மனசுல வெச்சுகிட்டு கரெக்ட்டா இருக்கணும்னு தான். ஆனா அவ தெளிவா முழுசா நினையாம பாத்து பாத்து பாதியா நினைஞ்சிருக்கா. அதுக்கு தான் அவ்வளோ நீளமான எக்ஸ்ப்ளனேஷன் வேற குடுக்கறா. மனசுக்கு பிடிச்சதை ஆசைப்பட்ட மாதிரி செஞ்சுட்டா. முழுசா நினையாம இருக்கும்போதே தெரியுதே அவ எப்படியும் திட்டுவாங்கனு யோசிச்சு யோசிச்சு தான் எல்லாம் பண்ணிருப்பா. அவ மனசுல இந்த விஷயம் இருந்திருக்கு. அவ ஆசைக்காக கொஞ்சம், நமக்காக கொஞ்சமெனு இப்டி வந்து நிக்கறா. என்ன சொல்ல சொல்ற. இப்போ திட்டுனாலும் அவ ஆசைப்பட்டது கிடைச்ச சந்தோசத்தை விட கத்துனாத நினச்சு சங்கடமா தான் போவா. அதான் எதுவும் சொல்லாம விட்டுட்டேன். அவளே திட்டுவாங்கனு எதிர்பார்த்து திட்டாம விட்டதால மேடம் நெக்ஸ்ட் டைம் இத பண்ணமாட்டா. கொஞ்சம் கில்ட்டியா பீல் பண்ணுவா, யோசிப்பா … திட்டிட்டா, அதான் திட்டுவாங்கிட்டோம்லனு அந்த விஷயத்தியும் அப்டியே விட்ருவா…” என விளக்கம் குடுக்க

மதி “இருந்தாலும் உடம்பு சரி இல்லாம. …” என இழுக்க

ஆதி “விடுங்க மா டேப்லெட் குடுத்துக்கலாம். இன்னும் சொன்னா அவளுக்கு பிடிச்சதை செய்யவிட்டுட்டாலே போதும் அவ உடம்பு சரிலேங்கிறத நாம தான் ஞாபகப்படுத்தனும். அந்த மாதிரி அவ விளையாடிட்டு சுத்துவா. ” என்றதும் அவரும் தெளிவடைந்து

“எல்லாத்தையும் நீயே பாத்துக்கற… ரொம்ப பெருமையா இருக்கு ராஜா… அவ கூட வாழாமலே அவளை இவ்வளோ புரிஞ்சு வெச்சுகிட்டு அவளுக்காக யோசிக்கற….எனக்கு சீக்கிரம் உங்க கல்யாணத்த பாக்கணும்னு தோணுதுடா. சீக்கிரம் அவகிட்ட பேசி ஒரு முடிவ சொல்லு.” என நகர்ந்துவிட

அவன் தோளை தட்டிய அர்ஜுன் “எப்போப்பாரு சண்டை தானேடா போடற.. எனக்கு தெரியாம ஏதாவது அவகிட்ட தனியா பேசுறியா. இப்டி அவளை பத்தி ரீசெர்ச்சே பன்னிருக்க? ”

“அதெலாம் அப்படித்தான் டா மச்சான், மனசுக்குள்ள ரொம்ப ஆழமா இருக்காளே. சீக்கிரம் புரிஞ்சுக்கிட்டா, அவளுக்கும் புரியவெச்சாதானே நான் அடுத்த ஸ்டெப்க்கு போகமுடியும். அதான் அவளோட எல்லா மூவ்மெண்ட்ஸும் அனலைஸ் பண்ணிட்டேன். ” என்றான்.
மாலையில் சிற்றுண்டி உண்டு விட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். திவியை காணாமல் எங்கே என கேட்க எங்காவது இங்க தான் சுத்திட்டு இருப்பா. திரும்ப வயலை பாக்கறேன்னு ஏதாவது போயிருப்பா என அனைவரும் சாதாரணமாக இருக்க ஆதியும் சரி என்றவன் 6 மணிக்கு மேல் ஆகியும் அவள் காணவில்லை எனவும் ராமைய்யாவிடம் கேட்க அவர் தெரியல தம்பி. வழி தெரியாம எங்காவது போய்ட்டாளா? என பதற ஆதி “அடடா, ராமைய்யா சும்மா கேட்டேன். அம்மு, அனு யார்கிட்டேயாவது சொல்லிட்டு போயிருப்பா. அவதான் ஒரு இடத்துல இருக்கமாட்டாளே? உங்க பேத்தி வந்துடுவா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. என்று சிரித்துவிட்டு உள்ளே வந்து அர்ஜுன், அம்முவிடம் கேட்க அவள் தன்னிடம் எதுவும் கூறவில்லை என கூற எங்க போயிருப்பா? என யோசிக்க, அனு, சுபி ஏனோ பதட்டமாக இருப்பது போல தோன்ற ஆதி அவர்களிடம் விசாரிக்க,

சுபி “மாமா சரியா அதுதானான்னு தெரில. ஆனா விளையாட்டுக்கு பேசுனத திவிக்கா சீரியஸா எடுத்துக்கிட்டு இருப்பங்களோனு டவுட்…” என இழுக்க ஒன்றும் புரியாமல் மீதி மூவரும் பார்த்துக்கொள்ள ஆதி, “மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.” என்றதும் அனு காலையில் தங்களுக்கு தோப்பில் நடந்த உரையாடலை கூற ஆதி கத்த தொடங்கிவிட்டான்.

“எது, எதுல விளையாட்றதுன்னு இல்லையா? அவள பத்தி தெரியும்ல…லூசு மாதிரி வீம்புக்கு, விளையாட்டுக்குனு ஏதாவது பண்ணுவா? அதுவும் இருட்டற நேரத்துல. பாம்பு, வருதோ, பேய் வருதோ இல்ல, எங்கேயாவது பொறுக்கி பசங்க கேங்கா இருப்பாங்க…. திருவிழா வேற வரப்போகுது. வெடி வெக்க புது ஆளுங்க வரேன்னு எவ்வளோ இருக்கு… அதுவும் தோப்புக்குள்ள தனியா? யோசிக்க மாட்டிங்களா? நேத்தே இருட்டிருச்சுன்னு தானே அப்போவே கூட்டிட்டு போகாம ராமைய்யா இன்னைக்கு காலைல போக சொன்னாரு.. அவளுக்கு இருக்கு. ” என்றவன் “அர்ஜுன், நான் போயி பாத்து கூட்டிட்டு வரேன்.”

“நானும் வரேண்டா. ”

“இல்லடா, வீட்டுல யாருக்கும் சொல்லவேண்டாம். பயந்துடுவாங்க. நீ இங்க இரு. நான் போறேன்.” என்று அவன் கிளம்பிவிட்டான்.

திவி மாலையில் கிளம்பி ஜஸ்ட் சும்மா வெளில நடந்திட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தவ, முதலில் வயலை சுற்றிக்கொண்டு தோப்புக்கு செல்ல மழை வரும் போல இருந்ததாலோ என்னவோ விரைவில் இருட்டியும் விட்டது. சிறிது தூரம் வந்தவள் தனக்குள் “அம்மாடியோ, உண்மையாவே யாரும் இல்லாம இருக்கும் போது கொஞ்சம் திகிலாதான் இருக்கு, இருந்தாலும் பயப்படக்கூடாது திவி. யு ஆர் பிரேவ் கேர்ள். ” என சொல்லிக்கொண்டே உள்ளே செல்ல, ஏதோ பேச்சுக்குரல் கேட்டு நின்றுவிட்டாள். அதுவும் கொலை பண்ணனும்னு கேட்டதால். யாரோ இருவர் அந்த தோப்புக்குள் நடந்துகொண்டே பேசி சென்றனர். இவளும் கொலையா? என்ன பேசுறாங்க? யாரு அது என பார்க்க அவர்களை பின் தொடர்ந்தாள் அவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டே

அவனுள் ஒருவனுக்கு கால் வர அதை அட்டென்ட் செய்து “ஹலோ, ஆமா நான்தான் பேசுறேன்.

பையன், பெரியவரு மாணிக்கம் இருக்கார்ல அவுக பேரன். அதான் இத்தனை வருஷம் வெளில இருந்திட்டு வந்தான்ல. அவனே தான். ஆள் பாக்கவா? நல்லா ஆறடில உசரமா, அதுக்கேத்த நல்ல உடம்போட பாக்க ஹீரோ மாதிரி இருப்பான். நீ ஆளுங்கள மட்டும் அனுப்பிச்சு வெய். நம்மாளு பையன காட்டுவான். முடிச்சிடலாம். உள்ளூர்ல யாரும் ஒத்துவரமாட்டாங்க. எல்லாரும் தெரிஞ்சவங்க, விசுவாசம்னு சொதப்பிடுவானுங்க. சரி, நான் வெக்கிறேன். சொன்னதை மறந்துடாத. .” என்று கால் கட் செய்ய

அருகில் இருந்தவன் “ஏன் அண்ணே, எதுக்கும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேணுவோமா? ”

“எதுக்கு டா யோசிக்க சொல்ற?”

“இல்ல நம்ம பொண்ணு தான் காதலிக்கறத பத்தி சொல்லிருக்கு. அந்த பையன் பன்றானா? இல்லையானு கேட்டுட்டு ஆமா சொன்னா அப்புறம் போட்ருவோம்.”

“அதெப்படி அவன் ஒரு வார்த்தை கூட சொல்லாம நம்ம பொண்ணு அவ்வளோ தைரியமா நம்மகிட்டேயே சொல்லும். எல்லாம் அவன் குடுக்கற இடம். இத்தனைக்கும் அவன் அதிகம் ஊரு பக்கமே வந்ததில்லை. ஏதோ இங்க படிச்சதால பழக்கமாம். அப்போ இருந்தே எனக்கு பிடிக்கும், வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வெக்க நினைச்சா என் முடிவு வேறமாதிரி இருக்குகிறா. ஓடி கீது போய்ட்டா எனக்கு மானம் முக்கியம். விசாரிச்சு பொறுமையா பாக்கலாம்னாலும் அவன் அதுக்குள்ள சுதாரிச்சு ஊருக்கு போய்ட்டா இவளும் பின்னாடியே போய்ட்டா? இறந்தாலும் கொஞ்ச நாள் அத பத்தின கவலை இருக்கும். அப்புறம் காலப்போக்குல மறக்க வெச்சு வேற கல்யாணம் பண்ணிவெச்சிடலாம். ”

“காலையிலேயே அவங்க வீட்டுல இருந்து அந்த புள்ளைங்க எல்லாரும் தோப்புக்கு வரும் போதே அவனும் வருவான்னு நினச்சேன். முடிஞ்சா அப்போவே ஏதாவது பண்ணிடலாம்னு. கடைசில அவன் வரல. ஆனா கண்டிப்பா திருவிழா முடியறதுக்குள்ள அவனுக்கு பால் தான். ”

“எப்படியோ, நம்ம புள்ள விஷயம் தெரியாமலும் பாத்துக்கணும், நம்ம காட்டுற பையனுக்கு தான் இவ கழுத்த நீட்டனும். அதுக்காகவே அவனை போட்டு தள்ளிடனும் ”

“சரி, இப்போ வா, யாருகிட்டேயும் இத பத்தி பேசிடாத. டென்ஷன் ஆகி முகத்துல காட்டிகொடுத்திடாத. அவனால குடும்பத்துல எவ்ளோ பிரச்னை…முடிஞ்சஅளவுக்கு முன்னாடியே அவனை கொல்ல பாக்கணும். இல்ல திருவிழாவுல கலவரம் பண்ணிவிட்டு அப்படியே கதையை முடிச்சிடலாம். அப்போதான் பலியும் வராது. …” என்ற அறிவுரையுடன் திட்டத்தையும் கூறி அங்கிருந்து நகர்ந்துவிட, அவர்கள் பின்னாடியே வந்தவள் தோப்பின் முடிவில் ஒரு பாழடைந்த மண்டபம் போல இருக்க அத தூணருகில் நின்று உரையாடலை கவனித்தாள்.
இவை அனைத்தையும் கேட்டவள் அசைவற்று அங்கேயே நின்றுவிட்டாள்.

திவியை தேடிக்கொண்டே வந்த ஆதி இவ்வளோ தூரம் வந்தும் அவளை காணோமே, வேற எங்கேயும் வழி மாறி போயிருப்பாளோ? என்று திரும்பியவன் எதுக்கும் இன்னும் கொஞ்ச தூரம் தானே. பாத்திட்டே போய்டலாம்னு முன்னோக்கி சென்றான். தூரத்திலே திவி அந்த தூணின் அருகில் நிற்பதை கண்டவன் நேராக அவளிடம் விரைந்து சென்று அவளை தன் புறம் திருப்பி அறைந்துவிட்டான்.

 

 

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: