ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 22

22 – மனதை மாற்றிவிட்டாய்

வண்டியில் செல்லும் போது இருவரும் அமைதியாக செல்ல ஆதி “என்ன பேசமாட்டேங்கிறா? கோபமா இருக்காளோ? பின்ன எத்தனை தடவ சாரி சொன்னா, கொஞ்சமாவது மதிச்சியா? எத்தனை கேள்வி கேட்டிட்டு காலைல இருந்து சுத்தி சுத்தி வந்தா. எனக்காக என் செல்லம் ஸ்வீட் எல்லாம் செஞ்சு குடுத்தா.. ஆனா அதுக்கும் மூஞ்சில அடுச்சமாதிரி பேசிட்டுவந்திட்டு…காலைல அவ செஞ்ச சேட்டைலயே பேசலாம்னு நினச்சவன் இப்போ சுத்தமாக பேசாமல் இருக்க முடியவில்லை….ஆனா அவ இப்போ அமைதியா இருக்காளே…” என அவன் மனம் அவனை குறை சொல்ல

திவி மனதுக்குள் “என்ன பண்ணா பேசுவாரு….சுந்தர்கிட்ட கேட்டதனாலதான் கோபம்னா அவங்ககிட்ட பதில் சொல்லிட்டேன். சாரியும் சொல்லிட்டேன்.. இல்லை இவர்கிட்ட பேசுனது காரணம்னா நேத்துல இருந்து மன்னிப்பு தான் கேட்டுட்டு இருக்கேன். அடியும் வாங்கியாச்சு. வம்பிழுத்தும் பாத்தாச்சு. இனி என்ன பண்ணலாம். யோசித்தவள் சரி இனி இது சரிப்படாது. திவி உன் ஸ்டைலிலே இறங்கிடு. டைரக்ட்டா கேட்டுட வேண்டியதுதான்..இல்லை ஆக்ஷன் தான்.” என தனக்குள் கூறிக்கொண்டவள்.

“ஆதி, அவங்கள டிஸ்டர்ப் பன்னேனு சொன்னிங்க அவங்களுக்கு 16 மார்க் க்கு அன்ஸ்சர் குடுத்தமாதிரி விளக்கம் குடுத்திட்டேன். மன்னிப்பும் கேட்டுட்டேன். இனி உங்க அன்பு அத்தை பேமிலிய தொந்தரவு பண்ணமாட்டேன். நேத்து உங்ககிட்ட பேசுனதுக்கு அப்போ இருந்து சாரி சொல்லிட்டேன். இப்போ பேசமுடியுமா, முடியாதா?”

அவள் பேசுவாளா? என குழம்பி எப்படி பேசுவது என நினைத்தவன் முதலில் அவன் பேசவும் கவனிக்க இறுதியில் அவள் சண்டை போடும் பாணியில் மிரட்ட சிரிப்பே வந்துவிட்டது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு அவளை சீண்ட எண்ணி எதுவும் கூறாமல் அவளை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கார் ஓட்ட அவள் பொறுமை போக “நான் யார்கிட்டேயும் இந்த அளவுக்கு கெஞ்சுனதில….என்ன நீங்க ரொம்ப வெறுப்பேத்திருங்க… அப்புறம் பேசவைக்க நான் செய்ற விஷயம் அதோட பின் விளைவுகள் மோசமா இருக்கும்.” என மிரட்ட

“என்ன செய்வ? ”

“நேத்து நைட் நான் எந்த மாதிரி ஏரியால இருந்தேன். அங்க என்கிட்ட வந்து அந்த பேக்கு பேசுனது…. அப்புறம் நீங்க வந்து என்ன திட்டி கூட்டிட்டு வந்திங்க…. இல்ல அடிச்சீங்கன்னு எல்லாமே சொல்லுவேன்.”

“சொல்லு உன்ன தான் திட்டுவாங்க”

“அது தெரியும். இன்னும் முடியல…. நீங்க என்ன அடிச்சிங்க.. நான் சாரி சொல்லியும் கேக்காம எனக்கு புத்திவரணும்னு என்ன பாதி வழில இறக்கிவிட்டுடீங்கன்னு 2 பிட் சேத்தி சொல்லுவேன்.” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு…

எப்போவும் ஆபீஸ் விட்டு வந்தா நான் அத்தைய பாக்க வராம போகமாட்டேன். நேத்து நான் அங்க வரவும் இல்ல. சோ நீங்க என்ன விட்டுட்டு வந்திங்கன்னு சொன்ன அத்தை, மாமா எல்லாரும் நம்புவாங்க. அப்புறம் உங்கள தான் திட்டுவாங்க. அதனால என்கிட்ட ஒழுங்கா பேசுங்க. ..” என அவள் கண்ணடிக்க அவனுக்கு முதலில் அதிர்ச்சி பின் சிரித்துவிட்டான்.

“ஏய் வாலு, பொய் சொல்லி ஏமாத்துவேன்னு என்கிட்டேயே சொல்றியா? அதுவும் என் அம்மா, அப்பாவையே? ” என காதை திருக

அதிலிருந்து தன் காதை காப்பாற்றியவள் “என்ன பண்றது ஆதி, சில நேரம் உண்மை எப்படி கசக்கிதோ, அந்த மாதிரி பொய் ஹெல்ப் பண்ணி அந்த சூழ்நிலையை ஸ்வீட் ஆக்கிடும்.

பொய்மையும் வாய்மையிடத்த ன்னு வள்ளுவர் தாத்தாவே சொல்லிருக்காரே. பெரியவங்க பேச்ச மதிக்கணும்ல” என கேட்க

“ம்ம். ….நீ பண்ற பிராடு வேலைக்கு அவரை ஹெல்ப்புக்கு வேற கூப்பிட்டுக்கோ. இருந்தாலும் பொய் சொல்லி நம்பறவங்கள ஏமாத்துறது தப்புதானே? ”

“முழுசா அப்படி சொல்ல முடியாது ஆதி, நீங்களே யோசிங்க…. நான் உங்ககிட்ட பேசுனத்துக்கு மன்னிப்பு கேட்டுட்டேன், பேச சொல்லி கெஞ்சறேன்… நீங்க அத இக்னோர் பண்றீங்க… மதி அத்தைக்கு உங்களையும் பிடிக்கும், என்னையும் பிடிக்கும். நாம அவங்க முன்னாடி சண்டை போட்டுக்கிட்டு, மூஞ்ச திருப்பிகிட்டு இருந்தாமட்டும் அவங்க அத சந்தோஷமாவா வேடிக்கை பாப்பாங்க. இன்னும் சொல்ல போனா என்கிட்ட கேட்டா ஆதி பேசுனா நான் பேசுறேன்னு சொல்லுவேன், உங்ககிட்ட கேட்டா எனக்கு புடிக்கலமா கம்பெல் பண்ணாதீங்க ன்னு சொல்லிடுவீங்க. அவங்க யாருக்குனு சப்போர்ட் பண்ணுவாங்க. அப்போதா அதிகமா சங்கடப்படுவாங்க….ஆனா இப்போ நான் இப்படி பிளாக் மெய்ல் பண்ணி பேச வெட்ச்சா என்கிட்ட தனியா சண்டை போட்டு நீங்க பேசுனாலும் அவங்க முன்னாடி கஷ்டப்படுத்த கூடாதுன்னாவது காட்டிக்காம நார்மலா இருப்பீங்க தானே? ” என அவள் கூற அவனுக்கும் கரெக்ட் தான் அவங்களுக்காகவாது பேசுவேன்ல.. என எண்ணி அவளை பார்க்க

அவளோ “பொறுமையா சொன்னா யாரு கேக்குறா. …பொய் சொன்னாதான் கேக்குறாங்க…” என

ஆதி சிரித்துவிட்டு “சரி, சரி… எல்லாம் சரிதான்… எப்படியோ பொய்யோ உண்மையோ எல்லாரையும் கரெக்ட் பண்ண தெரிஞ்சிருக்க….ஆனா இப்படி பொய் சொல்லி என்னைக்காவது உண்மைய சொல்லும் போது நம்பாம போய்டப்போறாங்க.” என அவன் கூற

அவளும் சிரித்துவிட்டு “கண்டிப்பா, அப்படி நடந்தா அதையும் ஏத்துக்கணும் தான். ஆனா வரும்போது பாத்துக்கலாம். ” என அவள் சாதாரணமாக கூற

“அது சரி, நேத்து நடந்தத பத்தி எல்லாமே சொன்னா அம்மா அப்பா இவங்க வேணா உனக்காக பாப்பாங்க. ஆனா ஈஸ்வரி அத்தை எல்லாரும் இன்னும் மோசமாதான் பேசுவாங்க அது உனக்கு தோணலையா? ”

“பேசிட்டு போகட்டும், அத பத்தி எனக்கென்ன… என்ன நம்புற, என் மேல அக்கறை இருக்கறவங்க என்ன பத்தி தப்பா நினைச்சாதான் நான் பீல் பண்ணனும். ஏன் எல்லாருக்கும் அந்த அளவுக்கு இம்போர்ட்டன்ஸ் குடுக்கணும்… எல்லாத்துக்கும் மேல அவங்க ஒருவேளை அப்படி தப்பா பேசுனாலும், மதி அத்தைக்கு என்ன பிடிக்கும் விட்டுகுடுக்கமாட்டாங்க. ..சோ நீங்களும் அடலீஸ்ட் என்னை திட்டிகிட்டேவாது பேசிடுவீங்கள்ள. ஒரு தடவையாவது திட்டி சண்டைபோட வெச்சிட்டா அப்புறம் எப்படியும் பேசவெச்சுருவேன். ..?”

அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது ‘என்ன சொல்றா இவ, இவகிட்ட நான் பேசறதுக்கு இவளோட தகுதியவே குறைச்சுக்கறேன்றாளே..என்ன பொண்ணு இவ, என்ன மாதிரி அன்பு இது…?’ என நினைத்தவன் அவளிடம் “அதென்ன அப்படி ஒரு நம்பிக்க? சண்டை போட்டுட்டா பேசிடுவாங்கன்னு?”

அவள் சிரித்துக்கொண்டே கூறினாள் “பொதுவா பாதி பிரச்னை மனசுல ஒன்னு வெச்சுகிட்டு வெளில ஒன்னு பேசுறதால தான் வருது. சண்டை போடும்போது மனசு நம்ம கண்ட்ரோல்ல இருக்காது, அது நினைக்கிறத பேசிடும். கத்தி, திட்டி சண்டை போட்டிடும். ஆனா சில நேரம் அத யாரும் தப்புனு சொல்லாட்டியும் அப்புறம் நினச்சு பீல் பண்ணும், அவசரப்பட்டுட்டோமோன்னு…சோ பிரச்சனை நாம புரிஞ்சுக்கறதுல அந்த நேரத்துல ப்ரூர்ப் (proof) பண்றதுல இல்ல. அவசரப்பட்டு ரியாக்ட் பண்ணி பேசுறதால தான். அவங்கள பொறுமையா யோசிக்கவிடாம நான் தப்பு பண்ணலேனு நிரூபிக்க பிரஷர் பண்றதால அவங்க யோசிக்காம கத்தீட்ரங்க… அப்புறம் கத்திட்டோமேன்னு ஈகோ ல கொஞ்சம் கண்டுக்காம விட்டறது… இதுதானே கரணம்…

எனக்கு அவங்க என்ன நினைக்கறாங்கனு தெரிஞ்சுட்டா போதும் . முக்கியமா நான் யார்கிட்டேயும் எதையும் எதிர்பாக்கிறதில்ல. சோ எனக்கு ஏமாற்றம், கோபம்னு எந்த விஷயம்னாலும் உடனே ரியாக்ட் பண்ணமாட்டேன். அதனால மத்தவங்க என்ன திட்டியே சொன்னாலும் அவங்களுக்கு அத எப்படி புரியவெக்கலாம்னு ஒரு நிமிஷம் பொறுமையா யோசிச்சாலே போதும். இப்போ வரைக்கும் அந்த கண்ட்ரோல்ல நான் இழக்கல. அந்த நம்பிக்கை தான். ” என அவள் கூற

அவள் தலையை கலைத்துவிட்டு “சூப்பர்டா, வெறும் மண்டை மட்டும் தான் பெருசு. ..உள்ள ஒன்னுமே இல்லேனு நினச்சேன். இவளோ யோசிப்பியா? வெரி குட். நீ சொல்றது உண்மைதா, ஆனா என்ன பண்ணறது மனசுக்கு நெருக்கமானவங்கனு நினைச்சிட்டா அந்த உரிமையும், எதிர்ப்பார்ப்பும் தானா வந்திடுதே…பாக்கலாம் மேடம் அப்படி யார்கிட்டேயாவது எதிர்பார்த்து அது நடக்கலேனா அப்போவும் இப்படி ரியாக்ட் பண்ணாம ப்ரொஆக்ட்டிவ்வா எல்லாத்தையும் ஹாண்டில் பண்றியான்னு…”

அவள் வாயை பிதுக்கிவிட்டு “அப்படி யாராவது வந்தா பாக்கலாம், இப்போ சொல்லுங்க என்கிட்ட எப்போவும் போல பேசுவீங்க தானே? ” என அவள் ஆரம்பித்தில் வந்து நிற்க

ஆதி ஆமாம் என்பது போல தலைஅசைத்துவிட்டு “ஆனா நான் பேசலேன்னா இவ்ளோ பீல் பண்ணுவியா திவி?” என கேட்டு அவன் ஆபீஸ் முன் காரை நிறுத்தினான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, சண்டை போட ஆளில்லாம ரொம்ப போர் அடிக்கும்” என கண்ணடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டாள்.

அவள் பதிலையும் செய்கையும் பார்த்து வாய் விட்டு சிரித்தவன் “லூசு உன்ன…. வீட்டுக்கு வா….” என கூறிவிட்டு அவளை பற்றிய எண்ணத்திலே வண்டியை கிளம்பினான்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தையல் இன்ச் டேப்பை உபயோகித்து அளவெடுக்கும் முறை – 8தையல் இன்ச் டேப்பை உபயோகித்து அளவெடுக்கும் முறை – 8

Premium WordPress Themes DownloadFree Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload WordPress Themes Freefree download udemy paid coursedownload intex firmwareDownload WordPress Themes Freefree download udemy course

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21

“நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்… ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர

உள்ளம் குழையுதடி கிளியே – 13உள்ளம் குழையுதடி கிளியே – 13

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சிலர் பின்னணிப் பாடல் கேட்கவில்லை என்று சொன்னார்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், குரோம், பையர்பாக்ஸ் எல்லாவற்றிலும் டெஸ்ட் செய்துவிட்டேன். வேலைசெய்கிறது. பிரச்சனை இருந்தால் கமெண்ட்ஸில் தெரிவியுங்கள். இனி இன்றைய