ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 20

20 – மனதை மாற்றிவிட்டாய்

திவி சாலையின் ஓரமாக எடுப்பான ஜொலிக்கும் சுடியில் மல்லிகை பூ சூடி நின்றிருக்க அவள் நின்ற இடத்திற்க்கு எதிர் வீட்டில் சன்னல் வழியே தெரிந்த பிள்ளைகளின் சண்டைகளை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அவள் கூறிய தெருவுக்குள் வந்தவன் இறங்கி அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது அவனருகில் முழு அலங்காரத்துடன் வந்த ஒரு பெண் நிற்க அதை கவனிக்காமல் “இங்க ஒரு பொண்ணு…” என ஆரம்பிக்க வந்தவளோ ஒரு மாதிரியாக சிரித்துவிட்டு “நீ எவ்வளோ குடுப்பியோ குடு…. நான் இம்புட்டு தான் வேணும்னு சண்டையெல்லாம் போடமாட்டேன். உன்கூட வரவா? இல்ல இங்க எங்க இடத்துக்கு நான் உன்ன கூட்டிட்டு போகவா? உனக்கு எப்படி வசதி என நெருங்க ” சட்டென்று நகர்ந்தவன் “ச்சீச்சீய்..” என்றான்.

அதை கேட்டவள் “ஏய் என்ன ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போட்ற? நீயும் ஒரு பொண்ணு தேடித்தானே வந்திருக்க? இந்த ஏரியாவுல இந்த நேரத்துல ஒரு பொண்ணு தேடி வந்தேன்னா வேற எதுக்காகவாம்? சீ ன்னு சொல்றவன் இங்க எதுக்கு வரணும்” என்று கூற இவன் வண்டியை கிளப்பி கொண்டு செல்ல “இவ எங்க போனா? இந்த மாதிரி இடத்துல வந்து மாட்டிருக்காளே” என கோபமும், தவிப்புமாக இருக்க அவன் கண்ணில் திவி படவும் அவளிடம் வண்டியை செலுத்தினான்.

திவியிடம் வந்த ஒருவன் “ஹாய்” என்றான்.

இவளும் திரும்பி பார்த்துவிட்டு “ஹாய்” என்றாள்

அவன் “நீங்க இதுக்கு புதுசா? ”

திவி ஏரியாக்கு புதுசா என வினவுகிறான் போல என்று நினைத்து “ஆமாங்க, இதுதான் பஸ்ட் டைம்”

அவன் “பாத்தாலே தெரியுது, ரொம்ப நேரமா இங்கேயே நிக்கறீங்க… இங்க பக்கத்துல தான் என் வீடு… நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வாங்களேன்.”

திவி “இல்லைங்க பரவால்ல.” என மறுக்க

அவன் “இல்லாட்டி நீங்க எங்கேன்னு சொல்லுங்க நான் வரேன்.”

திவி தனியா நிக்கறோம்னு ஹெல்ப் பண்ண கேக்குறாங்க போல என நினைத்து “இருக்கட்டும்ங்க, தேங்க்ஸ்… கூட்டிட்டு போக ஆள் வருவாங்க..” என்றதும் அவன் “ஓ. …” என ஆதியின் கார் புயல் வேகத்தில் வந்து நிற்கவும் திரும்பியவள் ஆச்சரியமாக விழித்து “நீங்களா?” என வண்டியை விட்டு இறங்கியவன் அவளிடம் வந்து “வண்டில ஏறு” என்றான்.

இவள் திரும்பி “தேங்க்ஸ் சார், பை” என்றுவிட்டு சென்று வண்டியில் ஏறினாள். அவனும் “என்ஜோய் மேடம்” என்றான்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்ட அந்த புதியவன் “அந்த பொண்ணு ஆள் வராங்கனு சொன்னதும் ஏதோ பைக் ல பையன் வருவான்னு நினச்சேன்பா, இப்படி கார்ல அதுவும் இப்படி ஒருத்தன் வரும் போது சொல்லவா வேணும்…. அதுதான் நான் கூப்பிட்டும் வரலை போல…” என

ஆதி சினத்தோடு “அவளை பத்தி தப்பா பேசாத… அவ என் வைப்.”

அந்த புதியவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ஆனா அந்த பொண்ணே வேற ஒருத்தன எதிர்பாத்தா போல.. உன்ன பாத்ததும் ஆச்சரியமா நீங்களா ன்னு தானே கேட்டா.” என சிரிக்க அவனை அடிக்க நெருங்க திவி “ஆதி போலாமா? ” என வண்டியில் இருந்து வினவ அவனை விடுத்து வண்டியை கிளம்பினான்.

வண்டியில் செல்லும் போது அவன் ஏதோ கோபமாக இருக்கிறான் என அமைதியாயக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த திவியிடம் “யாரவன்?” என்றான் ஆதி.

திவி “தெரியாது, ஏதோ தனியா நிக்கறேன்னு வந்து கூட கொஞ்ச நேரம் நின்னு பேசிடிருந்தாங்க.”

“என்ன பேசுனான்?”

அவள் உரையாடலை கூற கொலைவெறியுடன் திரும்பினான் வண்டியை ஓரமாக நிறுத்தியவன் “இல்ல, உனக்கு கொஞ்சம்கூட அறிவே இல்லையா? யாரு பேசுனாலும் பேசிடுவியா? யோசிக்கமாட்டேயா?”

“ஏன், இப்போ அதுனால என்னாச்சு…இப்படி எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்கறதால தான் யாரும் அடுத்தவங்களை கண்டுக்கறதில..பிரச்னை வந்தாக்கூட ஒதுங்கி போய்டுறாங்க… தனியா ஒரு பொண்ணு நிக்கறாளேனு வந்து ஏரியாவுக்கு புதுசா, பாவம் ரொம்ப நேரம் நிக்கிறியே, கூட வரவா, இல்லைவீட்டுக்கு வேணா வான்னு கூப்பிட்டாங்க, நீங்க வரவரைக்கும் கூட துணைக்கு நின்னாங்க அவங்ககிட்ட ஒரு வார்த்தை பேசுனது பதில் சொன்னது கூட தப்பா?” என கத்த

“இடியட், அவன் உன்ன தப்பான பொண்ணுனு தான் நினைச்சிருக்கான். உன்கிட்ட எல்லாமே தப்பா தான் கேட்டிருக்கான். இது எந்த மாதிரி ஏரியா? இங்க யாரு எல்லாம் சுத்தி இருக்காங்கனு பாத்தியா?” என ஆதி கத்த அவளோ அவன் கூறிய முதல் வரியில் நிற்க இப்பொது மீண்டும் அந்த புதியவன் திவியுடன் பேசிய உரையாடலை நினைத்தவள் உடல் நடுங்க மிகவும் கோபமானாள்.. மனதினுள் “ச்ச, என்னமாதிரி அவன் பேசிருக்கான்.. அதுக்கு நான் வேற தப்பா புரிஞ்சிட்டு பதில் சொன்னது நினச்சா ஐயோ என்று இருந்தது.அதுவும் அவன் கிளம்பும்போது என்ஜோய் என கூறியது அனைத்தும் நினைக்க இப்போது ஆதியின் கோபம் புரிந்தது. அமைதியாக அவள் இருக்க

ஆதி “கேக்கிறேன்ல… சுத்தி என்ன நடக்கிது, யாரு எல்லாம் நிக்கறாங்கனு கூட பாக்கலையா?”

இல்லை என்பது போல அவள் தலையாட்ட

“வேற என்ன பண்ணிட்டு இருந்த, எங்க வேடிக்கை பாத்திட்டு இருந்த?”

“அங்க ஒரு வீட்ல குட்டிஸ் விளையாடிட்டு இருந்தாங்க..சன்னல் வழியா வேடிக்கை பாத்திட்டு இருந்தேன்.” என அவள் பாவமாக கூற ஆதிக்கு தான் இவளை என்ன செய்வது என்று இருந்தது.

காரை ஸ்டார்ட் செய்தவன் “எதுக்கு மல்லிகை பூ வெச்சிருக்க, இங்க ஏன் வந்த?”

“பிரண்ட் மேரேஜ் பங்கஷன்”

“தெரியாத இடத்துக்கு இப்படி தான் வருவியா?”

“:இல்ல பிரண்ட் கூட வந்திருந்தா..திடிர்னு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லேனு அப்போவே கிளம்பிட்டா.”

“சரி, பஸ் ரூட் எதாவது கேட்டு வெச்சுருக்கலாம்ல ”

“கேட்டு தான் வெச்சுஇருந்தேன்… பட் இன்னைக்கு பஸ் பிரேக்டௌன்.. சோ கடைசி பஸ் வரல” என அவளும் அனைத்திற்கும் பதில் கூற

அவனும் விடாமல் “ஏன் கடைசி பஸ் வரைக்கும்..கூட யாரும் இலேனு சொல்லிட்டு முன்னாடியே கிளம்புனா என்ன?”

அவள் மனதில் “ஏதோ அந்த ராஸ்கல் கிட்ட தெரியாம பேசிட்டேன்.. அதுக்காக இந்த ஆதி நான் ஒன்னும் தெரியாத முட்டாள் மாதிரி ட்ரீட் பன்றானே… என்ன இப்போ குறை சொல்லியே ஆகணும் இவனுக்கு..” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருக்க அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…

இரவு நேரம், குளிர்ந்த காற்றோடு பயணம், அருகில் மனம் கவர்ந்த காதலி அவனது மனம் கோபத்தை விடுத்து காதலை நாடியது. அதுவும் அவளது மல்லிகை மனம் இவனுக்கு என்னவோ செய்தது. அவள் ஏதாவது பேசினால் கூட பரவால்ல…. இவ அமைதியா இருந்தா என்னால இவள ரசிக்காம இவகிட்ட நெருங்காம இருக்க முடிலையே.. 2 நிமிடம் அமைதியாக இருந்தவன் “எதுக்கு இவளோ மல்லிகைபூ?” எனவும்

திவியோ கடுப்போடு “அதான் சொன்னேன்ல. பங்க்சன் போயிருந்தேனு.. எனக்கு பூ வெச்சுக்கவும் ரொம்ப புடிக்கும்.. எல்லாத்துக்கும் கேள்வியா கேப்பிங்களா? என்னமோ இவருக்கு தான் எல்லாமே தெரிஞ்ச மாதிரி மத்தவங்கள குறையா சொல்றது… ரொம்ப பொறுப்புன்னு நினைப்பு…”

“ஏன், இல்லேங்கிறீயா? பொறுப்பா உன்ன கூட்டிட்டு போக நான் தானே வந்திருக்கேன்”

“உங்கள யாரு வர சொன்னது?… நான்தான் சுந்தருக்கு கூப்ட்டேன்ல..” எனவும் அவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேற

“அதுதான் நானும் கேக்கறேன்.. ஏன் அவனுக்கு கூப்பிட்ட? அவன் அம்மாதான் எல்லாமே குறையா சொல்லுவாங்கனு தெரியும்ல. உனக்கு ஏதாவது ப்ரோப்லேம்ன்னா என்னை கூப்பிட வேண்டியதுதானே, இல்லை அர்ஜுனுக்கு கூப்ட்டிருக்கலாம். அடலீஸ்ட் அம்மாகிட்டேயாவது சொல்லிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு அவனுக்கு எதுக்கு நீ கூப்பிட்ட? இனிமேல் நீ அவன்கிட்ட ஏதாவது கேளு உனக்கு இருக்கு”

“ஐயோ ஆதி, நீங்க எப்போவுமே இப்படித்தான் எல்லாத்தையும் பிரச்சனையாவே எடுத்துப்பீங்களா? எதுக்கு எடுத்தாலும் கத்துறீங்க. சுந்தரோட அம்மா தப்பா பேசுறது கூட என்னை இவ்வளோ பாதிச்சு இருக்காது . எல்லாம் இந்த சுந்தர சொல்லணும். வரமுடியுமான்னு தானே கேட்டேன். முடியாதுனு சொல்லிருந்தா நானே ஏதாவது பன்னிருப்பேன். இப்டி உங்ககிட்ட எல்லாத்துக்கும் திட்டு வாங்கணும்னு அவசியம் இருந்திருக்காது. இப்படி சண்டைபோட்டுட்டே வரதுக்கு நீங்க வராமலே இருந்திருக்கலாம். நடந்தோ, ஆட்டோலையோ, ஏன் அங்க ஒருத்தன் இருந்தானே அவன் கூடவேவாது வீட்டுக்கு போயிருப்பேன்.” என்றதும் தான் தாமதம் வண்டியை நிறுத்தியவன் அவள் கன்னம் சிவக்க ஓங்கி அறைந்தான்.

“எவனோ ஒருத்தன்கூட போவேன்னு என்கிட்டேயே சொல்றியா? யாரை யார்கூட கம்பேர் பண்ற?”

அதன் பின்னரே தான் கூறியதின் அர்த்தம் உணர்ந்த திவி அவன் தன்னை அடித்ததை விடுத்து அவனிடம் “ஆதி, சாரி, நான் அந்தமாதிரி மீன் பண்ணல. லிப்ட் கேட்டு வீட்டுக்கு போறதுதான்.”

ஆதி “வாயமூடு, என்ன பேசுறோம்னு புரிஞ்சே பேசுறதில்ல”

“சாரி ஆதி, நான். ..”

“பேசாதன்னு சொன்னேன்…” அடங்கியவள் அமைதியாக தலை குனிந்து இருக்க அவன் வண்டியை கிளம்பினான். பின்பு இருவரும் ஒன்றும் பேசவில்லை. வீடு வந்ததும் வெளியிலேயே நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தான். அவளுக்கு அவன் கோபம் புரிந்தது அவன் வீட்டிற்குள் அழைத்து செல்லமாட்டான் என்பதும்.

இவள் வெளியிலே இறங்கி நேராக அவள் வீட்டிற்கு சென்று வீட்டினுள் நுழையும் வரை இருந்தவன் பின்பு இவன் கேட்டை திறந்து இவன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவனை கண்ட மதி “என்னடா அவ எங்க? இங்க வராம போகமாட்டாளே?”

“அவளை வீட்ல விட்டுட்டேன். நாளைக்கு வருவா. எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்மா. நான் படுக்கறேன். யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று விட்டு நேராக அறைக்கு சென்று முடங்கினான்.

ஏதோ சரில்லேன்னு உணர்ந்தவள் சரி அவன் பாத்துப்பான் என நம்பிக்கையோடு நகர்ந்தாள்.

ஆதி அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ‘என்னவெல்லாம் சொல்லிட்டா… வாய் மட்டும்தான்… யோசிக்கறதே இல்ல’… அவள் கூறியதன் அர்த்தம் உணர்ந்து அவள் கூறவில்லை ஒரு வேகத்தில் கூறிவிட்டாள் என்பது அவனுக்கு புரிந்தாலும் அவள் அந்த மாதிரி கூறியது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘உன்ன யாரும் ஒரு வார்த்தை தப்பா சொல்லிடக்கூடாதுனு நான் பாத்தா நீயே இப்டியெல்லாம் பேசுவியா.. இனிமேல் இப்படி பேசு…. அப்போ இருக்கு டி உனக்கு…’ என திட்டியவன் நடந்தவற்றை நினைத்து பார்த்தான். மேடம்க்கு எவ்வளோ கோபம் வருது… தான் சொன்னது தப்புன்னு புரிஞ்சதும் நான் அடிச்சதகூட விட்டிட்டு உடனே என்கிட்ட சாரி சொல்லிட்டு இருக்காளே… ச்சா பாவம்…ஈஸ்வரி அத்தை தப்பா பேசுனா கூட பாதிக்காதுன்னு சொன்னாளே . அப்போ என் சின்ன கோபம் கூட உன்ன அந்த அளவுக்கு பாதிக்கிதா? எஸ் … என் செல்லக்குட்டி… உன் மனசுல நான் இருக்கேனு எப்போ உனக்கு புரியுமோ….தியா சீக்கிரம் என்கிட்ட வந்திடுடா…. இல்லை நானே கடத்திட்டு வந்துடறேன்… என கூறிக்கொண்டே மகிழ்வுடன் அவனும் நித்திரையில் ஆழ்ந்தான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’

வம்சியின் முகம் மிக அருகில் அவளை நெருங்கியது கண்டு சுதாரித்தாள் காதம்பரி. “விளையாட்டு போதும் வம்சி. இந்த கேமை இத்தோட நிறுத்திக்குவோம். இந்த அமரை சகிக்கவே முடியல. இதில் அவன் வீட்டுக்கு வேற வரணுமாம். நீங்க ஆரம்பிச்ச கேம் விபரீதத்தில் கொண்டு

கபாடபுரம் – 3கபாடபுரம் – 3

3. தேர்க்கோட்டம்   பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப்

நிலவு ஒரு பெண்ணாகி – 25நிலவு ஒரு பெண்ணாகி – 25

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி அடுத்த பகுதி நிலவு ஒரு பெண்ணாகி – 25 அன்புடன், தமிழ் மதுரா Download Nulled WordPress ThemesFree Download WordPress ThemesDownload WordPress ThemesPremium WordPress Themes Downloadudemy