Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 07

7 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதியின் வீட்டுக்குள் நுழையும் போதே அரவிந்த அண்ணா எப்படி இருக்கீங்க, அப்பு என்று அபியை கட்டிக்கொண்டு “ஏன் வரத முன்னாடியே சொல்லல. நான் கோவமா இருக்கேன் என்ன ஒன்னும் நீ ஹக் பண்ண வேண்டாம். என்கிட்ட நீ பேசாத ” என்றாள் திவி.

“நான் எங்க டி ஹக் பண்ணேன். நீதானே பண்ண?” என்றதும் ஒரு நொடி விழித்து விட்டு “அது என்னோட குட்டி ஏஞ்சல்க்கு உனக்கில்லை” என்றாள். அவள் செய்கையை பார்த்து அனைவரும் சிரித்துவிட்டு அபி அவளின் காதை பிடித்து “அப்டியே மாத்திருவியே.. எப்படித்தான் இப்டி சமாளிக்கிறியோ பிராடு” என்றதும் திவி “ஐயோ அப்புக்கா வலிக்கிது” என்று அலற அபியே பதறி போயி “திவி என்னாச்சு டா” என்க திவி அவளிடம் கண்ணடித்து விட்டு சந்திரசேகர் அரவிந்திடம் வந்து நின்றுகொண்டாள்.

” நீ இன்னும் வளரவேயில்லை அப்பு வேஸ்ட்.” என்றதும் அரவிந்த் “நீ அவள அப்பு கூப்பிடறதால அவ வளரலையா, இல்லை அவ வளராததால நீ அப்டி கூப்பிட்டியா?”என்று சந்தேகத்தை எழுப்ப திவியோ “அச்சச்சோ அண்ணா, என்ன இருந்தாலும் அபியண்ணியை நீங்க குள்ளம்னு சொல்லக்கூடாது” என்றாள். அபி சராசரி வளர்ச்சிக்கு கொஞ்சம் குறைவு. அதுவே அவளுக்கு அழகுதான். இருப்பினும் அபிக்கு தன்னை யாராவது குள்ளம்னு சொன்ன செம கோபம் வரும். அவள் முறைப்பதை பார்த்த அரவிந்த் “டேய் திவி நான் எப்போ அபியை குள்ளம்னு சொன்னேன். அவ வளரலைனு தானே கேட்டேன். குள்ளம்னு வார்த்தையே நான் யூஸ் பண்ணல. ” திவியோ “அண்ணா அதுக்கு அதான் மீனிங், சொல்லல, கேக்கலைனு இப்போவே 2 தடவ சொல்லிட்டிங்க.. மாடுலேஷன் மாத்தி கேட்டாலும் மனசுல இருக்கிறதுதானே அண்ணா வரும். உங்க மனக்கஷ்டம் தங்கச்சி எனக்கு புரியாதா? என்ன இருந்தாலும் நம்ம அபி, இனிமேல் அப்டி சொல்லாதீங்க ” என்று இன்னும் அபியின் பிபி யை ஏற்றிவிட்டாள். அரவிந்த் எழுந்து வந்து அபியிடம் “செல்லம் நான் உன்ன அப்டி நினைப்பானாடா? அது உன்னோட ஸ்பெஷல் டா. அதுவே ஒரு cuteடா.. நீ இப்படி இருந்தாதான் உனக்கு ஹெல்ப் பண்ண உன்ன தூக்க பல இடங்கள்ல எனக்கு வசதியா இருக்கும்னு சொல்லிருக்கேன்ல. அப்படி இருக்க நான் எப்பிடிடா அத குறைய சொல்லுவேன். ” என்று சுற்றி இருப்பவர்கள் மறந்து கொஞ்சி கெஞ்சிக்கொண்டிருந்தான்.

திவியிடம் வந்த சந்திரா “ஏன் டி இப்படி அந்த மனுசனை இம்ச பண்ற. பாவம் அவருதான் உன்ன கூப்பிடவே சொன்னாரு. ” என்றவரிடம் திரும்பி “அபியை கலாய்க்க தானே அண்ணா என்ன கூப்பிட்டாங்க. அபி எவ்வளோ பாத்து பாத்து செஞ்சாலும் அத ரசிச்சாலும் வெளில காட்டிக்காம அதென்ன சும்மா பொண்ணுங்கள விட்டுகுடுத்து ஜென்ட்ஸ் எப்பவும் எல்லாரும் என்ஜோய் பண்றது அதான் அவங்களே மறக்கற அளவுக்கு பிரச்னை பண்ண எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்கமாட்டாங்க. அபிக்கு அண்ணாவ புரிஞ்சாலும் ஏனோ விட்டுகுடுத்து பேசுறாங்களோன்னு ஒரு நெருடல் இருக்கும். ஆனா அண்ணா இப்போ எப்படி கொஞ்சறாங்க பாருங்க. இப்போ அபியும் ஹாப்பியா இருப்பாள்ள? என்ன அப்பு இப்போ ஓகே வா?” என்றதும் அபியும் சூப்பர் என்றாள்.

அரவிந்த் “வாலு உன்ன ..” என்று திவிய அடிக்க வர அவளோ உள்ளே ஓடிச்சென்றாள். இதை எல்லாம் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்ஆதி. திவியை பார்த்த நந்து ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவனை அள்ளி எடுத்த திவியின் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தான் அந்த குட்டி கண்ணன். “திவி, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். நீ ஏன் இவளோ நேரம் வரல. பேசல..நான் உங்கிட்ட சொல்லணும். அந்த மாலு(அவனது ஆசிரியை) என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ரா. எதாவது பண்ணனும். ஐடியா குடு. அம்மு சித்தி, அனு சித்தி எல்லாரும் என்ன டிவி பக்கவிடாம இம்ச பன்றாங்க.” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.

திவியோ “நீ ஏன் என்கிட்ட வரத சொல்லவே இல்ல நந்து .. நானும் உன்ன எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? நீ வரும்போது நம்ம ஷாப்பிங் போகலாம் னு எல்லாம் பிளான் பண்ணேன். எதுவுமே இப்போ முடியாது. இப்பவும் அம்மு, அனு, மாலு பத்தி கம்பளைண்ட் பண்ணறியே? என்கிட்ட பேசணும்னு வரலையா ?” என்று முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள நந்துவோ அவளை கன்னம் தொட்டு திருப்பி “நான் என்ன திவி பண்றது, எல்லாம் இந்த டாடி தான். எனக்கே கிளம்பும்போதுதான் சொன்னாங்க. இல்லாட்டி நான் உங்கிட்ட சொல்லாம இருப்பேனா.. சாரி.. ப்ளீஸ் திவி என்கிட்ட பேசமாட்டயா.? நான் உனக்காக தான் வெயிட் பன்னிட்டு இருந்தேன். உள்ள ரசகுல்லா இருக்கு. வா நாம போயி சாப்பிடலாம்.” என்று அவளை இழுத்துக்கொண்டு ஓடினான்.

அனைவரும் இதை பார்த்துக்கொண்டு இருந்து அபியோ “இருவரில் யாரு சின்னவங்கன்னே தெரில.” என்றதற்கு சந்திராவோ “இதை திவிகிட்ட கேட்டா, குழந்தைங்ககிட்ட நாம ஏன் எல்லா நேரத்துலையும் பெரியவங்கள இருக்கணும்.. அவன் என்ன ரூல் பன்றான், மிரட்றான், சண்டைபோடறான்னு மட்டும் தான் உங்களுக்கு தெரியுது.. அவன் என் மேல வெச்சுயிருக்கற நம்பிக்கை , பாசம் இப்போ உங்களுக்கு தெரியாது. பெரியவங்க நாம நெறைய பாத்திருக்கோம், நெறைய  தெரியும் நம்மலாளையே சின்னவங்கள புரிஞ்சுக்கிட்டு அவங்க உலகத்துக்கு போகமுடிலே, மாறமுடிலேங்கும் போது குழந்தைங்க எப்படி இப்போவே பெர்பெக்ட்ட வருவாங்க, எல்லாம் ஓபன்னா சொல்லுவாங்கனு எதிர்பாக்கமுடியும் . நம்ம அவங்க உலகத்துக்கு போனா தான் அவங்க ஈஸியா பழகுவாங்க. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லுவாங்கனு சொல்லுவா. ஆனா அவள் சொன்னது உண்மைதான் நாம இவ்வளோ பேரு இருக்கோம், அவனை நாம தூக்கினோம், கொஞ்சினோம், கேட்டதுக்கு அவன் பதில் சொல்லிட்டு விளையாட போய்ட்டான். ஆனா அவளை பாத்ததும்தான் அவனா போயி கொஞ்சுனான், அவனோட பிரச்னை, சந்தோசம், எல்லாமே ஷேர் பண்ணிக்கறான், அவன் எங்க போனாலும் அவள கூடவே வெச்சுப்பான். இதுதான் எப்பவும் நடக்குது.” என்று எப்பவும்போல திவியை மகிழ்வுடன் பார்த்தாள்.

அரவிந்தோ “உண்மை தான் அத்தை, குழைந்தைக்கூட டைம் ஸ்பென்ட் பண்றதே ஒரு பெரிய விஷயமா எல்லாரும் இப்போ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம சொல்றத கேட்டு சமத்தா வளரணும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே நம்மகிட்ட சொல்லணும்னு எதிர்பாக்கிறோம், சொல்லலைனா அவங்கள திட்டறோம். நம்மில்ல எத்தனை பேரு குழைந்தைகளை அவங்க உலகத்துக்கு போயி புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறோம்?..நாமெல்லாம் கேட்டாலும் சொல்லாதவன் நந்து, அவள பார்த்ததும் எல்லாமே சொல்லுவான். இந்த புரிதல் ஒரு நாள்ல வராது. ஆனாலும் அவ அளவுக்கு பொறுமையா, எல்லாருக்கும் தகுந்த மாதிரி மாற எல்லாரலையும் முடியாது. அதனால இத அவகிட்டேயே விட்றலாம்.” என்றான்.

அனைவரும் உள்ளே செல்ல ஆதி மட்டும் குழப்பத்திலேயே இருந்தான். அவளை ஒரு ஒரு நேரமும் புதிதாய் அறிந்துகொண்டிருந்தான். அவளை பிடிக்கவும் செய்தது என்பதை அவன் மறுக்கவில்லை. இருந்தாலும் அவளின் சில செய்கைகள் அவளின் பேச்சு, முழுவதும் அவளை நம்ப முடியாமல் தடுக்கவும் செய்தது. அவகிட்ட நல்லா பேசி இந்தமாதிரி குழம்பம் எல்லாத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்னு பாத்தா ஏதாவது சண்டை வந்திடுது. வந்த 2 நாள்ல 5 தடவ அவளை பாத்தும், 2 தடவ அவள தப்பா நினச்சேன், 2 தடவ திட்டுனேன், 1 தடவ அடிச்சிட்டேன். இதுல எங்க அவகிட்ட நல்லா பேசுறது. சண்டைக்கு கூட அவ உன்கிட்ட பேசல என்று அவனை அவன் மனமே குத்திகாட்டியது.. இத்தனை பேர்கிட்ட பேசுறா ஆனா நான் அங்கே ஒருத்தன் இருக்கறதையே தெரியாத மாதிரி போறா பாரு.. பாக்கறேன் இவ கோபம் எவ்வளவு நேரத்துக்குனு… உன்ன பேசவெக்கிறேன் டி.. என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வீட்டினுள் சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: