Skip to content
Advertisements

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 06

6 – மனதை மாற்றிவிட்டாய்

மதியம் நெருங்கும் வேளையில் அபியிடம் இருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்த சந்திரமதியிடம் “என்ன மா உன் பையன் வந்ததும் எல்லாரையும் மறந்தாச்சா, ஒரு வார்த்தை கூட என்கிட்ட நீ சொல்லலேல்ல.. நீ தான் இப்படின்னா உன் பையனும் அப்படிதான் போல ஒருவார்த்தை கூட சொல்லல. அவரு வந்து சொல்லறாரு உன் தம்பி நேத்தே வந்துட்டான்னு.” தன் பிறந்தவீட்டில் நடக்கும் விஷயம் தன் கணவருக்கு முதலில் தெரிகிறது, தன்னிடம் யாரும் பகிர்ந்துகொள்ளவில்லை என்ற ஆற்றாமையில் அவள் பொருமினாள்.

அவள் மனம் புரிந்த சந்திரா ” அப்படி இல்லடா அபி, நந்துக்கு ஸ்கூல் இருக்கு. சொன்னா அவனும் வரணும்னு அடம்பண்ணுவான். அவனை சமாளிக்கிறது கஷ்டம். அதான் பரிட்சை முடியட்டும்னு இருந்தேன் என்றாள். நீயும் இந்த மாதிரி நேரத்துல சும்மா அலையக்கூடாதில்ல டா.(அபி 5 மாத கர்பிணியாய் இருந்தாள். அதை குறிப்பிட்டு அம்மா கூறவும் இவளும் ஓரளவு சமாதானம் அடைந்தாள்.)

சரி சரி நாங்க இன்னைக்கு வரோம்மா..உங்க மாப்பிளை தான் கூட்டிட்டு போறேன்னாரு. போயிட்டு நாளைக்கு வந்திடலாம். அப்புறம் நந்துக்கு எக்ஸாம் முடிஞ்சதும் கூட்டிட்டு போய் விட்றேன் என்றிருந்தான் அபியின் கணவன் அரவிந்த். என்ன காரில் சென்றால் 1 மணிநேர பயணம். அதற்கே இத்தனை பாடு என்று அவனாகவே முன் வந்து சொல்லிவிட்டான். இல்லையென்றால் அவள் அதற்கு என்று ஒரு பாட்டை ஆரம்பித்துவிடுவாள் என்பது அந்த அன்பு கணவன் அறிந்த ஒன்றே. அனைத்திற்கும் மேலே அவனுக்கும் ஆதிக்கும் என்றும் ஒரு நட்புணர்வு உள்ளது.

மாலையில் அபி, அரவிந்த் மற்றும் அவர்களின் செல்ல வாண்டு நந்து அனைவரும் வந்துவிட்டனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க அரவிந்தும் ஆதியும் கட்டிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அக்கா மாமாவிடம் பேசிவிட்டு தாத்தா பாட்டியிடம் இருந்த குழந்தையை தூக்கினான். ஆதியிடம் வந்த நந்து மாமா ஏன் என்கிட்ட நீங்க வரதா சொல்லவேயில்லை? சொல்லிருந்தா நாங்க உங்கள கூப்பிட வந்திருப்போம்ல?” என்றதும் ஆதி அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டு எல்லாருக்கும் சர்பரைஸ்ஸா இருக்கட்டும்னு தான் நந்து குட்டி நான் சொல்லல.” என்று விளக்கினான்.

அதற்கு அபியோ “டேய் இரு இரு என்று ஆதியிடம் கூறிவிட்டு , நந்து கண்ணா உண்மையாவே நீ மாமாவ கூப்பிடறதுக்கு தான் முன்னாடி சொல்லலைனு கேட்டியா இல்லை உனக்கு ஏதாவது வேணுமா? ” என்றாள்.

நந்துவோ கள்ளச்சிரிப்புடன் ” அது ஒண்ணுமில்ல மாமா நீங்க வரும் போது வாங்கிட்டு வர சொல்லலாம்னு டாய்ஸ் லிஸ்ட் போட்டு இருந்தேன். ஆனா நீங்க சொல்லாம வந்துட்டீங்க. இப்போ நான் எப்படி டாய்ஸ் வாங்கறது” என்று அந்த வாண்டு பீல் பண்ணவும், அனைவரும் சிரித்துவிட்டு “டாய்ஸ்க்காக மாமாவ தேடிட்டு எவ்வளோ உண்மையா பாசமா கேக்கறமாரி நடிக்கிற பிராடு” என்று அவனுக்காக வாங்கிய பொம்மைகளை காட்டினான் ஆதி. விழி விரித்து பார்த்த குழந்தை “மாமா எல்லாம் எனக்கு புடிச்சது, சூப்பர், ஜாலி என்று கத்திகொண்டே ஓடினான். ” அவனை விடுத்து பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

மாலை சிற்றுண்டியுடன் உரையாட அரவிந்த், ஆதியிடம் ” அப்புறம் மச்சான், இனி இங்கேதானே இருக்க போற, அப்படியே கல்யாணத்த பண்ணிட்டு இருந்தா மாமா நான் எல்லாம் மாமியார் மருமக சண்டை, நாத்தனார் சண்டை எல்லாம் பிரீயா வீட்ல பாப்போம்ல. எங்களுக்கும் இவங்கள மட்டுமே பாத்து போர் அடிக்கிது.” என்று மாமனாரும் மருமகனும் சேர்ந்து சிரித்துக்கொண்டனர். சந்திராவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “உங்க 2 பேருக்கும் பொழுது போகாட்டி நீங்க சண்டைபோட்டுக்க வேண்டியதுதானே, அதைவிட்டுட்டு எப்படி நாங்க சண்டை போடணும்னு நினைக்கலாம். வரப்போறவ இந்த வீட்டு மருமக இல்லை, மகதான், மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா. பாசம், பண்பு, படிப்பு, பேச்சு, திறமை எல்லாத்துலையும் என் பையனுக்கு பொருந்தமானவளா இருப்பா. நான் இல்லாத குறைய தீத்துவெக்கிற மாதிரி என் பையன சந்தோசமா பாத்துக்கரவளா தான் அவ இருப்பா. அப்படி இருக்க நான் எப்படி அவளோட சண்டை போடுவேன்.” என்றாள் சந்திரமதி.

அவளை தொடர்ந்து அபியும் ” அம்மா சொல்றமாதிரி தான் ஆதியோட மனைவி எனக்கு கூட பொறக்காத தங்கச்சியா தான் இருப்பா, அதனால நானும் அவளோட சண்டைபோடமாட்டேன்.” என்றாள்.

சந்திரசேகரோ சோகமாக ” அப்படின்னா இவங்கள அடக்க யாரும் வரமாட்டாங்களா? நமக்கு விடிவுகாலமே பொறக்காதா ?” என்று கேட்ட பாவனையில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

மறுபடியும் அரவிந்த் “சரி ஆதி உன் ஐடியா என்ன ?” என்று மீண்டும் ஞாபகப்படுத்த அனைவரும் ஆவலோடு அவன் முகத்தை பார்க்க அவனுக்குள் ஒரு நொடி திவியின் முகம் வந்து மறைந்தது. அதை ஒதுக்கிவிட்டு “இல்ல மாமா இப்போதைக்கு எனக்கு கல்யாணத்துல இண்டெர்ஸ்ட் இல்ல. எப்போ வரும்னு தெரில. எனக்கா தோணுச்சுனா நானே சொல்றேன். அடுத்து பிசினஸ், கன்ஸ்டருக்ஷன் எல்லாம் பாக்கணும். டெவெலப் பண்ணனும். அதுவரைக்கும் இந்த பேச்சே வேண்டாம்.” என்றான்.

அவன் முடிவை மாற்றமுடியாது என்பதை அனைவரும் அறிந்ததால் ஒரு சிறு ஏமாற்றத்துடன் அமைதியாகினர்.

அரவிந்த் தான் ” சரி அபி உன் நாத்தனார் எங்க?” என்றான். அனைவரும் புரியாமல் விழிக்க அவனோ “அட.. இதென்ன உன் தம்பி மனைவி மட்டும் உனக்கு நாத்தனார் இல்லமா, என் தங்கச்சியும் தான். உங்கள அடக்க எங்களுக்கு சப்போர்ட் பண்ண அவதானே வரணும். திவி எங்க இன்னும் காணோம்.?” என்றான். அபியும் “ஐயோ, ஆமாங்க.. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.. நான் அவகிட்ட சொல்லவேயில்லை. சொல்லலைன்னு தெரிஞ்சா சண்டைக்கு வருவா.” என்றதும் காலையில் அபி போனில் சண்டையிட்டது ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர். அவளும் அதை புரிந்துகொண்டவளாக ” என்ன விட அவ பல மடங்கு. அவகிட்ட நம்மனால பேச முடியாது. மொதல்ல அவளை கூப்பிடுங்க. வரச்சொல்லுங்க” என்றாள் . ஆனாலும் எப்படியும் அவ இவ்வளோ நேரம் வராம இருக்கமாட்டாளே. இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவு தானே. எப்படியும் காலைல வந்தா நைட் தானே போவா. அதுவும் மகா அத்தை ராஜி அத்தை யாராவது வந்து கூட்டிட்டுபோகணும். ஏன் அவ வீட்ல இல்லையோ வெளில எதுவும் வேலையா போயிருக்காளா ?” என்று வினவினாள்.

அதற்கு சந்திரசேகரும், சந்திரமதியும் ஆதியை முறைத்தனர். அவனுக்கோ இவர்களும் அவளை பற்றி பேச ஆரம்பித்ததும் ஐயோ என்றிருந்தது இப்பொது அம்மாவும் அப்பாவும் முறைக்க பார்த்தவன் இவங்க எதுக்கு இப்போ என்ன மொறைக்கறாங்க. எல்லாம் அந்த வாயாடினால வந்தது என தனக்குள் திட்டிக்கொண்டான். இன்னைக்கு வரட்டும் வெச்சுக்கறேன் அவள என்று அர்ச்சனை செய்தான். அவனும் ஏனோ அவள் வரவை எதிர்பார்த்தான்.

அரவிந்த் அபியின் போனில் இருந்து திவிக்கு கால் செய்தான். திவி போனை பார்த்துவிட்டு மகிழ்வுடன் அட்டென்ட் செய்து ” ஹே.. அப்பு எப்படி இருக்க? அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க, என் பாய் ப்ரண்ட் நந்து என்ன பண்றான்? உள்ள என் செல்லக்குட்டி பாப்பு பத்திரமா இருக்காளா. நல்லா சாப்பிடறியா… அப்போதான் அவ என்ன மாறி chubby ஆ cute ஆ வருவா. உன்ன மாதிரி குச்சியா வெளில வந்தா ஹாஸ்பிடல் கூட பாக்காம உன்ன ஓடவிட்டு அடிப்பேன். ஹே அப்பு, என்ன மா நான் இவளோ கேக்கறேன். எதுமே சொல்லமாட்டேங்கிற?” எனவும் அரவிந்த் “நீ கேள்வி கேட்டியே பதில் சொல்ல எங்கம்மா இடம் விட்ட?” என்றதும் அவள் “அண்ணா நீங்களா..ஐய்ய்ய் எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க, இவளோ நாள் என் ஞாபகமே இல்லையா, எப்பவுமே பிஸி தானா?” என்று கேள்விகளை தொடுக்க அரவிந்த் “அடடா .. திவி கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு அப்டியே பக்கத்து வீட்டுக்கு வா மா, எல்லா கேள்விக்கும் பதில் நேரில சொல்றோம்.” என்றவனிடம் திவி ” என்ன பக்கத்து வீட்டுக்கா ?? அப்படின்னா இங்க வந்திருக்கிங்களா, எப்போ வந்திங்க? ஏன் அண்ணா முன்னாடியே சொல்லல? அங்க எல்லாருக்கும் நீங்க வரது தெரியுமா? அப்புறம் ஏன் மதி அத்தை, சேகர் மாமாகூட சொல்லல.” என்று அடுத்து கேள்விக்கணைகளை வீச “அரவிந்த் “இதுக்கும் இவ்வளவு கேள்வியா? என்று தலையில் கை வைத்தான். “நீ வீட்டுக்கு வா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.” ஸ்பீக்கர்ரில் இருந்ததால் அனைவரும் இந்த உரையாடலை கேட்டு சிரித்தனர்.

திவிக்கு போவோமா? ஆதி இருப்பானே.. மறுபடியும் ஏதாவது சொல்லுவானோ? என்று பல கேள்விகள் எழுந்தாலும்… அவன் இருந்தா எனக்கென்ன? அவன் ஒருத்தனுக்காக எல்லாரையும் பாக்காம இருக்கமுடியுமா… இன்னைக்கு இருக்கு அவனுக்கு. என்று திவியும் ஒரு முடிவோடு கிளம்பினாள்.

திவி “ராஜிமா அப்பு, அரவிந்த் அண்ணா, நந்து எல்லாரும் வந்திருக்காங்களாம், நான் அங்க போயிட்டு வரேன்” என்றாள். அருகில் இருந்த தர்ஷினி “போறேன்னு சொல்லு, உன்ன கூட்டிட்டு வர யாராவது இங்க இருந்து நைட் யாராவது வருவாங்க. நீ அங்க போனா எப்போ திரும்பி வந்திருக்க?” என்று வம்பிக்கிழுத்தாள். அவளை முறைத்த திவி “நானாவது பரவால்ல, பக்கத்து வீட்டுக்கு போறேன், கூப்பிட்ற தூரம் தான். ஆனா மேடம் ஊர் சுத்த போனா நீயா வந்தாதான் உண்டு, அப்படிருக்க நீ என்ன கொர சொல்றியா போடி” என்க,

தர்ஷினி “நீ போடி வாயாடி”

திவி “நீ போடி அடங்காபிடாரி” என்று சண்டையை துவங்க ராஜசேகர் வந்து “அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை?” என்றவரிடம் திவி “நாங்க சும்மா பேசிடிருந்தோம் பெரிப்பா.. நீங்க ஏன் எப்பவுமே எங்களுக்குள்ள சண்டவருமனே பாக்கறீங்க.. நீ பத்திரமா போயிட்டு வாடா தர்ஷிமா.”

தர்ஷினியும் “சரி திவி கா.. நீயும் பாத்து போயிட்டு வா. நைட் நாம சேந்து டிவி பாக்கலாம்” என்றாள்.

ராஜசேகர் மலங்க மலங்க விழிக்க ராஜியும், மகாவும் சிரித்துவிட்டு “உங்களுக்கு இது தேவையா.. நாங்கயெல்லாம் கண்டும் காணாம இருக்கோம்ல. பஞ்சாயத்து பண்ணி பன்னு வாங்கிறதே வேலையாப்போச்சு.” என்றதை கேட்டு திவி கண்ணடித்து விட்டு ஓடிவிட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

7 – மனதை மாற்றிவிட்டாய்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: