Skip to content
Advertisements

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05

5 – மனதை மாற்றிவிட்டாய்

கை கழுவி விட்டு அமைதியாக வந்த திவி அனைவரிடமும் “நான் கிளம்புறேன் … கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள். அவளை நம்பாமல் பார்த்தவர்களிடம் ” ஐயோ, நிஜமாத்தான் சொல்றேன்… அத்தை நீங்களாவது சொல்லுங்க நான் வந்ததுல இருந்தே வேலை பத்தி சொல்லிட்டு தானே இருந்தேன்.” என சந்திராவையும் துணைக்கு அழைத்தாள்.

சந்திராவும், ” ஆமா, அவ வந்ததுல இருந்தே சொல்லிட்டே தான் இருந்தா, நான்தான் சாப்பிட்டு தான் போகணும்னு கட்டாயப்படுத்துனேன். சரி டா நீ பாத்து போயிட்டு வா”, என்றார்.

இருப்பினும் சந்திரசேகரின் தெளியாத முகம் கண்டு அவரிடம் வந்த திவி, ” சேகர் மாமா, நிஜமா எனக்கு ஒர்க் இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். ப்ளீஸ் எனக்கு நீங்க சிரிச்சிட்டே பை சொல்லி அனுப்பனும். நீங்க இப்டி இருந்தா எனக்கு சங்கடமா இருக்கும். ” என கெஞ்சி கொண்டிருந்தவளை கண்ட சந்திரசேகர்,” சரி டா மா, பத்திரமா போயிட்டு முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடு. நாளைக்கு லீவு தானே. சோ நைட்டோ, இல்லை நாளைக்கோ நாம பேசலாம்” என்றவரிடம் தேங்க்ஸ் மாமா என்றுவிட்டு அமுதா, அனு , சந்திராவிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாள் .

அவள் சண்டை போடவாது செய்வாள் . அப்போது அவளை கவனித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய ஆதிக்கு அவள் ஏதும் பதில் கூறாமல் சென்றது முக்கியமாக தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டதை எண்ணி தன்னுள் கனன்று கொண்டிருந்தான். அவளது பார்வையும் விலகலும் அவனை என்னவோ செய்தது. அதை அவன் யோசித்து உணரும் முன்பே அமுதா ” என்ன அண்ணா, உனக்கு புது ஆளுங்க அவ்வளோவா பிடிக்காதுதான் அதுக்காக இப்படியா மூஞ்சில அடிச்சமாறி பேசுவ? ” என்றாள்.

அனுவோ “திவி ஒன்னும் புது ஆளோ வெளி ஆளோ இல்லை” என்றாள்.

அமுதா அண்ணனிடம் “அதுவுமில்லாம உனக்கு பழக்கமில்லாதவங்ககிட்ட இருந்து ஒதுங்கி இருப்ப, அவங்க உன்ன டிஸ்டர்ப் பண்ணா இல்லை உன் விசயத்துல தலையிட்டா தான் கோபமா நடந்துப்ப, அப்பவும் அவங்கள மரியாதை இல்லாம பேசமாட்ட.. ஆனா திவி என்ன பண்ணா, அவகிட்ட நீ ஏன் அண்ணா இப்படி கோபமா நடந்துக்கிட்ட, அவள நீ வா போ னு ஒருமைல வேற சொல்ற, அதுக்கு மட்டும் உரிமை இருக்கான்னு ” கேட்டுக்கொண்டே இருக்க சந்திரா தான் “சரி இந்த பேச்ச விடுங்க…அம்மு, அனு 2 பேரும் உள்ள போங்க” என்றார்.

அம்முவோ ” இப்படியே அண்ணா பண்ற எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணுங்க மா, திவி என்ன நினைக்கிறான்னு கூட நம்மால கண்டுபுடிக்கமுடியாது. அவ எப்பவும் யாருகிட்டேயும் அவளோட பீலிங்ஸ்ஸ வெளில காட்டிக்கவும் மாட்டா..” என்று புலம்பிக்கொண்டே சென்றுவிட்டாள் அனுவும் பின்னோடு சென்றாள்.

இதை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த ஆதிக்கு தன்னை திவி அவமதித்ததாகவும், தன் அண்ணன் செய்தால் எதுவும் சரியாகத்தான் இருக்கும் என கூறும் தங்கைகள் இன்று தன்னை கேள்விகேட்க சண்டையிட காரணம் இந்த திவி என்று இன்னும் அவளை திட்டித்தீர்த்தான்.

அம்மாவும், அப்பாவும் அமைதியாக சென்றுவிட ஆதிக்கு தான் என்னவோ போல் ஆயிற்று. பேசாமலே காத்திருந்த ஆதி பொறுமையற்று அம்மா அப்பாவிடம் சென்று “இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை? நான் பாக்கிறவங்க எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா எல்லாம் பேசமாட்டேன், பழக்கமாட்டேனு தெரியும்தானே, அவளும் இந்த வீட்டு பொண்ணு இல்லேல்ல. அப்புறம் என்ன புதுசா எல்லாரும் என்ன இப்படி ட்ரீட் பண்றீங்க?” என பொருமினான்.

சந்திரா அவனை அழைத்து அருகில் அமர செய்து ” ராஜா, உண்மை தான் நீ புது ஆளுங்ககிட்ட பழகமாட்ட, பேசமாட்ட…ஆனா மத்தவங்க பேசுனா அத பெருசாவும் எடுத்துக்கமாட்ட.. அது அவங்களோட உரிமைன்னு சொல்லுவ.. அப்படி இருக்க இங்க எல்லாருக்குமே திவிய எவ்வளோ புடிக்கும்னு நேத்துதான் சொன்னோம். இருந்தும் அவ மனச கஷ்டப்படுத்தற மாதிரி நீ பேசியிருக்க. காரணமில்லாம அடுத்தவங்கள காயப்படுத்தமாட்ட.. நீ அவளை இந்த அளவுக்கு பேசுற, காலைல அந்தமாறி திட்டுறேன்னா கண்டிப்பா ஏதோ இருக்கு.. உண்மைய சொல்லு, என்ன நடந்தது உங்க 2 பேருக்கும் இடையில… திவிய இதுக்கு முன்னாடி பாத்திருக்கியா ?” என்று அவள் நேரடியாக கேட்டாள்.

தாயிடம் எதையும் மறைக்க விரும்பாமல் அவளை கோவிலில் பார்த்தது முதல் அவளை பற்றி எண்ணியது அவள் வீட்டில் சந்திரமதியோடு பேசியது, தான் திட்டி அவளை அனுப்பியது என அனைத்தையும் கூறினான்.

சந்திரசேகருக்கோ ஆதியின் மீது கட்டுக்கடங்கா கோபம் “என்ன ஆதி நினைச்சிட்டு இருக்க, அந்த பொண்ண கை நீட்டி அடிக்கற அளவுக்கு உனக்கு உரிமைய யார் குடுத்தது? அவளும் எதுமே நடக்காத மாதிரி இருந்திருக்கா.. அம்மு சொல்றதும் உண்மை தான், அவ கோபப்பட்டோ, அழுதோ, ஏன் புலம்பிகூட பாத்ததில்லை..எப்பவுமே சிரிச்சிட்டே எல்லாத்தையும் எடுத்துப்பா..திவிய இங்க யாருமே ஒரு சொல்லு சொல்றதுக்கே அவ்ளோ யோசிப்போம். ஆனா நீ அவளை அடிச்சருக்க… அதுவும் தேவையில்லாம நீ சந்தேகப்பட்டதுக்கு இல்லையா? என் பையன் எதுலையுமே பெஸ்ட்.. அவனோட எந்த முடிவும், கணிப்பும் சரியாதான் இருக்கும்னு எனக்கு இருந்த நம்பிக்கைய நீ திவி விசயத்துல பொய்யாகிட்ட ஆதி..மொத தடவையா உன்ன தனியா அனுப்பிச்சு படிக்க வெச்சது தப்போன்னு தோணுது.. எல்லாரோடையும் பழகுற சூழல் இருந்திருந்தா நீ மத்தவங்க உணர்வுகளையும், மனசையும் புரிஞ்சிட்டிருந்திருப்பியோன்னு தோணுது.” என்று மனக்குறையுடன் அந்த அறையை விட்டு சென்றுவிட்டார்.

ஆதியோ “அவளுக்காக அப்பா என்ன திட்றாரா மா? நடந்த எல்லாமே அவளுக்கு அகைன்ஸ்ட்டா தான் இருந்தது. அதுவும் உங்ககிட்ட அவ அப்படி பேசுனது எனக்கு கோபம் வந்திடுச்சு. அதான் அடிச்சிட்டேன். அவனால தானே எல்லா பிரச்சனையும் ஆனா அப்பா என்ன மட்டுமே குறை சொல்றாரு. அந்த அளவுக்கு அவ முக்கியமா போய்ட்டாளா?” என்று கத்திக்கொண்டு இருந்தான்.

சந்திரமதிக்கு ஆதியின் மேல் வருத்தம் என்றாலும் அவனுடைய எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க எண்ணினார். ஆதியை அருகில் அழைத்து அமர வைத்து “ராஜா கொஞ்சம் நீயே யோசிச்சு பாரு, கோவில்ல உன் பேருக்கு நான் வரமுடிலேன்னு அவ அர்ச்சனை பண்ணியிருக்கா. அவ வீடும் இங்க தானே அதான் உன் வண்டி பின்னாடியே வந்திருக்கா. அவளும் நானும் பேசுனத கேட்டியே எங்கள பாத்தியா.. நாங்க 2 பேரும் எதோ விளையாட்டுக்கு கோவிச்சிட்டு பேசுனது. அப்பவும் நீ என் முன்னாடி கேட்டிருந்தாலோ இல்ல அப்போவே சொல்லிருந்தாலோ இவ்வளோ சங்கடம் வந்திருக்குமா, எதையும் ஆழமா யோசிக்கிற நீ ஏன் இந்த விசயத்துல உடனே கோபப்பட்டு அவளை அடிச்ச. அதுவும் என்ன என்ன எல்லாம் பேசியிருக்க. என் பையன் இப்படி எல்லாம் பொண்ணுங்கள பத்தி தப்பா பேசமாட்டானே ராஜா..அவ மனசு எவ்வளோ வருத்தப்பட்டிருக்கும். ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டா. நைட்டும் போன்ல அவ ஏதும் சொல்லல. இப்போ நீயா சொல்றவரைக்கும் இவ்வளோ விஷயம் நடந்திருக்கறதே திவி யாருக்கும் காட்டிக்கல. அதுதான் அவளோட குணம். அதுவுமில்லாம காலைல உங்கிட்ட கோவிச்சிட்டு வந்ததுக்கு என்கிட்ட சண்டைபோட்டா தெரியுமா?” என்றதும் ஆதியின் கண்கள் ஒரு நிமிடம் பளிச்சிட்டன.

[காலையில் நடந்த உரையாடல் :

திவி சந்திராவிடம்என்ன அத்தை என்னாச்சு உங்களுக்கு, உங்க பையன எப்படி நீங்களே தப்பா நினைக்கலாம்? எப்படி அடிக்க வரலாம்?. அவர் மேல தப்பில்ல. அவருக்கு என்ன தெரியாது..நான் வேற யாரோன்னு நினைச்சிட்டாரு, நான் திருட்டுத்தனமா வர மாறி வீட்டுக்குள்ள வந்தா புதுசா யாரு பாத்தாலும் சந்தேகம் தான் வரும். நான்தான் அவர்கிட்ட கொஞ்சம் விளையாடலாம்னு யாருன்னு சொல்லாம வம்பிழுத்திட்டிருந்தேன். அதான் அவரு அப்படி நடந்துக்கிட்டாரு. இதுக்கு போயி நீங்க ஏன் இப்டி பண்றீங்க? உங்க மகன் மேல உங்களுக்குத்தான் நம்பிக்கை இருக்கனும், காரணம் இல்லாம அப்படி நடந்துக்கமாட்டான். அட்லீஸ்ட் என்ன விஷயம்னு கேக்காவது தோணனும்ல..அவரு பாவம் ரொம்ப ஷாக் ஆயிட்டாரு. நீங்க அவருகிட்ட பஸ்ட் போய் பேசுங்க. அப்புறமா எதுனாலும் பாத்துக்கலாம்.” என்றாள்.

சந்திராவோநீ என்ன சொன்னாலும் எனக்கு அவன் அப்டி பேசுனது மனசு கேக்கல.. ஆனா அவனையும் முழுசா தப்பு சொல்லமுடியாது. யோசிச்சு பேசுறது, மத்தவங்கள மனச புரிஞ்சுக்கறது அந்த மாதிரி சூழல்ல அவன் வளரல. அவனுக்கு என்ன தோணுதோ அப்டியே பேசிடுவான். அப்படியே வளந்திட்டான். அதனால அவன்கிட்ட பேசுறேன்.” என்றார். ]

இதை கேட்ட ஆதிக்கோ அவளா எனக்காக அம்மாவிடம் சண்டையிட்டது. இது தெரியாமல் அவளிடம் வெறுப்பேற்ற எண்ணி செய்தது, சாப்பிடும்போது குத்திக்காட்டியது அனைத்தும் கண் முன் வந்து நின்றது. அவன் முகம் தெளிவடையாததை பார்த்த சந்திரமதி “ராஜா நீயும் கெட்டவன் இல்லை , திவியும் நீ நினைக்கிற மாதிரி கெட்டவ இல்லை. இன்னும் சொல்ல போனா 2 பேருமே என் பிள்ளைங்க தான். அவளோட வளர்ப்பும் பாதி என்னோடதுதான். இனிமேல் அவள பத்தி தப்பா நினச்சா அது உங்க அம்மாவுக்கும் பொருந்தும்னு நியாபகத்தில வெச்சுக்கோ” என்று அறிவுரையில் ஆரம்பித்து அதிரடியாய் முடித்தார்.

இத்தனையும் கேட்ட பிறகும் அம்மா சொல்ற எல்லா பதிலும் ஒத்துபோகுதானாலும் கோவிலில் பார்த்த நொடி அவளின் பார்வை, சிரிப்பு, வெளியில் அவனோடு கூடவே நின்றது, காலையில் அம்மா இல்லாத போது அவள் தன்னை குத்திக்காட்டி வெறுப்பேற்றுவது போல பேசியது, போனில் பேசியது எல்லாவற்றையும் எண்ணியவனுக்கு முழுதாக நல்லவள் என்று சான்று அளிக்க முடியவில்லை. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவளை கண்காணித்து திவி தன் குடும்பத்தை நெருங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தான். பாவம் இறுதியில் அவனே மிகவும் நெருங்கப்போகிறான் என்பது அறியாமல்.

வீட்டிற்கு சென்ற திவியோ கோபத்தின் உச்சியில் இருந்தாள். “அங்கே அவன் மட்டும் இருந்திருந்தா நடப்பதே வேறு. அத்தை , மாமா, அம்மு, அனு எல்லாரும் இருந்ததால தப்பிச்சிட்டான். என்னவெல்லாம் பேசுறான். ஏதோ தெரியாம பஸ்ட் டைம் கத்திட்டான். எல்லாருக்கும் தெரிஞ்சா வருத்தத்தப்படுவாங்கனு தானும் சொல்லாம விட்டா இவன் என்ன நம்ம யாருன்னு தெரிஞ்சும் இப்படி எல்லாம் பேசுறான். இவ்வளோ பேசுறவன் நேத்து என்ன அடிச்சத பத்தி, தப்பா பேசுனத பத்தி அங்க யார்கிட்டேயாவது சொன்னானா. அத்த மாமாக்கு தெரிஞ்சா சும்மா விடமாட்டாங்க. அதுக்கெல்லாம் தைரியம் இருந்தா, யோசிக்கற அளவுக்கு புத்தியும் பொறுமையும் இருந்திருந்தா இப்படி எங்கிட்ட ஏன் புரியாம கத்தப்போறான். தான் பண்ணது தப்புன்னும் தெரிஞ்சும் மன்னிப்பும் கேக்காம இப்படி பேசுறானே. இருக்கட்டும் இதுக்கு மேல ஏதாவது இந்த மாதிரி இன்னொரு தடவ பேசட்டும். அப்புறம் அவனை இந்த திவிகிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது. டிஸ்டர்ப் பண்ணி டார்ச்சர் பண்றேன்..” என்று ஒரு முடிவோடு இருந்தாள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: