Skip to content
Advertisements

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02

2 – மனதை மாற்றிவிட்டாய்

வீட்டை அடைந்ததும் அவனை அங்கு எதிர்பாராத அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவன் விரைந்து தன் தாயிடம் சென்று அவரை அணைத்துக்கொண்டு “சொன்ன மாதிரியே வந்துட்டேன் அம்மா. இனிமேல் எப்போவும் உங்ககூட தான் இருப்பேன் ” என்றவனை ஆனந்த கண்ணீரோடு இமைக்காமல் பார்த்தாள் அவனது தாய்.

“என்ன சந்திரா, ஆதிய மொத தடவ பாக்கிற மாதிரி அப்படி பாக்கிற, நம்ம பையன் தான் மா, அதுதான் டெய்லியும் பேசுறீங்க, வீடியோ call அது இதுன்னு ஒன்னும் விட்றதில்ல, அப்புறம் எதுக்கு இந்த எமோஷன் எல்லாம்?” என வினவ சந்திரா தன் கணவரை முறைக்கும் பாவனையில் பார்க்க

சந்திரசேகரோ “என்ன சந்திரா என் அழகை ரசிக்கிறியா, இப்படி வெச்ச கண் வாங்காமா பாக்கிற?” என்றதும் அனைவரும் சிரித்தனர்.

பிள்ளைகளின் முன்பு தன் மானத்தை வாங்கிய கணவரிடம் “ஆதிய இத்தனை வருஷம் பிரிஞ்சதே உங்கனாலதான் அதுகே உங்களுக்கு இன்னும் தண்டனை குடுக்கணும் இதுல என் பையன பாக்கறதுக்கு கூற கொர சொல்லி கிண்டல் பண்றிங்களா இருங்க .. ஆதி வந்ததும் ஸ்வீட் தரலாம்னு உங்களுக்கு இருந்தேன்… அது கட் தான் வெறும் கலியே தின்னுங்க ” என்று கூறியதும் அவர் திருதிரு என விழிக்க ஆதியோ சூப்பர் மா செமையா வீக்னெஸ்ஸ புடிச்சு பழிவாங்குறீங்க என்று சிரிக்க, மகள் அமுதாவும், அணுவும் “பாவம் மா அப்பா, அவர் என்ன பண்ணாரு, பையன படிக்க அனுப்பணும்னாரு, உங்கள யாரு கூட போயி இருக்கவேண்டாம்னு சொன்னது, அது உங்களுக்கு தோணல, அதுக்கேன் அப்பாவ திட்டறிங்க ?”என சலுகையாக தந்தையின் தோளில் சாய்ந்துகொள்ள,

சந்திராவோ “ஏன் சொல்லமாட்டீங்க, 3 வயசு பையன இவங்க பேச்ச கேட்டு அம்மா வயித்துல குட்டி பாப்பா இருக்கு அது வெளில வரவைக்கும் பாட்டி , தாத்தாவோடு இரு ராஜா என்று அனுப்பி வைத்தது, அமுதா பொறந்த அப்புறம் அவன் ரொம்ப சேட்டை பண்ணறான்.. எல்லாம் இந்த வயசுல இருக்கறதுதான் ஆனா அவன் இங்க வந்துட்டா உனக்கு அவன பாக்கவே டைம் சரியா இருக்கும். அதுனால அவன் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு, அப்புறம் அனு பொறந்தா அதுக்குள்ள இவன ஸ்கூல்ல அதுவும் ஹாஸ்டல்ல சேக்கணும்னுட்டாரு, அப்போதான் அவனுக்கு தனியா எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்க பழகுவான் அண்ட் அங்க படிப்பும் பெஸ்ட்டா இருக்கும்னு சொல்லி ஊட்டில விட்டாரு, அதுமுடிச்சு அவன் காலேஜீக்குனு சென்னை போய்ட்டான் அப்புறம் mba க்கு லண்டன் அனுப்பிச்சிட்டாரு.. இப்படியே காரணம் சொல்லி என் பையன தூரமா அனுப்பிச்சிட்டு உங்கள எல்லாம் பாத்துக்கு நான் இருந்தேன் பாத்தியா இது தேவைதான்” என மூஞ்சிய திருப்பிக்கொள்ள, அனைவரும் நமுட்டு சிரிப்பில் பார்த்துக்கொண்டனர், இதைக்கண்டதும் சந்திரா அனைவரையும் முறைக்க,

ஆதி “விடுங்க மா அப்பாதான் கிண்டல் பண்ராரு, நீங்களும் எமோஷன் ஆகிட்டு இருக்கீங்க, அதுவுமில்லாம அப்பா எனக்கு எல்லாமே பெஸ்ட்டா பாத்து பாத்துதானே செஞ்சாரு, அவரு அப்டியெல்லாம் இருந்ததால தான் இன்னைக்கு சொசைட்டில நான் இவ்ளோ பெரிய இருக்கேன் அது உங்களுக்கும் பெருமை தானே” என்று கூறிக்கொண்டே தந்தையை பார்க்க அவரும் பெருமையுடன் அவனை தழுவிக்கொண்டார். அனு “சரிம்மா உன் பையன உள்ள கூப்பிட்டு வந்து நாள் பூரா பாரு யாரு தடுக்கப்போறாங்க.. அதுக்கு முன்னாடி சாப்பாட கண்ணுல காட்டு தெய்வமே” எனவும் அனைவரும் சிரித்துகொண்டே அவனை உள்ளே அழைத்துச்சென்றனர்.

அவனுடன் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு சிறிது நேரம் வம்பிழுத்து பேசிக்கொண்டிருந்தனர். அதை மனதார பார்த்துவிட்டு ஆதியிடம் வந்து “ராஜா போ பா கொஞ்ச நேரம் போயி ரெஸ்ட் எடுத்துக்கோ,” என்றார். அவனும் அவனது அறை நோக்கி சென்றான் மனநிறைவுடன் அறையில் அனைத்தையும் பார்த்தான். அவனது அறைக்குள் அனுமதிஇன்றி யார் சென்றாலும் பிடிக்காது. அவனது வேலையை அவனே செய்துகொள்ளவான் என்பதை விட மற்றவர்களை எதற்கும் எதிர்பார்க்கக்கூடாது என்பான். அந்த பழக்கமே ஒரு அடிக்க்ஷன் ஆகிவிடும் என்பான். சிறுவயது முதல் தாத்தா பாட்டி என்று வளர்ந்ததால் மிகவும் கண்டிப்பான கட்டுப்பாடுகளோடு இருப்பான். பிறகு ஹாஸ்டல் என தனி வாழ்க்கை வாழ்ந்ததாலோ என்னவோ கோபம் அதிகம் கொள்வான். குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் மிகவும் நன்றாக பழகுவான். ஆனால் வெளியாட்கள் கண்டால் தூரம் நில் என்பது போன்ற பார்வை எப்போதும் இருக்கும்… அவசியமற்று எவரிடத்தும் அதிகமாக உரையாடமாட்டான். உறவினர்களே அவனிடம் செல்ல கொஞ்சம் தயங்குவார்கள். மனதில் தோன்றியதை பட்டென்று கேட்டுவிடுவான். இருப்பினும் இந்த இளம் வயதில் இத்தனை திறமைகளை பெற்று, நேர்மையும், வேலையில் நேர்த்தியும் , தீர்க்கமான முடிவுகளை எடுப்பதும், சரியான தீர்வை கொடுப்பதும் அவன் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு என்றுமே இருக்கும். அவன் அன்பு வைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என என்னும் அளவிற்கு பாசமானவன். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமாட்டான் . அதேபோல் தன்னை ஏமாற்றினால் , அவர்களிடத்து வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேர்ந்தால் அவனது கோபத்தின் அளவே வேறு விதம். அப்போதும் அவன் எந்த எல்லைக்கும் போவான். என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமாட்டான் . அவனை ஓரளவிற்கு புரிந்து வைத்தவன் அவனது நெருங்கிய நண்பன் அர்ஜுன் தான்.

அவன் படுக்கையில் விழுந்து இமைகளை மூடியதும் அந்த பெண்ணின் முகம் நினைவு வந்தது. ஏதோ ஒரு வசீகரம் அவளிடம் தன்னை இழுப்பதை உணர்ந்தான் ..விழித்தெழுந்தான்.. யாருன்னு தெரியாம ஒருத்தர பார்த்து சிரிக்கிறது, பொது இடத்தில் அவன் அருகில் நின்று நெருக்கமானவர் போல காட்டிக்கொண்டது , தன்னை பின்தொடர்ந்தது என நினைத்து அவளை தப்பானவள் என்றே முடிவுகட்டிவிட்டு இன்னொரு தடவ என் கண்ணு முன்னாடி வரட்டும் அவளுக்கு இருக்கு என்று திட்டிக்கொண்டே படுத்தவன் “ஒருவேளை இதெலாம் எதேச்சியா கூட நடந்திருக்கலாமே என நல்ல விதமாவும் நினைக்க, சரி முடிஞ்சளவுக்கு இந்த மாறி பொண்ணுங்க கண்ணுல படமாயிருக்கணும்” என்றான். பாவம் ஆண்டவன் இவளுடைய விஷயங்களில் இவனின் வேண்டுதலை செவிசாய்த்து கேட்கவில்லை, கேட்கபோவதுமில்லை என்பதை அறியாமல் அவளை தன் நினைவில் இருந்து துரத்திவிட்டதாய் எண்ணி உறங்கியும் போனான்.

தூங்கியெழுந்தவன் மாலை அவன் பால்கனியில் இருந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். தன் வீட்டின் முன்பு ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதை பார்த்தவன். யாரென்று கண்டுகொண்டதும் கோபமுற்றான். காலையில் பார்த்த அதே பெண். நம்ம வீட்டு வாசல்ல நின்னிட்டு என்ன பண்றா?உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்தவளது செய்கை இவனுக்கு புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவன் வேகமா கீழே வந்து பின்பக்கமாக சென்று அவளை கவனித்தான் .

அந்த நேரத்தில் அவள் போன் அலற அதை அவசரமாக எடுத்து “இப்போ எதுக்கு கால் பண்ற? மறுமுனையில் என்ன சொன்னார்களோ இவள் “பாரு நமக்கு ஒன்னு வேணும்னா நாமதான் அதுக்கு போராடணும். முடிவு பண்ணிட்டா அதுக்காக எத செய்யவும் தயங்கக்கூடாது. நீ தைரியமா பண்ணு எதுனாலும் பாத்துக்கலாம். முடிஞ்சா பேசிப்பாரு இல்லாட்டி strong ஆ பேசி கொழப்பிவிட்டிடு. மத்தவங்கள யோசிக்க விடாம பண்ணாதான் நம்ம சொல்றதே கேப்பாங்க. இப்போ நானும் அதைத்தான் பண்ணப்போறேன் என சிரிக்க சரி நா அப்பறோம் பேசுறேன் டாடா” என்று கால் ஐ கட் செய்தாள்.

[அவள் தோழி சசி இடம் அவ்வளவு நேரமும் பேசிவிட்டு வேலை சம்மந்தமான பிரச்சனை அதுவுமில்லாம அவள லவ் பன்றேன்னு கூட ஒர்க் பண்ற விக்கி அவளை தொடர்ந்து கொண்டிருந்தான் . சசிக்கு விக்கிய பிடிக்கும் இருப்பினும் குடும்பத்தில் ஒத்துக்கமாட்டாங்க என நினைத்து கொண்டு அவள் லவ்வை விக்கியிடமும் சொல்லாமல் வீட்டில் இப்படி தான் சொல்வார்கள் எனவும் இவளே முடிவு எடுத்துக்கொண்டு புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தாள்..

அதற்கு தான் இவள்உனக்கு பிடிச்சா நீதான் சொல்லணும் . பிரச்சனை வந்தாலும் பேஸ் பண்ணனும். இல்லாட்டி அத பத்தி நினைக்காம இரு. உங்க வீட்ல சொல்றவிதத்துல சொன்னா புரிஞ்சுப்பாங்கனு நினைக்கிறேன். நமக்கு ஒன்னு வேணும்னா நம்ம தான் பேசணும், நீ விக்கி தான் வேணும்னு முடிவு எடுத்திட்டா அதுல இருந்துமாறவும் கூடாது.” என்றாள்.

சரி யோசிக்கிறேன் என்றுவிட்டு மேனேஜர் ரொம்ப திட்டாரு டி நம்ம சொல்றத கேட்டாளாவது எதுனால ஒர்க் லேட்டாகுத்துன்னு நம்ம எக்ஸ்பிளான் பண்ணலாம் ஆனா மனுஷன் எரிஞ்சு விழறான்என்றாள் சசி . அதற்கு தான் இவள்முடிஞ்சா பேசிப்பாரு இல்லாட்டி இத பண்ணவே முடியாதுன்னு strong பேசி கொழப்பிவிட்டிடு. மத்தவங்கள யோசிக்க விடாம பண்ணாதான் நம்ம சொல்றதே கேப்பாங்கஎன்று சொல்லவிட்டு வந்தாள்.]

மறுபடியும் அவள் கால் செய்து எனக்கு மட்டும் ஏன் டி இப்டி நடக்குது விக்கிய பாக்க கஷ்டமா இருக்கு இதுல இந்த மேனேஜர் டார்ச்சர் தாங்கல டி, ரொம்ப திட்றாரு நான் சொல்ல வரத்தையே கேக்கமாட்டேன்கிறான் அந்தாளு என அதே புலம்பலை ஆரம்பிக்க இவள் திரும்பவும் விக்கி மேனேஜர் லவ் ஒர்க் இந்தமாறி விசயங்களை மட்டும் விடுத்து அவசரமாக பதிலை மட்டும் மேற்கூறியவாறு கூறினாள்.

இவள் பேசியதை மட்டும் கேட்டவன் “ச்ச.. என்ன பொண்ணு இவ இப்படி எல்லாம் பேசுறா, ஒன்னு வேணும்னா என்ன வேணாலும் செய்யலாமா? அதுவும் இவ சொல்றத கேக்கலேனா மத்தவங்கள குழப்பி விட்டரலாம்னு சாதாரணமா ஏமாத்த ஐடியா தராளே?” என நினைத்துக்கொண்டு இருக்க அவள் இவன் வீட்டினுள் நுழைந்தாள்.

எதிரே ஆதியின் அம்மா வந்து “யாரு வேணும்??” என்று இவளிடம் கேட்க இவள் “அத்தை என்ன பாத்தா இப்பிடி கேக்கறீங்க என்ன மறந்திட்டீங்களா அம்னீசியாவா? ” என கேட்டாள்.

சந்திராவோ “இங்க பாரு மா என்ன எதுக்கு நீ அத்தைனு கூப்பிட்ற? எதுக்கு இங்க வந்த ? யாரு நீ? ” என மீண்டும் கேட்க, இவளோ கூல்லாக “எதுக்கு இத்தனை கேள்வி சரி ஒன்னு ஒண்ணா பதில் சொல்றேன் . உங்க பையன கல்யாணம் பண்ணிக்கபோறேன் அதான் அத்தைனு கூப்பிட்டேன்.

உங்க வீடு சொத்தெல்லாம் ராஜ்ஜியம் பண்ணத்தான் வந்தேன். இவளோ உரிமை இருக்குன்னா நான் உங்க மருமகத்தானே அத்த ?” என்றாள்.

சந்திரா “அப்படி எல்லாம் எனக்கு எந்த மருமகளும் இல்ல. நீ மொதல்ல வெளில போ” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அந்த பெண்ணோ “நான் ஏன் போகணும் நானே இல்லாத வீட்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. போகணும்னா வாங்க 2 பேரும் வீட்டை விட்டு வெளில போகலாம்” என்றாள். சொல்லி முடிக்கவும் திவியின் கன்னத்தில் இடியென வந்திறங்கியது ஆதியின் கரங்கள்.

ஒரு நிமிடம் தள்ளாடி நின்றவள் பின்புதான் உணர்ந்தாள் காலையில் கோவிலில் பார்த்தவன் எதிரே நிற்கிறான் இவன் தான் தன்னை அடித்துள்ளான் என்பதை.

அவனோ கண்களில் தீப்பொறியுடன் “உனக்கெல்லாம் வெக்கமா இல்ல ? இப்படி அலையிறீங்களே அசிங்கமா இல்ல? நீ எனக்கு பொண்டாட்டியா ? இன்னும் எத்தனை பேர் வீட்ல இப்படி எல்லாம் சொல்லிட்டு சுத்திருக்க ? எங்க அம்மாவையே வெளில போக சொல்றியா? கொன்றுவேன் டி உன்ன, என்றதும் அவள் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் “பேசாத ..பேச விட்டதானே குழப்பி விட்டு உங்க வழிக்கு கொண்டுவருவீங்க மொதல்ல வீட்டை விட்டு வெளில போடி ” என கொலைவெறியுடன் கத்திகொன்றிருந்தான்.

அவளுக்கு முழுவதும் புரியவில்லை என்றாலும் ஏனோ உடல் நடுங்க உடனே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இவனும் ரூமிற்கு சென்று திட்டிக்கொண்டிருந்தான் “என்ன பொண்ணு இவ அடிச்சும் அவ்வளவு தைரியமா நிக்கிறா.. ரொம்ப அழுத்தம்..இல்ல திமிரு … ” பொதுவாக மாட்டிக்கொண்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் மீது தவறில்லை என நடிப்பவர்கள் தான் பார்த்திருக்கான். ஆனால் இவளோ கொஞ்சம்கூட கண்கலங்காம அவள் நின்றதை நினைத்து இவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது.

‘ச்ச…இவள கொஞ்சநேரம் கூட நல்லவிதமே நினைக்கவேமுடிலை. நினைச்ச கொஞ்ச நேரத்துல கண்ணுக்கு முன்னாடி வந்து நீ நினைச்சதை விட நான் ரொம்ப மோசம்னு காட்டிட்டு போய்ட்டாளே’ என கொந்தளித்துக்கொண்டு இருந்தான்.

அங்கே அவளோ நேரே சென்று தன் அறையில் முடங்கியவள் “யாரா இருப்பான்.. காலைல கோவில்ல பாத்தோமே… மதி அத்தையும் நானும் தான் பேசிட்டு இருந்தோம். அரைகுறையா கேட்டுட்டு வந்து அடிச்சுட்டான் இடியட்.. என்ன சொன்னா? நீ எனக்கு பொண்டாட்டியா ? எங்க அம்மாவையே வெளில போக சொல்றியா?வா…அப்டினா

ஓ..அப்போ ராஜா வந்திட்டாரா? அத்தை ஏன் முன்னாடியே சொல்லல….

ஆனாலும் அவன் என்ன இப்படியெல்லாம் பேசுறான். இவனை பத்தி என்ன எல்லாம் சொன்னாங்க. ஆனா இவ்வளோ மோசமா பொண்ணுங்கள பத்தி நினைக்கறனே என்றவள் பொறுமையாக நடந்ததை எண்ணி பார்த்தாள். அவன் வெளியில் இருந்து வந்தான் என்றால் நான் மதி அத்தையுடன் விளையாட்டாய் பேசியதை கேட்டிருப்பான். ஓ.. அதான் சார் தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி வல்லு வல்லுனு விழுந்தாரா…அவரோட அம்மாவை வெளில போகசொல்லிட்டேன்னு தான் அவ்வளோ கோவமா?…இருந்தாலும் என்ன அடிக்க என்ன உரிமை இருக்கு. பேச்சும் கொஞ்சம் ஓவர் தான். நாளைக்கு பாத்துக்கறேன். ஆனா ஊர்ல இருந்து எப்போ வந்தாரு ? அத்த என்கிட்ட செல்லவேயில்ல.. இந்த வாரத்துல வருவான்னு சொன்னாங்க..ஆனா இவரை காலைல கோவில்ல பாத்தேனே..எப்படி என்று பாதி புரிந்தும் புரியாமலும் குழப்பிக்கொண்டுஇருந்தாள்..ச்ச.. ஒண்ணுமில்லாத பிரச்சனைக்கு என்னவே எவ்வளோ நேரம் திங்க் பண்ண வெச்சுட்டான்.. ராஜா அம்மா செல்லம்னு சொல்லிருக்காங்க. இருந்தாலும் இவ்வளோ செல்லமா இருந்திருக்க வேண்டாம்.. அப்ப்பா …என்ன அடி.. என்று கன்னத்தை தடவிக்கொண்டு வலியில் அப்டியே படுத்துவிட்டாள்.

ராஜலிங்கமும், மகாலிங்கமும் தங்களது கிராமத்தில் இருந்த 10 ஏக்கர் நிலத்தில் உழைத்து ஈட்டிய பணமும், 5 ஏக்கர் விற்று கொஞ்சம் பணம் சேர்த்து கோவையில் ஒரு சிறு தொழில் ஆரம்பித்து தங்களது கடின உழைப்பால் இன்று உயர்ந்து ஒரு பஞ்சு ஆலையை நிறுவி வெற்றிகரமாக நடத்திவருகின்றனர் . ஒருவேளை சாப்பாடு கிடைக்க கஷ்டப்பட்ட தமையர்கள் இப்போது 100 பேருக்கு வேலை தந்து அவர்களின் வயிற்று பாட்டினை போக்கி மனநிறைவுடன் வாழ்கின்றனர் . அவர்களது மனைவிமார்களும் உற்ற துணையாய் என்றும் வாழ்கின்றனர் .அவர்கள் இருவரும் குழைந்தைகள் குடும்பம் என அனைத்திலும் அனுசரித்து இத்தனை வருடமும் தங்களிடம் பிரச்சனை, பிரிவு , சண்டை என எதுவும் வராமல் வாழ்க்கையை கொண்டுபோனதால் தான் தங்களால் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்வில் உயர முடிந்தது என்பதை அண்ணன் தம்பி இருவரும் எப்போதும் மறந்ததில்லை . அவர்கள் நால்வரும் எப்போதும் பிள்ளைகளை பிரித்து பார்த்ததே இல்லை . ராஜலிங்கம் – ராஜலக்ஷ்மி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் . மகன் சிவபிரகாஷ் – மதுரையில் தனியார் வங்கியில் வேலையில் இருக்கிறான் . அவனுக்கும் சிவரஞ்சினிக்குமான 2 வருட திருமண வாழ்வில் இப்போது 2 மாத இளந்தளிரை தன் வயிற்றில் சுமக்கிறாள். மகள் தர்ஷிணி கணினியில் முதுநிலை பட்டம் பெற்று தனக்கு ஆனால் அந்த துறையில் விருப்பமில்லை என்று பேஷன் டிசைனிங் படிக்க 1 வருடம் கோர்ஸில் சேர்ந்துவிட்டாள் . திவியை விட தர்ஷினி 9 மாதமே இளையவள். இவர்கள் இருவரையும் விட சிவா 4 வருடம் மூத்தவன் . முதல் தங்கை என அறிமுகமானதாலோ என்னவோ அவனுக்கு திவி மேல் எப்போதும் தனி பிரியம் உண்டு. திவ்யாவும் அதுபோலவே அனைவரிடத்தும் அன்போடு இருப்பினும் அண்ணனிடம் சற்று சலுகை அதிகம். என்றாலும் இருவரும் தர்ஷினியை எப்போதும் விட்டுகுடுத்ததில்லை..

பரம்பரை பணக்காரரான சந்திரசேகர் சொந்த ஊரில் நிலம் பண்ணைவீடு என இருந்தபோதிலும் பிள்ளைகளின் வருங்கால படிப்பிற்காக கோவையில் வந்து செட்டில் ஆகிவிட்டனர். சந்திரசேகர் சொந்த ஜவுளிக்கடையும் ஏற்றுமதி இறக்குமதி பிஸினஸும் செய்கிறார் . சந்திரசேகர் – சந்திரமதி இவர்களுக்கு 4 பிள்ளைகள் . முதல் பெண் அபிநயா – அரவிந்தோடு திருமணம் முடிந்து 3 வருட பையன் அபிநந்தனோடு மகிழ்ச்சியாய் இருக்கின்றனர் . இப்போது அடுத்த வாரிசின் வரவிற்காக அனைவரும் மாதங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

இரண்டாவது மகன் ஆதித்யா (ஆதித்ய ராஜா) – தனக்கான விருப்பம் என சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்து கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்க நினைத்தாலும் தந்தையின் பிசினஸ்சை கைவிடாமல் இருக்க வெளிநாட்டில் mba முடித்து இந்தமுறை இந்தியா வருகிறான் . அடுத்த மகள் அமுதா டிகிரி முடித்து விட்டு தற்போது திருமணத்திற்கு தயாராகும் அழகிய பதுமை . வாய் நீளத்தோடு, வாலுமான கடைக்குட்டி அணு 12 வகுப்பில் அடியெடுத்து வைக்கிறாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: