Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 61

உனக்கென நான் 61

ஆமா உங்களுக்கும் அன்னாவுக்கும் என்ன பிரட்சனை என இருவரும் கேட்க ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

“இல்லையே அப்புடி எதுவுமில்லையே” என மீண்டும் கோரஸ்பாட இந்த கேள்விகள் இரண்டுபேருக்கும் செதுக்கியெடுக்கபட்டவை “அப்புறம் ஏன் அண்ணா அப்புடி பன்றாரு” என மீண்டும் கேட்க இந்த முறை அன்பு மௌனமானாள்.

“சொல்லுங்க அன்னி என்ன பிராப்ளம்” சுவேதா விடுவதாக இல்லை.அதனால் அன்பு சோகமானாள். “என்ன அண்ணி நான் எதாவது தப்பா கேட்டுடேனா” என்றாள் மீண்டும்.

“இல்ல அன்னி அவுகளுக்கு வேலை இருக்கு அதான்” என இழுத்தாள். “அவனக்கு எந்த வேலையும் இல்ல அங்க கோபி சொன்னாங்க” என சுவேதா வாய் தவறி உளறிவிட அன்பரசிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க ‘இந்த கேள்வியை கேட்டிருக்ககூடாதோ’ என சுவேதா வருந்தினாள்.

“இல்ல அன்னி ஊரவிட்டு பிரிஞ்சு வந்துட்டேன்ல அதான் அவருகூட சரியா பேசல அதுக்கு சின்ன சன்டை வேற எதுவுமில்ல அன்னி” என அன்பு சமாளித்தாள் அவள் கண்ணில் பொய் மின்னியது. மனமோ

‘உன்கிட்ட குழந்தை கேட்டதுக்கு என்ன தப்பா நினைச்சுட்டியா சந்துரு நான் உன்ன எவ்வளவு லவ் பன்றேன் தெரியுமா அதனாலதான் உன்ன சாகவிடகூடாதுன்னு கேட்டேன் நீ என்ன புரிஞ்சுக்கலைல. சரி எனக்குனு இந்த உலகத்துல என்ன இருக்கு. அவனும் போயிட்டான் இப்ப உன்மேல அன்பு வந்துச்சு நீயும் என்ன தப்பா நினைச்சுட்ட எல்லாம் என் விதி’ என நினைக்க

“என்னப்பா டீப் திங்கிங்கா இருக்கு! உங்க மனசுகுள்ள இருக்குற திட்டத்த கண்டுபிடிக்குற அளவுக்கு நான் உங்க அளவுக்கு பெரிய செஸ் பிளேயர்லாம் இல்லப்பா நீங்களே சொன்னாதான் உண்டு”

“அட அன்னி நீங்க வேற நான் எதுவும் நினைக்கல”

“அப்புறம் ஏன் இந்த சைலன்ட்”

“இல்ல நீங்க ஏன் சுகு அண்ணாகூட பேசல? எங்க கல்யானத்துல இருந்து பாத்துகிட்டுதான் இருக்கேன் பாவம் அவரு ஏர்போர்ல எல்லாரும் இருந்தும் அனாதை மாதிரி நின்னாரு”

இப்பொழுது சுவேதாவின் முகத்தில் சோகம் உள்ளம் உறுத்த ஆரம்பித்த தருனம் ‘ஏன்டா சுகு உங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு என்ன பிடிக்கல ஆமா நான் டிரக் அடிக்டா இருந்தா யாருக்குதான் பிடிக்கும் சொல்லு. அதுலையும் நான் எந்த ஜாதி பொண்ணுணுவேற தெரியாது இதுல உங்க வீட்டுல ஜாதி பாத்துதான் உங்க கம்பெனில வேலையே தருவாங்க! நீகூட அன்னைக்கு ஒருநாள் தெரியாம ஃபோன் ஆன்பன்னி வச்சுட்டு போகலைனா எனக்கு இந்த விசயம் தெரிஞ்சுருக்காது. உங்க அம்மா உன்ன திட்டுனாங்க “யாருடா அந்த சிறுக்கி உன்ன வழச்சு போட பாக்குறாளா! இந்த குடும்பத்துக்கு மறுமகளா வர்ரதுக்கு ஒரு மதிப்பு வேனும்” கூடவே உங்க தங்கச்சி “ஆமா அம்மா இவன் ஒயிஃப்னு போட்டு ஒரு நம்பர்ல பேசிகிட்டே இருக்கான்மா” அதுக்கு அப்பறம் உன்ன திட்டுறத என்னால கேக்க முடியலடா அதான் நீ சந்துரு கல்யானத்துல பன்னத சாக்கா வச்சுகிட்டு உன்கூட பேசாம இருக்கேன் என்ன மறந்துட்டு நீ நிம்மதியா வாழுடா! எப்படியும் இந்த டிரக்ஸ் என்ன இரண்டு வருசத்துல கொண்ணுடும் ஏன் என்ன வீனா காப்பாத்த நினைக்குற நீ! காலேஜ்ல நீ என்ன பாத்ததுல இருந்து நீ என்னால கஷ்டத்த மட்டும் தான் அனுபவிச்சிருக்கு அதான் நீ நல்ல இருக்கேன்னு நிம்மதியோட என்ன சாக விடுடா’ என தனக்கு ஆசைபடவே தகுதி இல்லை என்ற மனப்பான்மையோட தன்னை காயபடுத்திகொண்டிருந்தாள்.

“என்ன அன்னி என்ன சொல்லிட்டு நீங்க இவ்வளவு நேரம் திங்க் பன்றீங்க மஞ்சுளா எதுவும் செஸ் டிரயினிங் குடுத்தாங்களா” என அன்பரசிகூற இயல்புநிலைக்கு வந்தது.

“ம்ஹூம் இப்ப அதுதான் குறையாக்கும்” என சுவேதா கூற நந்தினி அம்மா வந்து இவர்களுடன் அமர சுவேதா அரிசியின் சாகசம் என அந்த ஊரில் சேகரித்த துணுக்ககளை சேகரித்துதன் தாயிடம் கொட்டிகொண்டிருந்தாள்.சிரிப்பு சத்தங்கள் அரங்கேற அரிசி சைலன்ட் டூத ஃபார்ம்,

பின் வீட்டிற்கு வந்தாள் அன்பு இரவில் தன்னவன் அருகில் இல்லை மிகுந்த ஏமாற்றம் சூழ்ந்தது. அவனது நினைவாக விட்டு சென்ற அந்த டெடி பியர் இருக்க அதை பார்த்தாள். அது அவன் இல்லாம்ல் இவளை பார்க்க அதை அனைத்துகொண்டாள். தன்னவனின் அனைப்புகிடைக்கும் என்ற ஏக்கம் அவளுக்கு.

நரக இரவுகளை எனக்களித்த

நாடக மைந்தன் கடமையாக

இருக்க என் தனிமை

அழுகை துக்கம் தோலுரித்து

அன்பு பரப்பி நகையணியவைத்து

அரிசிக்கழகு அரசி பட்டம்

இங்கு என தலைவா

உன் துணை தேடும் கூட்டுபுழு

நீ இல்லமல் விழிஈர இரவுகள்

உந்தன் அனைப்பாய்

இந்த கரடிபதுமை விட்டாய்

துணையென அதற்காறுதல் நான்

எனக்காறுதல் உந்தன் நினைவு

திரும்பி வா என்னவா!”

என இரவுகள் தன்னவன் இல்லாமல நரகமாக கடந்தது. காலையில் எழுதல் தன்னவனின் முகம் பார்த்தல் புகைபடத்தில் அன்னையுடன் சமையலறையில் உளாவுதல். சுவேதா தன் அண்ணன் இல்லாத்தால் தினமும் வந்துவிடுவாள். இல்லையெனாறால் அரிசி தனிமையாக உணர்ந்துவிடுவாள் அல்லவா. அவளுடன் உரையாடுதல் என்று காலம் நகர்ந்தது.

‘சே அன்ப பாக்கம் இருக்க முடியலையே சீக்கரம் அவ முகத்தயாவது காட்டுடா’ என அடிமனதில் ஓர் வலி எடுத்தது சந்துருவுக்கு இந்த ஒரு மாததை கடந்துவிட்டான் அவளை பார்க்கமல் எனபது பெரிய காரியம்தான்.

தன்னவளிடம் மனதை கொடுத்துவிட்டு எந்த மனதை வைத்து வேலை செய்வான் பாவம்.

“என்ன மேடம் பன்னி வச்சுருகீங்க சும்மா ரீசன்லாம் சொல்லாதீங்க இன்னொரு முறை தப்பு நடந்துச்சுன்னா வேற கம்பெனி பாருங்க” என அந்த பைலை தூக்கிவீசினான் சந்துரு. எதிரில் நின்றிருந்த பெண்ணிற்கு கண்கள் கலங்கியது. அந்த பைலில் சிதறிய காகிதங்களை சேகரிக்க.

“அதுல எதுவுமே ஒழுங்கா இல்ல நீங்க இத கலெக்ட்பன்னீ டைம் வேஸ்ட் பன்னாம போயி புதுசா ரெடிபன்னிட்டு வாங்க” என்று கூற அவள் கண்ணீரை துடைத்துகொண்டே வெளியேறினாள். அங்கு வந்து கோபியின் கண்ணில் சிக்கியது. கோபிக்கு புரிந்தது “ஓ இதுதான் தனக்கு மனதுக்கு பிடித்தவர்களை விட்டு பிரிந்தாள் வரும் கோபமா” என நினைத்துகொண்டு சந்துரு அறைக்கு வெளியே நின்றான்.

“எக்ஸ் கியூஸ் மி சார்” இது கோபி. சிறிது நக்கலும் கோபமும் கலந்திருந்தது.

“அண்ணா இது என்ன விளையாட்டு”

“அப்பாடா நீ யாருடான்னு கேட்டுடுவியோனு பயந்துட்டேன்”

“என்ன சொல்றீங்க நீங்க” குழப்பமடைந்தான் சந்துரு.

“இல்லப்பா இங்க சந்துருன்னு ஒரு பையன் இருந்தான் அவன நீங்க பாத்தீங்களா”

“கோபி அண்ணா இது என்ன வித்தயாசமாஇருக்கு”

“பின்ன என்னடா நீ! நம்ம அஃபிஸ் மேல அக்கறை இருக்குற ஸ்டாஃப்ல ஸடெல்லாவும் ஒருத்தி நீ கூட ரொம்ப பெருமையா நிறையதடவ சொல்லிருக்க ஆனா இப்ப அந்த பைல் பறந்துச்சு அததான் நான் பாத்தேனே” என முகத்தை திருப்ப.

“அந்த டேட் பாத்தீங்களா என்ன பில் பன்னிருக்கான்னு”

“அட பாவி இது அடுத்த வருசத்துக்கு ஆர்டர் ரினிவல் பன்னிருக்காட அவ அந்த காஃபிதான் இது. இந்த வருசம் ஆர்டர் முடிஞ்சிடுச்சுடா! நான் வெரிஃபை பன்னிட்டுடதான் அனுப்புனேன்டா”

உடனே சந்துரு அந்த சிதறிகிடந்த பேப்பர்களை பார்க்க அதில் இப்போது தவறு இல்லை. அவன் பார்த்துகொண்டிருக்கும்போதே “ம்ம் அவ ஹஸ்பென்ட் இன்னைக்கு பாரின்ல இருந்து வர்ராரு. அவளோட குழந்தைக்கு இப்ப மூனு வயசு கடன அடைக்க போனவரு இப்பதான் திரும்புறாரு. பிரசவத்துக்குகூட கூட இருக்கல. அதான் சார் லீவு தருவாரான்னு தெரியலைன்னு சொல்லிகிட்டு தயங்கி தயங்கிதான் வந்தா ஆனா நீ!” என கூறிவிட்டு “அதெல்லாம் பாசம் கிடைக்கம அலையுறவங்களுக்குதான தெரியும் அன்புனு பேரோட அன்பா ஒரு ஒயிஃப் கிடைச்சும் இப்புடி உட்காந்துகிட்டு இருக்குற சிலருக்கு எப்புடி புரியும்’ என ஜாடையாக பேச அந்த ஏசி அறையில் சந்துருக்கு கேட்காமல் இல்லை.

“என்னமோ பன்னுங்கப்பா! இங்க பாரு சந்துரு வேலைல கவனம் இல்லைனா கொஞ்சம் ரெஸ்ட் எடு இல்லைனா கம்பெனியோட நிலைமை சொல்றமாதிரி இருக்காது” என திட்டிவிட்டு கோபி வேளியே போக சந்துருவின் மனதை அது உறுக்க ஆரம்பித்துவிட்டது.

“அன்பு இல்லாம அலையுறவங்களுக்கு தெரியும். உனக்கு போய் அன்பா ஒரு ஒயிப் கிடைச்சுருக்கா பாரு” என கோபியின் வார்த்தைகள் திரும்ப திரும்ப கேட்டன.

ரிசிவரை எடுத்தான். “ஸ்டெல்லா கொஞ்சம் கேபினுக்கு வாங்க”

“இன்னும் பேப்பர் முடிக்கல சார் ஒரு 5min முடிச்சுடுவேன் சார்” என அவள் கூற ஒருநாள் வேலையை இவளால் எப்படி அரைமணிநேரத்தில் முடிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அவனுக்கு,

“இல்ல நீங்க வாங்க”

அவள் வந்ததும் “இந்த பைலே கரெக்டாதான் இருக்க மேடம்” என அதை எடுத்து டேபிளில் வைத்தான். “ஓகே சார் அப்ப நான் இத போஸ்ட் பன்னிடுறேன்” என அதை எடுக்க போகும்போது அதில் கைவைத்தவன். “இத லதா பன்னவாங்க அக்கா” என்றான் அவள் பார்க்க.

“எத்தன மணிக்குக்குகா பிளைட்” என்றான்

“என்ன சார் சொல்றீங்க”

“இல்ல உங்க ஹஸ்பென் வர்ராங்கள்ள இன்னைக்கு”

“ஆமா சார்”

“அதான் கேட்டேன”

“அப்பா கூப்பிட போயிருக்காங்க! பிளைட் ஒரு மணிநேரம் லேட்டாம்” என அவள் கண்களில் ஒரு ஆர்வம் ஆசை காதல் தெரிந்தது.

“இந்தாங்க ஒருமாசத்துக்கு சம்பளம்” என ஒரு கவரை வைத்தவன் “இன்னும் ஒரு மாசத்துக்கு லீவு எடுத்துகோங்க அக்கா முதல்ல ஏர்போர்போங்க அவங்க உங்களதான் தேடுவாங்க அவங்கள ஏமாத்திட வேணாம் கிளம்புங்க”

“ரொம்ப த்தாங்கஸ் தம்பி” என்றாள். முதல் முறை சாரிலிருந்து தம்பி உரிமையாக. “அக்கா என்ன மன்னிசிடுங்க”

“எதுக்கு” என விழியால் அவள் பார்க்க “இல்ல அப்ப நான் ரொம்ப கோவமா நடந்துகிட்டேன் அதான்” என முகத்தை சுறுக்க “இதென்ன தம்பி வாழ்கைல நிறைய பாத்துட்டேன்” என அவள் வார்த்தையில் ஒரு வழியுடன் கடந்து போனாள்.

இப்படிதான் தன்னுள் பல கஷ்டங்களை வைத்துகொண்டு பிறருக்காக சிரித்து வாழ்வதில் ஓர் அலாதி இன்பம் இருப்பதை உணர்ந்தான். தன்னவள் ஆசையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவள் அருகில் இருந்து அவளை சிரிக்க வைக்கலாம் என நினைத்து வெளியேற அங்கு கண்கள் கோபியை தேடியது. புத்துருக்கோர் போதி மரம் போல சந்துருக்கு கோபி அல்லவா இன்று.

“கோபி சார் எங்க” என கேட்க “அவரு டீ சாப்பிட போனாருங்க” என்ற பதில் கிடைத்தது. ஆம் கோபிக்கு மனசு சரியில்லை எனில் இந்த ஐயங்கார் பேக்கரி டீதான் ஆறுதல்.இன்றும் சந்துருவின் மனதை காயபடுத்தியதால் கோபிக்கு சிறிது வருத்தம் இருக்கும் என்பதை இந்த டீகடை படையெடுப்பு காட்டியது. இந்த விததில் கூறினாள்தான் புரியும் என்ற மனோபாவத்தில் இருந்தான் சந்துரு. அதனால் கோபிக்கு வேறு வழியில்லை

“என்ன அண்ணா இங்க வந்துட்டீங்க”

“என்னப்பா ஒரு டீ சாப்பிடலாம்னு வந்தேன்”

“அப்புறம் கம்பெனிய யாரு பாக்கறது” என்று சந்துருகூற கோபி சந்துருவை பார்க்க சந்துரு அந்த சாவியையும் அந்த மொபைலையும் வைத்தான் அந்த டேபிளில்.

“நிஜமாவா” இது கோபி கூடவே ஒரு சின்ன குறிப்பு குடும்ப வாழ்கைக்கு கொடுத்தார் “சந்துரு எந்த பிரட்சனையா இருந்தாலும் மனசுவிட்டு பேசுனா முடிவுக்கு வந்துடும்” என கூற “ஆமா அண்ணா உண்மதா” என

சந்துரு எழுந்து தன் காரை நோக்கி நடக்க “எப்படா திரும்ப வருவ”

“தெரியல ஒன்னு நீங்களா கூப்பிடனும் இல்லைனா என் ஒயிப் அடிச்சு விரட்டனும்”

“நான்னெல்லாம் கூப்பிடமாட்டேன்பா அவதான் உன்ன அடிச்சி விரட்டுறமாதிரி இருக்கும்”

“ஆமா அப்புடி ஆளுதான் அன்பு ஆனா போக சொல்லி விரட்டமாட்டா வேனுமுனா போகதனு சொல்லி அடிப்பா” என சிரித்தான்.

“சரி சரி ஒரு டீயாவது சாப்பிட்டு போ”

“அட இல்லண்ணா இப்போவே லேட் ஆகிடுச்சு”

“ஆமா ஆமா ஒருமாசம் லேட் ஆகிடுச்சு” என்று கோபி முடிக்க காரில் இருந்தான் சந்துரு.

தன்னவளை தேடி சக்கரங்களை இறக்கை ஆக்கினான்.

“ம்ம் அன்னி இது ராணிதான இதுக்கு இவ்வளவு பவரு ஆனா ராஜாக்கு பவரு கம்மியா இருக்கே ஏன்” சுவேதாவின் உச்சகட்ட கேள்வி. இப்போதுதான் சதுரங்கத்தில் நுழைகிறாள். கோச் அரிசி.

“ம்ம் அது அப்புடிதான் ராஜாவ பாதுகாக்க வேண்டியது ராணியோட கடமை”

“ம்ம் பாருங்க அன்னி அந்த காலத்துலயே பெண்களுக்கு அதிக உரிமை குடுத்துருக்காங்க ராணி எங்க வேனாலும் போகலாம் பாத்தீங்களா” என அரிசியின் குதிரையை வெட்டினாள்.

“இல்ல அன்னி செஸ் கன்டுபிடிச்ச காலத்துல ராஜாதான் எங்க வேனாலும் போகும் ஆனா இப்பதான் ரூல்ஸ் மாத்திகிட்டாங்க அப்புறம் குதிரை ஒருமாதிரி போகும் யானைகூட கிராஸா போயிருக்கு” என அந்த ராணியை சிப்பாயால் காலி செய்ய அது வெட்டபட்ட குதிரையின் அருகில் அமர்ந்தது.

“ஓஓ அப்ப இப்ப இருக்குற ஆண்கள்தான் நமக்கு ஃபேவர் பன்றாங்க இவங்க கிரேட்பா” என்று மெச்சினாள். தன் அன்னிக்கு சந்துருமேல் கோபம் இருந்தால் குறையும் என்று போடபட்ட நங்கூரம் இது.

காரில் வந்துகொண்டிருந்த சந்துருவின் கைபேசி ஒலிக்க புதிய எண் “ஹலோ யாரு”

“என்ன என்ன மறந்துட்டியா” என்ற குரல் கேட்க காரின் பிரேக்குகள் கடினமாக வேலை செய்தன.

“ஜான்சி மேடம்?” என்று கூற எதிர் புறம் சிரித்தது.

ஆனால் சந்துருவின் மனதில் இப்போது ஓடிகொண்டிருந்த தாரக மந்திரம் “பேசினா தீராத பிரட்சனை இல்ல” எனபதாகும்,

“நான் உங்கிட்ட ஒன்னு பேசனுமே” என்றான் பகையை முடிவுக்கு கொண்டுவர.

“யாருடா அது ஜான்சி சுவேதாவ நீ கல்யானம் பன்னலையா?” என்றது அந்த குரல்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: