Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56

உனக்கென நான் 56

ஃபோனை பார்த்து “வாட் என்ன சொல்றீங்க” என்றாள். பாலாஜிதான் மறுமுனையில் பேசினான். “ஹாப்பி நியூஸ்தான்மா”

“கன்ஃபார்ம்பன்னிட்டீங்களா”

“இல்லமா ரெகுலர் செக் அப் பன்ன சொல்லிருக்காங்கள்ள அதுல இப்ப ஃபைன்ட் பன்னிருக்காங்க. மேபி இருக்கலாம்”

“ஐயோ நான் இப்ப அண்ணாகிட்ட சொல்லியே ஆகனுமே” என குதித்தாள்.

“சுவேதா வேனாம் சந்தருக்கு சொல்லவேணாம்டி” என்று மஞ்சுவின் குரல். “ஏன்டி டிவின்ஸ்னா எவ்வளவு சந்தோஷபடுவான் தெரியுமா” என்று குதித்தாள்.

“சந்தோஷபடுற அளவுக்கு இந்த கடவுள் அப்புறம் கஷ்டத்த குடுத்துடுவாருடி அவனாவது நிம்மதியா இருக்கட்டும்” என்றாள் சோகமாக. “ம்ம் சரிடி பாப்பாங்கள பாத்தரமா பாத்துகோ” என இனைப்பு துண்டிக்கபட்டது.

அதன்பின் நேரம் செல்ல செல்ல கல்யானத்துக்கு வரமுடியாதவர்கள் பின் மனமக்களை வாழ்த்த தாமதமாக வந்தனர். அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்ற தம்பதியினர்(சாரி காதலர்கள்) தனியாக இருக்கட்டும் என மற்ற அனைவரையும் கோவிலுக்கு இழுத்துசென்றுவிட்டார் போஸ்.

“அரிசி எனக்கு உங்க ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு”

(மைன்ட் வாய்ஸ்-அப்ப என்ன பிடிக்கலையா) “ஏன்?”

“அதுக்கு எதுக்கு முகம் அப்புடிபோகுது! உன்ன பிடிச்சதாலதான் இந்த ஊர் எனக்கு பிடிச்சிருக்குமா”

(ஐயோ கன்டுபிடிச்சிட்டான்) “இல்லைங்க நான் சும்மா நினைச்சேன்”

“ம்ம் சரி வேற எதாவது சாகச கதைங்க இருந்தா சொல்லு அரிசி போர் அடிக்குது” என்று அவளருகில் அமர்ந்தான்.

அவள் காலை மடக்கிகொண்டு சுருண்டு அமர்ந்தாள் அந்த கட்டிலில் “இல்லைங்க அது சும்மா அந்த பேய்” என உளறினாள்.

“ஆமா அந்த பேய பிடிச்சீங்களா இல்லையா”

“இல்லைங்க அது வரவே இல்ல”

(ஆமா ரெண்டுகுட்டி பிசாசச பாத்து அது பயந்து ஓடிருக்கும்) “ம்ம் அப்ப யீ வரம் கேக்க முடியாம போயிருச்சுல” என்றான் சோகமாக.

“ம்ம்” என்றாள் அவளும்.

“சரி நீ சாக்லட்தான கேக்குறேன்னு சொன்ன”

“ஆமாங்க எனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்கும்” என்றாள் கண்கள் விரிய. அந்த பாவனை சந்துருக்கு மிகவும் பிடித்திருந்தது.”ம்ம் இந்தாங்க மேடம்” என அவளுக்காக வைத்திருந்த ஒரு சாக்லட்டை கொடுக்க அவள் ஆர்வமாக வாங்கி சாப்பிட அந்த அழகை ரசித்தான். அப்படியே “ம்ம் நம்ம வீட்டுல சாக்லட் மலையே இருக்கு” என்றான்

“ஆனா அம்மா நிறைய திங்க விடமாட்டாங்க” சோகமாக

“அத நான் பாத்துகிறேன்”

“ம்ம்”

“நான் தரனுமுனா ஒரு கன்டிஸன்பா! இல்லைனா கிடையாது.

“ம்ஹூம் கன்டிஸனா” என சினுங்கினாள்.

“ம்ம் ஆமா ரூல்னா ரூல்தான்”

“சொல்லுங்க”

“முதல்ல இப்புடி கூப்பிடுறத நிறுத்து” என அவன் கூற ஒரு குழப்ப பார்வை வீசினாள். “சரி அம்மா இல்லாதப்பயாவது சந்துருன்னு கூப்பிடு”

“சரி சந்துரு”

“ம்ம் குட், இப்ப நீ எனகூட டான்ஸ் ஆடனும் அதுதான் கன்டிஸ்ன்”

“ஐயோ முடியாதுங்க”

“அப்ப சாக்லட் இல்ல”

“வேணுமே” என்று கூறிவிட்டு “சரிங்க” என்று எழுந்தாள். சந்துரு தன் மொபைலில் இசையை ஒலிக்க ஆட துவங்கினர். சிறிதுநேரம் ஆட இருவரும் மூச்சுவாங்கினர். ஒருவரது சுவாசம் ஒருவரை தீண்டியது. மூச்சினுள் கலப்பது என்றாள் இதுதானா என அரிசி நினைத்தாள். அவளுக்கு முத்தம் தர எண்ணியது மனது அவளுது கன்னங்களை தன் கைக்குள் அடக்கினான். அவள் கண்களை மூடி அனுமதித்தாள்.

“அரிசி நீச்சல் கத்துகலாமா” என்றான் மெதுவாக.

“ம்ம்” என்ற குரல் இருக்க அவள் இதழருகில் சென்றான். அவனது அனைப்பில் அடங்கிபோனவள் எதிர்பார்த்து காத்திருந்தாள். அவளது உதட்டில் ஒட்டியிருந்த சாக்லெட் கறை அவனை அழைத்தது. இவ்வளவு அருகில் ஒரு ஆனின் மூச்சுகாற்றை அவள் உணர்ந்தது இல்லை.

அவள் உதட்டில் அவனது ஸ்பரிசம் பட்டது. அவனுது மற்ற விரல்கள் கன்னத்தை தாங்கியிருக்க கட்டைவிரல்கள் அந்த சாக்லெட்டை துடைத்துவிட்டன. அவளுக்கு ஏமாற்றம். ஆனாலும் அவன் தன் கன்னத்தை பிடித்திருந்த விதம் அவளுக்கு ஏதோ செய்தது. சட்டெ “ஐயோ பல்லி” என்ற சத்தம் வர கதவை திறந்துகொண்டு சுவேதா உள்ளே வந்து விழுந்தாள்.

அன்பு ஓடிபோய் கட்டிலில் அமர்ந்துகொண்டாள். “நீங்க டான்ஸ் ஆடுனத நான் பாக்கலைப்பா! இந்த கேமராமட்டும் பாத்துடுச்சு” என தன் கைபேசியை காட்ட அரிசியின் முகம் மாறியது. சந்துரு “சுவேதா குடத்துடு யார்கிட்டயும் காட்டாத”

“வெட்டியா இருந்தவனுக்கு விஞ்ஞானி வேலை கிடைச்சமாதிரி சும்மா வந்தவளுக்கு இது கிடைச்சுருக்கு விடுவேனா நானு” என்று எடுத்து ஓடு எதிரில் வந்த சுகு மேல் இடித்துவிட்டாள்.

பின் அவனை முறைத்துகொண்டே சென்றாள். அதை பார்த்த சந்துரு.”ஆமா உங்களுக்கள்ள எதுவும் பிரட்சனையா”

“அபபுடில்லாம் எதுவுமில்ல மச்சி”

“டேய் உண்மைய சொல்லுடா”

“ஆமாடா அந்த ஜான்சி வந்திருந்தாள்ள அவளுக்கு பயந்துதான் நான் சுவேதாவ ரூம்குள்ள  வச்சு பூட்டிட்டேன் உன் கல்யானத்த பாக்கமுடியலைனு கோபமா இருக்காட”

சந்துரு மௌனமாக நின்றான்.

“சரி விடுடா நான்தான தப்பு பன்னிருக்கேன் நான் தண்டனை அனுபவிச்சுகிறேன்” என உள்ளே நுழைந்தான்.

“சுவேதா அப்புடிதான்டா யார்கிட்ட கோவபடுறாளோ அவங்க மேலதான் அன்பா இருப்பா”

“அதுக்கு இல்லடா நான் கஷ்டபட்டு அவள ஆபரேஷனுக்கு சம்மதிக்க வச்சுருக்கேன் இப்ப கன்டிப்பா எனகூட”

“வருவா! அது என் பொறுப்புடா” என சந்துரு சென்றான். இவர்களின் உரையாடலை பார்த்த அரிசி. “ஏங்க அன்னிக்கு என்ன பிரட்சனை”

“அவ வெளியதான் சிரிச்சுகிட்டிருக்கா அன்பு மனசுஃபுல்லா ரனம்”

“அது எனக்கு தெரியும்ங்க”

“ம்ம் அத மறைக்க தப்பான வழிகாட்டுதலால அவ டிரக்ஸ்க்கு அடிமையாகிட்டா! இப்ப அந்த டிரக்ஸ் அவ உசுர கேக்கது. மாத்திரைபோடாம அவளால ஒருவாரம் கூட இருக்கமுடியாது. மாத்திரை போட்டாலும் சில வருசம்தான் இருப்பா”

“அவங்கள குணபடுத்த முடியாதாங்க” என சோகமாக கூறினாள்.

“ம்ம் அவளுக்கு ஆபரேஷன் பன்னி கவுன்சிலிங்க குடுக்கனும்னு என்பிரன்டி சொன்னான்!. 100% அவள மீட்டுடலாம். ஆனா அவ ஒத்துக்கமாட்டேங்குறா”

அரிசி சிறிது யோசித்துவிட்டு “ம்ம் நான் பாத்துகிறேன்” என்றதும் சந்துருக்கு மனதில் ஒரு மகிழ்ச்சி பிறந்தது. இப்படியே இவர்கள் பேசிகொண்டிருக்க. இரவு சாப்பிட அமர்ந்தனர்.

“மாப்ள நாளைக்கு மறுவீடு போயிடலாம் நாள் நல்லா இருக்கு” என்று போஸ்கூற.

“என்ன மாமா?” என்ற சந்துருக்கு சாதம் போட்டுகொண்டிருந்தாள் அன்பு.

“பொண்ணுபுகுந்த வீட்டுக்கு போகுற நாள்ப்பா”

போஸுக்கு சந்துருவின் பதில் எப்பொழுதும் “சரிங்க மாமா”

“ம்ம் நாளைக்கு காலைல பத்துமணிக்கு நேரம் நல்லா இருக்குமாப்ள” என சாப்பிட துவங்கினார்.

அந்தகட்டிலில் சோகமாக எதையோ யோசித்துகொண்டு அமரந்திருந்தாள் அரிசி. “என்னங்க மேடம் யோசனை” என அவளது தலையனையை எடுத்தான்.

“இத ஏன் எடுக்குறீங்க”

“நான் நேத்தே சொன்னேன்ல”

“ஆமா நைட்டு என்ன தூங்கவிடாம பன்னிட்டு இப்ப நல்ல புள்ளமாதிரி நடிக்குறீங்க”

“நான் என்னம்மா பன்னேன்”

“டெடிபியர்னு நினைச்சு என்னதான் கட்டிபுடிச்சிருந்தீங்க உடம்பெல்லாம் வலிக்குது”

“ஓஓ அதான் என்னடா டெடிபியர் அசையுதுன்னு பாத்தேன்” என தலையில் கைவைத்தான். “இருந்தாலும் அந்த டெடி ரொம்ப பாவம்ங்க”

“சாரி அரிசி தூங்க்கதுல” என்று அவன் கூற அவளுக்கு சிரிப்பு வந்தது.”சரி நான் தலைகானிய எடுத்துக்கவா இல்ல அந்த இடத்துல நீ வந்து படுத்துகுவியா? நான் தூங்குனதுக்கு அப்புறமா”

“நம்மலால முடியாதுப்பா” என எழுந்து அந்த மேஜையில் அம்ரந்துகொண்டாள். கூடவே ஜெனியின் டைரியும் துனைக்கு சென்றது.

“இன்னைக்கும் டைரிதானா?”

“இப்ப தூங்கலைனா அந்த டெடிபியர் தலைகானிய பிடுங்கி வச்சுகுவேன் பாத்துகோங்க”

“ஆமா எப்படி இருந்தாலும் நைட் அத தூக்கிபோட்டுட்டு நீ வந்து படுத்துக்குவ இதுக்கு எதுக்கு வெட்டி பில்டப்பு”

“யாரு நானாவ வந்தேன் புக்கு படிச்சவள கீழ தள்ளி விட்டட்டு” என்று இழுத்தாள்.

“நானா?”

“இல்ல ஓலபட்டாசுனு ஒரு ஆளு”

“அது யாருப்பா ஓலபட்டாசு”

“இப்ப நீங்க தூங்குறீங்களா இல்லையா”

“உத்தரவு டீச்சரம்மா” என திரும்பி படுத்தவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள். ஆனால் அந்த டைரியை அவள் எடுத்திருக்க கூடாது அது அவள் சிரிப்புக்கு உலை வைக்கும் என அவளுக்கு தெரியாது.

திருப்பி படிக்க ஆரம்பித்தாள்.

நான் என்ன பன்றதுன்னு தெரியலைப்பா எனக்கு மனசு சரியில்ல.ஆமா அது எனகிட்ட இல்லைனுதான் சொல்லனும். ஆமா இந்த ஆசிக் எனகிட்ட வந்து புரபோஸ் பன்னுவான்னு நான் எதிர்பாக்கலைப்பா. என தன் நிலைக்குள் புகுந்தாள்.

“ஜெனி ஒரு நிமிடம் நில்லுங்க” இது ஆசிக்கின் குரல். ஜெனிக்கும் அவன்மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

“என்னங்க” அனைவரையும் பேர் சொல்லிகூப்பிட்டுவிடுவாள் இல்லை என்றால் அண்ணா என்று அழைத்துவிடுவாள். ஆனால் இவனிடம் முடியவில்லை.

“இல்ல நான் உங்க்கிட்ட ஒன்னு கேக்கனும் தப்பா நினைக்க மாட்டீங்கள்ள”

“ம்ம் சொல்லுங்க” என அவன் முகத்தை பார்த்தாள் அந்த சைக்கிளை பிடித்துகொண்டு.

“அத எப்புடி சொல்றதுன்னு தெரியல” என தன் காலை பார்த்துகொண்டே கூறினான்.

ஜெனிக்கு புரிந்துவிட்டது. “என்ன வீட்டுல தேடுவாங்க நான் போகட்டுமா” என்றாள் மெல்லிய குரலில் இதுதான் இவள் பிறந்ததிலிருந்து மெதுவாக பேசிய தருனம்.

“என்ன ஒரு போட்டோ எடுத்தீங்கள்ள அத பிரின்ட் பன்னி தர்ரீங்களா” என்றான்.

“நான் எப்ப எடுத்தேன்”

“இல்ல நான் பாத்தேங்க அந்த நாய் குட்டிகூட விளையாடிட்டு இருக்கும்போது”

“அய்யோ உங்கள எடுக்கலைங்க அந்த நாய் குட்டியதான் எடுத்தேன்”

“ம்ம் சரிங்க நான் வாரேன்” என கிளம்ப ஜெனி சைக்கிளை எடுத்துகொண்டு கிளம்பினாள்.

அவளது நினைவுகள் வாட்ட துவங்கின. ‘இங்கபாருடி அந்த ஓடுகாலிமாதிரி நீயும்ஓடிபோயிடலாம்னு நினைக்காத. அப்பா நான் அப்புடில்லாம் பன்ன மாட்டேன்பா. ம்ம் அவளாவது நம்ம மதத்துல பாத்து ஓடிபோயிட்டா நீ பன்ற கூத்துக்கு வேற மததுல கூட்டி வந்த உன்ன கழுத்த அறுத்து போட்டுருவேன். அப்புடிலாம் பன்ன மாட்டேன்பா நான் உங்க பொண்ணு’

என அலைகள் ஓட வயசு எனபது அந்த எண்ணங்களின் செறிவை குறைத்தது. ‘என்னமா நீ ஊருல உள்ள லவ்கெல்லாம் அட்வைஸ் பன்ற உன் லவ்வ சொல்ல இப்புடி பயப்படுற. ‘

“எனக்கு பயமெல்லாம் இல்லை” என தன் மனதிடம் கூறுவதாக நினைத்து சைக்கிளை மிதித்துகொண்டே கூறினாள். ‘அப்ப நாளைக்கு சொல்லு பாக்கலாம்’

“ம்ம் சொல்றேன்” என வீட்டை அடைந்தவள் தன்கென்று தனி அறை ஒதுக்கிஇருந்தாள். அங்கு சென்று அந்த ஃபிலிம்மை எடுத்தாள். சிறிது நேரத்தில் அதில் ஆசக்கின் தோற்றம் அந்த அழகிய நாய் குட்டியுடன் முத்தம் கொடுக்கும் புகைபடம் இருந்தது. அதை எடுத்து தன் ஆல்பத்துக்குள் வைத்துகொண்டாள் பத்திரமாக. ஜெனியின் பரினாம வளர்ச்சி எனும் ஆல்பத்தில் அவள் வருங்கால கனவரான ஆசிக்கின் புகைபடம் இடம் பிடத்தது.

“அடிபாவி இதுக்குதான் நீ அன்னைக்கு அந்த ஆல்பத்த என்ன பாக்க விடலையா கள்ளி” என அன்பரிசி கூறிவிட்டு

“சரி லவ் சொன்னியா இல்லியாடி” என மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: