Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 51

உனக்கென நான் 51

“காவேரி இருக்கியாமா….?” என்று குரல் வரவே மூவரும் கதவை பார்த்தனர். காவேரி கண்டுபிடித்துவிட்டாள். கலைப்பையும் பொருட்படுத்தாமல் “சந்திரசேகர் அப்பா” என எழுந்து ஓடினாள்.சன்முகத்தின் மனதில் குழப்பம் குடிகொண்டது. அவள் அப்பா இறந்துவிட்டாரே! அவர் இருந்திருந்தால் சன்முகத்தின் உயிர் இந்த நேரம் பல மயில்கள் கடந்து சென்றிருக்கும். தன் மகளை கவர்ந்து வந்தால் எந்த தகப்பனுக்குதான் கோபம் வராது. ஆனால் அவர்தான் இல்லையே அப்புறம் யார அப்பானு கூப்பிட்டுட்டு ஓடுறா” என வெளியே வர.

காவேரி தந்தை வயதுல்ல ஒருவர் தோளில் சாய்ந்துகொண்டு அப்பா என அழுதாள். அவர் தன் மகளின் தலையை வருடிகொடுத்தாள். சன்முகம் வந்து நிற்க. “வாங்க மாப்பிள்ள” என்றார்.

“ம்ம்” என தலை ஆட்டிய சன்முகம். “நீங்க?”

“இது என மகள் காவேரிப்பா நான் சந்திரசேகர்” மீண்டும் சன்முகம் குழப்பமடைய

“என்னப்பா அப்புடி பாக்குறீங்க இது என செல்ல பொண்ணு காவேரி; இவ அப்பா லிங்கம் என்னோட ஃபிரன்டு; இவ அவங்கிட்ட இருந்தத விட என்கிட்டதான் வளந்தா! என செல்ல தேவதை” என கூறிவிட்டு “எப்புடிம்மா இருக்க” என அவர் கேட்டதும் சன்முகம் தலைகுனிந்தார்.

“நிம்மதியா இருக்கேன்ப்பா” என காவேரிகூற சந்திரசேகரின் கண்ணில் நீர் வந்தது. “உங்க அப்பன்தான் விட்டுட்டு போயிட்டான் அவன் இருந்தா இப்புடி கஷ்டபடுவியாமா! இல்ல அவன்தான் உன்ன இப்புடி விட்டுருப்பானா? நீ ஓடிவந்து கல்யானம் பன்னாகூட கோவத்துல கத்துவாம் அப்புறம் என பொண்ணுடா அப்புடின்னு வந்துடுவான். இப்ப யாருமே இல்லாம் நீ கஷ்டபடுறியேம்மா” என அழுதார்.

“உள்ள வாங்கப்பா! நான் எந்த கஷ்டமும் படலப்பா இவரு என்ன நல்லா பாத்துகிறாரு” என்று அவள் தன்னவனை பார்த்தாள்.

“வேற எந்த குறையுமில்லையே?”

“அவளுக்கு என்ன ஐயா குறை மகராசி வயித்துல மகராசன் பொறக்க போறான்” என அந்த பாட்டி கூறிவிட்டு வெளியே நகர “இந்தாங்க அம்மா நல்ல செய்தி சொல்லிருக்கீங்க” என தன் பையிலிருந்த காந்திதாளை கொடுக்க வேண்டாமென்று மறுத்தார். பின் வற்புறுத்தலால் வாங்கிகொண்டு வெளியே சென்றார்.

“என் குட்டி தேவதைக்கு ஒரு குழந்தையா! என்னால நம்பவே முடியலம்மா இன்னும் உன்ன தோள்ள தூக்கி வச்சுகிட்டு நானும் அவனும் அந்த அணைமேல நடந்த நியாபகம் தான் இருக்கு” என தன் மகளை பார்த்தவர் அவள் கழுத்தில் தன் கழுத்திலிருந்த சங்கிலியை அணியும்போது தாலி மஞ்சளில் கட்டியிருப்பது தெரிந்தது.

“என்னம்மா மஞ்சள்?” என கேட்க அதை உள்ளே எடுத்து போட்டவள். “இல்லப்பா இவங்க வழக்கம்பா ஒரு வருசம் மஞ்சள்தான் போடனுமாம்.” என்று சமாளித்தாள். தந்தையல்லவா கண்டுபிடத்துவிட்டார்.

“என்ன மாப்ள தொழில் பன்றீங்க?” என கேட்க அவள் முந்திகொண்டாள். “மார்கெட்ல பெரிய மளிகை கடைப்பா ஒரு நாளைக்கு நிறைய லாபம் கிடைக்கும்ப்பா” என சமாளிக்க சன்முகம் அமைதியாக நின்றார்.

“மாப்ள உண்மைய சொல்லுங்க”

“வாங்கப்பா சாப்பிடலாம். காஃபி போட்டு வரவா” என ரயிலை திசை திருப்பி பார்த்தால் முடியவில்லை.

“மாப்ள வாய தொறந்து பேசுங்க”

“இல்ல மாமா சின்ன கடைதான்”

“அதிலையும் நல்ல லாபம்தான்ப்பா”

“எப்புடி உங்க அப்பன் லிங்கம் கம்பெனியவிட அதிகமா இருக்குமா” என முறைத்தார். காவேரி கண்ணில் நீர் வந்து அழுதாள். “இந்த வருமானம் போதும்ப்பா”

“உங்க ரெண்டுபேருக்கு போதும் என பேரபுள்ளை வந்தா என்ன பன்றது” என்று ஆத்திரமடைய இருவரிடமும் பதிலில்லை.

“இங்க பாரும்மா காவேரி உங்க அப்பன் சாகுறதுக்கு மூனுமாசத்துக்கு முன்னாடி எனகிட்ட வந்தான்”என்ற தன தந்தையை பார்த்தாள்.

“புல்லா போதைல இருந்தான். இதுவரை அவன் அந்த அளவுக்கு குடிச்சி நான் பார்த்தது இல்லமா. நான் டேய் என்னடா இப்புடி பன்றனு கேட்டேன். அவனுக்கு மனசு சரிஇல்லைனு புலம்புனான். ஆனா அவன் அடிக்கடி சொன்ன வார்த்தை என பொண்ண பாத்துகோடா அப்புடின்னுதான். ஆனா இப்புடி திடிர்னு இறப்பான்னூ நான் எதிர் பாக்கலைம்மா” என கண்ணை துடைத்துகொண்டார்.

காவேரிக்கு கண்கள் மட்டுமே பேசிகொண்டருந்தன. சன்முகமோ மௌனமாக நிற்க.

“ம்ம் அவன் எனக்கு பன்ன நல்லதுக்கு நான் உனக்குதான்மா நன்றிகடன் பட்டுருக்கேன்”

“ஐயோ அப்பா என்ன பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க. நான் உங்க பொண்ணுப்பா” என்று பதறினாள்.

“அது இல்லமா! உன் பேர்ல அந்த மில்ல மாத்தி எழுதிருக்கேன் அப்பறம் இந்த வீட்டுல கஷ்ட படாதீங்க! நம்ம பவன் ஹவுஸ் உன்பேர்ல மாத்திட்டேன்மா கொஞ்சம் இரு” என வெளியில் சென்றவர் கையில் சில பத்திரங்களுடன் வந்தார்.

“அப்பா வேணாம்ப்பா” என மறுத்தாள்

“இது உங்க அப்பன் எனக்கு குடுத்ததுதான்மா இப்ப நான் நல்லபேரோட இருக்கேன்னா அவன்தான் காரணம் அதுக்கு! இது உன்னோட சொத்துதான் நான் சும்மா இத்தனை நாளை அத பாத்துகிட்ட பூதம் அவ்வளவுதான்”

காவேரி தயங்கி நின்று தன் கனவனை பார்த்தாள். “மாமா இதெல்லாம் வேணாமே” என்றார் சன்முகம்.

“ஒரு உண்மைய சொல்லட்டுமா! இந்த காட்டன் மில்ஷ் என்னால பாத்துக்க முடியலமா. ஆமா அந்த S.S கம்பெனிய என்னால சமாளிக்க முடியல. உங்க அப்பன் இருந்திருந்த எதாவது பன்னிருப்பான். என்னால முடியல. அதுவுமில்லாம எனக்கு வயசாகிருச்சு. நீதான்மா எனக்கு வாரிசு உன்ன விட்டா யாரு இருக்கா எனக்கு. என தங்கச்சி உனக்குதான் புள்ள இல்லைல அப்புடின்னு சொல்லி சொத்து வாங்கிகிட்டா. இந்த மில் பழசா இருக்காம் அதனால என்ன பாக்க சொல்லுறா! அதான் நேத்து உங்க அப்பா லிங்கம் என கனவுல வந்து! டேய் உன் பொண்ணு கஷ்டபடுறாடா அப்புடின்னு அழுதான். அதான் உன்ன தேடி கண்டுபிடிச்சு வந்துட்டேன்” என்றார் சந்திரசேகர்.

“இல்லப்பா நீங்க பாருங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்” என்று சமாளித்து பார்த்தாள்.

சந்திரசேகர் சோகமாக நின்றார். காவேரிக்கு மனதில் உறுத்தியது.

“அப்பா நீங்க எங்க கூடயே இருப்பீங்கன்னா சொல்லுங்க நான் சம்மதிக்குறேன்” என்றாள். சிறிது யோசித்தவர்.

“ம்ம் பொண்ணு வீட்டுல கஞ்சி குடிக்கனுமா! சரிடா குட்டிம்மா நீ எது சொல்லி அப்பா இல்லைனு சொல்லிருக்கேன்! ஆனா சீக்கிரமா அப்பாவுக்கு ஒரு பேரன பெத்துகுடுத்தா விளையாடிட்டு இருப்பேன் இல்லைனா பாத்துக்கோ” என்றார்.

“சரிப்பா” என்றாள்.

“ஒன்னுனா ஒன்னு இல்லமா! இந்த வீடு நிறைய குழந்தைங்க சத்தம் கேட்கனும் அப்பாதான் அப்பா நிம்மதியா சாவேன்”

“ஏன்பா சாகுறத பத்தி பேசுறீங்க”

“பின்ன என்னமா இங்கயேவா தங்க முடியும் போயிதான ஆகனும்.”

“சாப்டீங்களாப்பா?”

“என பொண்ணு கையால சாப்பிடலாமுனு வந்தேன்”

“வாங்கப்பா” என அழைத்தவள் வயிறார சாப்பாடு போட்டாள. “பரவாயில்லயே காவேரி நல்லா சமைக்க கத்துகிட்டியே”

“ஆமாப்பா பார்வதின்னு எனக்கு அன்னி இருக்காங்க அவங்க ட்ரைனிங்க்” என்று சிரித்தாள்.

“ஐயோ மாமா அவங்க சமையல இவ பாத்ததுகூட இல்ல. இவளே ஏகலைவன் மாதிரியும் பார்வதி துரோனாச்சாரியார் மாதிரியும் சொந்தமா கத்துகிறா” என்று சீண்டினார்

“இல்லப்பா அவங்ககிட்ட போய் கத்துகனும்” என்று கூறியவள் தன் தந்தையிடம் பார்வதி பற்றியும் போஸ் பற்றியும் புரானத்தை பாட துவங்கினார். அவை அனைத்தையும் பொருமையாக கேட்டுகொண்டிருந்த சந்திரசேகர்.

“யாரும்மா அது நான் அவங்கள பாக்கனும். என மகளுக்கு கிடைச்ச சொந்தம்”

“நேத்துதான் பா கல்யானம் ஆச்சு, நாம இன்னொரு நாள் போயிட்டு வரலாம்ப்பா. உங்கள பாத்தா அண்ணா சந்தோஷபடும்” என்றாள்.

“இன்னொரு நாள் எதுக்கும்மா அடுத்த மாசம் அந்த கம்பெனிய நீதான நடத்தபோற! போஸ் அதான் உன் அண்ணா அன்னி கையாலையே திறப்புவிழா வச்சுடலாம்” என்று சந்திரசேகர்கூற காவேரியின் அழகினை புன்னகை வந்து மெருகேற்றியது.

“சரிம்மா அப்பாவுக்கு கொஞ்சம் டாக்குமன்ட் வேலை இருக்கு முடிச்சிட்டு அடுத்த வாரம் அப்பா என தங்கத்த தேடி ஓடி வந்துடுவேனாம்” என்று கூற

“அப்பா போக வேனாம்ப்பா இருங்க” என பள்ளிமுதல்நாள் குழந்தைபோல அழுதாள்.

“அப்பா வந்துடுவேன்டா தங்கம் கம்பெனி லீகல் ரைட்ஸ்ல உன்ன சேக்கனும்லம்மா! சரியா ஏழு நாள் தான்மா” என்று செல்ல அந்த வழியை கதவின் மீது சாயந்து பார்த்துகொண்டிருந்தாள் கண்ணீருடன்.

“காவேரி நான் கடைக்கு போயிட்டு வாரேன் ஒழுங்கா சாப்புடு” என சன்முகம் கிளம்ப. “நீங்களும் போறீங்களா” என்றாள்.

“என்னம்மா ஏன் அழற”

“இல்ல அப்பா மனசுல கஷ்டத்த வச்சுகிட்டு எனகிட்ட சிரிச்சிட்டுபோறாரு. எனகூட இருந்தா அவரு நிம்மதியா இருப்பாரு. பிஷினஸ்ல எதாவது பிரட்சனைனாகூட சின்ன வயசுல என்ன பாக்க ஓடி வருவாரு. இப்ப அவரு அழுதத என்னால தாங்க முடியலங்க! அதான் எல்லாரும் என்ன விட்டுபோறாங்க எனக்கு பயமா இருக்கு” என அழுதாள்.

“ஏய் என்னம்மா குழந்தையாட்டம் அழுதுகிட்டு! வயித்துல பாப்பா இருக்குல்ல” என சன்முகம் கூற. “ம்ம்” என்றாள்.

“அப்பா பாப்பாவும் அழும்ல!” அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.

“அப்பா அடுத்தவாரத்துல இருந்து நம்மகூடதான் இருக்கபோறாருடா காவேரி எதுக்கு அழற” என்று சமாதானம் செய்து கிளம்பினார் சன்முகம். காவேரி பல முடிவுகளை எடுக்கும் அளவுக்கு வலிமையானவள் என்றாளும் அன்பிற்கு ஏங்கும் உள்ளம் அதனால் உறவுகளுக்காக எளிதில் கண்ணீர் விட்டுவிடுவாள்.

நாட்கள் ஓடியது. சந்திரசேகர் வரவில்லை ஆனால் அவரது வாக்கு வந்துசேர்ந்தது அந்த மில்லின் மேனேஜர் வடிவில்.

“மேடம்! சார் உங்களதான் அடுத்த எம்.டியா போட்டுருக்காரு. இந்தாங்க டாக்குமன்ட்” என்றுநின்றார்.

“அப்பா வரலையாங்க”

“மேடம் உங்களுக்கு விசயம் தெரியாதா! “

“என்னங்க சொல்றீங்க புரியல”

“அப்பாவுக்கு பக்கவாதம் வந்துருச்சு அவர் வக்கில்கிட்ட எழுதுன கடைசி உயில் இதுதான்” என அந்த பத்திரத்தை அவளிடம் கொடுத்தனர்.

“என்ன அப்பாவுக்கு பக்கவாதமா” என கால்கள் அவரை காண நினைத்து துடித்தன. ஆனால் அவளால் முடியாது அல்லவா அதனால் கண்களாலேயே தன் கவலைகளை வெளிகாட்டினாள்.

“மேடம் அடுத்த வாரம் திறப்புவிழா வைக்கனும்னு ஆசைபட்டாரு” என அந்த நபர் அந்த பத்திரத்தை காவேரியிடம் கொடுக்க அதை கண்ணீருடன் வங்கினாள்.

“சரிங்க மேடம் அப்ப நான் வாரேன்” என அவர் கிளம்பினார்.

அந்த பத்திரத்தை தூக்கி எரிந்தவள். “அப்பா எனகிட்ட வர்ரேன்னு சொல்லிட்டு என்ன ஏமாத்திட்டீங்கப்பா! இந்த சொத்துமட்டும் எனக்கு எதுக்கு என்மேல பாசம் வச்ச எல்லாத்துரும் இப்புடி ஆகிடுது. நான் ராசியில்லாதவங்க” என தன் கனவனின் தோளில் சாய்ந்து அழுதாள்.

“காவேரி ஆழாதம்மா! நீ ஏன் இப்புடி நினைகுற” என தோளில் தட்டிகொடுத்தார். மணிகளை தான்டி அழுதாள். சன்முகமும் அவளை முடிந்த அளவு சமாதானம் செய்தார்.

மறுநாள் விடிய காவேரி வழக்கமான வேலைதுவங்கியிருந்தாள். சன்முகம் அந்த உயிலை படித்து பார்த்துகொண்டிருந்தார். “காவேரி இங்க வாம்மா”

“என்னங்க” சோகமாக

“இந்த இத பத்திரமாவை” என்றார்.

“அத கிழிச்சு போட்டுருங்க” என கண்ணீர்விட்டாள்.

“இத கிழிச்சா நூறு குடும்பம் நடுதெருவுக்கு வந்துடும் பரவாயில்லையா”

காவேரி முகத்தில் சிறு சலனம்.

“என்னம்மா பாக்குற இத படி” என அதில் உடனிருந்த அந்த லட்டரை கொடுத்துவிட்டு நகர்ந்தார். அதை வாங்கிபடித்தாள் காவேரி. அதில்.

காவேரி என் செல்ல பொண்ணுக்கு இந்த அப்பா எழுதிகொள்வது நான் இந்த கம்பெனிய உன்கிட்ட ஒப்படைக்க காரணம் இது உன் சொத்துங்கிறதாலமட்டுமில்ல. இது நிர்வாகம் பன்றதுக்கு அறிவு உன்கிட்ட மட்டும்தான் இருக்கு. அதுமில்லாம அப்பாவால அந்த எஸ்.எஸ் கம்பெனிய எதிர்த்து எதுவும் பன்னமுடியல. உங்க அப்பன் லிங்கம் அடிக்கடி சொல்லுவான்டேய் நமக்கு நட்டம் வந்தாலும் பரவாயில்லடா. ஒர்க்கர்ஷ்க்கு எந்த பிரட்சனையும் வர கூடாதுடா. அவங்க கடவுள் மாதிரின்னுஆனா நம்ம எதிரி கம்பெனி பன்னுர பிரஸ்ஸர்ல அந்த வார்த்தைய என்னால காப்பாத்த முடியாம போயிடுமோன்னு எனக்குபயமா இருக்குமா! நம்மல நம்பி இருக்குற அந்த நூறு குடும்பத்த காப்பாத்தும்மா அது இந்த ரெண்டு அப்பாவுக்கும் நீ செய்யுர கடமைமா. அப்புறம் அந்த கம்பெனிகிட்ட முன்ன மாதிரி போட்டி இல்லம்மா பொறாமைதான் அதிகமா இருக்கு. இப்ப  அந்த கம்பெனி முதலாளி மருமகன் பாக்குறான்னு உனக்கு தெரியும். அந்த செல்வத்துகிட்ட ஜாக்கிருதையா இரும்மா. உன்ன நம்பி இருக்குற வேலைகாரங்கள பத்திரமா பாத்துக்கோ இந்த அப்பாவோட கடைசி ஆசை இதுதான்.

இந்த வரிகளை பார்த்ததும் கண்கள் கலங்கின காவேரிக்கு. வேறு வழியில்லாமல் மனதில் உறுதியான முடிவை எடுத்தாள்.

“ஏங்க அண்ணாவையும் அன்னியையும் பாத்துட்டு வரலாம்ங்க” என காவேரிகூற அதன் அரத்தம் அவர்களை திறப்பு விழாவிற்கு அழைக்கலாம்ங்க எனபதை புரிந்துகொண்டு “கிளம்புமா” என்றார் சன்முகம்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: