ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42

உனக்கென நான் 42

கையில் அந்த சிறிய கோப்பை இடம் பிடித்திருக்கவே தன் அன்னையிடம் ஓடி வந்தாள் சுவேதா. தன்னை நினைத்து தன் தாய் பெருமைபடுவார் என சுவேதா ஓடி வந்தாள். அது அவள் எட்டாம் வகுப்பின் துவக்க தருணம் தான் ஒரு முழு பெண்ணாக மாறி இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அந்த தருணத்தில் அபிநயாவின் ஆசை எல்லாம் தன் மகளுக்கு சடங்குகள் நடத்தி அவவை அழகு பார்க்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனாலும் அதற்கு கொடுத்துவைக்கவில்லை.

“அம்மா வயிறு வலிக்குதும்மா” என்று துடித்தாள் மகள். அபிக்கோ தன் மகளை நினைத்து மகிழ்ச்சி. நந்தினி வந்து சுவேதாவினை அழைத்தாள். ஆனால் அது சரியான தருனமாக இல்லை.ஆம் அப்போது தனசேகர் வருகையும் சரியாக நிகழ்ந்தது. அபி பயந்துகொண்டே “நந்தினி சுவேதாவ ரூம்குள்ள கூட்டிட்டு போயிடு” என்றாள். நநதினியும் அவளை ரூமில் வைத்து அடைத்தாள்.

சுவேதாவோ நந்தினியின் “குட்டிமா நான் வரர வரைக்கும் சத்தம் போடாம இந்த கதவுகிட்டயே இருக்கனும். அம்மா வந்து மத்த ஏற்பாடு பன்றேன் சரியா சத்தம் போடாம் இருடா செல்லம். வயிறு ரொம்ப வலிச்சதுன்னா பொறுத்துகோடா அம்மா சீக்கிரம் வந்துடுவேன் சரியா” என்று செல்ல சுவேதாவோ வலியால் துடித்தாள். ஆனாலும் அந்த குப்பை தொட்டியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அவளது ரத்தமே அவளை பயமுறுத்தியது. மிகவும் கலைப்பாகவேறு இருந்தாள்.

அபியை தன் தந்தை திட்டுவதும் அடிப்பதும் காதில் ஒலித்துகொண்டே இருந்தது. வலியும் அதிகமாகவே இருந்தது சுவேதாவுக்கு நந்தினியின் வார்த்தையால் பல்லை கடித்துகொண்டு பொருத்துகொண்டாள். உடுத்தியிருந்த துணிகள் கறை படிந்தன. ஆனால் தனசேகர் இரண்டு நாட்களாக அங்கேயே அமர்ந்துகொண்டு அபியை துன்புறுத்தி கொண்டிருந்தான். ஆனாலும் அபிக்கு தன் மகளின் வலியை நினைக்கும்போது இந்த வலி பெரிதாக இல்லை. தனசேகரின் அன்றைய செயல்கள் மது மற்றும் சாட்டைஎனவே இருந்தன தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை இங்கே காண்பித்துகொண்டிருந்தான். அவன் கண் அசந்த நேரத்தில் நந்தினியால் ஒரு பிரட் பாக்கெட்டை மட்டுமே சுவேதாவின் அறைக்கு அனுப்ப முடிந்தது.

சுவேதாவுக்கு இது பழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த வலியும் ரத்தமும் புதிதாக இருந்தது. இரண்டு நாட்களிலலும் பிரட்டை மட்டும் சாப்பிட்டாள். அவளது இந்தமாற்றத்தால் வயிறு அதிகமாக பசித்தது. ஆனாலும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. பல்லை கடித்துகொண்டு நத்தை கூட்டில் சுருண்டுகொள்வது போல சுருண்டு படுத்திருந்தாள். மூன்றாவது நாள் தனசேகர் கிளம்பவே இரு தாய்களும் தன் மகள் அறைக்கு ஓடினர். அங்கே சுவேதா மயக்கமாக கிடந்தாள். அவளது நிலையை பார்த்த அபி அவளே கட்டி அனைத்துகொண்டு “ஏன்டி என் வயித்துல வந்து பொறந்து கஷ்டபடுற” என்று அழுதாள். சுவேதாவோ அரைமயக்கததில் “அம்மா பசிக்குதும்மா” என்று முனுமுனுத்தாள். இரண்டு தாய்களும் கண் கலங்கி நின்றனர்.

நந்தினி வேகமாக ஓடிசென்று பழரசம் எடுத்துவந்து சுவேதாவினை தோளில் சாய்த்துகொண்டு ஊட்டினார். அதை குடிக்ககூட தெம்பில்லாமல் பாதி முகத்தில் வடிந்தது. முடிந்தவரை விழுங்கினாள். பின் சிறிது தெளிச்சியாகவே நந்தினி அவளை அழைத்துசென்று மஞசள் பூசி குளிக்கவைத்தார். பின் ஒரு பட்டு புடவையை எடுத்து கட்டிவிட்டார் அழகுசிலையாக இருந்தாள் சுவேதா. அவளை பார்க்கும்போது அபியின் கண்கள் கலங்கின.

“என் செல்லம்!” என தன் மகளுக்கு முத்தம் வைத்தவர் கைகளை முகத்துக்கு அருகில் வைத்து நெட்டிமுறித்தார் (கண்ணுபட்டுருமாம்). சுவேதாவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அதன்பின் நந்தினி சுவேதாவை அவள் அறைக்கு அழைத்துசென்று சிறிதுநேரம் பேசவே சற்று புரிந்தாள். “அம்மா பசங்களுக்கெல்லாம் இப்புடி வராதா” என்று கேட்க நந்தினி சிரித்துகொண்டே “குட்டிமா இது பொண்ணுங்களுக்கு மட்டும்தான்” என்றார்.

அப்போ அதனால்தான் ஆண்களுக்கு இந்த வலி புரிவதில்லை. பொண்ணுங்கள துன்புறுத்துறாங்களா என மனதில் பதிந்தது அவளுக்கு. அதுவரை தன் தந்தையின்மீது மட்டும் வெறுப்பு கொண்டவள். இந்த சம்பவத்தால் மொத்த ஆண்களையும் வெறுத்தாள்.

அதன்பின் ஏழாம் வகுப்பு முடித்து. எட்டாம் வகுப்பில் நுழைந்தவளை பல்வேறு போட்டிகளில் பங்கெடுக்க வைத்தார் நந்தினி. அதில் பெண்கள் முன்னேற்றம் என்ற பேச்சுபோட்டியில் கிடைத்த முதல் கோப்பையைதான் ஆர்வமாக கொண்டுவந்தாள். “அம்மா அம்மா நான் கப் வாங்கிட்டேன்” என வரவே நந்தினி வாசலில் நின்றுகொண்டு “குட்டிமா அப்பா இருக்காரு சமத்தா உள்ள போங்க” என்றதும் சோகமாக தன் அறைக்குள் சென்று அழுதாள்.

அழும்போதுதான் தைரியமும் பிறக்கும் என்று கூறியதுபோல கண்ணிருடன் சேர்ந்து “பட்டுமா நீ இப்போ பெரிய பொண்ணு சரியா அதனால அமைதியா ஒழுக்கமா இருக்கனும் அப்புறம் யாரையும் உன்ன தொடவிடகூடாது. சரியா. ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடனும்” என்ற கூற்றும் “வலிமையானவங்க தட்டிகேப்பாங்க” என்ற ஆசிரியரின் மொழியும் சேர்ந்து “பெரியங்க தட்டி கேட்பாங்க” என்றானது. நானும் பெரிய பொண்ணுதான் நானும் தட்டி கேட்கலாம் என கண்ணிரை துடைத்துகொண்டு எழுந்தாள்.

தன் அறை கதவை திறந்தாள்; தன் அன்னையின் அறைக்குள் சென்றாள். ஒரு சாட்டை சத்தம் கேட்டது. ‘அம்மா இதுதான் உன்மேல விழிகுற கடைசி அடி’ என நினைத்துகொண்டு கதவினை திறந்தாள். அவளது சபதமும் நிறைவேறியது. “நீ ஏன்டி இங்க வந்த?” என்பதுபோல பார்த்தாள். அதற்கு காரணம் இருந்தது. கடந்த சில மாதங்களாக தனசேகர் தனக்கு இரையாக கேட்பது சுவேதாவைதான்.

சிறுவயது பெண்ணுடன் கலந்தால் ஆயுள் கூடுமாம் அதுவும் இல்லாமல் தொழில் லாபம் கிடைக்கும் என யாரோ ஒருவரின் பேச்சினை கேட்டு சுவேதாவின் மீது மோகம் ஏற்பட்டது. அதனால்தான் வயதெட்டிய தன் மகளை மிகவும் கண்ணாக காத்து வந்தார் பார்வதி. ஆனால் இப்போது?

“ம்ம் கண்ணுல காட்டாமயே நல்லா நச்சுனு வளத்துருக்கடி உன்னைவிட அழகுதான் என் செல்லம்” என்று அருகில் வந்தான். அவனது கன்னத்தில் ஒரு அறை வைத்தாள் அந்த சிறிய பெண். அவன் உள்ளிருந்த மது அவனை முழு மிருகமாக மாற்றியிருந்தது. அவளது கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து தேய்த்தான். சுவேதாவுக்கு அறுவறுப்பாக இருந்தது. கைகளை இழுத்துகொண்டு மறுபடியும் அறைய முற்பட்டாள். ஆனால் அவன் அவளது இரு கைகளையும் பிடித்துகொண்டு சுவற்றில் அவளை தள்ளினான். அவளது முகத்தின் அருகே வந்து முகர்ந்து பார்க்க சுவேதா செய்வதறியாது திணறினாள்.

அப்போது அவனது தலையில் ஒரு கம்பியால் அடித்தாள் அபி. சுவேதா விடுவிக்கபட்டாள். “இங்க இருந்து போ” என்றாள் அபி. ஆனால் சுவேதா நகரவில்லை. அபியோ அவனது கால்களைபற்றி கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க அவ உங்க பொண்ணு அவளை விட்டுடுங்க” என கெஞ்சினாள். அவனோ தலையில் வழிந்த ரத்ததை துடைத்துவிட்டு அபியின் முகத்தில் எட்டி மிதித்தான். சுவேதா பயந்து ஓடினாள். அவன் அவளது அந்த பள்ளி சீருடையை இழுக்க அது கிழிந்தது தடுமாறி படியில் உருண்டாள். பின் சுதாரித்துகொண்டு தன் அறைக்குள் சென்று பூட்டினாள். வெளியே அவன் ஒரு இரும்பை எடுத்துகொண்டு கதவை உடைக்க முயற்சிசெய்தான்.அதற்குள் அபி வந்து அவனை இழுத்துபோட கீழே விழிந்தான். மது கோபத்தை அபியின் பக்கம் திருப்பியது.

கையிலிருந்த கம்பியால் அபியை அடித்தான். “ஆஆ சுவேதா” என்று அளறினாள். சுவேதாவோ கதவை திறக்க முயன்றாள். “பட்டுமா வெளிய வந்துடாதடா” என மனதில் வலியுடன் கூறினாள். சுவேதா என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சாவி துவாரத்தின் வழியே பார்த்தாள். ஆனால் இந்த முறை மேலும் அதிர்ச்சி.

அவன் தன் பெல்ட்டை எடுத்து தன் தாயின் கழுத்தினை நெறித்து கொண்டிருந்தான். அபியின் கண்கள் தன் மகளை நினைத்துகலங்கின. அந்த பூட்ட பட்ட கதவினை பார்த்துகொண்டே உயிரை விட்டாள் அபி. அதை பார்த்த அபிக்கு மூச்சு தினறியது. தலை சுற்றியது. அழ கண்ணீரும் இல்லை அவளிடம்.

ஆனால் மீண்டும் அவன் கதவை தட்டவே சுவேதாவின் இதயம் படபடத்தது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பதிமூன்று வயது பென்னால் என்ன செய்ய முடியும்.

அப்போது ஒரு குரல் கேட்டது “வேணும்னா என்னை எடுத்துகோடா குட்டிமாவை விட்டுரு” இது நந்தினியின் குரல். தன் மகளை காக்க தன் கற்பை இழக்க தயாரானாள். நந்தினி பிச்சை எடுத்துகொண்டிருக்கும் போது அவளை அழைத்து நல்வாழ்கை அளித்தவள் அபி. அது சினிமாவுக்காக தீவிரமாக இயங்கிகொண்டிருந்த நேரம். அந்த சுவேதா பிறக்கும்போது நந்தினிக்கு பதினெட்டு வயதுதான். இப்போதுதான் நந்தினியை ஒருவர் விரும்புவதாகவும் அபி அதற்கு திருமன ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தாள். ஆனால் இந்த நாள் அந்த முப்பது வயது மங்கை தன் வளர்ப்பு குழந்தையின் கற்பை காக்க தன்னை அற்பனிக்க முடிவு செய்தாள்.

அவனும் போதைமயகத்தில் நந்தினியிடம் தன் வக்கிரத்தை காட்டி வெளியேறினான். நந்தினி அபியின் இடத்தை பிடித்திருந்தாள். அவனிடமுன் சரி சுவேதாவிடமும் சரி. அபிக்கான சாட்டை இவளையும் பதம் பார்த்தது. ஆனால் இவளுக்கு மகிழ்ச்சிதான் குட்டிம்மாவுக்கு எதுவம் ஆகவில்லை என்று.

கதவின் பின் சரிந்து அழுதகொண்டிருந்தவளின் கால்களை அபியின் ரத்தம் வந்து சேர்ந்தது. அதில் ஸ்பரிசம் பட்டதும் சுவேதாவின் உடல் நடுங்கியது. அப்போதுதான் முதலில் வந்தது அந்த வலிப்பு.

கதவுக்கு பின்னே ஒரு தாய் இறந்து கிடக்க; மேலே இன்னொரு தாய் அந்த மிருகத்திடம் காயபட்டுகொண்டுருக்க சுவேதாவொ யாருமே இல்லாமல் வலிப்பால் துடித்து அப்படியே மயங்கினாள்.

அந்த நாளை நினைக்கும்போதெல்லாம் இந்த வலிப்பு வந்துவிடும். அதுவுமில்லாமல் தன்னை எந்த ஆணும் ரசிக்க தேவையில்லை என தன் உடைகளை மாற்றிகொண்டாள். அந்த நினைவுகளை மறக்க கல்லூரியில் அவளுக்கு போதை அறிமுகம் ஆனது. ஆனால் சிறிதுகாலம் மறக்க உதவி செய்துவிட்டு அந்தவலிப்பை இரண்டுமடங்கு வீரியமாக்கியது அந்த போதை பழக்கம்.

இதை அன்பரசியிடம் கூறும்போது சுவேதாவின் உடல் நடுங்க துவங்கியது. அன்பரசி அவளை கட்டி அனைத்துகொண்டு “ஒன்னும் இல்லைங்க அண்ணி “ என அவள் முதுகில் தட்டி ஆறுதல் தந்தாள். அரிசியின் கண்கள் கலங்கின.

வெளியில் நின்று கேட்ட சுகு அழுதுகொண்டிருந்தான். “இவ்வளவு வலியையும் வச்சிகிட்டு சிரிச்சிட்டு எப்புடிடா இருந்தா” என சந்துருவின் தோளில் சாய்ந்து அழுதான்.

அந்த காதல் ஜோடிகளை இந்த காதல் ஜோடிகள் ஆறுதல் செய்ய முயன்றனர். “அன்னி நான் உங்க மடில படுத்துகலாமா” என்றாள் சுவேதா அழுத கணாகளுடன்.

உள்ளே இருந்த அரிசி வெளியே வந்து அவளது கண்ணீரை துடைத்து தன் மகளென நினைத்து மடியில் கிடத்தினாள். தன் அன்னை மடியில் இருக்கும் பாதுகாப்பு உணர்வில் உறங்கிபோனாள் சுவேதா.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 5KSM by Rosei Kajan – 5

அன்பு வாசகர்களே! அடுத்த அத்தியாயம் இதோ … Premium WordPress Themes DownloadFree Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress Themesfree download udemy coursedownload intex firmwareFree Download WordPress ThemesZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27

உனக்கென நான் 27 சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா