Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 40

உனக்கென நான் 40

” அப்போ நீங்க கூப்பிட மாட்டீங்களா? ” என்ற சந்துருவை மருட்சியாக பார்த்தாள் அன்பு. அதை புரிந்துகொண்ட சந்துரு. “இங்க ஃபோன்ல ” என்பது போல சைகைகாட்டி தப்பித்தான். ” நீங்க போங்க நான் பின்னாடியே வந்துடுரேன் ” என அவளை அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டான். ‘ டேய் சந்துரு ஜஸ்ட் எஸ்கேப்டா வாய்தாண்டா உனக்கு முதல் எதிரி’ என தனக்குள் திட்டி கொண்டிருக்க அனபரசியோ ” சே அவரை நான்தான கூப்பிட்டுருக்கனும் உனக்கு அறிவே இல்லடி ” என தன்னையே திட்டிகொண்டு நகர்ந்தாள்.

சந்துரு அமைதியாக உள்ளே வரவே அனைவரும் அமர்ந்திருந்தனர். அன்பும் பார்வதியும் சேர்ந்து சமையல் பாத்திரங்களை தூக்கிவவே சுவேதாவும் இனைந்துகொண்டாள். ” நீ போய் உட்காருமா ” என்ற பார்வதியிடம் ” அன்பும் நானும் ஒன்னா சாப்பிடுறோம் ஆண்டி ” என்று கூற ” இல்ல நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட லேட் ஆகும் ”

” அப்போ நான் சாப்பிடவும் லேட் ஆகும் ” இது சுவேதா.

அன்பரசி தன் தாயின் முகத்தினை பார்த்தாள் அனுமதிக்காக. அதை கவனித்த சுவேதா ” ஹல்லோ அன்னி இப்போ நீங்க எங்க வீட்டு பொண்ணு அத்தைகிட்ட வாங்குற பர்மிசன் எல்லாம் செல்லாது ” என்று கூற பார்வதி சிரித்துவிட்டார். ” ஆமாம்மா முடிஞ்சா இன்னைக்கே கூட்டிட்டுபோயிடுமா இவ தொல்லை தாங்கமுடியலை ” என்ற தாயை பார்த்தாள் அன்பு.

“அதுல இருந்து உங்கள காப்பாத்ததான் நாங்க வந்துருக்கோம் ஆண்டி! எது எப்படியோ நீங்க தப்பிச்சுட்டீங்க பாவம் என் அண்ணன்தான் மாட்ட்கிட்டான். ” என்று இருவரும் சேர்ந்து அன்பரசியை செல்லமாக தீண்டினர். அவளோ எதுவும் பேசமுடியாமல் நின்றாள்.

” அன்பு அண்ணி நான் ரொம்ப கலாயகுறேன்னு கல்யாணத்துக்கு அப்புறம் என்னை வச்சு செஞ்சுராதீங்க. நான் சரண்டர் ”

” இல்ல ” என்ற அன்பரசியின் கூற்றை ” சரி வாங்க சாப்பிடலாம் எதுக்கு காமெடி பன்னிகிட்டு எனக்கு வேற ரொம்ப பசிக்குது ” என்று அனபரசியையும் கையோடு இழுத்துகொண்டு சென்றாள்.

சந்துரு அமர்ந்திருக்க அவனருகில் அன்பரசியை அமர வைத்துவிட்டு அவர்கள் இருவருக்கும் பரிமாற துவங்கினாள். ” ஐயோ நீங்க ஏங்க இதெல்லாம் செய்றீங்க?! ” என்றவளை பார்த்து “நீங்க அமைதியா சாப்புடுங்க அண்ணி! எதாவது பேசனும்ணு தோனுச்சுனா உங்க பக்கத்துல சந்துருனு ஒரு ஜீவன் இருக்கு அதுகூட பேசுங்க ” என்று வாயை அடைத்தாள்.

” ஆமா இவளே ஒழங்கா சாப்பிட மாட்டா இதுல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பன்றா ” என்ற சுகுவை ‘ஏண்டா’ என்பதுபோல வெட்கத்துடன் பார்த்தாள்.

சந்துருவோ அன்பு அருகில் இருந்த்தாள். எதுவும் பேசாமல் கோழி தவிட்டை விழுங்கியதுபோல விழுங்கி கொண்டிருந்தான். அந்த நேரம் வந்த பார்வதி சுவேதாவை சாப்பிட வைத்தது தனிக்கதை.

ஒரு வழியாக அனைவரின் வயிறும் நிரம்பவே பார்வதி தனியாக சமையலறையில் அமரந்து சாப்பிட துவங்கினார். ” ஆண்டி! அண்டி! ” என உள்ளே வந்தனர் சுவேதாவும் மஞ்சுவும்.

தனியாக அமர்ந்து சாப்பிட்ட பார்வதியை பார்த்து ” அம்மா நான்தான் இருக்கேன்ல ” என்று ஆத்திரமானாள். சுவேதா. அவளுக்கு தன் தாய் அபிநயா கையில் அடிபட்டிருந்த போது மிகவும் சிரம்பட்டு சாப்பிட்டார். அப்போது அழுதுகொண்டே தன் தாய்க்கு ஊட்டிவிட்டாள். அந்த பிஞ்சு. அந்த நியாபகத்தில்தான் இன்று கத்தினாள். ” ஏய் சுவேதா கூல் ” என்ற மஞ்சுவின் வார்த்தை அமைதியாக்கியது அவளை. அனைவரிடமும் அம்மா என்ற ஸ்தானத்தை பார்வதி எளிதில் பெற்றுவிடுகிறார்.

பின்பு பார்வதியை வலுகட்டாயமாக அழைத்துசென்று ஹாலில் அமரவைத்தவள் தானே தன் தாய்க்கு பறிமாற துவங்கினாள். அவளது சைகையை பார்த்த பார்வதி இவளுக்கும் சந்துருவைபோல தாய் இல்லை என்பதை உணர்ந்து தன் இரணாடாவது மகளின் பாசத்தால் மகிழ்ந்தார்.

” டேய் தங்கச்சிய கூட்டிட்டு எங்கயாவது வெளிய போயிட்டு வாடா ” என்று ஆரம்பித்திருந்தான் பாலாஜி.

” டேய் நீ நினைக்குற மாதிரி இது சிட்டி இல்லடா ” இது சந்துரு. நண்பர்களின் உரையாடல்களுக்கு நடுவே ” என்னப்பா ரகசியம் பேசுறீங்க ” கம்பீரமான குரல் போஷினுடையது.

” இல்ல அன்கிள் சந்துரு அன்புகூட தனியா பேசனுமாம் ” வற்றி வைத்துவிட்டான். அப்போது ஜன்னல் துவாரத்தின் வழியாக ஒழிந்து சந்துருவை ரசித்து கொண்டிருந்த ஒரு உருவம் ஓடியதை போஷ் கவனிக்க தவறவில்லை.

” அன்பு! ”

” என்னப்பா ” என்று ஆர்வமுடன் ஓடி வந்தாள்.

” மாப்பிள்ளையும் நீயும் பிள்ளையார் கோவில் வரைக்கும் போயிட்டு வாங்க; பூசாரி சித்தப்பா வர சொன்னாருமா ” என சாதுர்யமாக இருவரையும் அனுப்பி வைத்தார்.

” சரிப்பா ” என அன்பு கூறவே இருவரும் கிளம்பினர்.

இன்றைய யுகத்தில் காதலர் பேசவே

காத்துகிடக்கும் தொலைஅலை கம்பிகள்

மின்கலனும் தூங்கிவிடும் பொழுதும்

தூங்காத இரவில் விளையாடும் பேச்சுகள்

நேரில் சந்திக்க துடிக்கும் வழிகள் சந்திக்க

கிடைக்கும் வாப்பில் கட்டி தவழும்

காதலர்களுக்கிடையே……….

நெஞ்சில் ஆசைகளை சுமந்து இருவரும்

அருகிருந்தும் மௌனமே மொழியாய்

இருவருள்ளும் இடைவளி விட்டு

இந்த பயனம் தொடர்ந்தது.

சந்துருவே முதலில் ஆரம்பித்தான். “ஏங்க இந்த குளத்துல தண்ணி வத்தவே வத்தாதா? நானும் சின்ன வயசுல இருந்து பாரக்குபறேன் ” என்று தான் தவறி விழுந்த குளத்தினை பார்த்து கேட்டான். அவனுக்கு அந்த பயம் இன்னும் போகவில்லை.

” ஆமாங்க இப்போ தண்ணி வத்தாது ” என அன்பு கூற ” இந்த வாங்க போங்கன்கூப்பிடாம சந்துருனு கூப்பிடலாமே ”

” இல்ல கல்யாணம் பன்ன போறவவகல பேர் சொல்லி கூப்பிடகூடாதுங்க ”

” ஓ அப்படியாங்க சரிங்க ” என்றான் சந்துரு

” ஐயோ நான் உங்களை சொல்லல நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் ” என்று தன்னவன் தன்னை செல்லமாக அழைக்கமாட்டானா என்று ஏங்கினாள்.

” அப்போ உங்க நானும்தான் உங்களை கல்யானம் பன்னிக்க போறேன் அது மட்டும் ஓகேவா ”

” இல்லைங்க பொண்ணுங்கதான் கூப்பிடகூடாது ”

ஏய் சந்துரு இங்க வாடா அம்மாகிட்ட சொன்ன அப்புறம் உனனை ஆரமரத்துல கட்டி வச்சுடுவேன் பாத்துகோ என்று சணடையிடும் ராட்ச்சியை எதிர்பார்த்தான் சந்துரு. அவனுக்கு ஏமாற்றம்தான்.

” சரிங்க ” என்று சந்துரு கூற அன்பு அவனை பார்த்தாள். ” ஓகே ஓகே அன்புனே கூப்புடுறேன் சரியா ” என்று சமாளித்தான்.

அவள் மௌனமாக தலைகுனிந்து சிரித்தாள் அவன் கவனிக்காதவாறு. பின் கோயிலுக்கு சென்ற இருவரும் சாமியுடன் சேர்த்து சித்தப்பாவின் அனுகிரகத்தையும் அனுபவித்து விடைபெற்றனர்.

” கொஞ்ச நேரம் உட்காரலாமா ” இது சந்துரு.

இருவரும் சேர்ந்து அந்த ஆலமரத்தின் கிளைக்கு அடியில் அமர்ந்தனர். புத்தருக்கு போதிமரம்போல இவர்களின் காதல் சின்னமல்லவா அந்த ஆலமரம். ஆம் பின்ன சந்துரு தவறி விழுந்த போது மனதில் ஏற்பட்ட ஒரு வலி அரிசிக்கு மட்டுமே தெரியும். இருவரது கால்களும் நீரை தொட்டுகொண்டிருந்தன.

” அன்பு நான் ஒன்னு சொல்லவா ” என தன் மனதில் என்றும் வசிப்பது நீதான் என கூற நினைத்தான். ஆனால் அவள் விழியை பார்த்ததும் அவனது தைரியம் காணமல் போனது. அவளோ உன் காதலி நான்தான் என்று கூறமாட்டாயா என ஏக்கமாக பார்த்தாள்.

அவனது வாய் உளறி உண்மையை கூறிவிட்டது. ” அன்னைக்கு நான் தண்ணில எப்புடி விழுந்தேனு தெரியுமா?” அவன்கூற கண்கள் விரிய பார்த்தாள்.

“அதான் உன் பிரண்டு மலை இருக்காங்கல்ல அவங்கதான் நான் உனக்கு சாதகமா தீர்ப்பு சொன்னதால கொஞ்சம் கோவபட்டுட்டாங்க. அப்புறம்தான் தெரியுமே ஒரு மேடம் வந்து என் உயிரை காப்பாத்திட்டாங்க ” என்று சந்துரு கூறியதும் உள்ளிருந்த அரிசி மலையின் மீது ஆத்திரம் கொண்டாள். இதனால் மலைக்கு தண்டனையாக அரிசி ஒரு ஏற்பாடு செய்திருந்தாள். அதை அப்புறமா சொல்றென்.

“என்னங்க சொல்றீங்க ” அன்பின் ஆத்திரம் புரிந்தது சந்துருவுக்கு.

” சரி அதை விடுங்க அது பழைய கதை! இந்த குளத்த பத்தி சொல்லுங்க ” என்றான். சந்துரு.

அவளது மௌனம் கலைக்கபட்டது ஊர் பெருமையை கூறபோகிறாள் அல்லவா.

“இதுக்கு எரிச்சம் பிள்ளையார் குளம்னு பேரு; இந்த பிள்ளையார் எரிச்சம் பிள்ளையார். எங்க தாத்தா சின்ன புள்ளையா இருந்தப்போ ஊர்ல மழையே இல்லையாம். ரொம்ப பஞ்சமா இருந்துச்சாம்; அதனால எல்லாரும் ஊர காலிபன்னிட்டு போகலாம்னு முடிவு பன்னிட்டாங்கலாம். ”

” ஐயோ அப்புறம் என்ன ஆச்சு? ”

” கொஞ்ச நாளைக்கு வெளியூர்ல போயி பஞசு, முளகாய், கடலை வாங்கி வியாபாரம் பன்னி புழைக்கலாம் அப்புடின்னு ஊர் பெரியவங்க சொல்லிட்டாங்கலாம். அதேமாதிரி வியாபாரம் பன்னிட்டு வந்திருக்காங்க. அப்போ ரெண்டு பேரு ஒரு ஊருக்கு வத்தல் வியாபாரம் பன்ன போயிருக்காங்க, அங்கதான் இந்த புள்ளையார பாத்தாங்கலாம். அவருக்கு கொஞ்சம் முளகாய் வச்சிட்டு போனாங்கலாம். அன்னைக்கு வியாபாரம் அருமையா நடந்திருக்கு, ஒரு மணிநேரத்துல எல்லாம் முளகாயும் வித்துபோயிடுச்சு. அப்ப அதுல ஒரத்தர் சொன்னாராம் ‘டேய் இது ரொம்ப சக்தி உள்ள பிள்ளையார்டா இத நம்ம ஊருக்கு கொண்டு போயிட்ட மழை வந்துடும்னு. உடனே அந்த காலியான மிளகாய் சாக்குல பிள்ளையார போட்டு தூக்கிட்டு வந்துட்டாங்கலாம். ”

” அப்போ இது திருட்டு பிள்ளையார ” என சிரித்தவனை முறைத்தாள். அவளை பார்த்தும் அமைதியானான். ” ரொம்ப பவர் உள்ள பிள்ளையாருங்க அப்புறம் கண்ண குத்திடுவாரு” என்று பயமுறுத்தினாள்.

” சாரிங்க அப்புறம் என்ன ஆச்சு ”

” அப்புறம் என்ன ஐய்யோ எரியுதுடா எரியுது அப்புடின்னு பிள்ளையார் கத்திகிட்டே வந்தாராம் ”

“ஏன்? ”

” அதான் மிளகாய் சாக்குல இருக்காரே! உங்களை மிளகாய் சாக்குல வச்சா தெரியும் வலி ” என்று சிறிது உணர்ச்சி வசபட்டாள். அந்த பிள்ளையார் மீது அன்புக்கு மிகுந்த பாசம் உள்ளது.

” சரி சரி கோவபடாம சொல்லுங்க ” என்று வாயில் விரல் வைத்தான் சிறுகுழந்தைகள் டீச்சருக்கு முன் செய்வதைபோல பவ்யமாக.

அன்பரசி லேசாக சிரித்துகொண்டே தொடர்ந்தாள். ” அப்புறம் என்ன அந்த புள்ளையார இந்த குளத்துல தூக்கிபோட்டுட்டு ‘நீயே குளத்துல தண்ணி வரவச்சு எரிச்சலை போக்கிக்கோ’ அப்புடின்னு சொல்லிட்டாங்கலாம். ”

” ம்ம் அப்புறம் ” என வாயை எடுக்காமல் கூறினான்.

” அப்புறம் அந்த மாசம் சரியான மழையாம்; அது மாதிரி இந்த குளத்துல தண்ணி வத்துற மாதிரி இருந்துச்சுனா இந்த புள்ளையார் மழை பெய்ய வச்சுடுவாறு ” என்று கண்கள் விரிய கூறிவளை பார்த்து அவன் அப்படி சொல்லியிருக்ககூடாது. ”

” அப்போ புள்ளையார்கூட உங்களை பாத்து பயந்துதான் இருக்காரு ” என்றவனை தன்னை மறந்து மென்கரங்களால் அடித்தாள். சந்துரு எதிர்பார்த்தது இதைதான். இந்த அரிசியைதான்.

பின் நிலமையை உணர்ந்து தலைகுணிந்து அமர்ந்தாள். அரிசியை இந்த மாதிரி என்றுமே சந்தோஷமாக வைத்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவன் விருப்பம்.

அவளது அழகையும் வெட்கத்தையும் சிறிது ரசித்தான். அவனது மனதில் இவள் இதயம் உனக்கில்லை அப்படியிருக்கும்போது அழகை மட்டும் ஏன் ரசிக்கிறாய் என்ற கேள்விகனைகளை கொடுக்கவே இதற்கு மேல் இருந்தால் அன்பு நீ யார நினைச்சுகிட்டு இருந்தாலும் பரவாயில்லை ஆனா நான் உன்னை நினைச்சுதான் வாழ்ந்தேன் வாழ்கிறேன் வாழ்வேன். என்று கூறிவிடுவான்.

அதனால் “சரி கிளம்பலாங்க” என்றான் சந்துரு.

அவளும் மௌனமாக எழுந்து நடந்தாள் இருவரது காலடி ஈரசுவடுகளும் ஜோடி சேர்ந்தன.

வீட்டிற்கு சென்றதும். “ஹலோ அண்ணா ஒன்லி லேடிஸ் மட்டும்தான் இங்க அலவுட் பாய்ஸ் எல்லாருக்கும் ஊருக்குள்ள ஏதோ பேய் பங்களா இருக்காம் அங்க போங்க” இது சுவேதா.

“எது பேய் பங்களா வா?!” சந்துருவுக்கு பயப்படவா சொல்லிக்கொடுக்க வேண்டும்?!

“ஆமா நீ இங்கேயே இருந்து அண்ணிய கரெக்ட் பன்னலாம்னு பாக்குறியா!? எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துகலாம் கிளம்பு” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

“சரி அத்தை எங்க?!”

“அவங்க சுகுவையும் பாலுவையும் கூட்டிட்டு போயிருக்காங்க”

“அப்போ நான் எப்புடி அங்க போறது உனக்கு வீடு தெரியுமா சுவேதா”

“எனக்கு தெரியாதுப்பா வேணும்னா அண்ணிய கூட்டிட்டு போ ”

அன்பரசிக்கு இன்னும் சிறிதுநேரம் சந்துருவுடன் நடப்பதில் ஒரு சுகம். அதனால் சம்மதித்து நடந்தாள். ஆனாலும் வழியில் எதுவும் பேசவில்லை.

வீடு வந்தது அனைவரும் உள்ளே அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். அன்பரசி அவர்கள் முன் நிற்க “உட்காருங்க ” என்றான் சுகு.

“இல்லைங்க பரவாயில்லை”

தன் மகள் பெயருக்கு ஏற்றார்போல் அன்பாக இருப்பாள் என்பது தெரியும் இப்போது பணிவும் சேர்ந்து கொண்டதை எண்ணி மனம் மகிழ்ந்தார் பார்வதி.

சந்துருவோ வீட்டை சுற்றி பார்க்க சென்றான். ஒவ்வொரு அறையாக பார்த்தான். ஆனால் ஒரு அறை மட்டும் இந்த பகலிலும் மிகுந்த இருளாக காணபட்டது. உள்ளே யாரோ ஒரு பெரிய உருவம் இருப்பதாய் தோன்றியது. ஆனால் சரியாக தெரியவில்லை.

கண்களை அகல திறந்து பார்த்தான். புராணகதைகளில் வரும் பூதம் போன்ற உருவம் அது. சிறுவயதில் தன் தாய் கூறிய ஒரு கதை நியாபகம். கிராமத்துல வீட்டுல பூதம் எல்லாம் வளப்பாங்கப்பா என்று காவேரி கூறும்போது கண்கள் விரிய பார்த்திருப்பான்.

இன்று செல் போனின் விளக்கினை ஏற்றவே அந்த பூதத்தின் தலையில் அமர்ந்திருந்த இரண்டு குள்ள மனிதர்கள் சந்துருவின் மீது பாய்ந்தன.

“அம்மா பேயி….”

-தொடரும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: