அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

 

காவிரிபோல் வளர்வோம் 

அரோகரா 

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

கவியரசு கண்ணதாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29

29 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் காலையில் எழுந்ததும் திவி தோட்டத்திற்கு கிளம்பிவிட்டாள். உடன் சுந்தர் வருகிறேன் என கிளம்பினான். திவியை ஆவலுடன் காண வந்த ஆதிக்கு இதை கேட்டதும் கோபம். இவ போகுறதுன்னா ராமைய்யா கூட போகவேண்டியதுதானே, சுந்தர் கூட

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45

45 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியுடன் அறைக்கு வந்த திவிக்கு செல்லமுடியா வேதனையாக இருந்தது. கோபம், கவலை என அனைத்து உணர்வுகளும் கலந்து இருக்க என்ன செய்வது என புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆதிக்கும் வருத்தம் தான். ஆனால் வேற வழியில்லை.