Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27

உனக்கென நான் 27

சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா உனக்கு யாரு அப்போ போன் பன்னது நீ ஏன் அழுத” இது மலரின் கேள்வி.

“யாரோ ஒருத்தி பேசுனா மலர்; எனக்கும் சந்துருவுக்கும் கல்யாணம் நடந்தா ரெண்டுபேத்துல ஒருத்தர கொண்ணுடுவேன்னு சொன்னா நான் செத்தாலும் பரவாயில்லை ஆனா சந்துரு” என மலரை பார்த்ததாள்.

“ஏன்டி நீ சின்ன வயசுல பன்ன வாலுதனத்துக்கு யாராவது உன்னை கலாயக்க ட்ரை பன்னிரூப்பாங்கடி நீ ஃபீல் பன்ற அளவுக்கு ஒன்னும் இருக்காது” என மலர் சிரிக்க “அது இல்லடி அவ ஜெனின்னு சொன்னா”

“ஜெனின்னா யாருடி”

“இல்ல விடுடி நீ சொன்ன மாதிரிதான் யாராவது பன்னிருக்கனும்” முடித்தாள் அன்பரசி. இவள் எதையோ மறைக்கிறாள் என்பதை மட்டும் மலரால் உணரமுடிந்தது. ஆனால் கேட்டாள் சொல்லமாட்டாள் அழுத்தகாரி என்பது மலருக்கு நன்கு தெரியும். சரி அவளாக கூறுவாள் என விட்டுவிட்டாள்.

விமானம் இறக்கையை அசைக்காமல் வின்னில் பறந்துகொண்டிருக்க இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தனர் இருவரும். “ஏய் சுவேதா அந்த நாள் எல்லாம் திரும்ப வராதுல” என அவளை பார்க்க “ஆமா அந்த நாட்களை நான் மறக்க முயற்சி செய்யுறேன்” இது சுவேதாவின எண்ணம்.

“ஏன் அப்புடி சொல்ற”

“எனக்குனு‌ ஒரு ஸ்டைல் எனக்குனு ஒரு வாழ்கை அப்படின்னு சந்தோஷமா இருந்தேன் அது எனக்கு பிடிச்சது ஆனா மஞ்சுளா மூலமா நீ என்கிட்ட வந்த நீ என்ன மாத்துன மன்னிச்சிடு நான் உனக்காக மாறுனேன் ஆனா இந்த விதிய பாத்தியா தப்பு செய்யும்போது தண்டனை கொடுக்காம திருந்துனதும் தண்டனை கொடுக்குது.” என முகத்தில் தன் வேதனையை காட்டினாள்.

அவளது துயரத்தை உணர்ந்தவன் “சுவேதா எனக்காக ஒன்னு பன்னுவியா நாம்மளோட அந்த நாட்கள அடுத்த மூனுநாள் எனக்காக திரும்ப தருவியா ஏன்னா நான் அமெரிக்கா போயிட்டா கன்டிப்பா திரும்ப வரமாட்டேன்” என அவளது கண்களை பார்த்தான்.

“டேய் நான் சாகுரவரைக்கும்கூட உனக்காக வாழ ரெடிடா” என சந்துருவின் கண்களை பார்த்தாள். இரண்டு கண்களுக்குள்ளும் காட்சிகள் ஓடதுவங்கின கடந்தகாலம் எனும் திரையில்.

“ஏண்டி செஸ் கோச்சிங் செஸ் கோச்சிங்னு சொல்லிகிட்டு நீ அந்த சந்துருவோட சுத்திகிட்டு திரியுர ஒரு நாள் பாரு நியூஸ் போப்பர்ல ஹெட் நீயூஸா வரப்போற பாரு” என சுவேதா தன் தோழியை எச்சரிக்கை செய்தாள் கையில் வெள்ளை பவுடரை தட்டிகொண்டே.

“சந்துரு எனக்கு அண்ணண்டி; ஏய் என்ன பத்தி விடு இது என்ன கையில” மஞ்சு அதிர்ந்தாள்.

“கோகுல் சாண்டல் பவுடர் நீ பூசுனது இல்லையா” என நக்கலாக கூற மஞ்சு அவளை முறைத்தாள். “சரிடி முறைக்காத இது அபின் நீதான சொன்ன இனிமே சிகரெட் பிடிக்ககூடாதுனு அதான் கொஞ்சம் சேஞ்ச் பன்னிட்டேன்” என கண்ணடித்தாள்.

“ஏன்டி உடம்ப கெடுத்துகிற” என அதை தட்டிவிட்டாள். “என்னடி நீ லைப்ப சந்தோஷமா வாழனும்டி அதான் இப்புடி ஆனா நீ இதுக்கும் தடை போடுற சரி விடு நீ ஒரு கிராம் ட்ரைபன்னி பாக்குறியா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் அப்புறம் உன் பாய்பிரண்ட்கூட நல்லா ரெமான்ஸ் பன்னலாம்” என சந்துருவை சுட்டிக்காட்டும் விதமாக கூறினாள்.

“ஏய் லூசாடி நீ சந்துரு எந்த பொண்ணையும் தப்பான எண்ணத்துல பாக்கமாட்டார்டி நீயா எதுவும் உளறாத” மஞ்சுளாவின் தீர்கமான எண்ணம் இது.

“ஓ அப்புடியா உனக்கு ஆம்பளைங்க சைக்காலஜியே தெரியலடி இன்னைக்கு நானும் உன்கூட வாரேன் உனக்கு புரிய வைக்குறேன்”

“நீயா வேணாம்டி நீ பன்னதே போதும்” என மஞ்சு கூற “அதான பாத்தேன் லவ்வர்ஸ்குள்ள எதாவது தனியா பன்னிப்பீங்க நடுவுல நா எதுக்கு” என சுவேதா திரும்பி நின்றாள்.

இவள் திருந்தமாட்டாள் சரி சந்துருவின் குணத்தை நிறுபிக்க இதுதான் தருணம் என நினைத்துகொண்டு “சரிடி நீயுமா வா ஆனா இந்த போதை பொருள் எல்லாம் போடாம வரனும் சரியா”

“டீல் அக்செப்டெட்” என சுவேதா கூறனாள்.

மாலை நேரம் மைதானத்தில் கால்பந்து பயிற்சி கிரிகெட் வலை பயிற்சி ஹாக்கி டென்னிஸ் என நிரம்பி வழியவே சில ஜாம்பவான்கள் உடலை கட்டமைக்க ஜிம்முக்கு பயனமாகிகொண்டிருந்தனர்.

சுவேதாவும் மஞ்சுவும் அவர்களை கடந்த வண்ணம் வரவே ஒரு கட்டிடத்தின் தலையில் குதிரையின் சிலை இருக்க அதை நோக்கி நடந்தனர்.

“ஏய் ஒரு நிமிசம் டி” என மஞ்சுவின் துப்பட்டாவை சிறிது கீழே இறக்கி விட்டாள். “ஏய் என்னடி பன்ற” என பயந்தவள் மீண்டும் மேல ஏற்றிவிட்டாள்.

“இருடி அவன் கண்ணு இங்கதான் போகும் பாரு” என மீண்டும் கீழே இறக்க முயற்சித்தவளை தடுத்துவிட்டு “எதுவா இருந்தாலும் நீயே பன்னிகோ என்ன வச்சு ஆழம் பாக்காத” என கூறவே “ஒருநாள் தாண்டி” என இறக்கி விட்டாள்.

பின் மூவரும் உள்ளே நுழைய தூரத்தில் ஒரு பலகையை உற்று பார்த்தபடி அமர்ந்திருந்தான் சந்துரு. இருவரும் வரவே லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு. மீணுடும் பலகையில் கவனம் செலுத்தினான்.

“அண்ணா ஆரம்பிக்கலாமா?” என மஞ்சு கூறவே. “என்ன சொன்ன?!” என நிமிராமல் கேட்டான்.

“விளையாட ஆரம்பிக்கலாமானு கேட்டேன்” என மஞ்சுகூற “அதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொன்னியே” என்றான். சிறிது யோசித்தவள் “அண்ணா ” என இழுத்தாள். பட்டென எழுந்தவன் மஞ்சுவின் கன்னத்தில் பளாரென ஒரு அறை அறைந்துவிட்டு “என்னடி ட்ரஸ் பன்னிட்டு வந்துருக்க” என சுவேதாவை முறைத்து கொண்டே கேட்டான் அது இந்த அறை உனக்கு விழவேண்டியது என்பதைப்போல இருந்தது. மஞ்சுவோ கன்னத்தில் கைவைத்துகொண்டே தலைகுனிந்து நின்றாள். சுவேதாவிற்கு கால்கள் நடுங்க ஆரம்பித்திருந்தது.

“போ போய் சரி பன்னிட்டு வா” என சந்துரு கூற இருவரும் வெளியே செல்ல முயன்றனர். “ஹலோ மேடம் நீங்க இருங்க” என சுவேதாவை கைகாட்டினான்.

அவள் அப்படியே நிற்க மஞ்சு மட்டும் டிரஸிங் ரூமை நோக்கி நகர்ந்தாள்.

“இங்க பாருமா எனக்கு கூட பொறந்தவங்கனு யாருமே இல்ல சரியா என்ன அண்ணானு உண்மையிலேயே கூப்பிடுறது மஞ்சுதான் நானும் அவள சொந்த தங்கச்சியாதான் நினைக்குறேன். அவளுக்கு எதாவது ஆச்சு பாத்துக்க” என கோபமாக சந்துருவின் ஆட்காட்டி விரல்கள் சுவேதாவை பார்த்து நின்றன. அடுத்த சில நொடிகளில் மஞ்சு ஆடைகளை சரி செய்துவிட்டு வந்தாள். பின் கருமை படையின் பின்னே அமர “என்ன இன்னைக்கு அந்த பக்கம் உட்கார்ந்துட்ட கோபமா” என சந்துரு அமரவே சுவேதா பேயறைந்ததுபோல நின்றாள்.

மஞ்சு மௌனமாகவே இருக்கவே “அப்போ நான் மூனாவது மனுசன்தான உனக்கு” என சந்துரு சிப்பாயை நகர்த்தினான். மஞ்சு மீண்டும் அமைதியாக அவளும் சிப்பாயை நகர்த்தினாள்.

அப்போது நின்றிருந்த சுவேதாவை பார்த்து “உட்காருங்க ப்ளீஸ்” என ஒரு சேரை நகர்த்தவே அவள் பயத்திலேயே அமர்ந்து கொண்டாள்.

“சரி மஞ்சுளா நான் பன்னது தப்புதான் உன் சுதந்திரத்துல எனக்கு என்ன உரிமை இருக்கு இனிமே நான் உன் கண்ணுலயே படமாட்டேன் குட் பாய்” என வெள்ளை ராஜாவை கீழே சாய்த்துவிட்டு எழுந்தான்.

அடுத்த நொடி சந்துருவுக்கு சில அடிகள் விழுந்தன‌. “ஏய் வலிக்குதுடி போதும் நிறுத்து” என சந்துரு கூறவே. “என்ன கோபம் பேயிருச்சா”

“எனக்கு உன் மேல கோபமே வராது; விளையாடும்போது பேசகூடாதுனு நீதான சொன்ன அதான் அமைதியா இருந்தேன்” என கண்களை சுருக்கி கொண்டு சிரிப்பதுபோல பளிப்பு காட்டினாள்.

“அப்போ நான் உன்ன அடிச்சதால உனக்கு கோவமே வரலையா”

“நான் உன்ன என் சொந்த அண்ணாதான் நினைக்குறேன் இப்போ எனக்கு ஒரு அண்ணன் இருந்தா என்ன பன்னிருப்பான் அததான நீயும் பன்ன சரி ராஜாவ ஆட்சில உட்கார வச்சு போர தொடரு ” என அமர்ந்தாள்.

“உனக்கு கோபம் இல்லைல” என அமர்ந்தான்.

“யாரு சொன்னா கோபம் இருக்கு அது போகனும்னா எனக்கு நீ மூனு சுடிதார் எடுத்து தரணும்” என சிரிக்க “மூனு என்ன முப்பது வாங்கிக்கோ” என விளையாட்டு துவங்கியது.

சுவேதாவோ அதிர்ச்சியிலிருந்து மீளாமல் சிலையென அமர்ந்திருந்தாள். சந்துருவும் மஞ்சுவும் பலமுறை மோதல்களை புரிந்தனர். சந்துருவே அனைத்திலும் வெற்றியடைய இறுதியாக மஞ்சு வெற்றியடைந்தாள்.

“ஐ நான் ஜெயிச்சுட்டேன்.” என மகிழவே சந்துரு “சரி வா அடுத்த மேட்ச்ல பாத்துகலாம்”

“போதும்னா நான் ஜெயிச்ச சந்தோஷத்துலயே கிளம்புறேன்.” என மஞ்சு கூற சரி என பலகைகளை எடுத்து ஸ்டோர் ரூம் கொண்டு சென்றான்.

“சரி வாடி போகலாம்” என மஞ்சு சுவேதாவிடம் கூற “நீ போடி நான் சந்துரு கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்றாள். சுவேதாவின் கண்களில் இன்று ஒரு ஒளி தெரிந்தது. எதையோ உணர்ந்து கொண்டாள் என்பது தெரியவே மஞ்சு அங்கிருந்து சென்றாள்.

சந்துருவோ ஸ்டோர் ரூமில் இருந்து வெளியே வரவே சுவேதா மட்டும் நின்றிருந்தாள். அவளை கண்டுகொள்ளாமல் சந்துரு நடந்தான்.

“ஒரு நிமிசம் சந்துரு நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” சந்துரு திரும்பினான்.

அந்த கல்லூரியின் குட்டிசுவர் அது அதில் மூன்று பெண்கள் அமர்ந்திருந்தனர். இவர்களின் வருகைக்கு முன்னால் அது ஆண்களுக்கு உரித்தான இடம் ஆனால் இந்த புது பெண்படையின் அணிவகுப்பால் விட்டுக்கொடுக்க பட்டாருந்தது. அதில் நடுவில் இருந்தவள் அன்பரசி. இறுதியாண்டு மாணவிகள் என்பதால் சற்று திமிர் அதிகமாகவே இருந்தது.

முதலாமாண்டு மாணவிகள் அந்த சுற்றை கடந்துதான் விடுதிக்கு செல்லவேண்டும். அவர்களை வழிமறித்து விழிபிதுங்க செய்வதே இன்றைய நோக்கம்.

“ஏய் இங்க வாங்கடி” அன்பரசியின் குரல் ஒலிக்கவே மூன்று ஜுனியர் பெண்கள் வந்து நின்றனர்.

“ஏய் குதிரவாலு நீ முன்ன வா” என நீளமாக முடயிருந்த பொண்ணை பார்த்து கூறினாள்.

அந்த பெண்ணும் பயந்துகொண்டே வரவே “இது ஒட்டுமுடியாடி” என்றாள்.

“இல்லக்கா நிஜமுடிதான்” என நடுங்கிகொண்டே கூறினாள். “ஏன்டி அக்காவ பாத்து பயபடுற ஜாலியா இரு” என சுவற்றிலிருந்து இறங்கி அந்த பெண்ணின் அருகில் வந்துநின்றாள் அன்பரசி.

“சரிக்கா” என இயல்புநிலைக்கு வர முயன்றாள்.

“சரி உன் லவ்வர் என்ன பன்றான்”

“ஐயோ அக்கா அப்படிலாம் யாரும் இல்ல”

“ஏய் சும்மா சொல்லுடி இந்த முடிக்கே பின்னாடி பல பேர் சுத்திருப்பானுக” என அன்பரசி சிரிக்கவே.

“ஊருல எலக்ட்ரீசியன்க்கா” என முகம் சிவந்தாள் அந்த பெண்.

“அடி பாவி காலேஜ் வரதுக்கு முன்னாடியே பிக்கப்பா”

“டென்த்லயே அக்கா” என்றாள்.

“ஓஓஓ” என வாயில் கைவைத்தவள்.

“யாரு மொத சொன்னது”

“அவுகதான்க்கா” என அந்த பெண்ணின் கால்கள் தரையில் கோலமிட்டன.

“எப்புடி சொன்னாக லட்டரா இல்ல ரோஸ் வாங்கி கொடுத்தா இல்ல இந்த முத்தம்” என அன்பரசி இழுக்க

“அத நான் சொல்றேன்” என ராஜேஷ் பின்னால் வந்து நின்றான்.

அவனை பார்த்து அன்பரசி ஓட முயன்றாள்.

-தொடரும்

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: