Skip to content
Advertisements

சூர்யாவின் OS ===2===> Language:;

 20122f122f042f332fgoogleistop-ats

 வயசு நாற்பது ஆச்சுங்க . ஒரு பக்கம் கவலையா  இருந்தாக்கூட அந்த வயசுக்கு ஏத்த பக்குவமும் இருக்கத்தாங்க செய்யுது . முன்பை விட இப்போ எல்லா விஷயத்துலயும்  இருக்கிற அழக  ரசிக்க முடியுது ……

இருங்க , இருங்க ….. இப்போ topic  வயசு பத்தி இல்லங்க…..என்னோட System Admin  பத்திதான்,அதாங்க என் husband பத்தி ……
ஓங்க எல்லாருக்கும் தெரியும் ஒரு programming language  வச்சு ஒரு OS -Operating System develop பண்ண முடியும்னு ….ஆனா ஒரு OS வச்சு language create பண்ண முடியுமா ??முடியாது தானே .ஆனா என் husband முடியுனு prove பன்றாரு ….பாக்குறிங்களா?
முதல் முறையை அமெரிக்கா வரும் பொது  சென்னை ஏர்போர்ட்ல செக்கிங் முடிச்சுட்டு உக்காந்து இருந்த போது , இவுங்க  “போய் FTP  பண்ணிட்டு வர்றேன்னு ” சொல்லிட்டு வேகமா போனாங்க . ஓ!! ஏதோ ஏர்போர்ட்ல இருந்து  ஆபீஸ்க்கு கனெக்ட் பண்ணி வேலை முடிக்க போறாங்கன்னு நெனச்சேன். ஆனா அவுங்க போய் ரெஸ்ட்ரூம்கு போயிட்டு வந்தாங்க…..
நாமெல்லாம் கார் விண்டோவ மூடணும்னா எப்படி சொல்லுவோம் ? !! .எளிமையா கார் விண்டோவ்வ  கிளோஸ் பண்ணுங்கனு தானே சொல்லுவோம் . இவுங்க எப்படி சொல்லுவாங்க தெரியுமா…….ரொம்ம்ப யோசிச்சு வார்த்தையே கிடைக்காம ” விண்டோவ increase பண்ணு , decrease பண்ணுனு”  சொல்றாங்க … ஜஸ்ட் லைக்  “increasing the storage volume “!!!!!
நம்ம பசங்களுக்கு தான் லாங் டிரைவ் போனாலே வண்டில வொக்கார முடியாதே ……”ஆர் வி தேர்  எட் அப்பா ,,,,, ஆர் வி தேர்  எட் அப்பா” னு கேட்டுட்டே இருப்பாங்க. நாமெல்லாம் என்ன சொல்லுவோம் ?  ம்ம் ….”நாட்  எட் ” இல்ல “லாங் வே  டு கோ “னு தானே ……. இவங்க எப்படி தெரியுமா சொல்லுவாங்க ? “more  டிஸ்டன்ஸ்  டு கோ”  இல்லாட்டி   “less  டிஸ்டன்ஸ் டு கோ ” னு தான் சொல்லுவாங்க…..

அதே போல எப்பப்பாரு வீட்டை கிளீன் பண்ணிட்டே தான் இருப்பாங்க ……கேட்டா “இல்லமா அப்பதான் உனக்கு குக் பண்ணும்போது “free space ”  “Buffer ”  இருக்கும்பாங்க   …….
ஆபீஸ்க்கு போய்ட்டாங்கன்னா நாம கால் பண்ணுனா  போன்னே எடுக்க மாட்டாங்க …”கேன் ஐ கால் யு நௌ …”னு  மெசேஜ் பண்ணுன ரிப்ளை வரும் பாருங்க ….” ஐ வில் “ping ” யு லெட்டெர் ” னு ….

ஒரு வருசம் முன்னாடி இரவு பகல் பாக்காம பத்து நாளா சரியா தூங்காம ஒரு Maintenance காக ஒர்க் பண்ணினாங்க ……ரெண்டு நாளா நடந்த  அந்த maintenance முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது , அலுப்புல டிரைவ் பண்ணி accident ஆகி கார் டோடல் ……அத கூட  அவுங்க சிரிச்சுகிட்டே அவரோட கலீஃ கிட்ட எப்படி தெரியுமா சொன்னாரு …..” maintenance பண்ணி ஓங்க சிஸ்டம்லாம் “upgrade ” பண்றேன்னு சொல்லி கடைசில என் கார்ர “Upgrade ” பண்ண வச்சுடீங்க” ….னு ….
இப்பிடி தாங்க Linux கமெண்ட்ஸ் அவர் வாழ்க்கைல பின்னு பிணஞ்சு  இருக்குது……இப்போ நம்புறீங்களா ஒரு OS வச்சு Language create பண்ண முடியுனு ……
Want  to  “PATCH UP ” with  this  guy  forever …..!!!!!!!!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: