Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 23

உனக்கென நான் 23

“அம்மா நான் அம்மன் கோயிலுக்கு போயிட்டு வாரேன்” என நின்றாள் அரிசி தூரத்தில் இருந்த வேப்பமரத்தில் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தாள் மலை.

“கால ஒடிச்சுபுடுவேன்;  வயிறு நறைஞ்சுருச்சுல அதான் இந்த ஆட்டம்” என பார்வதி பத்திரகாளியானார். “அம்மா அம்மா” என கெஞ்சினாள் வெளியல் இருந்த மலை மீதும் ஒரு கண் வைத்திருந்தாள். “ஏய் சந்துரு தனியா இருப்பான்டி இன்னைக்கு இரு” என தாய் காரணம் கூறினார்.

“வேணுமானா அவனையும் கூட்டிட்டுபோறேன்” என அரிசி முன்மொழிந்தாள். “எதுக்கு அந்த ராஜிக்கு மண்டைய ஒடைச்சமாதிரி இவனுக்கும் பன்றதுக்கா” என கூறவே அரிசி சோர்வாக அமர்ந்தாள்.

வெளியே நின்றிருந்த மலை கையால் சைகைகாட்ட அரிசியும் பதிலுக்கு சைகை செய்தாள். இருவருக்கும் இடையில் இருக்கும் ரகசிய மொழிபோல. இவளது சேட்டையை கவனித்த பார்வதி “மொதல்ல அந்த மலர் கால ஒடிச்சுவிடனும் அப்போதான் நீ அடங்குவ” என அரிசியை பார்த்துகூறவே. அதற்குள் சைகையிலேயே போட்ட திட்டங்கள் நிறைவேறும்விதமாக மலை வந்து நின்றாள்.

“பெரிம்மா அரிசியை பாட்டி வரசொல்லுச்சு” என நிற்க “என்னடி நாடகம் போடுறீங்களா ” என பார்வதி அவளையும் விடுவதாய் இல்லை “இல்லை நிஜமாதான் பெரிம்மா அவளுக்கு எள்ளுஉருண்டை செஞ்சு வச்சுருக்காங்களாம்.” என அன்பரசியை பார்த்து கண்ணடித்தாள்.

“இப்புடியே பொய் சொல்லிட்டு அங்கபோயி சின்ன புள்ளைங்கள எல்லாம் அடச்சுடுறீங்க அவங்க அம்மா என்னை வந்து திட்டிகிட்டு இருக்காங்க என்னமோ பன்னுங்கடி” என அலுத்துகொண்ட பார்வதியின் மனதில் எள்ளுருண்டை வைத்திருந்த தன் மாமியார் நினைவு வந்தது. பார்வதிக்கு இருந்த ஒரே வருத்தம் தன் மாமியார் மாரியம்மாள்தான். தன் தாய் மாரியம்மாளை எதிர்த்துஅல்லவா போஸ் தன் காதலி பார்வதியை திருமணம் செய்துள்ளார்.

அதனால் தனித்து இருந்துதோட்டத்தில் தங்கிகொண்டார் போஸின் தாய் மாரியம்மாள். அவர்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு அன்பரசி மட்டுமே. அன்பரசியும் தன் பாட்டியை சாக்காக வைத்தே பார்வதியிடம் இருந்து தப்பி விடுவார். பார்வதிக்கும் தன் மாமியார்மீது பயம் உண்டு. அதனால் இப்போது அன்பயசிக்கு பர்மிஷன் கிராண்டெட்.

இரண்டு தோழிகளும் தயாராக அப்போது சந்துருவோ அந்த காரில் கைவைத்தான். அதை அரிசி எதிர்பார்க்கவில்லை. உடனடி திட்டம் நிறைவேறியது. “சந்துரு நீயும் வாடா எள்ளுஉருண்டை சாப்பிடலாம் நல்லா இருக்கும்” என நாக்கில் எச்சில் ஊறியதைபோல சைகை செய்தாள்.

சந்துரு தன் அத்தையை பார்க்க “சரி நீயும் போய்ட்டுவா; ஏய் சந்துருவ பத்தரமா பாத்ததுக்கோ இல்லை” என பார்வதி கூறும்போதே “சரிம்மா” என அலுத்துகொண்டே கிளம்பினாள்.

சிறிதுநேர நடைக்குபின் அம்மன் கோயிலை அடைந்தனர். மிகவும் பெரிய கோயில் இல்லை மொத்தமே பத்துக்கு பத்ததடி சதுரமாக இருக்க உள்ளே ஒரு கல்லை அழகாக வடிவமைத்திருந்தனர். அதன் அருகில் இருந்த இடத்தில் பல குழந்தைகள் வயது வித்தியாசம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தன. அதில் சாமியின் அருகிலும் சில குழந்தைகள் தவழ்ந்து கொண்டு அம்மன் மீதிருந்த பூக்களை பிய்த்து விளையாடிகொண்டிருந்தனர்.

நிறைய குழந்தைகள் தாயை சுற்றி விளையாடி கொண்டிருந்ததாள் அந்த அம்மனது அலங்காரத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துகொண்டிருந்தது. ஊரையே அரவனைக்கும் அம்மன்தாய் இந்த குழந்தைகளை பார்த்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் அருகில் எந்த பெரியவர்களும் தென்படவில்லை. அல்லது அந்த அம்மன் இதெல்லாம் என் குழந்தைகள் என்று தத்தெடுத்துகொண்டாளா தெரியவில்லை. அதில் இன்று சந்துருவுக்கும் இடம்கிடைத்தது.

அந்த கோயிலின் பின்புறம் இருந்த இடத்தில் சில சிறுவர்கள் கையில் ஒரு அடிகுச்சியும் தரையில் இரண்டு அங்குலத்தில் இருபுறமும் கூர்மையாக்கபட்ட கில்லியும் கிடக்க அதை அடித்து எழுப்பி சாதனைகள் நிகழ்த்திகொண்டிருந்தனர். அதில் சில கிளவிகளின் மண்டைகள் உடைந்ததும் கின்னஸ் ரெக்கார்டில் எழுதப்பட்டுள்ளது. அதுவும் இல்லாமல் அருகில் இருந்த ஒரு பெரிய வேப்பமரத்தில் பல சிறுவர்கள் ஏறிகொண்டிருக்க கிழே ஒரு சிறுவன் வட்டத்தில் ஒரு குச்சியை இட்டு பாதுகாத்துகொண்டிருந்தான். அந்த கனம் ஒரு சிறுவன் மரத்திலிருந்து பொத்தென விழுந்த அந்த குச்சியை வாயில் கவ்வினான். அந்த ஏமாளி சிறுவனின் முகத்தில் வாட்டம் தெரிந்தது.

ஒருவர் மீது மற்றொருவர் ஏறிக்கொண்டு கையில் பலகைபோன்ற கற்களைவீசி வ ளையாடிகொண்டிருந்தனர். சில கோழிகுண்டுகளும் அங்கும் இங்குமாக உருண்டுகொண்டிருந்தன. பம்பரத்தின் ஆணிகள் மற்ற பம்பரங்களை முத்தமிட்டபடி இருந்தன.

சில குழந்தைகள் தரையில் கட்டங்களையிட்டு ஒற்றைகால்களால் மான் என தாவிகொண்டிருந்தனர். அந்த இடத்தை ஒரு மருட்சியுடன் நோட்டம்விட்டான் சந்துரு.

“ஏய் இது எங்க இடம்டா நீ எதுக்கு இங்க வந்த” என அரிசி கத்திகொண்டிருந்தாள். “அதான் சொல்றாள்ள கிளம்புடா” என மலைகூறவே சந்துரு என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தான்.

தாங்கள் கில்லி விளையாடும் இடத்தை அந்த மணி பிடித்துகொண்டதாள் வந்த பாக்கிஸ்தான் இந்திய பணிபோர் இது.

“நீ எதுக்குடி லேட்டா வந்த அதான் நாங்க விளையாடுறோம் போ நீ போய் நொண்டி விளையாடு” என அந்த கில்லியை தரையிலிருந்து மேலே எழுப்பினான்.

அதை லாவகமாக பிடித்துகொண்ட அரிசி “இது இல்லாம எப்புடிடா விளையாடுவ” என அதை தன் சட்டைபையில் போட்டுகொண்டாள்.

“ஏய் ஒழுங்கா குடுடி” என ஆத்திரமடைந்தான் மணி “அப்போ எங்க இடத்தை விடுங்க” என அரிசி அரசியாக கட்டளையிட்டாள்.

“எங்க அம்மாகிட்ட சொல்றேன் இரு” என அழதுவங்கினான் மணி. அதை இரண்டு தோழிகளும் பார்த்து சிரித்துவிட்டு “போ போய் சொல்லு உங்க அம்மாவுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு” என நக்கலடித்தனர்.

அவன் அழுதுகொண்டே நிற்க மணியின் சித்தப்பா மகன் வந்தான். “சரி அக்கா நாம எல்லாரும் விளையாடுவோம்” என யோசனை சொல்ல சிறுது யோசித்த அரிசி சரியென ஒத்துகொண்டாள். அதன்பின் அரிசி அணியும் மணி அணியும் மோதலை துவங்கின.

தனது அதிகாரத்தால் முதலில் பேட்டிங் தேர்வு செய்துவிட்டாள சந்துருவை வைத்து ஆழம் பார்த்தனர்‌.

“அரிசி என்க்கு விளையாட தெரியாது” என சந்துரு அவளை பார்க்க “நீ வேஸ்டுடா தள்ளு ” என அவனை ஒதுக்கிவிட்டு அந்த குழியில் அந்த கில்லியை வைத்தாள். பின் வேகமாக விசையை கொடுக்க அது எதிரணியின் மூவரையும் தாண்டி வின்னில் பறந்தது.

அடுத்ததாக கில்லியை அடிக்கும் படலம் அதற்கு இடையூராக இருப்பவற் மணி. அந்த சகாப்தம் முடிவுக்கு வந்த நேரம் இது ஆம் அரிசி அடித்த அடியில் அந்த கில்லி மணியின் மண்டையை பிளந்துவிட்டது. “ஏய் ஓடுடி” என அரிசியும் மலையும் சந்துருவை இழுத்துக்கொண்டு தங்களின் பாதுகாப்பு கோட்டைக்குள் புகுந்தனர் அது தன் பாட்டியின் வீடு.

இப்படிதான் அரையாண்டு விடுமுறைக்கு கிடைத்த பத்துநாள் விடுமுறையிலேயே ஊரில் பலகலவரங்களை நிகழ்த்தும் வல்லமை பெற்றிருந்தாள். அந்த ரவுடி அணியில் இப்போது சந்துருவும் இனைக்கபட்டிருந்தான்.

அங்கே அரிசியின் பாட்டி தின்னையில் அமர்ந்துகொண்டு வெற்றிலையை மென்றுகொண்டிருந்தார். “ஐ பாட்டி” என ஓடினாள் அரிசி. அவளை பார்த்ததும் “வாம்மா அப்பா என்ன பன்றான்” என கேட்டாள். “நல்லா இருக்காங்க பாட்டி”

“ஆமா அவனுக்கு பொண்டாட்டிதான் முக்கியம் பெத்த அம்மாவ பார்க்கக்கூட நேரமில்லை” என அரிசியின் முகத்தில் இருந்த வேர்வையை துடைத்தார். எப்படியும் அரிசிக்கு இந்த வயதில் இது புரியாது என புளம்பினார்போலும்.

“ஏய் மலர் உள்ள தூக்குவாளில எள்ளுஉருண்டை இருக்கு எடுத்துட்டுவா” என உத்தரவிட அவள் அதை சாப்பிடும் ஆவளில் வேகமாக எடுத்துவந்தாள். அரிசியோ தன் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

இருவரும் தன் பங்கினை எடுத்துகொள்ள அப்போதுதான் பார்த்தார் மாரியம்மாள் சந்துருவை.

“யாரும்மா இது புதுசா இருக்கு” என அரிசியிடம் கேட்க அவளோ கைநிறைய வைத்திருந்த எள் உருண்டையை கடித்தபடி “எங்க வீட்டுக்கு வந்திருக்கான் பாட்டி லீவுக்கு” என கூறினாள்.

“வீட்டுக்கு வந்துருக்கானா”. என யோசித்துவிட்டு “உங்க அப்பா யாருப்பா” என கேட்டுகொண்டே சந்துருவுக்கு சிறிது எள் உருண்டையை எடுத்துகொடுக்க கைகள் நீண்டது. அவனோ “சன்முகம் ” என கூறவே எள் உருண்டையை கொடுக்க முன்னாள் நீண்ட கை வெடுக்கென பின்னால் வந்தது. “உங்க ஆத்தா காவேரியா?!” என சத்தமாக கேட்டார். “ம்ம்” என்பதைபோல தலையாட்டினான்.

ஆத்திரமடைந்தார் மாரியம்மா பாட்டி “அன்பு இவனை போய் வீட்டுல விட்டுட்டு வா இங்க எதுக்கு இவன் வந்திருக்கான்” என தன் பாட்டியின் கோபத்தை முதலில் பார்த்தாள். மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: