Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 16

உனக்கென நான் 16

“அவன் செத்துட்டான்” என கூறிக்கொண்டே வெளியே வந்த போஸை இருவரும் கண்இமைக்காமல் பார்த்தனர். “என்னடா சொல்ற?!” அதிர்ந்தார் சன்முகம்.

“ஆமா வேற என்ன சொல்ல அந்த பையன் என் கண்முன்னாடிதான் வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டினான். ஆனா இவ அவனையே நினைச்சுகிட்டு இவ வாழ்கையை கெடுத்துகிறா. நீ சொல்லுடா என் பொண்ணு நல்லா இருக்கனும்னு நான் நினைக்குறது தப்பாடா?!” என கூறும்போதே குரலில் தழும்பல் ஏற்பட அதை சமாளிக்க நிலவை பார்த்தார். கண்ணீரை வெளியே வராமல் இருக்க உத்தி அது.

நண்பனின் நிலையை உணர்ந்த சன்முகம் அமைதியாக இருக்க “எப்போ??” என கேட்டான் சந்துரு. சன்முகம் சந்துருவை வெறுமையான பார்வையுடன் பார்க்க அமைதிகாக்க முடிவு செய்தான். அதற்குள் தன்னை சமாதானப்படுத்தி கொண்ட போஸ் தொடர்ந்தார் “அது ஒரு இரண்டு வருசத்துக்கு முன்ன இதுதான் அவன்” என அந்த போட்டோவை சந்துருவிடம் கொடுத்தார்.

இப்படி ஒரு அன்பான பெண்ணை விடுத்து செல்ல அவனுக்கு எப்படி மனது வந்தது யார் அந்த முட்டாள் என நினைத்து கொண்டு அதை திருப்பினான். அதில் ஓர் இளைஞன் கையில் பூங்கொத்துடன் மண்டியிட்டு நிற்க அவனெதிரில் அன்பரசியோ அதை ஏற்கும் விதத்தில் வெட்கத்துடன் நின்றிருந்தாள் சுற்றிலும் புல்வெளிகள் நிறைந்த இடத்தில். நிச்சயம் இந்த புகைப்படம் எடுத்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவளது முகத்தில் அது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அவன் அவளை சந்தோஷப்படுத்த இவ்வாறு செய்திருக்கிறான் ஆனால் அன்பரசயின் கண்ணில் தெரிந்த அந்த உணர்வை சந்துருவால் உணரமுடிந்தது.

அன்று

கேன்டீனில் இருந்து தப்பி ஓடினான் ராஜேஷ். அவன்மீது கொலைவெறியுடன் இருந்தாள் அன்பரசி. “டேய் நில்லுடா உன்னை கொல்லாம விட மாட்டேன்” என கத்திகொண்டிருக்க அனைவரும் அவளையே பார்த்துகொண்டிருந்தனர். மீண்டும் அந்த பாட்டி இவளை உரசிக்கொண்டு அந்த வண்டியை தள்ளிக்கொண்டு நடந்தாள். “இந்த கெளவி வேற என்னை ரொம்ப டார்ச்சர் பன்னுதே” என தலையில் கைவைத்துகொண்டு அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னடி இன்னைக்கு எவன் சிக்கினான்” நக்கலான முகத்துடன் ஜெனி அன்பரசியின் தோளில் கை வைத்தாள். அவளை திரும்பி பார்த்த அன்பரசி. “என்னடி சொல்ற” என்றால். “பின்ன என்னடி நீ கத்துற கத்துல இந்த கட்டடமே இடிஞ்சு விழுந்துடும் போல நான் கிரவுண்ட்ல இருந்தேன் அங்க இரூந்து இங்க வாரேன்” என கிண்டலாய் கூறினாள்.

“ஏன்டி நீ வேற என்ன கலாய்குறியா” என அன்பரசி சங்கீதாவை பார்த்தாள். அன்பரசி யின் குறும்பை ரசிக்கும் ஒரே ஜீவன் ஜெனிதான் அதிலும் தன் வெண்ணிற ராசியான சுடிதாரை மையால் வர்ணம் பூசிய ராட்சசியை மன்னிப்பதே பெரிய விசயம் இதில் ரசிக்கிறாள் என்றால் அறிதுதான். ஏனென்றால் அன்பரசியிடம் இருக்கும் குழந்தை மனதை அறிந்தவள் ஜெனி மட்டுமே ராஜேஷையும் லிஸ்ட்ல வச்சுக்கோங்க.

“சரி என்னடி பிரச்சனை ஏன் கத்திகிட்டு இருந்த?!…அண்ணா ரெண்டு காஃபி” என ஆர்டரும் கொடுத்தாள். அன்பரசி அவளை முறைத்து பார்க்க “அண்ணா ஒரு டீ ஒரு பூஸ்ட் ” என ஆர்டர் மாற்றப்பட்டது ஆம் அன்பரசிக்கு பூஸ்ட்தான் விருப்பம். மீண்டும் முறைத்தாள் அவள் கோபத்திற்கு காரணம் ஜெனிக்கு தெரிந்ததுதான். சற்றுமுன்.

“டேய் ஏன்டா ஓடுற” கேன்டீனை நோக்கி நடந்துவந்த சங்கீதா கேட்க. “அட என்மா நீ வேற இன்னும் ஒரு நொடி நான் நின்னுருந்தாலும் அந்த ராட்சசி என்னை கொன்னுடுப்பா அதான் கடல் மேல ஓடுற மாதிரி ஓடி வந்துட்டேன்” என மூச்சுவாங்கிகொண்டே பதிலளித்தான் ராஜேஷ். “அப்புடி என்னடா பன்ன நீ” என அன்பரசியின் மேல் குற்றமிருக்காது என்பதைபோல கேட்டாள்.

“அட ஏன்மா நானாவது அவளை சும்மா பாத்துகிட்டு இருந்தாவது சந்தோஷமா இருந்தேன் உன் பேச்சை கேட்டு லவ்வ சொன்னா என்னை அடிக்க வர்ரா” என சிரித்துகொண்டே கூறினான்.

“இரு நான் போய் பேசி பாக்குறேன்” என ஜெனி கிளம்ப “போமா அப்புடியே அவ கையில ஒரு கத்திய கொடுத்துவிட்டுடு மொத்தமா குளோஸ் பன்னாட்டும்” என சிரிக்க “போடா லூசு” என ராஜேஷின் முதுகில் செல்லமாக அடித்துவிட்டு கேன்டீனை நோக்கி நடக்க அங்கே பத்திரகாளி வேசத்தில் இருந்தாள் அன்பரசி.

“ஏன்டி கோபமா இருக்க நீ இப்புடி மூஞ்சிய வச்சுக்கிட்டா சிரிப்புதான் வருது. நல்லா கொழந்தை கோபபடுறமாதிரி இருக்கு” என சிரிக்க துவங்கினாள் ஜெனி. “ஏன்டி சொல்லமாட்ட எல்லாம் உனக்கு வந்தாதான் தெரியும்” என அன்பரசி திசையை மாற்றினாள்.

“என்ன எனக்கு வரனும் புரியுறமாதிரி சொல்லுறியா” என கேட்கவே “அந்த ராஜேஷ் தான்டி என்னை லவ் பன்றான்னு சங்கீதாகிட்ட சொல்லிருக்கான்” என கோபத்துடன் கூறினாள்.

“ஓ உனக்கு அதுதான் பிரச்சனையா வேணும்னா ராஜேஷை என்கிட்ட விட்டுடு நான் பாத்துக்கிறேன்” என ஜெனி சீன்டினாள். “என்னடி சொல்லுற ” ஒரு வியப்பு தெரிந்தது அன்பின் முகத்தில்.

“நீ தான்டி சொன்ன எல்லாம் உனக்கு வந்தால்தான் தெரியும்னு அதான் ராஜேஷை நான் லவ் பன்னிகிறேன் அப்புறம் அவன் உன்னை தொந்தரவு பன்ன மாட்டான்” என சிரித்தாள் ஜெனி. இப்போது அன்பரசியின் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது சோகமாக அந்தவட்ட மேஜையை வெறித்தாள் அன்பு.

“என்னடி டல் ஆகிட்ட நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என சமாதானம் செய்தாள் ஜெனி.

“இல்லடி ராஜேஷ் என்னை லவ் பன்றான் எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும் ஆனா அவன் அதை ஒரு மூனாவது மனுசிகிட்ட சொல்லி அனுப்புறான் அதுவும் அந்த சங்கீதாகிட்ட அதான்டி எனக்கு ரொம்ப கோவமா வருது.” என முகத்தில் சோகத்தை காட்டினாள்.

‘அட பாவி டேய் உன்னை அன்புகிட்ட நேரடியாதானே லவ்வ சொல்ல சொன்னேன் நீ எதுக்குடா சங்கீதாகிட்ட சொன்ன இருடா உன்னை வச்சுகிறேன்’ என மனதிலேயே ராஜேஸை திட்டினாள். அன்பரசியின் விசயத்தில் ஒரு மூன்றாவது நபர் தலையிடுவதை அவள் விரும்பமாட்டாள். ஆனால் சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டதே என் செய்வது.

“சரி விடுடி எல்லாம் சரி ஆகிடும்” என அன்பை சமாதானம் செய்துகொண்டே தன் கைபேசியில் குறுஞ்செய்தியை பறக்கவிட்டாள் ஜெனி. அது நேராக ராஜேஷின் கைபேசியில் அடைக்கலம் தேடியது.

‘ஜெனி எதுக்கு கேன்டீன் வர சொல்லறா அதுவும் இல்லாம இப்ப தானே அங்கிரூந்து தப்பிச்சு வந்தோம் சரி என்ன நடக்குதுன்னு பாக்கலாம்’ என நினைத்துகொண்டு நடந்தான்.

அங்கே சூடான டீயும் பாலும் வந்து சேர்ந்தது இருவரும் பருக துவங்கியிருந்தனர்‌. ராஜேஷும் அங்கு வந்து சேரவே “டேய் போய் பில் பே பன்னிட்டு வா” என ஜெனி கூற இவள் யாரை சொல்லுகிறாள் என அன்பரசி திரும்பிபார்த்தாள். அங்கே ராஜேஷ் கவுண்டரை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

“இவன் ஏண்டி இங்க வந்தான். நீயே அவன்கூட பேசிக்கோ நான் கிளம்புறேன்” என அன்பரசி எழுந்தாள். “நான் உன் ஃபிரண்ட்னா உட்காருடி ” என ஜெனி அதட்டினாள். நட்பு எனும் வலையில் அன்பை வீழ்த்துவது எளிது.

அவனும் அவர்கள் அருகில் வந்தான் ஆனால் அமராமல் நின்றுகொண்டிருந்தான். “உனக்கு என்ன தங்கத்துலயா சேர் போட முடியும் உட்காருடா” என ஜெனி மிரட்ட ‘இருந்தாலும் இது ரொம்ப ஓவர் ஜெனி’ என நினைத்துகொண்டு அமர்ந்தான் அன்பரசியோ முகத்தை திருப்பிகொண்டு அமர்ந்தாள்.

“ஹலோ அன்பு இவர் ராஜேஷ் உங்க கிளாஸ்தான் கொஞ்சம் பணகாரவீட்டூ பையன் கொஞ்ச நாளா உன்னை சைட் அடிக்குறாரு உன்னை பிடிச்சிருக்காம்” என நக்கலாக கூறினாள். அன்பரசி ஜெனியை முறைத்து பார்த்தாள்.

“அப்புறம் ராஜேஷ் இவங்க அன்பரசி நீங்க இவங்களை பாக்குறது இவங்களுக்கு ஏற்கனவே தெரியும் இந்த மேடமும் உங்களை லவ் பன்றாங்க ஆனா சொல்ல மாட்டாங்கலாம். அதுவும் இல்லாம நீங்க இவங்ககிட்ட நேரடியா சொல்லாம தூது அனுப்புனதால உங்க மேல செம்ம கோவத்துல இருக்காங்க” என ஜெனி கூறவை அன்பரசி ஜெனியின் தொடையை கிள்ளினாள்.

“ஏன்டி கிள்ளுற உண்மையை தானே சொன்னேன். இப்புடியே கடைசிவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டே இருக்க போறீங்களா? பேசுனா தாண்டி தெரியும் என்ன இருக்குன்னு” என அன்பரசியிடம் கூறினாள்.

காதல் ஜோடிகள் மௌனம் காக்கவே “அட யப்பா சாமி நான் கிளம்புறேன் இனி நீங்களாவது உங்க காதலாவது எனக்கு தெரியாது ” என ஜெனி தன் புத்தகத்தை எடுத்துகொண்டு கிளம்பினாள்.

ராஜோஷோ பதட்டத்தில் எச்சிலை விழுங்க அன்போ தன் விரல் கிரீடங்களை கடித்து கொண்டிருந்தாள். பேச ஆயிரம் இருந்தும் மௌனம் ஏனோ மொழியாக இருவரிடத்திலும் எண்ணங்களும் மனதும் இனைந்ததுபோல ஓர் அமைதி நிலவியது.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: