Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 15

உனக்கென நான் 15

“தாத்தா எனக்கு பொங்கல் எங்கே?!” என்ற அதிகாரதோரனையுடன் குட்டை பாவாடை அணிந்த ஒரு குச்சி வந்து நிற்க “அய்யோ தீந்துடுச்சுமா சீக்ககரம் வந்துருக்கலாமே” என பூசாரி கூற “தாத்தா குழைந்தையும் தெய்வமும் ஒன்னுதானே” வேடிக்கையான கேள்வி “ஆமா பாப்பா” எதார்த்தமான பதில் “அப்போ சாமிகிட்ட இருக்குல்ல அதை எடுத்து குடுங்க” மாட்டிக்கொண்டார் அந்த வயதான அய்யனார் கோவில் பூசாரி.
இறூதியாக சாமியிடம் இருந்த இனிப்பு அரிசியின் கையில் வரவே “ஏய் மலை மணி ராமு முட்டகன்னி எல்லாம் ஓடி வாங்க பொங்கல் கிடைச்சுடுச்சு” என்ற குரலில் ஒலிக்க கோவில் மணி தோற்றுவிட்டது.

மடையை திறந்துவிட்ட வெள்ளம் என ஒரு சிறுவர் பட்டாளம் சூழ்ந்து கொள்ள அவர்கள் கலையும் போது அந்த வாலையிலையை திரும்பவும் மரத்திலேயே ஒட்டிவிடலாம் என்னும் அளவிற்கு இருந்தது. “சரி தாத்தா நாங்க வாரோம்” என வாண்டு நிற்க “நீ சாப்பிடலயாமா?” என பூசாரி அன்பரசி பொங்கல் சாப்பிடாததை கண்டுவிட்டார். “இல்ல தாத்தா என் ஃபிரண்ட்ஸ் சாப்பிட்டாங்கல்ல அதுவே போதும் ” அப்படியே தந்தையின் குணம். “உங்க அப்பா யாருமா?” என பூசாரி கேட்கவே அருகில் இருந்த மலர் “இவள் மிலிட்டரிகாரர் பொண்ணு” என சிரித்தாள். “பேர் என்னமா?!” அடுத்து ஆவளில் கேட்க மீண்டும் தொடர்ந்தாள் மலை “இவ அன்பரசி ” என கூறும்முன்னே மலரின் கையில் கிள்ளினாள் அரிசி “ஏன்டி கிள்ளுற?”

முறைத்தாள் அரசி. “தாத்தா என் பேர் அரிசி” என ஓடிவிட்டாள். சிறுவர்களின் குறும்பை கடவுளும் பணிகலைப்பை போக்க வந்தமர்ந்து ரசிப்பார்போலும் என சிரித்துகொண்டே விபூதி தட்டை எடுத்துகொண்டு கோயிலினுள் புகுந்தார். அன்றிலிருந்து அன்பரசிக்கென்று ஒரு பொங்கல் ஒதுக்கீடு இருக்கும் என்றும் பூசாரி தாத்தாவினிடத்தில்.

ஆனால் இன்றோ “நீங்கள் யார் ” என அவள் கேட்டது பூசாரியின் மனதை காயபடுத்தியிருந்தாலும். அந்த ஆலமரத்தில் குழந்தையில்லாத ஏக்கத்தால் தூக்குபோட்ட ரஞ்சிதம் தான் பேயாக அன்பரசயின் உடலில் இருக்கிறாள் என நம்பவே அந்த மனு பார்வதியிடமும் போஸிடமும் சென்றடைந்தது. அதன்பின் சில சம்பிரதாயங்கள் நடந்தேறவே பின் உறங்கசென்ற அன்பரசி விடியும் போது இயல்புநிலைக்கு திரும்பினாள். ஆனால் அரிசி என இவளை யாராவது அழைத்தாள் லேசான குழப்பம் ஏற்படும் “யார் அந்த அரிசி” என்று.

அந்த நாளின் நினைவுகளை புரட்டிகொண்டிருந்த போஸின் எண்ணம் தன் இறப்புக்கு முன் மகளின் மாங்கல்யத்தை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. “மாப்பிள்ளை இவ இப்படிதான் கழுத சரியா சாப்பிடாம மயங்கிவிழுறா வாங்க வீட்டுக்கு போகலாம்” என உத்தரவிட்டார். அதை மறுக்க முடியாத சந்துரு டாக்டரின் கையில் வண்ணகாகிதங்களை திணித்துவிட்டு அவரிடமிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துகொண்டு கிளம்பினான் அன்பரசியை தூக்கிகொண்டு.

காரில் ஏற்றியதும் மெதுவாக கீயர்களை உயர்த்தினான். கூடவே தைரியமும் சிறிது உயர்ந்தது. “மாமா இப்போ இவ்வளவு அவசரமா கலாயானம் தேவையா?” என கேட்கவே பதில் வந்தது போஸிடமிருந்து அல்ல மாறாக தன் தந்தை சன்முகத்திடமிருந்து “டேய் மாமாவ எதுத்து பேசுற அளவுக்கு பெரிய மனுசனா நீ. உங்க வாழ்கை எப்படி இருக்கனும்னு எங்களுக்கு தெரியும்டா பேசாம ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு” என முதல்முறையாக கோபத்தை காட்டினார். அதற்குள் அந்த நாய் குறுக்கே விழ வண்டியும் இரண்டாவது கியருக்கு சொல்ல தைரியமும் கூடவே சென்றது.

ஆனால் போஸ் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக ஜன்னலை வெறித்துகொண்டு மகளை தோளில் சாய்ந்துகொண்டு அமர்ந்திருந்தார். “அம்மா நான்தான் சொல்றேன்ல பொட்டைபிள்ள தான் பிறக்கும்” என அழத்தமாக பதட்டத்துடன் அமர்ப்திருந்தார் போஸ். “அட பேடா நம்ம ஏழு தலைமுறையில் ஆண்வாரிசுதான்டா அதுனால இதுவும் ஆம்பளைபிள்ளைதான் உன்னை மாதிரியே ஊருக்கு அடங்காம திரியும்” என போஸின் தாய் குமட்டில் குத்த பிறந்தாள் அன்பரசி இருவரின் எதிர்பார்ப்பையும் மீறாமல். பெண் வாரிசாகவும் ஊரூக்கு அடங்காமலும். ஆனால் அவளும் பெண்தானே காதல் என்பது பெண்மையின் இயல்புதானே. அந்த சம்பவமும் ஒரு நாள் அரங்கேறியது.

“ஏன்டா அன்பு இந்த ரூம் குள்ளேயே அடைஞ்சிகிடக்க? ” என உள்ளே வந்தார் போஸ் கையில் சாப்பாட்டுடன். அன்பரசியின் முகத்தில் சிறிதும் பொழிவு இல்லாமல் கண்கள் கலங்கியிருந்தன. “ஏன்டா அன்பு அழற?” பதறினார் போஸ். ஆனால் அவளோ எதுவும் பேசாமல் அழுதாள்.

பாரதியின் புதுமை பெண்ணின் கண்ணில் நீரா என பார்த்து வியந்த போஸ் எதுவும் கேட்காமல் அமைதியாக சாப்பாட்டை பிசைந்து அன்பரசிக்கு ஊட்டினார். முதலில் மறுத்தவள் பின் அன்பின் பிடியில் உண்ண தெடங்கியிருந்தாள். பின் அப்படியே உறங்கிபோனால். அதன்பின் அவளது அறையில் நடந்த தேடுதல் வேட்டையில் சிக்கிய ஆவணங்கள் கண்ணீருக்கு காரணம் காதல் என காட்டியது. இறுதியாக சிக்கிய அந்த போட்டேவை பார்த்ததும் போஸின் இதயமே நின்றுவிட்டது. தான் பெரிய தவறு செய்துவிட்டதாக எண்ணி வேதனைப்பட்டார். அது ரத்தபுற்றுநோயை ஊக்குவிக்கவே போஸின் ஆயுட்காலமும் குறைய துவங்கியது.

இறுதியாக வீட்டினை அடைந்தனர். அன்பரசியை அரை தூக்கத்தில் கைத்தாங்கலாக நடக்கவைத்து ரூமில் சேர்த்தாகிவிட்டது. வாயில் விரல் வைத்துகொண்டு தூங்கியவளை தோளில் சுமந்தகாலம் நினைவில் வந்து போஸின் கண்ணில் நீரை வரவழைத்தது. சந்துருவின் அறையின் பெட்டில் சாய்க்கபட்டாள். அவளருகில் அமர்ந்த போஸ். “அன்பரசி நீ தான் என் இளவரசி இன்னும் நீ எனக்கு சின்ன குழந்தைதான். ஆனா நீ உன் மனசுக்குள்ள எவ்வளவு ககஷ்டம் வச்சிஉருக்கேனு எனக்குமட்டும்தான் தெரியும். உன்னைகூடத்துக்கு அனுப்பிவிட்டு நான்தான் அதிகமா கண்ணீர் விட்டேன். அது யாருக்கு தெரிய போகுது. ஆனால் எனக்கு சின்ன குழந்தையா தெரிஞ்ச நீ திடீர்னு வளந்துவந்து நிக்குற அதனால உன்னை பாதுகாக்க நான் கொஞ்சம் கன்டிப்பா நடந்திருந்தா மன்னிச்சிடுடா. கடைசியா ஒன்னு பன்னபோறேன்டா எப்படி உன் நல்லதுக்காக உன்னை ஸ்கூல்க்கு நீ அடம்புடிச்சாலும் அடிச்சு அனுப்புனேனோ அதுமாதிரி நீ மனசால வேதனை பட்டாலும் இந்த கல்யாணம் நடக்கும். நான் இல்லாதப்போ நீ சந்தோஷமா இருக்கனும்டா” என கண்ணில் நீரை வடித்தார். பின் ரூமைவிட்டு சிரித்துகெண்டே வெளியே வர உள்ளே அன்பரசியின் கண்ணிலும் நீர் வெளிவரதுவங்கியிருந்தது. மருந்தும் அந்த டாக்டர் போல பழையது போல.

வெளியே நின்றிருந்த சந்துரு வானத்தை வெறித்துகொண்டிருந்தான். சன்முகம் தன் மகனின் அருகில் வந்து அமர்ந்தார். “என்னப்பா யோசனை இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலையாப்பா?!” என கண்களை பார்த்து கேட்க “அப்பா அன்பரசி எனக்கு தெய்வம் மாதிரி அவ என்கூட இருந்தாலே உலகத்தையே ஜெயிச்சுடுவேன். ஆனால்…” என இழுத்தான்.

“காதல்….?!” என சன்முகம் கூற “ஆமா டாட்” என பதிலளித்தான் சந்துரு. அதிர்ச்சியில் திடுக்கிட்டார் சன்முகம். ஐயோ அவசரத்தில் உளறிவிட்டேமே என நினைத்துகொண்டு “அன்பரசியோட காதல்ப்பா… அவ யாரையோ லவ் பன்றானு நினைக்குறேன்” என சந்துரு கூறவே

“ஆமா சந்துரு அவ லவ் பன்னா ஆனா இப்போ நினைவுகளோட மட்டும்தான் வாழுறா” என வெளியே வந்த போஸ் விடையளித்தாள். இருவரும் போஸை பயந்ததுபோல் பார்க்க.

“அவன் செத்துட்டான் ” என அன்பரசியின் காதலின் நிலையை முடித்தார் போஸ்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: