Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 11

உனக்கென நான் 11

மணிகண்டன் டாக்டரின் ஓசைகள் காதில் சாத்தானின் ஒலியை போல் திரும்ப திரும்ப கேட்டது சன்முகத்தின் மூளையில். சன்முகம் நெருங்கியவர்களின் இழப்பை தாங்கமுடியாதவர் அந்த வலியை முதல்முறை உணர்ந்தபோது இருந்த அதே வலி இன்றும் ஏற்பட்டது. ‘டேய் இது சும்மாடா உன்னை ஏமாத்த அப்படி நாடகம் போட்டோம்’ என பலமுறை கூறியிருக்கிறான். இன்றும் அவன் அப்படி சொல்வான் என்ற நம்பிக்கையில் “டேய் விளையாடாதடா உண்மையை சொல்லு” என தன் நண்பனின் முகத்தில் சோகமாக பார்வை வீசினார்.

“டேய் நான் ஏன்டா விளையாடபோறேன் நீயே ரிப்போர்ட் பாருடா” என தன் கையிலிருந்த கோப்புகள் கரம் புரண்டன. அதை வாங்கி வாசித்த சன்முகமுகத்தின் உடலில் இயக்கங்கள் நின்றன. தன் மனதை உணர்ந்தவர்கள் தன்னை விட்டு செல்கிறார்கள் என அழுதார். அவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தன் தோழரை கட்டியனைத்து அழுதார். அவர்களின் பாசபினைப்பை அங்குசெல்லுப் வழிபோக்கர்கள் உணரும் அளவிற்கு.

“டேய் நீ வாடா நாம் வெளிநாட்டுல போய் ட்ரீட்மென்ட் பன்னலாம் நான் உன்னை சாகவிடமாட்டேன்” இவை இதயத்திலிருந்து வந்தது சன்முகத்தின் உதட்டிற்கு. “டேய் அது எல்லாம் எடுபடாதுடா சாகனும்னு முடிவாயிருச்சு நான் வாழ்ந்த ஊர்லயே செத்துபோறதுலதான் எனக்கு நிம்மதி” என சிரித்தார். இந்த சூழலிலும் சிரிக்க போஸால் முடிகிறது. இல்லை தன் நன்பணை ஆறுதல் செய்ய அவ்வாறு நடிக்கிறாரா?

அன்று காஷ்மீர் ரகசிய இந்திய ராணுவ தளம்.

“விஜய்சிங் இந்த மிசின் கொஞ்சம் சீக்ரட்தான். இதுல அணுகழிவுகளை வச்சு தயார் பன்ன மிசைல் இதை இங்கிருந்து நம்ம பேஸ்க்கு சிப்பிங் பன்னனும் கேர் புல்லா இருங்க. அனுகுன்டாவது உடனே உயிரை எடுத்துடும் ஆனா இது ஸ்லோ பாய்சன் மாதிரி” என அங்கே ஒரு கன்டெய்னரை நிறுத்திவிட்டு ஜீப்பில் புறபட்டார் ஜெனரல்.

அங்க இருந்த சில நபர்களில் முதலாவதாக சிக்கினான் போஸ். “போஸ் நீயும் ஆரவ்வும்  இந்த கன்டெய்னரை எடுத்துட்டு X2 பேஸ்ல நிறுத்திடுங்க” என கமென்டரின் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை.

“ஒகே சார்” என சாவியை பூட்டவே கன்டெய்னர் உறுமியது. அனு ஆயுதங்களால் தாக்குதல் என்றால் பூமிக்கு முகத்தில் ஆசிட் ஊற்றமதுபோலதான். குழந்தைகள் தீபாவளியில் விளையாடுவதைபோல ஒருவர் வெடித்தால் உலகமே வெடித்தது கொண்டாடிவிடும் பின்னர் மனிதர்கள் செவ்வாய்கிரகத்தில்தான் தஞ்சம்புகவேண்டும். அதனால்தான் என்னவோ இந்த ஆபத்தை மிகுந்த கவனத்துடன் தயாரித்து அரசாங்கத்தின் கணக்கில் வராமல் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி எங்களிடம் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். எங்கே?

அது ஒரு உலோக உருளை முனையில் கூர்மையுடனும் பின்னால் விசையூட்டபட்டு தீப்பிளம்பென பழுத்திருந்தது. அதன் அழகில் சொக்கி தான் போகவேண்டும். அதனால் தான் என்னவோ சொக்கி விழுந்தான் ஆரவ் தலையில் துளைத்து மறுபுறம் அந்த அழகி சென்றதால். துர்அதிஷ்டம் என்னவென்றால் அந்த வாகனத்தின் கைபிடி ஆரவின் கையிலிருந்தது. இப்போது அவனிடம் உயிர் இல்லை. மலைமுகட்டில் சட்டென திரும்பிய என்னை தன்னகத்தே வைத்திருந்த இரும்பு ராட்சசன் மலைமுகட்டில் சரிந்தான். நான் சீட்டின் கைகளை என்னை அணைக்கவிடாமல் மறந்திருந்தேன். தூக்கி எறியபட்டேன் ஓர் இருண்ட புதறினுள். என்னுடன் துனைக்கு வந்தது ஓர் மிசைல். வெறும் ஐந்து சான்தான் ஆனால் அணுகுன்டின் பேரன் அல்லவா அதன் வயிரும் கிழிந்திருந்தது. சில மனிதர்களின் நடமாட்டம் தெரிந்தது. அவர்கள் அந்த கன்டெய்னரில் சிக்கிய உருளை ராணுவ தோழிகளை எடுத்துகொண்டு சென்றுவிட்டனர். ஆனால் அந்த விபத்து இவ்வளவு நாள் கழித்து விபரீதம் செய்யும் என போஸ் சிறிதும் நினைக்கவில்லை. அதன் விளைவு மிலிட்டரி செக்அப்பில் ரத்தபுற்றுநோய் ஆனாலும் அனுகளிவின் விளைவு என்பதால் சலுகைகள் மறுக்கபட்டது. தன் தவற்றை மறைத்துகொண்டது அரசு.
பின் ஓய்வுக்கு தள்ளபட்ட போஸின் வாழ்கை விவசாயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் போஸ் மிக சாதாரனமாக தன் தோழரிடம் கூறினாலும் தன் செல்லமகளையும் அன்பு மனைவியையும் நினைக்கும்போது கண்ணில் வர ஆரம்பித்திருந்தது.

அதுவரை தன் நண்பனை இரும்புமனதன் என்றும் அவனது கண்கள் கரிகாலன் அனை எனவும் நினைத்திருந்த சன்முகத்தின் இதயம் நெருப்பாய் கக்கியது.

“என்னடா அழுகாதடா” என சமாதானம் செய்தார் சன்முகம். “டேய் நான் சாகுறத நினைச்சாகூட எனக்கு கவலை இல்லடா ஆனா என் பொண்டாட்டி என்ன பன்னுவா அவளுக்கு என்னைவிட்டா எதுவுமே தெரியாதுடா” என கண்ணீர் அந்த மீசையினுள் நுழைந்தது.

“டேய் நான் இருக்கேன்டா உன் குடும்பத்தை பாத்துகிறது என் பொறுப்பு” என கண்ணீர் சத்தியம் அரங்கேறியது.

“அதாண்டா என் மகள உன்னோட மருமகளா ஆக்கிட்டா நீ பாத்துக்க மாட்டாயா! அதனாலதான்டா என் செல்லபொண்ணுகிட்ட கூட இப்புடி நடந்துகிறேன் அவளுக்கு இப்போ வலிச்சாலும் பின்னாடி நல்லா இருப்பாடா என் நண்பன் வீட்டுல” என தன் நண்பனின் இருகையையும் பிடித்தார்.

“டேய் இனி அவள் உன் பொண்ணு இல்லைடா எங்க வீட்டு பொண்ணு அது மட்டும் இல்லடா என் தங்கச்சியையும் என் மகன் நல்லா பாத்துப்பான் நல்லா பாத்துப்பான்” என உறுதி அளித்தார் சன்முகம்.

தன் தங்கை என் சன்முகம் உரிமை எடுத்திருந்தது போஸுக்கு நம்பிக்கை அளித்தது. இதற்குமேல் அழுதால் நல்லா இருக்காது என நினைத்த மிலிட்டரி மேன் “அப்போ ரெண்டு பேரையும் பாக்க நான் உங்க வீட்டுக்குத்தான் வரணும் பேயா” என சிரித்தார்.

“கன்டிப்பா” என சன்முகம் சோககுரலுடனும் சிரிக்க முயற்சி செய்த உதட்டுடனும் கூறினார். “ஹேய் ஓல்ட் ஃப்ரண்ட் நமக்குள்ள ஒரு பந்தயம் நான் ஓடுறேன் முடிஞ்சா என்னை முந்திபாரு” என ஓட ஆரம்பித்தார் போஸ். “டேய் முந்துனா என்னடா பெட்” என்ற ஓசைக்கு திரும்பிக்கொண்டு “மேரேஜ் அன்னைக்கு கன்டிப்பா நான் உனக்கு மிலிட்டரி சரக்கு வாங்கி தாரேன்” என ஓடினார். “ஆக மொத்தம் என்னை குடிக்க விட கூடாது இதுதானே உன் திட்டம் ட்ரை பன்னி பாக்குறேன்” என தன் தொப்பையை தூக்கி ஓட துவங்கினார் சன்முகம்.

“அன்பு!!! நான் அப்புடி கூப்பிடலாம்ல?” என நிறுத்த ‘இவனுக்கு மனைவியாகபோகிறேன் என்று எவ்வளவே உரிமை இவனுக்கு’ என மனதில் ராட்சசி வெளிபட்டாலும் தந்தையின் கன்டிப்புக்கு மரியாதை கொடுத்து “ம்ம்” என கூறிவைத்தாள்.

“ஒரு தேவதை என்னை இந்த பூமியில் வந்து இறக்கிவிட்டுச்சு யாருன்னு கேட்கமாட்டியா” என அவளை பார்க்க

அவளோ கண்களை இமைக்காமல் முன்னால் எரிந்து கொண்டிருந்த வண்ணவிளக்குகளை பார்த்துகொண்டே “அம்மா” என்றாள்.

“யூ ஆர் ரைட்…அவங்க கூட ரொம்ப சந்தோஷமா விளையாடிட்டு இருந்தேன். அந்தநாள் வரைக்கும்!!!” என நிறுத்தும்போது அவனது குரலில் உயிர் இல்லை கண்ணில் நீர் ததும்பியது.

அவனை பார்க்க இவளும் உள்ளூர கலங்கிவிட்டாள் அந்த ராட்சசி.  “முன்றாம் வகுப்பு அன்னைக்கு அன்னையர் தினம் நான் ஸ்கூல்ல இருந்து அம்மாவுக்கு சாக்லெட் வாங்கிட்டு வந்திருந்தேன் ரொம்ப ஹாப்பியா” மீண்டும் குரலில் தொய்வு ஆனால் இந்தமுறை கண்ணீர் கரையை கடந்திருந்தது.

“ரோட்டுக்கு அந்தப்பக்கம் அம்மா இருந்தாங்க நான் வேகமா ஓடி வந்தேன் தினமும் நடக்குறதுதான். ஆனால் அன்னைக்கு ஒன்னு புதுசா நடந்துச்சு. ரோட்டுல பாதிய கடந்திருப்பேன். ஒரு வெள்ளை கார் என்னை பாத்து வந்துச்சு. என் அம்மா ஓடி வந்து என்னை தள்ளிவிட்டுடாங்க.” அவனால் அதற்குமேல் சொல்லமுடியவில்லை.
அன்பரசியின் கண்ணிலும் நீர்நிலைகள் இருந்தன.

“நான் எழுந்திருச்சு பாக்கும்போது அவங்க இரண்டு சக்கரத்துக்கும் நடுவில் இருந்தாங்க. அந்த கண் என்னைத்தான் பாத்துகிட்டு இருந்துச்சு ஆமா அவங்களுக்கு உயிர் இருந்துச்சு ஆனா அந்த டிரைவர் பதட்டத்துல வண்டியோட ஆக்ஸலேட்டர மிதிச்சுட்டான் பின்னாடி சக்கரமும்…” என அவன் முடிக்கும் முன் அவள் அவனது வாயை பொத்தினாள் தன் மென் கரங்களால். மற்றோரு கை அவனது கண்ணீரை துடைத்துவிட்டது. கண்ணீர் திரையை விலக்கிவிட்ட பிறகு அவளது கண்ணில் கண்ணீர் இருப்பதை உணர்ந்தான்.

‘இந்த சின்ன வயசுல எந்த அளவுக்கு காயபட்டுருக்கான் ஆனா இவனால் சிரிக்க முடியுது. எல்லாம் வெளியுலக தோற்றம்தான்’ என நினைத்தாள். அவளது கண்ணீரும் துடைக்கபட்டது அவனது கையால். அடுத்ததாக அவன் கூறபோவது அன்பரசியின் இதயத்தை மாற்றும் என்பதை அறியாமல் கேட்டுகொண்டிருந்தாள்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: