Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10

உனக்கென நான் 10

சுவேதாவின் வார்த்தைகள் சந்துருவின் மனதினை துளையிட நினைத்தன. ஆனால் அதற்கு தடுப்பு விதித்தான் சந்துரு. “ஏன்டி நீ தற்கொலை பன்னிதான் சாகனும்னு விதி இருந்தா போய் சாவுடி நான் உனக்காக வருவேன்லாம் எதிர்பார்க்காத” என தனது கைபேசியிடம் கோபத்தை காட்டினான் சந்துரு. அது மெத்தையில் இதமாக மோதியதில் சந்துருவை முறைத்து பார்த்தது.

அன்பரசியோ தன் வாழ்கை எனும் ஓடையின் பயனத்தை நினைத்து வருந்தி கொண்டிருந்தாள். ‘என் மனதை புரிந்துகொள்ள யாருமே இல்லையே! இல்லை இல்லை அதை புரிந்துகொள்ள ஒருவன் வந்தான் அவனையும் கை விட்டது உன் முட்டாள்தனம் நீதான் குற்றவாளி’ என அவள் தரப்பு வழக்கறிஞர் அவளையே கூண்டில் ஏற்றி நிறுத்திவிட்டு சிரித்தார்.

“பார்வதி ஏய் பார்வதி” மிலிட்டரி மேனின் குரல்.

“என்னங்க” அதற்கு பதில் குரல் அளித்தாள் பார்வதி.

“நான் பணம் கொடுத்தேன்ல அதை எடுத்துட்டு வா நிச்சியத்துக்கு பொருள் வாங்கிட்டு வந்திடுறோம்” என தன் முடிவில் உறுதியாய் இருந்தார் போஸ். பீரோ திறக்கும் சத்தம் கேட்கவே பணமும் கைமாறியது ஆனால் அடுத்த அழைப்பை இந்த ஜோடி சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“மாப்ளை மாப்பிள்ளை ” என்ற குரல் வந்ததும் கால்கள் தானாக இயக்கத்தை துவங்கியிருந்தன. “சந்துரு‌ சந்துரு” அடுத்து தன் தந்தையின் குரல் மூன்றாவது எட்டில் அவர்கள் முன் நின்றான்.

“அன்பு அன்பு” அன்பரசியை ஏன் அழைக்கிறார் என்ற குழப்பம் சந்துருவுக்கு. சிறிது நேரத்தில் திருமணம் நடக்கும் முன்னே ஜோடிகளாய் நின்றனர். “சரி ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டலாம்” போஸ் அதிரடியாய் இயங்கினார்.

“நான் எதுக்குபா” அன்பரசி சினுங்கினாள். “அட கழுத உன்கிட்ட புது சேலை இருக்கா!? பின்ன மாப்ள வீட்டு கார்ங்ககிட்ட இப்டியா காட்டுறது” என சிரித்தார். “அட சும்மா சொன்னேன் சொந்தகார்ங்க வருவாங்கல அதான்! அம்மாவையும் கூட்டிட்டு போகலாம்” என போஸ் கூறவே ” நான் வரலைங்க நெறைய வேலை கிடக்கு ” என கட்டை போட்டார் பார்வதி.

“சரி சரி நாங்க பாத்துகிறோம் அதான் மாப்பிள்ளை வாரார்ல அவருக்குதான் ஃபேஷன் டெக்னாலஜி தெரியும்ல” என போஸின் வாயிலிருந்து வார்த்தைகள் தெறிக்கவே ‘ஓ அதான் அவ்வளவு கட்சிதமா எனக்கு சுடிதார் எடுத்து வந்திருந்தானா?” என நினைத்தாள். “சரி மாப்ள ரெடி ஆகுங்கள்” முடிந்தது.

சிறிதுநேரத்தில் அனைவரும் காரில் இருந்தனர் அது புறப்படவே “மாப்ள நிறுத்துங்க பூ வாங்கிடலாம் ”

“மாப்ள பழங்கள் ”

“மாப்ள ஸ்வீட்ஸ்”

“மாப்ள.”

“மாப்ள” என காரின் பிரேக்கின் முக்கியதுவத்தை அன்றுதான் உணர்ந்தான் சந்துரு. இதால் தோழர்கள் இருவரும் ஐந்து ரூபாய்பசையால் ஒட்டியதைபோல் பிரியாமலேயே இருந்தனர் காரின் பின் இருக்கையில். அன்பரசியோ முன் இருக்கையில் அமர்ந்து சாலையை வெறித்துகொண்டிருந்தாள்.

“மாப்ள என் ஃப்ரண்ட பாக்க வேண்டியிருக்கு கொஞ்சம் நேரம் ஆகும் அதுவரைக்கும் அன்பரசிகூட பேசிக்கிட்டு இருங்க ” என இறங்கினார்.

“சன்முகம் நீயும் இரு நான் போய் பாத்துட்டு வந்துடுறேன்” என முதல்முறையாக தன் தோழர் வரவை எதிர்த்தார். “இல்லடா நானும் வாரேன் அவங்க தனியா பேசிகட்டும்” என இறங்கினார் சந்துருவின் தந்தை. இதனால் தன் நண்பனை மறுக்க முடியாமல் அழைத்துசென்றார்.

இருவரும் சென்றதும்

“அன்பரசி நான் ஒன்னு கேட்கலாமா?” என வாயை திறந்தான். அவளும் இவனிடம் மனம் திறக்க தயாராக இருந்தாள். மனம் திறப்பதினாள் தன் மானம் காக்கபடலாம் கல்யானம் என்ற போர்வையில் இருந்து என எண்ணினாள்.

“ம்ம்” என்ற ஓசை அந்த ஏசி காரில் எதிரொலிக்காமல் சந்துருவின் காதை அடைந்தது. “தேவதைகளை நீ பாத்துருக்கியா?”  சந்துரு அந்த தேவதையின் முகத்தை பார்த்து கேட்டான்.

“நீ என்ன லூசா” என்பதைபோல் ஒரு குழப்ப பார்வை பார்த்தாள். “சரி ராட்சசிய பாத்துருக்கியா?!” இப்போது அன்பரசியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

“நான் என் பார்வையில் ராட்சசியாக தெரிந்து தேவதையாக தோன்றிய ஒரு பொண்ணை பத்தி சொல்லபோறேன்” என அவளது கண்களை பார்த்தான். என்ன இனைப்போ தெரியவில்லை அவளது கண்களும் இவனது கண்களை பார்த்தது அந்த தேவதை யார் என்று தேடுகிறாள் போல.

“டேய் இவ்வளவுதூரம்னு தெரிஞ்சிருந்தா கார்லயே வந்திருக்கலாமே ஏன் தேவை இல்லாம நடக்கனும்” என இடுப்பில் கைவைத்து நின்றார் சன்முகம். தனது தோழனின் உடல்சோர்வைபார்த்து சிரித்த போஸ். “ஏன்டா தடியா உன்னையெல்லாம் மிலிட்டரில சேத்துவிட்டுருந்தா இப்படி பேசமாட்ட” என புன்னகை தொடர்ந்தது.

“டேய் அதுக்குன்னு இப்புடியாடா படுத்ததுவ நான் சாதாரன வியாபாரிடா என்னால இவ்வளவுதான் முடியுது” என மூச்சு வாங்கிக்கொண்டு தன் நண்பனின் அருகில் வந்து நின்றார் சன்முகம். பின் சிறிது தூரம் நடக்கவேண்டிய கட்டாயம். இறுதியாக கிடைத்த கனியென அவ்விடம் வந்தனர்.

“மணிகண்டன் கிளீனிக்” என வாசித்த சன்முகம் ” ஏன்டா ஹாஸ்பிட்டல் வந்தோம்” என அதிர்ச்சியாய் கேட்டார். “ஆங்ங் இங்க ஏ குருப் ரத்தம் கேட்டாங்க அதான் உன்னை கூட்டி வந்தேன்”

“டேய் நான் ஓ டா ” என உண்மையை சன்முகம் கூறவே “அதை அவங்க ஓ வா மாத்திப்பாங்க” என சிரித்துகொண்டே உள்ளே நுழைய சன்முகமும் பின்னாலயே சென்றார் ஹச் டாக் போல.

அங்கு தலையில் சில ஏக்கர்களை வைத்துகொண்டு சன்முகத்தின் வயதை ஒத்த மருத்துவர் ஆனால் சற்று பழைய கட்டிடம் மிக குறைந்த செலவில் ஏழைகளுக்கு உண்மையிலேயே உதவுகிறார் என்று தெரிந்தது. இவற்றை ஓர் ஷெர்லாக் ஹோம்ஸ் போல உள்ளிளுத்து கொண்டிருந்தார் சன்முகம்.

“வாங்க போஸ் வணக்கம்” என தன் தெய்வீக புன்னகையை வீசினார் அந்த டாக்டர்.

“வணக்கம் மணி என்ன முடிஞ்சதா” என கேட்கவே மருத்துவரோ அறையில் பார்வைபோர் தொடுத்திருந்த சன்முகத்தை பார்த்துகொண்டிருந்தார். “ஓ இதுவா சன்முகம் என் உயிர் நண்பன் அப்புறம் சம்மந்தி ஆகபோறோம் soon” என கூற “வணக்கம் சன்முகம் சார்” பதிலுக்கு வணக்கம் செய்த சன்முகம் இப்போது கவனத்தை மருத்துவர் பக்கம் திருப்பியிருந்தார்.

“ம்ம் போஸ் நீ என்னோட ஃபிரண்ட் அதனால உண்மையை என்னால மறைக்கமுடியலை மத்தவங்கனா அவங்கள வச்சு பணம் பாப்பாங்க ஆனா என் மனசு அதுக்கு இடம் கொடுக்கலை என்னை மன்னிச்சுடு” என மருத்துவரின் முகம் சோகமாக மாறியது.

போஸோ சிரித்துகொண்டே “அதான் நான்தான் அப்போவே சொன்னேனே நீதான் மனசு கேக்கலைடா ஒருதடவை பாக்கலாம்னு சொன்ன அதான் ரத்தம் டெஸ்ட் பன்ன கொடுத்தேன்” என சிரித்தார்.

இவர்களின் மர்ம பேச்சை கேட்டுகொண்டிருந்தத சன்முகம் “என்னடா பிரட்சனை ” என போஸின் காதில் கிசுகிசுத்தார். ஆனால் அந்த அறை ரகசியம் பேசுவதற்கு சகல வசதிகளும் கொண்டதல்ல.

“ஓ அதுவா சார் அவருக்கு பிளட் கேன்சர் இருக்கு இன்னும் இரண்டு வருடம்தான். கொஞ்சம் மாத்திரை சாப்பிட்டா இன்னும் கொஞ்சம் கூட்டலாம் ஆனா இவன் ஒத்துக்க மாட்டேங்குறான்” என சோகமாக கூறினார் டாக்டர் மணிகண்டன்.

“என்ன டாக்டர் சொல்றீங்க ” அதிர்ச்சியிலிருந்து சன்முகம் மீளவில்லை.

“ம்ம்‌ நான் இன்னும் ரெண்டு வருசத்துல செத்துடுவேன்னு சொல்றாரு.. சரிடா மணி நாங்க கிளம்புறோம்.” என டாக்டரிடம் இருந்த ரிப்போட்டை ஒரு கையிலும் தன் தோழனை மறுகையிலும் பிடித்துகொண்டு கிளம்பினார்.

தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: