கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 11

மூவர் தப்பித்துவிட்டதால் கோபத்தின் உச்சியில் இருந்த அகோரிப் படையினர் வெற்றிக் களிப்பில் சங்கொலி முழங்கக்  கிளம்பினர்.

சங்கொலி முழங்கியதுவிஷ்ணுவின் கண்களில் அசைவு ஏற்பட்டது. அசதியாக புரண்டவன் கனவில் இருந்து மீள முடியவில்லை. ஆனால் அதிகாலை சூரியன் அவசரபடுத்தியது. கண்களை திறந்தான். அருகில் கிடந்த டைரியை புரட்டினான் முடிவை அறியும் ஆவளில் ஆனால் அவனுக்கு ஏமாற்றமேஅந்த குதிரை இவர்களை அழைத்துசென்றவரை தான் அவளும் குறிப்பெழுதியிருந்தாள்.

வேறு ஏதேனும் உள்ளதா எனப்  புரட்டிப்  பார்த்தான். எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சரி அவளிடமே கேட்டுவிடுவோம் எப்படியும் அவளுக்கு தெரிந்திருக்குமே.. என நினைத்தவன் மணியைப்  பார்க்க அது 9:00 காட்டியது.

இன்னைக்குக்  கம்பெனிக்கு லீவுஎன கூறிகொண்டே காலையின் வேலைகளை முடித்தான்.

ரம்யா இருந்த நிலைக்கு அவள் இன்று வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லைஅவளே சென்றாலும் கவிதா அனுமதித்திருக்க மாட்டாள்என நினைத்ததவன் வீட்டில் பூட்டினைக்  குடைந்தான்.

கருப்பன் அவனுக்காகக்  காத்து கொண்டு நிற்க, அதில் அமர்ந்தவன் தன் காலால் அதற்கு தண்டனை கொடுக்க உறுமிக்  கொண்டு பறந்தது. கவிதாவின் வீட்டிற்கு சிறிது தூரம்தான் என்றாலும் இடையில் இருக்கும் வேககுறைப்பான்களுக்கும் அரசாங்கமுத்திரையாய் சாலையில் இருந்த குழிகளுக்கும் இரண்டுஇல்லை மூன்றுஇல்லை இரண்டுஎன கியர்களை மாற்றி அவளது வீட்டை அடைய ஐந்து நிமிடம் எடுத்தது.

டேய் கருப்பா நடந்து வந்திருந்தாகூட இரண்டு நிமிடத்ததுல வந்திருப்பேன்டாஎன கருப்பனது இதயத்தின் சாவியை பறித்தவன் கவிதாவின் வீட்டு வாசலில் நின்று மின்சாரமணியை அடித்தான். மிகவும் பிரம்மாண்டமான வீடு. அதை வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க கேட் கதவு திறக்கபட்டது. உள்ளே செல்ல அங்கு வாட்ச்மேன்அவனிடம் தகவலை கூறி ஒரு வழியாக வீட்டை அடைந்தான். அங்கு கவிதாவின் தாய் நின்றார்.

வாங்க தம்பி

வணக்கம் அம்மாகவிதா ?!” என இழுத்ததான்.

உள்ளே தான் சாப்பிட்டுவிட்டு இருக்கா… நீங்க யாரு?!”

நான் விஷ்ணு

நீங்கதான் விஷ்ணுவாஐயோ வெளியே நிக்கவச்சு பேசிகிட்டு இருக்கேனேவாங்க உள்ளஎன அன்பாய் அழைக்ககவிதாவுடன் நடந்த சண்டை இவர்களுக்கு தெரியாது போல என யூகித்தான்.

விஷ்ணு தயக்கமாக உள்ளே நுழைய அங்கு உணவு மேஜையில் கவிதாவும் ரம்யாவும் அமர்ந்திருந்தனர்.

ரமயாவின் அருகில் இருந்த கவிதாஅவளது அக்காவிற்கு சூடான இட்லியை பறிமாரிகொண்டிருந்தாள்.

வாங்க விஷ்ணுசார் என அழைப்பது மாறியிருந்தது.

விஷ்ணு புருவத்தை குவித்து சந்தேகமாகப்  பார்க்க, அவள் தனது அன்னையை சுட்டிகாட்டினாள் கண்களால்.

நன்றாக துயில்கொண்டும் முகத்தில் களைப்பு தெரிந்த ரம்யா விஷ்ணுவின் வருகையால் புன்னகைத்தாள்.

அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான் விஷ்ணு. அடுத்த நொடி ஒரு தட்டு அவன்முன் வைக்கபட்டு சில மல்லிகைப்பூ போன்ற இட்லிகள் பரிமாறபட்டன கவிதாவால்.

என்ன விஷ்ணு மாமா எப்புடி இருக்கு நானே சமைச்சது” …. அதை கேட்ட கவதா சிரித்தாள். அவளுக்கும் இவர்களது சண்டை தெரியாது. பின்ன நீங்கள் காதலியுங்கள் ஆனால் நான் காதலிப்பதை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூரிய அவளது குழந்தை தனத்திற்கு முன் உலகமே அடிமைதான்.

என்ன அக்கா இப்படி கொஞ்சமா சாப்புடுறீங்கபாருங்க எவ்வளவு ஒல்லியா இருக்கீங்கன்னுவிஷ்ணுவிடம் இருக்கும் கண்டிப்பு கவிதாவிடமும் இருந்தது.

இந்த மூவருக்கு இடையில் உள்ள இணைப்புக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் கடவுள் குழம்பியிருக்க, விஷ்ணுவின் கைபேசி ஒலித்தது.

அதில் பீட்டர் என்று வந்ததை அனைவரும் பார்த்துவிட்டனர். ரம்யாவோ ஸ்பீக்கரில் போடு என்பதைப்போல சைகை செய்தாள்.

தன்னவளின் கட்டளையை மீற முடியுமா அவ்வாறே செய்தான் விஷ்ணு.

ஹலோ விஷ்ணு இன்னைக்கு ஆஃபிஸ் வரலையா

இல்லை சார் கொஞ்சம் உடம்பு சரியில்லை

திவ்யாவும் வரலையே

அவளுக்கு தான் சார் உடம்பு சரியில்லை அதான் அவளை நேற்று ஹாஸ்பிட்டல்ல சேர்த்திட்டு இப்பதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்தோம்…. நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க

அப்படியா சரி இன்னைக்கே ரெஸ்ட் எடுத்ததுகோங்க….”

ஏன் சார்

நீங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிருக்ககிங்க தெரியுமா

புரியாமல் விழித்தான் விஷ்ணு. ஒருவேளை இவர்களது காதலை கண்டுபிடித்துவிட்டானோ.

ஏய் மேன் நீங்க ரெண்டு பேரும் பண்ண புராஜக்ட் அமெரிக்காவுல பெரிய கம்பெனியில் செலக்ட் ஆகியிருக்குநாளைக்கே உங்களை அவங்க வரசொல்லிட்டாங்க

ரம்யாவை பார்ந்த விஷ்ணு அவளது கண்ணில் இதுதான் பீட்டரை கொல்ல சரியான சந்தர்ப்பம் என்ற வெறி மேலோங்கியதை உணர்ந்தான் விஷ்ணு.

இவளால் பீட்டர் இறந்தாலும் பரவாயில்லைபீட்டரால் இவளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டாலஎன பயந்த விஷ்ணு.

ஆனா சார் திவ்யா இருக்குற நிலமையில் அமெரிக்கா வரமுடியுமான்னு தெரியலையேஅவளை கழட்டிவிட பார்த்தான்.

ஹே மேன் என்ன பேசறஇது அவ வாழ்கையில பெரிய திருப்பம் இதை தவறவிட்டால் எப்படிவேண்டுமென்றால் அவளை கவனித்துக் கொள்ள யாராவது வரசொல்என முடித்தான் பீட்டர்.

உடனேநான் வருகிறேன் பீட்டர் அண்ணாஎன கவிதா முந்திகொண்டாள்.

ஏய் கவிதா டார்லிங் இவங்கள எப்படி உனக்கு தெரியும்

இவன் தன்னைக்  காதலிக்கிறான் என்று தெரிந்தால் பீட்டர் அண்ணா என்று ஒதுக்கினாலும் அவன் டார்லிங் என வெறுப்பேத்துகிறான் என நினைத்த கவிதா.

அது பெரிய கதை அப்பறமா சொல்லுறேன்நாளைக்கு ஏர்போர்ட்ல மீட் பண்ணலாம் bye”

என சிகப்பு நிறத்தை அழுத்தினாள் கவிதா.

சரி கவிதா நாங்கள் கிளம்புகிறோம்என விஷ்ணு கூற..

நீங்கள் வேணும்னா கிளம்புங்க அக்கா இங்க இருக்கட்டும் நாங்க ரெண்டு பேரும் ஏர்போர்ட் வந்திடுறோம் நாளைக்குஎன கூறவே மேஜை மீதிருந்த சாவியை எடுத்துகொண்டு கிளம்பினான் விஷ்ணு.

அந்த போருக்கு பின் என்ன நடந்தது என்று ரம்யாவிடம் கேட்கலாம் என்ற அவனது எண்ணம் தவிடுபொடியானது.

வீட்டிற்கு வந்தவன் ரம்யாவின் ஓவியங்களில் கண்களை வரையத் துவங்கினான் இளையாராஜாவின் இசையுடன்.

என்ன அழகான கண்கள் நீலநிறத்தில்இந்த மச்சம் எந்த போர் வீரனையும் வீழ்த்திவிடும்…. எனக்கு நீ கிடைத்ததற்கு நான் தவம் புரிந்திருக்கவேண்டும்என அவளது அழகை பறைசாற்றிகொண்டே ஓவியங்களில் கண்களை வரைந்து முடித்தான்.

தன்னவளின் கண்கள் தனது மனதிற்கு நெருக்கமானதால் அதை வரைவது சற்று எளிதாக இருந்தது. கனவில் அவளது கண்களை பார்க்கத்  தயங்கியவன் நேரில் சற்று முன்னேறியிருந்தான்.

இப்படியே அவளையே பார்த்துகொண்டிருக்க பூமி தன்னையே அரைசுற்று சுற்றியதை அவன் உணரவில்லை‌. அவள் அருகாமை இருக்க இவனுக்கு பசியே எடுக்கவில்லை.

நிலவும் இவனது வாசலில் வந்து நின்றது. கூடவே வேறொன்றும் வந்து நின்றது.

உள்ளே வாங்க யாரது

கவிதா இவனுக்கு உணவு எடுத்துகொண்டு உள்ளே வந்தாள்.
ரம்யா வரலையா

அக்கா இப்பதான் மாத்திரை போட்டு தூங்குறாங்க

சரி சரி

சாப்பாட்டை மேஜை மீது வைத்தவள்அக்காவோட பையை எடுத்துட்டு வரச்சொன்னாங்கஎன மேஜையில் இருந்த பையை எடுத்தாள். விஷ்ணுவோ அதில் எல்லவற்றையும் வைத்திருந்தான் டைரி உட்பட..

ஒரு நிமிடம் நில்லு கவிதாஎன கையில் இருந்த ஓவியத் தூரிகையை நீல மையில் வீழ்த்தினான்.

சொல்லுங்கதிரும்பாமல் கூறினாள்.

இதெல்லாம் எதுக்கு செய்யுறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா

எது

“அவளைப்  பார்த்துக்கிறதுஅப்பறம் இதுஎன மேஜையில் இருந்த உணவைக்  காட்டினான்.

என் அக்காவை எனக்கு பிடிச்சிருக்கு.. அவளுக்கு உங்களைப்  பிடிச்சிருக்கு.. அதனால்தான் நான் செய்கிறேன்

அப்படியா !!!”

என் மனதில் இருப்பது தெரிந்தும் ஏன் வார்த்தையால் விளையாடுகிறீர்கள்?!”

அதான் நான் உனக்கு கிடைக்கமாட்டேன் என்று தெரிந்தபின்னும் ஏன் நீ சிரமப்படுகிறாய்.. அதுதான் எனக்கு புரியவில்லை

சிலர் மீது அன்பு செலுத்த காரணம் தேவையில்லை விஷ்ணுசரி ஒரு நிமிடம் முடியபோகிறதுஎன திரும்பியவள் கண்களில் கண்ணீர் வந்துகொண்டிருந்தது கங்கையாய்.

ஒரு நிமிடம் முடிந்துவிட்டதல்லவாஅன்று நான் அப்படி நடந்துகிட்டதுக்கு என்னை மன்னிச்சிடு.. என்ன இருந்தாலும் சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணை நான் அடித்திருக்ககூடாது.”
என கூறிவிட்டு  அவளது கையில் ஓர் காகிதத்தை கொடுத்தான்.

அதில் ரம்யாவும் கவிதாவும் மனம்விட்டு பேசுவதுபோல ஓவியம் இருந்தது. மனம் மகிழ்ந்தவள் கைப்பையை எடுத்துக் கொண்டு..’நான் வேண்டுமானால் உனக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை நீ என்னவன் என்னை நீ அடிக்காமல் யார் அடிக்கபோகிறார்கள்.. நீ கொன்றால் கூட ஏற்றுகொள்வேன்என கண்ணீரை துடைத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவளது சாப்பாட்டை உண்டவன் இன்று அமைதியாகத்  துயில்கொண்டான். நிலவு ரம்யாவையும் விஷ்ணுவையும் தனது வெள்ளொளிப்  போர்வையால் போர்த்தி துயில்கொள்ளசெய்தது.

ஆனால் கவிதாவோ தனித்துவிடபட்டு தூக்கம் இழந்து மாடியில் நின்றாள் நிலவுக்கு துனையாக. மறுநாள் விஷ்ணுவால் நடக்கபோகும் விபரீதத்தை இந்த மூன்று தீபங்களும் அறிவதற்கு மனமில்லை.


**********

கட்டுமரம் வேலைகளை முடித்துகாத்துகொண்டிருந்தான் முனியன். இவனிடம் உதவிகேட்ட நண்பனை நினைத்துகொண்டிருந்தான்.

உதவி கேட்டான் ஏதோ கடமை என்றெல்லாம் கூறினான் ஆனால் என்ன என்று கூறவில்லையேஎன நினைத்தநேரம் ஒரு இளைஞன் அங்கு நடந்து வந்தான். அது அவனேதான்.

வாருங்கள் தீவுகளின் அரசே

பரவாயில்லையே சரியாக புரிந்துகொண்டாயே நண்பா

உத்தரவு கொடுத்தால் உதவிசெய்ய காத்திருக்கிறேன்” – முனியன்.

முதலில் நீ இங்கு வந்த சூழ்ச்சியை அறிந்துகொள்

சூழ்ச்சியா என்ன சூழ்ச்சி

உன்னுடன் துரை என்று ஒருவன் வந்தான் அல்லவா


ஆமா அந்த கோட் மனிதன்

அவன் பெயர் ராபர்ட்அவன் ஒண்ணும் நல்லவன் இல்லைஇந்த செரிபியன் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எல்லாம் வரவில்லைஅவனை ஒரு கருநாகம் ஆழம் பார்ப்பதற்காக இறக்கிவிட்டுவிட்டதுஆனால் பாம்பின் புற்றில் எலியாக நீ சிக்கியது அவலம் தான்.”

அது பெரிய விசயம் இல்லைஅப்படி அந்த தீவில் என்னதான் உள்ளது

அது ராஜரகசியம் தோழா அதை கூறும் ஆற்றல் எனக்கு இல்லை

சரி நான் என்ன உதவி செய்யவேண்டும்

அது இன்று இரவுக்குள் உனக்கே புரியும் நண்பா

அரசே நான் காத்திருக்கிறேன்

உன் அன்பிற்கு பரிசாக இந்த சிலையை எடுத்துக்கொள்

வேண்டாம் அரசே எனக்கு பணத்தாசை போய்விட்டதுசில நாட்களிலேயே நல்ல ஞானம் பெற்றுவிட்டான்.

இதை இரண்டு பங்காக்கு ஒன்று உனக்கு இன்னொன்று விரைவில் உனக்கு புரியும்நீ ஈட்டுவதை ஏழைகளுக்கு கொடுத்து உதவு

நிச்சயமாக அரசே

இன்னொரு விசயம்இந்த வைரவாள் உனக்கு சொந்தமில்லை அதை சேரவேண்டிய இடத்தில் நான் சேர்க்கவேண்டும் தருவாயா?!”

நிச்சயமாகஎன அந்த வாளை அவனிடம் கொடுத்தான்.

சரி நான் வருகிறேன்என அவன் கூற ஒரு குதிரை பறந்து வந்தது. அதில் ஏறி அமர்ந்தவுடன் இருவரும் கரிய நிறமாக மாறினர்.

இந்திரா இதோ வருகிறேன்என பெரும்சத்தமிடவே கரிய உருவங்கள் வானில் பறக்க அந்த வாள் மட்டும் மின்னியது.

அவர்கள் சென்றபின் அந்த தங்கக்  குதிரையை தனது கட்டுமரத்தில் கட்டும் பணியை துவங்கினான்
.

*********
காலை சூரியன் உதயம் ஆகவே பீட்டரும் விஷ்ணுவும் விமானநிலையத்தில் நின்றிருந்தனர். தூரத்தில் இரண்டு வெள்ளை உருவங்கள் வந்தன.

அருகே வந்ததும் தான் தெரிந்தது அவர்கள் ரம்யாவும் கவிதாவும் என்றுவெள்ளை உடையில் தேவதையாகவே காட்சியளித்தனர்.

என்ன ரெண்டு ஏஞ்சல்சா!” என பீட்டர் சிரித்தான்.

ரம்யாவும் சிரித்துவைத்தாள்..‌ தான் துரோகம் செய்யபோவதால் இந்தமாதிரி நாடகம் தேவை என நினைத்தாள்.

ஆனால் கவிதாவோ அவனை முறைத்தாள். அவள் அண்ணா என கூறுவதின் ரகசியம் விஷ்ணுவிற்கு இப்போதுதான் புரிந்தது. ஒரு தீயவனிடமிருந்து தப்பிக்க எந்த ஆயுதத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது கவிதாவின் எண்ணம்.

நால்வரும் நடந்து செல்ல அவர்களுக்கு தனி விமானம் காத்திருந்தது. அதை பார்த்த கவிதாஏன் அண்ணா இப்படி காசை செலவு செய்கிறீர்கள்?!”

ச்ச் எதுக்கு இப்ப அண்ணாண்ணு கூப்புடுற டார்லிங்என் செல்லத்திற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்.”,என கவிதாவின் கன்னத்தை கிள்ள அவனது கண்கள் மட்டும் திவ்யாவின் மீது இருந்தன.


விஷ்ணு எல்லாத்தையும் கவனித்தாலும் எதுவும் கண்டுகொள்ளாமல் விமானத்தில் ஏறினான்.

ஜன்னல் ஓரமாக அமர்ந்தாள் ரம்யா அவளருகில் சென்று அமர்ந்தான் விஷ்ணு. தாயிடம் ஓடிவரும் குழந்தையாக விஷ்ணுவிடம் வந்து ஒட்டிகொண்டாள் கவிதா.

அதை பார்த்த பீட்டருக்குக்  கோபம் வந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் அவர்களுக்கு எதிரே அமர்ந்தான்.

விமானம் மெதுவாக தரையுடன் தனக்கு இருந்த இணைப்பைத்  துண்டித்துகொண்டது.

சிறிது நேரத்தில் வென்மேகங்ளை கிழித்துகொண்டு புறப்பட
எதாவது பேசலாம் என தீர்மானித்த பீட்டர்.

ஏய் டார்லிங்என கவிதாவை அழைத்தான். அவள் முகத்தை குவித்து கோபபட அழகாகவே இருந்தது.

சொல்லு

நீ பெரிய அறிவாளின்னு சொல்லுவியே அப்படின்னா நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு

கேளுங்க அண்ணாஎன மூக்கை அறுத்தாள் பீட்டருக்கு.

பெருமூச்சு விட்டுகொண்டவன்இன்டிகோ குழந்தைகள் கேள்விபட்டிருக்கியா

ம்ம்

அதை பற்றி சொல்லு விஷ்ணு தெரிஞ்சுக்கனும்னு ஆசைபடுறான்என அவனை கோர்த்துவிட்டான்.

இவளும் விஷ்ணுவுக்கு என்றது ஆர்வமாக ஆரம்பித்தாள்

இண்டிகோ குழந்தைகள்ன்னா கடவுளால் தேர்ந்தடுக்கபட்டவர்கள்அதாவது இயற்கை ஏழாவது அறிவை நோக்கி வைக்கபோற முதல் அடியில் இவங்க மேல்தான் பரிசோதனை செய்யும்

தலைப்பு ஆர்வமாக இருந்ததால் விஷ்ணுநீ சொல்றத பார்த்தா X-MAN படத்துல வர்ரமாதிரியா

இல்லை அந்த மாதிரி இல்லைம்ம் எப்படி சொல்றதும்ம் பிடிச்சுட்டேன்யோகா பன்றவங்க உடம்புல இருக்குற ஏழு சக்கரத்தை பற்றி கேள்விப்டடிருக்கீங்கலா

ஆமாம் நானும் யோகாசனம் பன்னுவேன்என விஷ்ணு பெருமை கொண்டான்.

அந்த சக்கரத்தை சீரா இயக்குறதுக்குதான் யோகாசனம்ஆனால் இந்த இன்டிகோ குழந்தைகளுக்கு அது இயல்பாவே நல்லா ஒரே மாதிரி வேலைசெய்யும்

ஏழுமா?!”

இல்லை அதில் உச்சந்தலையில் உள்ளது மட்டும் கொஞ்சம் கஷ்டம்அதுவும் ஒரு குழந்தையால் கட்டுபடுத்த முடிஞ்சதுன்னா பெரிய விசயம்என வியந்தாள் கவிதா.

இதனால் என்ன பயன்பீட்டர் கேள்வியை முன் வைத்தான்.

அவங்க ரொம்ப ஸ்பிரிச்சுவலா இருப்பாங்கடெலிபதி பன்ன முடியும் இன்னும் நிறைய செய்யலாம்.”

சரி அவங்களை எப்படி கண்டுபிடிக்குறது

அமைதியா இருப்பாங்க யார்கூடையும் அதிகமா பேசமாட்டாங்கஅப்புறம் கண்கள் நம்மை மாதிரி இயல்பா இருக்காது. அப்படியே என் திவ்யா அக்கா மாதிரிஎன ரம்யாவின் கன்னத்தை கிள்ளவே அப்போதுதான் சுயநினைவிற்கு வந்தாள் ரம்யா.. அதுவரை பீட்டரைக்  கொல்ல தீட்டம் தீட்டியிருப்பாள் போலும்.

சூப்பர் டார்லிங்… “என கைதட்டியவன்இன்னொரு முக்கியமான விசயம் அந்த ஏழு சக்கரத்தையும் கன்ட்ரோல் பன்கூடிய ஒரு ஆள் இங்க இருக்காங்கஎன முடிக்க.

மூவரும் ரம்யாவை பார்த்தனர். அவளோ மீண்டும் கொலைசெய்ய புத்தியை தீட்டிகொண்டிருந்ததாள் இவர்கள் ஏதோ கோமாளிகள் போல தெரிந்தனர் ரம்யாவிற்கு. அவர்கள் பேசுவதை அவள் சட்டை செய்யவில்லை.

பொருத்த சத்தத்துடன் விமானம் தரையிறங்கியது. அதற்குள்ளாகவே அமெரிக்கா வந்துவிட்டதா என்ற குழப்பம் ஏற்படவே

இது அந்தமான் நிக்கோபார் தீவுஇங்க நம்ம கிளையண்ட் ஒருத்தரை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும்என பீட்டர் கூறவே இறங்கினர்.

சிறிது தூரம் நட்ந்து ஓர் கப்பலில் ஏறினர் அதில் இரண்டு அடுக்கு இருந்தது. அது பீட்டரின் கப்பல் என்பது அவனுக்கு பிடித்த முக்கோன லோகோவிலேயே தெரிந்தது.

கப்பல் புறப்பட துவங்கியது. கப்பலின் கேப்டன் வந்து பீட்டரின் காதருகில்சார் நான் எவ்வளவு சொல்லியும் அந்த ராபர்ட் கேட்கவில்லைஅந்த தீவுகிட்ட போயிருக்கான்இந்த கோட்டோட ஒரு பீஸ் மட்டும்தான் கரை ஒதுங்கியது“.

அவனை அங்கே போக சொன்னதே நான்தான்என கேப்டனின் வாயை அடைத்தான்.

கப்பல் புறப்படகவிதா நீ மேலையே காத்திரு நாங்க கொஞ்சம் புராஜக்ட் பத்தி பேசவேண்டியிருக்குஎன விஷ்ணுவையும் திவ்யாவையும் அழைத்துகொண்டு அடிதளத்திற்கு சென்றான்.

கவிதா கடலின் அழகை ரசித்துகொண்டுவந்தாள். இடையிடையே தன்னவனின் நினைப்பு வரவே லேசாக சிரிக்கவும் செய்தாள்.அடித்தளத்தில் மூவரும் சென்றதும் பீட்டர் இருவரையும் பளார் என அறைந்தான். முதல் அடியிலேயே மயங்கினாள் ரம்யா.

ஆனால் விஷ்ணுவோ எதிர்த்து சண்டையிட பின்னால் வந்த ஒரு ஆறடி மனிதன் விஷ்ணுவின் கைகளை கட்டினான்.

அறைகதவு சரியாக பூட்டபடாததால் அதை பார்த்துவிட்டாள் கவிதா.

அக்கா அக்கா எழுந்திரிங்க… ” என ரம்யாவை எழுப்ப முற்பட்டாள்.

அவளின் தலையை பிடித்த பீட்டர்ஏன் டார்லிங் உன்னை மேலேதான வெயிட் பன்ன சொன்னேன். நீ ஏன் வந்த

டேய் அவங்களை விடுடாஎன பீட்டரை கவிதா அடிக்கவே. அந்த உயர் மனிதன் கத்தியை எடுத்து வந்தசார் முடிச்சிடவா

இருப்பா இவள் என் டார்லிங் இவளை எப்படி என் கண்முன் சாகடிப்பாய்அதை என் மனம் விரும்பாது

வேறு என்ன செய்ய

இது சுறாக்கள் இருக்குற ஏரியா தானே இவளைத்  தள்ளி விட்டுடுஎன கூறியதுதான் தாமதம்

கவிதாவை இழுத்துசென்ற அந்த மனிதன் கடலில் தள்ளிவிட்டான். சுறாகூட்டம் அவளை நெருங்கவே அவளோ மயக்கமடைந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 25நிலவு ஒரு பெண்ணாகி – 25

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி அடுத்த பகுதி நிலவு ஒரு பெண்ணாகி – 25 அன்புடன், தமிழ் மதுரா Download WordPress ThemesDownload WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress

ஒகே என் கள்வனின் மடியில் – 10ஒகே என் கள்வனின் மடியில் – 10

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா…. ஒகே என் கள்வனின் மடியில் – 10 அன்புடன், தமிழ் மதுரா Download Premium WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload Nulled

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 13காயத்திரியின் ‘தேன்மொழி’ – 13

பாகம் 13 அப்சரா எப்படி இந்த மேட்டரை அப்பாகிட்ட சொல்லப்போகுற இன்னைக்கே எப்படியாச்சும் சொல்லனும் .அப்பா வேற நேத்து நைட்டு அப்சரா படிச்சு முடிச்சுட்ட தம்பியும் ஸ்கூல் முடிச்சுட்டான் இப்போ சட்டம் படிக்கனும்னு ஆசைப்படறான் ஸோ லாவ் காலேஜ்ல சேர்க்க போறேன்