Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!”

ஜெனிபர் அனு அவர்கள் “உனக்கென நான்” எனும் ஒரு அழகான காதல் கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார். 

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் போஸ் – பார்வதி தம்பதிகளின் மகள் அன்பரசி. காதல் தோல்வியால் திருமணத்திற்கு மறுப்பவளை தனது நண்பர் சண்முகத்தின் மகன் சந்துருவுக்கு மணம் முடித்து வைக்க நிச்சயம் செய்கிறார். 

திருமணத்தில் விருப்பம் இல்லாத அரசி! அவளையே சிறு வயதிலிருந்து நினைத்து உருகும் சந்துரு! இதனிடையே இவர்களின் காதலில் தாக்கம் செலுத்தும் நட்புகள்! 

ராஜேஷ், சுவேதா, மலர், மஞ்சு, ஜெனி என பல பாத்திரங்களைப் பயன்படுத்தி,  இன்றைய நாளும் பழைய நினைவுகளுமாய் இலகு தமிழில் கதையை அழகாக நகர்த்தி உள்ளார் எழுத்தாளர். 

யாருக்காக யார்? என அறிந்து கொள்ள முழு நாவலையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

உனக்கென நான் 1

வண்ணத்தை பார்த்தே பலதலைமுறை கடந்திருந்த ஓர் பள்ளிக்கூடம் அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடக்கம். ஒரு பெரிய அறையின் குறுக்கே மரபலகையாலான தடுப்பான் களை வைத்து ஐந்து வகுப்புகளையும் செவ்வனே பிரித்திருந்தனர் அந்த ஆசிரிய பொறியாளர்கள். சுவற்றில் கருப்பு வண்ணத்தில் பூசப்பட்டு அதற்கு கரும்பலகை என பெயரிட்டிருந்தனர். கூடவே ஒரு மேஜையும் நாற்காலியும் இருக்கவே அது பெரும்பாலும் ஓர் மெத்ததையாகவே பயன்பட்டது பல ஆசிரியர்களுக்கு.

ஆனால் காலில் அணிந்த கொழுசு சலசலக்க ரோஜா நிறபுடவையால் தன்னை மறைத்துகொண்டு கழுத்தில் சிறிய தங்க நகை காதில் தோடுகள் நிலா போன்ற முகத்தில் திர்ஷ்ட்டி பொட்டாய் உதட்டின் மேல் ஒரு மச்சம். அதற்கு மேலாக மூக்குத்தி ஜொலிக்க அழகான வார்த்தைகளை பேசாமல் பேசும் கண்கள் என கை வளையல்கள் சினுங்க கரும்பலகையில் மயில் வரைந்துகொண்டிருந்தாள் அன்பரசி.

அன்பரசி இருபத்தைந்து வயதுள்ள பெண். தான் படித்த பள்ளியிலேயே வேலை செய்யும் வாய்ப்பு தன் தந்தையால் பெற்றவள். பின்ன “அப்பா எனக்கு சென்னைல ஒரு ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு” என்று ஆர்வமுடன் வந்தவளை “பொமபளபுள்ளை அவ்வளவுதூரம் போக வேணாம்” என்ற ஒற்றை வரியில் அணைகட்டியவர். அதன் பலன் இன்று இந்த இரண்டாம் வகுப்பு மழலைகளுக்கு ஆசிரியர். அன்பரசிக்கு எதையும் ஏற்கும் குணம் கொண்டவள் ஓர் பசுவை போல. அதனால் முழு வீச்சுடன் இயங்கிகொண்டிருந்தாள்.

“மிஸ் இது எங்களுக்கு வரைய தெரியும்” என அந்த வகுப்பின் ஆயுதப்படை தலைவன் சஞ்சீவ் அந்த ஏழு வயதில் தெரிந்த மொழியில் முடக்கினான். எவ்வளவு பெரிய பேச்சாளராக இருந்தாலும் மாணவர்களின் முன் நின்றால் விதி முடிந்துவிடும் அதிலும் இந்த காலத்து குழந்தைகளின் அறிவு ஐன்ஸ்டீனை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.

இதற்கு மேல் சென்றால் கூச்சலிட்டு ஊரை கூட்டி விடுவார்கள் என்று உணர்ந்த அன்பரசி “சரி அப்போ நான் கதை சொல்லட்டுமா?”

“சரிங்க மிஸ்” என்று சத்தம் கேட்க சஞ்சீவின் பார்வை ‘ நீ சொல்லிதான் பாரேன் ‘ என்ற வடிவேலுவின் வசனம் போல் இருந்தது.

“ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு கிட்டு இருந்துச்சாம் அப்போ ஒரு காக்கா…” என பழைய ரெக்கார்டை ஆரம்பித்தாள் அன்பரசி.

குறுக்கிட்ட நமது ஏழு வயது தலைவர் “இது எங்க மாமா ஏற்கனவே சொல்லிட்டாங்க… இப்போ அந்த பாட்டி நிலாவுல கடை போட்டுருக்கு” என ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டு அருகில் இருந்த தன் தோழி கல்பனாவை ஓரகண்ணால் பார்த்தான். வகுப்பே சிரிப்பொலியில் நிறைந்தது.

அன்பரசிக்கு பெயருக்கு ஏற்றார்போல் அனைவரையும் அனைவரையும் அன்பாக நடத்துவது ஒரு சாபம். அது பின்னாலில் அவளது மனதை கீறபோவது தெரியாது. ஆனால் அவளுக்கு இருக்கும் குழப்பம் அந்த பாட்டி எப்போ நீலாவுக்கு போச்சு என்பதே.

அனைவரும் சிரிப்பதை பார்த்த அன்பரசியும் லேசாக புன்னகை செய்ய அவளது கண்ணங்கள் மேலும் அழகாக தோன்றியது. சஞ்சீவின் குறும்பையும் அறிவையும் ரசித்தாள்.

“டீச்சர் உங்களை ஹெட்மாஸ்டர் கூப்டாங்க” கையில் பிரம்புடன் அந்த உடற்பயிற்ச்சி ஆசிரியர் வந்து நிற்க.
குழந்தைகளை பார்த்தாள் அன்பரசி.

“இதுங்கள நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க” என அடுத்த வார்த்தை வெளிபடவே வகுப்பு மயான அமைதிக்கு சென்றது. அன்பரசி எனும் தேவதையின் கையிலிருந்த அந்த சாத்தான் கைக்கு மாறுவது யாருக்குதான் பிடிக்கும்.

“ம்ம் சரிங்க சார்” என கிளம்பினாள்.

“டீச்சர் உங்க பேக்கையும் எடுத்துட்டு போங்க”

ஏன் எதற்கு என்ற கேள்விகள் மனதில் எழுந்தாலும் அதை வெளிபடுத்தாமல் அமைதியாக எடுத்துகொண்டு கிளம்பினாள்.

ஒரு சிறிய அறை அதன் நடுவில் ஓர் மேஜை அதற்கு மேல் கீச் கீச் என ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி அதற்கு கீழே அந்த நாற்பது வயது பெண் மனோரமா அமர்ந்திருந்தார். வாசலில் வந்து நினற அன்பரசியை பார்த்து

“உள்ள வாங்க”

“மேம் கூப்டீங்கனு சொண்ணாங்க”

“உட்காருமா” என அன்பாக கூறினார். அன்பரசி அனைவருக்கும் செல்லபிள்ளைதான்.

சத்தம் ஏதும் இல்லாமல் அமர்ந்தாள் அன்பரசி.

“ஹாப்பி பர்த்டே மா ” என தலைமை ஆசிரியர் கூறியதும் அன்பரசி யின் கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.

‘ஓ நானே மறந்துட்டேன் இவங்களுக்கு எப்படி தெரியும்’ என நினைக்கும்போதே “உங்க வீட்ல இருந்து ஃபோன் வந்துச்சு… உனக்கு பிறந்தநாள் கொண்டாடுராங்களாம் அதனால் மதியம் லீவ் எடுத்துகோ” என முடித்தார்.

“சரிங்க மேம்…. அன்ட் தாங்யு” என புன்னகை செயதாள்‌. பதிலுக்கு தலைமை ஆசிரியரும் புன்னகை செய்ய எழுந்து கிளம்பினாள்.

வெளியே வந்தவள் அந்த பாலடைந்த பேருந்தின் வருகைக்கு காத்திருந்தாள். அந்த சாலையில் வேறு எந்த பேருந்தும் செல்லமுடியாது என அறியாதவர் இல்லை. அதுமட்டுமில்லை. இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் அதுதான். பரவாயில்லை தாமதிக்காமல் வந்துவிட்டது. அதில் ஏறினாள். ஆனால் அவள் மனதில் குழப்பம் இருந்தது.

‘இதுவரை எனக்கு பிறந்தநாள் என்பது சான்றிதழில் மட்டும்தானே பயன்பட்டது‌. இன்று என்ன புதுமை செய்கிறார்கள்.’ என குழம்பிய நேரம் அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையிலிருந்த குழந்தை அன்பரசியை பார்த்து கையை நீட்டியது.

அதை பார்த்து சிரித்தாள். உடனே அதன் தாய் சுதாரித்துகொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏய் அன்பு எப்புடி இருக்க?”

“மலர் என்னடி எப்போ வந்த?!” இரண்டு தோழிகளும் நீண்டநாள் பிறகு பார்த்த சந்தோஷம். அதிலும் இருவருக்கும் ஒரு தொடர்பு வேறு உள்ளது.

“இப்போதாண்டி வாரேன்”

“ஆமா இவதான் உன் குழந்தையா? அழகா இருக்கா” என அந்த குழந்தையை கையில் ஏந்திகொண்டாள்.

பெரிய சத்தத்துடன் அந்த பேருந்து ஓட்டுநரின் திறமையால் நிறுத்தப்பட்டது. இரண்டு தோழிகளும் இறங்கினர். அவர்களை சகோதரிகள் என்று புதிதாக பார்ப்பவர்கள் நினைப்பதில் தவறு இல்லை.

“ஏண்டி அன்பு நீ ஏன் இன்னும் கல்யாணம் பன்னிக்கல?!”

கண்ணில் சோகம் இருந்தாலும் முகத்தில் சிரிப்பை வைத்துகொண்டு “உனக்குதான் தெரியேமேடி பின்ன ஏன் கேக்குற”

“இன்னும் அதையே நினைச்சுகிட்டு உன் வாழ்கையை வீணடிக்க போறிங்களா மேடம்”

குழந்தைக்கு முத்தம் கொடுத்துகொண்டிருந்தவள் “கல்யாணம் பன்னி என்னடி ஆகப்போகுது இப்போ?.. இந்த உன் குழந்தை இருக்கு இதை எனக்கு தரமாட்டியா நீ… நான் வளர்க்குறேன்” என பாவமாக முகத்தை வைத்துகொண்டாள்.

“அப்படியே ஒன்னு போட்டேனா தெரியும்… ஏன்டி உனக்கு ஒரு வாழ்கை வேனும்னு சொன்னா நீ லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க” என திட்டினாள். நெருங்கிய நட்பு வட்டத்தில் இதெல்லாம் சாதாரணம்.

இவள் இதற்குமேல் விட்டாள் அறிவுரை மழையை பொழிவாள் என்று ரயிலை வேறு தண்டவாளத்தில் மாற்றினாள் “நான் இவளை வீட்டுக்கு கொண்டு போறேன் நீ அப்புறமா வா ” என குழந்தையை பார்த்து கூறினாள்.

“அடி அம்மா இது உன் குழந்தை நீயே வச்சுக்கோ ஆனா எங்க வீட்டுலயும் ஒருதடவை காட்டிட்டு வந்துடுறேன்…அப்புறம் நீயே வச்சுக்கோ”

“என்கிட்ட இருக்கானு சொல்லு சித்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க…” என மீண்டும் குழந்தையை கொஞ்ச துவங்கினாள்.

“சரிடி நீ சொன்னா கேக்கவா போற… நானும் பெரியம்மாவை பாத்து ரொம்ப நாள் ஆச்சு நானும் வாரேன் ” என மலரும் உடன் பயனித்தாள். வீடும் வந்தது.

என்றுமில்லாமல் வீட்டின் முன் ஓர் கார் நின்றது. அதன் ஒரு கால் தான் காலையில் வாசலில் வரைந்த ஓவியத்தின் மீது இருந்தது. அப்போது வெளியே வந்த அன்பரசியின் தாய்.

“வாம்மா மலர் எப்போ வந்த?”

“இப்போதான் பெரியம்மா ” இது மலரின் பதில்.

“இது என்னமா கார் புதுசா” அன்பரசி குழப்பத்தில் இருந்தாள். இது பெண் பார்க்கும் படலம் என்று கூறிவிடுவார்களோ என்ற பயம் அவளுக்கு.

“அதுவா அப்பாவோட ஃப்ரண்ட் வந்துருக்காரு” என தாய் பார்வதி முடிக்க.

“என்ன பெரியம்மா அன்ப பொண்ணு பாக்க வந்துருக்காங்களா?” என நக்கலாக கேட்டாள்.

“இல்லமா சும்மாதான் வந்திருக்காங்க”

“சரிங்க பெரியம்மா நான் வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலம் வாரேன்” என மலர் குழந்தையை வாங்கினாள்.

“இருமா சாப்பிட்டு போ”

“இல்ல அம்மா எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க”

“இருடி அப்புறம் போகலாம் ” என அன்பரசி கிளம்பினாள். அவள் நடக்கபோகும் விபரீதத்தை உணர்ந்தாளோ என்னவோ..

“இல்லடி நான் வாரேன்”

அதற்குமேல் வற்புறுத்த முடியாது ” சரிடி சாயங்காலம் பாப்பாவ தூக்கிட்டு வந்துடு இல்ல நான் அங்க வந்துடுவேன்” என ஒய்யாரமாக கூறினாள்.

அன்பரசி வீட்டினுள் நுழைந்ததும் “இதுதான் உன்னோட பொண்ணா ” என தன் தந்தை வயதை ஒத்த ஒருவர் கேட்க தந்தையோ “ஆமாடா” என பதிலளித்து முடித்தார். அன்பரசியும் இருக்கையை கூப்பி வணக்கம் வைத்தாள். பின் சமையலறைக்கு சென்று மறைந்தாள்.

அப்போது வெளியே மற்றொரு கார் வந்து நிற்க வேகமாக ஓர் இளைஞன் வீட்டினுள் நுழைந்தான். கையில் ஓர் அட்டை பெட்டியுடன் வந்து நின்றான்.

“இந்தாங்க டாட் கேக் ” என பேசும் சத்தம் கேட்கவே கதவின் பின் மறைந்து கொண்டு லேசாக எட்டிபார்த்தாள்.

“என்ன அன்பரசி இது உங்களுக்குதான் தைரியாமா வெளியே வாங்க நான் என்ன உங்களை கொலைபன்னவா போறேன்” என அந்த இளைஞன் திரும்பாமலே பேசினான். அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: