அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்

 

குடும்பமே குழந்தையின் வருகையை
குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது
அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர்
அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர்
குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர்

நாட்கள் நகர்ந்தது
வசந்தம் வந்தது
மண்ணில் மழலையும் மலர்ந்தது
அவனாகவும் அல்ல
அவளாகவும் அல்ல
அவனவளாக(திருநங்கை)

குறைகளற்று குழந்தை வேண்டியவர்களுக்கு
குறையே குழந்தையென எண்ணும் அளவிற்கு

அவனவளின் நன்னடத்தையையும் கலையுணர்வையும்
பெருமையுடன் பெற்றோரும்
செல்லபிள்ளையென சீராட்டும் உறவுகளும்
சாதனையை சமூகத்தினரும்
போற்றிப் புகழ்ந்தனர்

உண்மையை உணரும் வரை

இசைபாடி வளர்த்த இல்லமே – இன்று
வசைபாடியது – அவனவளின் நிலைசொல்லி

சமூகத்தினரின் ஏளனப்பார்வையும்
உறவுகளின் ஒதுக்கமும்
பெற்றோரின் விலகலும் – துரத்தியது
தன்னை யாரும் அறியா உலகிற்கு கொண்டுசெல் என

ஐயோ பாவம் என்னும் ஒரு சிலர்
ச்சீ… போ.. என துரத்தும் பலர்
வா… என அழைக்கும் ஒரு சிலர்
அர்த்தம் புரிந்தும் புரியாத நிலையிலும் நான்
என்னை அச்சுறுத்தும் இவ்வுலகம்

மொழி, இனம், மதம் என பலவேறுபாடுகள் – இருப்பினும்
என் தேசத்தின் ஒருமைப்பாட்டினை உணர்ந்தேன்
என்னைக் கண்டபின் முகம் சுளிப்பதில் மட்டும்

அவனவளின் வலிமையை புரிந்துகொள்ள
இயலாத மானுடர்கள்தான் பாவம்
அம்மையும் அப்பனும்
இரண்டொரு கலந்து உருவான
அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் அவர்கள்
பெண்மையும் ஆண்மையும்
சமஅளவில் பெற்ற பேராற்றல் உடையவர்கள்

குறையுள்ளவர்கள் அவர்கள் எனக் கூறும்
அனைவரும் சிந்தியுங்கள்

ஒவ்வொரு ஆணும் தன்னுள்
பெண்மையையும் அவர்களின் மென்மையையும்
குறைவாக பெற்றவர்கள்

ஒவ்வொரு பெண்ணும் தன்னுள்
ஆண்மையையும் அவர்களின் வீரத்தையும்
குறைவாக பெற்றவர்கள்

அவ்வாறியிருப்பின் ஆண்மையும், பெண்மையும்
வீரமும், தாய்மையும் சமமாக
பெற்ற உன்னத பிறப்பான
திருநங்கைகளும், திருநம்பிகளும்
எவ்வகையில் குறையுள்ளவர்கள் ஆவார்கள்?
உண்மையில் குறைகள் யாரிடம் உள்ளது?

 

~ஸ்ரீ !!~

2 thoughts on “அவனவளின் ஆதங்கம்”

  1. மதுரா….அவனவளாக பிறந்தது யாரின் குற்றம். படைத்த பிரம்மனா… உயிர் கொடுத்த தந்தையா. உயிரை பணயமாக வைத்து பெற்றெடுத்த தாயா….இல்லை முன்வினையா……குறையே குழந்தையாக….😢 யாரந்த ஸ்ரீ……..நீதானா…..அருமை….

    1. தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி தோழி 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்

ப்ரியவதனாவின் காதல் மனதுப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்,