வணக்கம் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு.
[scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 7
சான்ப்ரான்சிஸ்கோவின் போக்குவரத்துக்கு வசதியான நகரம் என்ற பொருள்பட ‘கம்யூட்டர் டவுன்’ என்று அழைக்கப் படும் கன்கார்ட் டவுன். ஃபார்ட் ரயில் நிலையத்துக்கு ஒரு மைல் தொலைவிலிருந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு. மூன்றாவது மாடியில் நீச்சல் குளத்தைப் பார்த்தவாறிருந்த அந்த ஒற்றைப் படுக்கை கொண்ட வீடு.
அதிகாலை ஆறுமணிக்கே குக்கர் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அரிசியும் பாசிப்பருப்பும் போதுமான அளவு குழைந்திருக்கிறதா என்று சோதனை செய்த மீனாட்சி பக்கத்து அடுப்பில் சிறிது நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்தாள். பின்னர் பொடியாக சீவிய இஞ்சியும், கறிவேப்பிலையும் தாளித்தாள். தாளிதத்தின் மணம் அறையெங்கும் பரவியது. ஒன்றிரண்டாய் பொடித்த மிளகு சீரகப் பொடியைத் தூவி இறக்கினாள். மற்றொரு அடுப்பில் கத்தரிக்காய் கொத்ஸு தயாராய் இருந்தது.
அவற்றை மதியத்துக்கு சிறிய ஹாட்பேக்கில் எடுத்து வைத்தாள்.
காலை உணவாக சேமியா உப்புமா இன்னொரு சிறிய டப்பாவில். வீட்டில் உண்ண நேரமிருக்காது என்பதால் வழக்கமாய் இரயிலில் பயணம் செய்யும்போது கைலாஷ் காலை உணவை உண்பான். எனவே அதையும் சிறிய டப்பாவில் அடைத்து வைத்து விடுவாள்.
குளித்து கிரே பான்ட் மற்றும் வெள்ளையில் ஒரு இன்ச் இடைவேளையில் சற்று பட்டையான கிரே கோடுகள் போட்ட சட்டை அணிந்து வந்தான் கைலாஷ். பாலிஷ் போடப்பட்டுத் தயாராய் இருந்த கருப்பு ஷூக்களைப் பார்த்தான். வேண்டுமென்றே அதனை ஒதுக்கிவிட்டுத் பழுப்பு நிற காலணிக்களை அணிந்து கொண்டான்.
பொங்கலைப் பார்த்து முகம் சுழித்தவன் “ஏண்டா சூர்யா, இவ்வளவு நெய்யும், முந்திரியும் போட்டு என்னை சீக்கிரம் உலகத்தை விட்டு அனுப்பப் ப்ளான் நடக்குதா… எனக்கு மத்தியானம் சாப்பிட சான்ட்விச் வேணும்” என்றான் உரத்த குரலில்.
குழந்தைகள் சூரியகாந்தும், சந்திரகாந்தும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீனா என்ற அழைப்பை அவன் எப்போதோ நிறுத்தி விட்டபடியால், தனக்குத்தான் அந்த செய்தி என்று புரிந்து கொண்டு வேகமாய் மின்சார அடுப்பில் கிரில்லைப் போட்டாள். சிறிய நீள்வட்ட முட்டைக்கோசைப் போலக் காட்சியளித்த லெட்டூஸ் இலைகளைப் பிரித்து, ஈரத்துணியால் துடைத்தாள். இந்த இலைகளை சான்ட்விச் பிரட்டுக்கு நடுவே வைக்க வேண்டும். கழுவினால் அந்த ஈரம் பட்டு பிரட் ஊறி சொத சொதவென்றாகி விடும். நடுவே வைத்து சாப்பிட உருளைக் கிழங்கு கட்லட் போன்ற ஒன்றை க்ரில்லில் வைத்தாள். ப்ரடில் மயோனிஸ் எனப்படும் வெண்ணை போன்ற ஒன்றைத் தடவி, தக்காளி, வெள்ளரிக்காய் வில்லைகளை வைத்து, அதன் மேல் க்ரில் செய்த கட்லட்டை வைக்க வேண்டும். வைத்தபடியே கைலாஷைத் திரும்பிப் பார்க்க, அவன் அதற்காகவே காத்திருந்தார்போல “சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்” என்று கதவை படாரென சாத்திவிட்டுக் கிளம்பினான்.
“இதோ ரெடி…… ஆ….“ என்ற அவளது குரல் காற்றில் தேய்ந்தது. வெளியே நின்று நிதானித்தான். கதவை சாத்தும் முன்புகோடாகக் கசிந்த காட்சியில் மீனா அவசரத்தில் கையை சுட்டுக் கொண்டாற்போலப் பட்டது.
‘பர்னால் அலமாரில இருக்குமே… எடுத்துத் தரலாமா’ என்ற எண்ணம் தோன்ற கதவின் பிடியை நோக்கிக் கை நகர்ந்தது.
‘டேய் கைலாஷ்.. அத்தனை பேர் முன்னாடி உன் மேல அவ்வளவு பெரிய பழி போட்டால்ல அந்தக் காயத்தை விட இது ஒண்ணும் பெரிய காயமில்லை. இவளெல்லாம் எரிச்சலையும் நோவையும் தினம் தினம் அனுபவிக்கணும்’ என்று அவனது மனம் முரண்டு பிடித்தது.
‘இதெல்லாம் உனக்குப் பத்தாதுடி’ என்று பற்களைக் கடித்தபடி ஸ்டேஷனுக்கு நடக்க ஆரம்பித்தான்.
காலை ஏழுமணிக்கு கைலாஷ் பார்ட் என்று சொல்லப்படும் ‘பே ஏரியா ’ ட்ரைன் பிடிக்க வேண்டும். ஒரு குட்டி விமானம் போன்ற வசதியான ட்ரெயினில் ஏறினால் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் அலுவலகத்தில் இறங்கிக் கொள்வான். ட்ரெயினில் ஒன்றரை மணி நேரப் பயணம். பின் அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து ஆபிஸ் செல்ல வேண்டும். காலை நேர போக்குவரத்து நெரிசலில் காரில் பயணம் செய்தால் மதியம்தான் வேலைக்கு செல்ல முடியும்.
சான்பிரான்சிஸ்கோவில் வாடகை வீட்டில் தங்கலாம் என்றால் அது பணக்காரர்களுக்கே சாத்தியம். அதனால் ப்ளஸன்டன், கான்கார்ட் போன்ற ரயில் போக்குவரத்துக்கு சாத்தியமான இடங்களில் நல்ல வீட்டில் தங்கிக் கொள்வார்கள். மாதாமாதம் ரயில் பாஸ் எடுத்துக் கொள்வார்கள். இது அனைவருக்கும் சவுகரியமான ஏற்பாடாய் இருந்தது. கைலாஷுக்க்கும் அப்படியே.
அவன் ஆபிஸின் கிளைகள் பல இடங்களில் இருந்தது. அங்கெல்லாமும் கூடப் பயணம் செய்ய நேரும். கங்காவுடன் வசித்த போது ப்ரீமான்ட்டில் இருந்தான். இப்போது கன்கார்ட்டில் வீடு மாற்றி இருக்கிறான். ஒற்றை படுக்கை அறை வீடுதான் முன்பு கிடைத்தது. சீக்கிரம் இரண்டு படுக்கை அறை வீடு காலியானால் மாற்றித் தருகிறேன் என்று அப்பார்ட்மென்ட் அலுவலகத்தில் சொன்னார்கள். அதன் பின்பு வீட்டைப் பற்றிக் கேட்கவே இல்லை.
‘எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஒரு படுக்கை அறை போதும்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான். மீனாட்சி சோபாவுக்கு அருகே இருக்கும் சிறு இடத்தில் தனது ஜாகையை சுருக்கிக் கொண்டாள். அந்த சிறிய அப்பார்ட்மெண்டில் படுக்கை அறையில் கைலாஷ் குழந்தைகள் சூரியா, சந்திராவுடன் உறங்க, மீனாட்சி ஹாலில் சோபாவுக்கு அருகிலிருக்கும் இடத்தில் படுக்கையை விரித்துப் படுத்துக் கொள்வாள்
மீனாட்சி சூடுபட்டு சிவந்த கையைக் குழாயில் வரும் குளிர் நீரின் அடியில் வைத்திருந்தாள். இந்த அடியும், சூடுகளும் இவளைக் காயப்படுத்தி விடும் என்று கைலாஷ் நினைப்பதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
வழக்கம்போல குளியறையில் ஷாம்பூவை கீழே கொட்டியிருந்தான். அனைத்தையும் நன்றாகத் துடைக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் கால் தவறி வழுக்குவார்கள்.
அவனும் அவளை சிரமப்படுத்த இந்த மூன்று மாதங்களில் எவ்வளவோ முயல்கிறான். ஆனால் பலன்தான் இல்லை.
“கருமம் சாப்பாடா இது…” என்று திட்டியபடி வீட்டில் இருக்கும் உணவை எல்லாம் அப்படியே குப்பைத் தொட்டியில் கவிழ்ப்பான். மீனாவோ அவன் வாங்கி வந்திருக்கும் திம்பண்டங்களை உண்டுவிட்டு நிம்மதியாய் உறங்குவாள்.
“டேய் சந்திரா… இந்த மாதிரி சொகுசு வாழ்க்கைக்கும், பணத்துக்கும் தானே என் மானத்தைக் கூறு போட்டது. இதெல்லாம் இனி எப்போதுமே கிடைக்காது” என்று சொல்லுவான். மீனாவோ அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு தனது வேலையைத் தொடருவாள்.
நேற்று கூட காலையில் இட்லி செய்யலாம் என்று நினைத்தாள். மாவு கூட ஆட்டி புளிப்பதற்காக டைனிங் டேபிளில் வைத்திருந்தாள். கைலாஷுக்கு அலுவலக வேலை இருந்ததால் சோபாவில் அமர்ந்து கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தான்.. இன்று கைலாஷுக்கு வேலை இருப்பதால் தான்தான் குழந்தைகளை உறங்க வைக்க வேண்டும். உறங்க வைத்து விட்டு வெளியே வந்து பார்த்தால் மாவினை கை தட்டியது போல கொட்டி விட்டிருந்தான். பெரிய பாத்திரத்தில் கஷ்டப்பட்டு அரைத்து வைத்திருந்த மாவு முழுவதும் சாப்பாட்டு மேஜையிலிருந்து வழிந்து ஒழுகி தரையில் சொட்டிக் கொண்டிருந்தது. ஏதோ படம் பார்ப்பது போல அவள் முகத்தைப் பார்த்தான். ஒரு வார்த்தை கூட பேசாமல் அனைத்தையும் சுத்தம் செய்து துடைத்துவிட்டே தூங்கினாள்.
சூரியாவும் சந்திராவும் விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் உடன் சேர்ந்து விளையாட அப்பாவை எதிர்பார்த்தவர்கள் அறைக்கு உள்ளே வந்த இருவரும் இந்நேரம் பேசி இருக்க வேண்டும். ஆனால் பேச்சுத் தாமதமாக வருகிறது. அவள் கட்டிக் கொண்டான் சூரியா. சந்திராவும் அப்படியே. அப்பா சொல்கிறார்கள். குழந்தைகள் அம்மா என்று மீனாட்சியை அழைத்துவிடக் கூடாது என்று முன்ஜாக்கிரதையாக தினமும் காலையில் கங்காவின் படத்தைக் காண்பித்து அம்மா என்று சொல்லித் தருகிறான். அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொள்வாள் மீனாட்சி.
‘மாமா நீங்க எந்த அளவுக்கு கீழ இறங்கினாலும் என்னை அசைக்க முடியாது என்பதுபோல’ பார்ப்பாள்.
மீனாட்சியை நினைத்தாலே எரிச்சலாய் வந்தது கைலாஷுக்கு. என்ன செய்தாலும் பேசாமல் இருக்கிறாளே. அவளை ஏதாவது செய்து கோபமூட்ட வேண்டும். காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வெறியாக மாறத் தொடங்கியிருந்தது. அதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவனுக்கு அன்றைய தினமே அந்த நல்ல நாள் வாய்த்தது.



kurinji
ஹய்யோ பயங்கரமா மீனுவை மிரட்டுறே கைலாஷ் .சமைசது வேண்டாம்னா போயேன் பட்டினி கிட ……….