Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Tag: Tamil stories

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 9

ஊடலுவகை – 09   புலரும் ஒவ்வொரு பொழுதிலும் புன்னகையும், புத்துணர்ச்சியும் சாத்தியமில்லை. அவ்வாறான நாட்களை தான் கடந்த சில தினங்களாக ரிதன்யா கடந்து வந்தாள். அவளே எதிர்பாராத ஒன்று! யுகனிடம் அவளின் தடுமாற்றம். அவன் நெருக்கத்தில் உடலின் ரத்தவோட்டத்தையும், இதயத்தின் […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச் […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44

அத்தியாயம் 44 – கோஷா ஸ்திரீ மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 8

ஊடலுவகை –  8   ரிதன்யா, யுகனை அவ்விடத்தில் எதிர்பார்க்காததால் விழி விரிய நின்றிருந்தவள், ‘எம் ஸ்கொயர்’ என தன்னை அறியாமல் முணுமுணுத்தாள். வாய்வழியாக முணுமுணுத்த பிறகே, அவ்விடத்தின் நிசப்தமும், தனக்கு வெகு அருகாமையில் அவன் இருப்பதும் புத்திக்கு உரைக்க வேகவேகமாக […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 43

அத்தியாயம் 43 – “எங்கே பார்த்தேன்?” “கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்;” என்று ஒரு முதுமொழி வழங்குகின்றது. மக்கள் இதன் உண்மையை உணர்ந்து நடக்காத காரணத்தினால் உலகத்தில் எத்தனையோ தவறுகள் நேரிட்டு விடுகின்றன. பேதை […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42

அத்தியாயம் 42 – தண்டோரா ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும், […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 41

அத்தியாயம் 41 – மறைந்த சுழல்      ஆடி மாதம். மேலக்காற்று விர்விர் என்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்களின் கிளைகள் அந்தக் காற்றில் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. நாலா பக்கமிருந்தும் ‘ஹோ’ என்ற இரைச்சல் சத்தம் எழுந்தது. பூங்குளம் கிராமம் ஜலத்திலே […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 7

ஊடலுவகை – 07   ‘வேலை ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்கும்’ என்று யாரேனும் கூறியிருந்தால் உமாவதி அதை அசட்டையாக ஒதுக்கி இருப்பாள். ஆனால், அவள் வாழ்வில் அவளுடைய வேலை நிம்மதியை வாரி வழங்கியது என்பதை அவள் அனுபவத்தில் உணர்கிறாளே! அதற்கு […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40

அத்தியாயம் 40 – ராயவரம் ஜங்ஷன் சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள் […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39

அத்தியாயம் 39 – திருப்பதி யாத்திரை திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக் […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 6

ஊடலுவகை – 06   உமாவதியும், ரிதன்யாவும் இரண்டு வாரங்கள் கழித்து, வேலையில் சேர்ந்தனர். அந்த இரண்டு வாரத்திற்குள், யுகன் செய்த அலப்பறைகள் சற்று அதிகம் தான்.   “மச்சான்! நீ ஹெட்ச்.ஆர் டிபார்ட்மென்ட்ல ஒருத்தன் கிட்ட பேசுவியே, அவன்கிட்ட பிரெஷர்ஸ் […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 38

அத்தியாயம் 38 – “ஐயோ! என் அண்ணன்!” அன்றிரவு வழக்கம் போல், “சங்கீத சதாரம்” நாடகம் நடந்து கொண்டிருந்தது. கமலபதி சதாரம் வேஷத்தில் மேடையில் வந்து நடித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக அவனுடைய பார்வை அபிராமியின் மீது விழுந்தது. ஒரு நிமிஷம் […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37

அத்தியாயம் 37 – கமலபதி “கண் எல்லாவற்றையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய், காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போதும் மற்றயாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 5

ஊடலுவகை – 05     வேலையில் சேர்வதற்கான கடிதம் மெயிலில் வந்துவிடும் என்றும், இன்னும் மூன்று வாரங்களுக்குள் சேர வேண்டும் என்றும் கூறி அனுப்பியிருந்ததால், அன்று இரவே திருச்சி செல்வதற்காக தோழியர்கள் இருவரும் முடிவெடுத்திருந்தனர்.   “ஏன் உமா நீ […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 36

அத்தியாயம் 36 – குயில் பாட்டு அபிராமியை நாம் பார்த்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டதல்லவா? திருப்பரங்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் ஸ்ரீமதி மீனாட்சி அம்மாளுடன் அவளை நாம் கடைசியாகப் பார்த்தோம். இப்போது, சரஸ்வதி வித்யாலயத்தின் மதில் சூழ்ந்த விஸ்தாரமான தோட்டத்தின் ஒரு […]

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 35

அத்தியாயம் 35 – சகோதரி சாரதாமணி ஸர்வோத்தம சாஸ்திரிக்கு அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. கதைகளில் வரும் காதலர்களைப் போல் “எப்போது இரவு தொலையும், பொழுது விடியும்?” என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். காலையில் முதல் காரியமாகத் தமது மனைவியை அழைத்து, “நேற்றிரவு ஒரு […]