மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

கதை – 1 

அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று.

கதை 2

படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது நீண்ட கத்தி போன்ற ரத்தம் வழியும் நகத்தால் என் மார்பைத் துளைத்த அதே சமயம் என் சத்தம் வெளியே வராதவாறு மற்றொரு கையால் என் வாயை மூடியது. அந்தக் கடைசி வினாடிகளில் எனது அலாரம் மணியை 12:07 என்று காட்டியது. அப்பாடா என்ன ஒரு பயங்கரமான கனவு விழித்து வியர்வை வழிய எழுந்து மணியைப் பார்த்தேன் 12:06. படுக்கை அலமாரி கதவு மெதுவாகக் கிறிச்சிட்டது.

கதை 3 

நான் பூனைகளுடனும் நாய்களுடனும் இளம் வயதில் வளர்ந்ததால்  தூங்கும் போது நகத்தால் அவை கதவினைப் பிராண்டும் சத்தம் நன்கு பரிட்சியம். இப்போது நான் மட்டும் தனிமையில். அதே போல கதிவினை நகம் பிராண்டும் சத்தம் கேட்கிறதே…

கதை 4

ஷ்ஷ்… அப்பாடா நான் மட்டும்தான் இந்த வீட்டில் வசிக்கிறேன் என்று பெயர். ஆனால் நான் திறந்த கதவுகளை விட தினமும் மூடும் கதவுகள் அதிகம்.

கதை 5

“ராஜி…” கீழ்த்தளத்திலிருந்து தாய் அழைக்கும் சத்தம் கேட்டு அந்த சிறுபெண் மாடியிலிருந்து  இறங்கினாள். அவளை விருட்டென்று பின்னிருந்து பக்கத்து அறைக்குள் இழுத்தன தாயின் கரங்கள் “எனக்கும் அந்தக் குரல் கேட்டுச்சு… “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page