Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’

30 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

நண்பர்கள் அனைவரும் விஷயம் அறிந்து வர மித்ரனுக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும் அவன் எதற்கும் அசையவில்லை..அவன் முகத்தில் அவ்வளவு பதட்டம், கவலை அன்றுதான் அனைவரும் கண்டனர்..சந்தியா, கவிதா கூட அழுதபடி இருந்தாலும் மித்ரனின் நிலை காண எல்லாருக்குமே கவலையாக இருந்தது..

வெங்கடாச்சலம் மித்ரனின் அருகில் சென்று அமர்ந்தவர் “என்னை மன்னிச்சுடுப்பா..”

அவன் புரியாமல் விழிக்க

“கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லையே நீ வேலை வேலைனு சுத்திட்டு என் பொண்ணை பாதுக்காம விட்டுட்ட..கல்யாணம், குடும்பம், குழந்தைங்கனு சந்தோசமா இருக்கணும்னு பாத்தா இப்டி அவன் பணத்தை தேடி ஓடிட்டு இருக்கான்..நீயும் கண்டுக்காம அவன் இஷ்டப்படி விட்டுட்டு இருக்கனு நான் மித்துகிட்ட நடுவுல எல்லாம் ரொம்ப சண்டைபோட்டேன்…

அப்போவும் அவ உன்னை விட்டுகுடுக்காம உனக்கு சப்போர்ட் பண்ணுவா..

 

[‘ஆதி பத்தி தப்பா பேசாதீங்கபா, அவன் அப்டி கிடையாது..அவனுக்குள்ள ஏதோ ஒரு தேடல் இருக்குப்பா..நான் கல்யாணம் பண்ணதால அவனோட கனவு அழியக்கூடாது..எப்போவுமே நான் அவனோட பலமா தான் இருக்கணும்..பலவீனமாவோ பிரச்சனையாவோ ஆகக்கூடாது..அவன் மனசுக்கு நிறைவா ஏதாவது பண்ணிட்டு என்கிட்ட திரும்ப வந்துடுவான்..அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்..அப்போ நீங்க நினைச்சதை விட அவன் என்னை ரொம்ப நல்லா பாத்துப்பான்..ஏன் இப்போவும்கூட அவன் எனக்கு எந்த குறையும் இல்லாமதான் பாத்துக்கறான்பா..நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க..’

அவர் ஏளனமாக சிரித்துவிட்டு ‘உன் பிறந்தவீட்ல இந்த உறவுகளோட இருக்கும்போதே அவன் இப்டி கண்டுக்காம வேலை வெளிலனு இருக்கான்னா அங்க நீயும் அவனும் தனியா இருந்த போது கேட்க ஆளே இல்லனு இன்னும் அவன் இஷ்டத்துக்கு தான் சுத்திருப்பான்..’

‘நேரத்துக்கு தகுந்தமாதிரி ஆளுக்கு தகுந்த மாதிரி எல்லாம் இருக்க ஆதிக்கு தெரியாதுப்பா..அவன் எப்போவுமே ஒரே மாதிரி தான் இருப்பான்..இருக்கான்..’

‘ம்ச்..மித்து..உன் இஷ்டப்படி நான் கல்யாணம் பண்ண வெச்சேங்கிறதுக்காக எப்படி வேணாலும் இருங்கனு எந்த பிரச்னை வந்தாலும் பாத்துட்டு என்னால இருக்க முடியாது..இது என் பொண்ணோட வாழ்க்கை..இன்னைக்கு அவன் வரட்டும் நான் பேசிக்கறேன்..எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்..’

‘அப்பா..நான் இவளோ சொல்லியும் இந்த விஷயத்தை பத்தி நீங்க ஆதிகிட்ட பேசுனா அப்புறம் உங்க பொண்ணை பாக்குறது இதுதான் கடைசித்தடவையா இருக்கும்..’ என சென்றுவிட

அவர் அதிர்ச்சியாக  கவிதா ‘இங்க பாருங்க.. உங்க ஆதங்கம் எனக்கு புரியுது..மித்துக்கும் புரியாம இல்லை..ஆனா அவளே இவ்ளோதூரம் சொல்றா..அவளோட சந்தோசத்துக்குதானே எல்லாமே..நீங்க எதுவும் போட்டு குழப்பிக்காதீங்க..எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும்..’ என ஆறுதல் கூறிவிட்டு சென்றார்..]

 

அந்த சண்டை என் பொண்ணே எனக்கு எதிரா இவளோ பேசுற அளவுக்கு வந்துட்டாலேங்கிற கோபம் உன்மேல..அதனால தான் கொஞ்ச காலம் நான் உன்கிட்ட பேசவேயில்ல..ஆனா நீ அதைப்பத்தியும் எதுவும் கேட்கல..அப்புறம், இங்க வந்தும் நீங்க தனியா போனதுல கொஞ்சம் வருத்தம்..ஆனா மித்து உண்டானதுக்கப்புறம் நீ அவளை ரொம்ப நல்லா பாத்துகிட்ட..அதுல கொஞ்சம் வருத்தம் தான்..என்ன இருந்தாலும் அவங்கவங்க குழந்தைங்க வரும்போது தானே பொண்டாட்டி மேல கூட அக்கறை வருதுன்னு நினச்சு வருத்தப்பட்டேன்..இருந்தாலும் எப்டியோ அதுக்கப்புறமாவது நீ பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ணி நீங்க குடும்பமா சந்தோசமா இருந்தா போதும்னு ஒரு ஆறுதல்ல கொஞ்சம் அப்போப்போ பேசுனேன்..

ஆனா நீ இந்த கொஞ்ச நாள் கூடவே இருந்த உங்களை பாக்கும்போது தான் ரொம்பவே புரிஞ்சது..முக்கியமா இப்போ டாக்டர் குழந்தையா, மித்துவானு கேட்கும்போது ஒரு செகண்ட் கூட யோசிக்காம என் தியா தான்னு சொன்னியே..நான் உன்கிட்ட தோத்துட்டேன் ஆதி..

அதோட நீ என்கிட்ட இதுவரைக்கும் முதலும் கடைசியுமா கேட்ட ஒரு விஷயம் தியாவுக்கு நம்ம எல்லாருமே முக்கியம் நமக்குள்ள ஒரு சின்ன ஆர்கியுமென்ட் வந்தா கூட அவ ரொம்ப வருத்தப்படுவா, அவளுக்கு தெரியாம பாத்துக்கோங்கன்னு சொன்னது..அதை நான் காப்பாத்தல..அப்போ நீ கேட்டபோது என் பொண்ணை என்னைவிட இவனுக்கு நல்லா தெரியுமா? எனக்கே இவளோ சொல்றனான்னு தோணுச்சு..ஆனா இப்போ யோசிக்கும்போது அது உண்மை தான்..நான் உன்னையும் புரிஞ்சுக்காம, என் பொண்ணையும் புரிஞ்சுக்காம அவகிட்டேயே சண்டை போட்டு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..அவ இதெல்லாம் நினைச்சே உடம்பை கவனிக்காம விட்டுட்டாளோனு தோணுது..’என அழுதபடியே மன்னிப்பு கேட்டு விட்டு அவர் நகர்ந்துவிட்டார்..மித்ரன் மௌனமாகவே இருந்தான்..

 

டாக்டர் வெளியே வந்து “ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சது..குழந்தைய கொண்டு வருவாங்க பாருங்க..’

மித்ரன் “தியா?”

டாக்டர் புன்னகையுடன் “அவளும் நல்லா இருக்கா..மயக்கத்துல இருக்கா..முழிச்சதும் போயி பாக்கலாம்..” என்றதும் தான் அவனுக்கு உயிரே வந்தது..

அனைவரும் குழந்தையை பார்க்க மித்ரன் ‘இல்ல நான் தியாவ முதல பாத்திட்டு வரேன்..’ என சென்றுவிட்டான்..

 

அப்போது தான் கண் திறந்தவள் “ஆதி..” என மெலிதாக புன்னகைக்க அவள் வலியையும், களைப்பையும் மிஞ்சிய நிறைவு முகத்தில் தெரிய அவள் எழுந்து அமர்ந்தது, இவள் அருகே அழைத்ததும் வேகமாக சென்றவன் அவளை கட்டிக்கொண்டு கழுத்தில் முகம் புதைக்க ‘ஆதி என்னாச்சு..?’

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் தியா..ப்ளீஸ் இனிமேல் இப்டி பண்ணாத..இவளோ நேரம் எனக்கு உயிரே இல்ல தியா..’ என கூறும்போது அவனது கலக்கம் அவளுக்கு புரிய அந்தநொடியே அது கண்ணீராய் வெளிவர அதை உணர்ந்தவள் அவனை நிமிர்த்தி ‘ஆதி இங்க பாரு..நீ பீல் பண்ணாத..எனக்கு ஒன்னுஇல்ல..நீ எப்போ இருந்து இவளோ எமோஷனலா, வீக் ஆன? நான் எப்போவுமே உன் ஸ்ட்ரென்த்தா தான் இருக்கணும்… எனக்கு எப்போவுமே கெத்தா, பெருசா எதுக்கும் ரியாக்ட் பண்ணாம, யாருக்கும் தெரியாம என்னை இம்சை பண்ணி வெறுப்பேத்துற ஆதி தான் வேணும்..அந்த மாதிரி எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்ப..?’ என முகம் சுருக்கி அவள் பார்க்க

அவன் சட்டென புன்னகைத்துவிட அதற்கு மேல் அவன் பேசஎதுவுமின்றி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன் “லவ் யூ சோ மச் தியா..” என்றான்..

அவளும் புன்னகையுடன் அணைத்துக்கொண்டாள்..

 

சந்தியா “அதுசரி…நீங்க இரண்டுபேருமோ கொஞ்சிகிட்டு இருந்தா இந்த குட்டி ராணியை யாரு கவனிப்பா..?” என கிண்டல் செய்ய

சிவா சந்தியாவிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் “அவ என்கிட்டேயே இருக்கட்டும்…இவளோ நேரம் அவங்க மதிக்கலேல…எங்களுக்கு தேவையில்லை..டேய் செல்லகுட்டி நீ இந்த பெரியப்பாகிட்டேயே இருந்துக்கோ அதுதான் உனக்கு சேப்..” என அவளும் அவனது கையை இறுக பிடித்துக்கொள்ள அவனுக்கு தலைகால் புரியாமல் என் பொண்ணு நான் சொல்றதுதான் கேக்குறா பாத்தியா என குதித்தான்..மித்ரன், மித்து இருவரும் சிரிக்க பின் அவர்களிடம் குழந்தையை காட்டினர்..மித்ரன் பார்த்து பார்த்து தூக்கினான்..மித்ரனை நன்றாக விழித்துப்பார்க்க மித்து “ஆதி, அவ உன்கிட்ட வந்ததும் எப்படி நல்லா முழிச்சு பாக்குறா பாரேன்..என பூரிக்க அவனுக்கும் அதே உணர்வு இருந்தது..அக்குழந்தையின் ஸ்பரிசம், மிருதுவான விரல்கள் பாதங்கள் என மென்மையாக வருடிவிட்டான்…மெதுவாக முத்தமிட்டவன் மௌனமாக இருக்க

மித்து என்னவென்று கண்களாலையே வினவ ‘தேங்க் யூ தியா..” என அவளது நெற்றியிலும் முத்தமிட்டான்..

 

ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு அழைத்து வர குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தனர். மித்ரனின் தாயார் பேர் மற்றும் இவர்களின் பெயர் சேர்த்தி “மித்ரகலா” என வைத்தனர்.. ஒரு மாதம் எப்படி சென்றது என்றே தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியாகவும் வேகமாகவும் சென்றது.. காலையில் சிவா, மாலையில் மித்ரன் இடைப்பட்ட நேரத்தில் மற்ற அனைவரும் வார இறுதியில் அனைவரும் என மித்ரகலாவை தாங்கினார்..யாரை கண்டாலும் தன் பொக்கைவாயை திறந்து புன்னகை புரிய அவளை கொஞ்சாமல் கடந்து செல்ல எவருக்கும் மனம் இருக்காது..அதேபோல அவளும் அனைவரிடமும் ஒட்டிக்கொள்வாள்..

 

குழந்தைக்கு பெயர் சூட்டும் போது மித்ரனே வெங்கடாச்சலத்திடம் சென்று “மாமா நீங்க வாங்க..” என அழைக்க

“இல்லப்பா..நீங்க முன்னாடி போங்க..நான் வந்திடறேன்..” என்றார்

“மாமா, நீங்க அன்னிக்கு ஹாஸ்பிடல் சொன்னது எல்லாமே நான் கேட்டேனே தவிர, எனக்கு எதுக்குமே அப்போ ரியாக்ட் பண்ணமுடில..என் மனசு முழுக்க அப்போ தியா நல்லபடியா வந்தா போதும்னு மட்டும் தான் இருந்தது..அதான் அன்னைக்கு எதுவுமே பதில் சொல்லல..தப்பா எடுத்துக்காதீங்க..”

“ச்ச..ச்ச அதெல்லாம் இல்ல..”

“அப்புறம் ஏன் நீங்க இன்னும் என்கிட்டேயும் தியாகிட்டேயும் தயங்கி தயங்கி பேசுறீங்க..இப்போ சொல்றேன் மாமா..நீங்க ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து அந்த மாதிரி பேசுனது தப்பில்லை…அதை நான் நல்லாவே புரிஞ்சுக்கறேன்..ஆனா நீங்க நடுவுல அதிகம் பேசாம விட்டது எல்லாம் நீங்க ஏதோ வேலை பிஸில அப்டி இருக்கீங்கன்னு நினச்சேன்..மத்தபடி இந்த மாதிரி பிரச்னைனால கோவிச்சிக்கிட்டு நீங்க பேசலேங்கிறது எனக்கு புரியல…எனக்கு பேமிலில எப்படி எதிர்பார்ப்பாங்க? எவ்ளோ நேரம் பேசணும்? எப்போ எப்போ வெளில கூட்டிட்டு போகணும்? இந்த மாதிரி எதுவும் தெரியாது மாமா…

பேமிலிங்கிறதுல தியா தான் என்கூட இருந்தா..அவ ரெகுலரா இதெல்லாம் பண்ணணும்கிற மாதிரி எதிர்பார்த்ததில்லை..சோ எனக்கு தெரியல..ஆனா அவளுக்கு பிடிச்ச விஷயம் சின்னதோ, பெருசோ, எனக்கு எப்போ தெரிஞ்சாலும், எப்போ முடியுதோ உடனே செஞ்சுடுவேன்..அவ்ளோதான்..நான் ஏதாவது மாத்திக்கணும்னு நீ தயங்காம உரிமையா என்கிட்டேயே சொல்லுங்க..முடிஞ்சளவுக்கு அத சரிபண்ணிக்க பாக்குறேன்..” என தன்மையாக அவன் பேசினான்

 

அவருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது..”இல்லப்பா..உன் மேல தப்பில்லை..நான் தான் சரியா புரிஞ்சுக்காம அவசரப்பட்டுட்டேன்…நீ நீயா இருக்கிறது தான் மித்துவுக்கும் பிடிக்கும்..அப்டியே சந்தோசமா இருங்க..அதுதான் எனக்கும் வேணும்..”

 

அவனும் புன்னகையுடன் “அப்போ சரி மாமா..நீங்க இனி எப்போவும் போல எங்ககிட்ட பழையமாதிரி எந்த தயக்கமும் இல்லாம பேசுங்க..எதுன்னாலும் உரிமையா சொல்லுங்க..இப்போ வாங்க” என கையோடு அழைத்து சென்றான்..

 

பெயர் வைக்க கேட்டதும் குழந்தையை வாங்கி வெங்கடாச்சலத்திடம் தந்தவன் “நீங்க தான் இவளுக்கு முதல சக்கரை தண்ணி ஊத்தி பேர் வெக்கணும்..ஆனா பேர் மட்டும் நாங்க சூஸ் பண்ணதே வெச்சுடுங்க..” என அவன் சொல்ல அனைவர்க்கும் மனது நிறைந்தது..

நாட்கள் நகர ஒரு நாள் மாலை மித்ரன் ஆபிஸ் விட்டு வந்தவன் குழந்தையிடம் சற்று நேரம் விளையாடிவிட்டு சென்றவன் மாடிக்கு சென்று சிறிது நேரம் தனியே வேடிக்கை பார்த்தபடி நின்றான். அங்கே வந்த மித்து “என்ன பாஸ், பயங்கர யோசனைல இருக்கீங்க போல..இத குடிச்சிட்டு பிரெஷ்அப் ஆகிட்டு கன்டினியூ பண்ணுங்க..” என கிண்டல் செய்ய

அவனும் புன்னகையுடன் வாங்கி பருகினான். “என்ன ஏதுன்னு கேக்கமாட்டியா?”

அவள் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு “நீ ரொம்ப ப்ரெஷர இருந்தா கேட்கணும்னு தோணும்..இப்போ நீ ஏதோ யோசிக்கிற அவ்ளோதானே..உனக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா நீயா சொல்லப்போற..” என அவள் சாதரணமாக சொல்ல அவனும் புன்னகையுடன் பருகிவிட்டு கப்பை அவளிடம் தந்தான்..அவளும் செல்ல கதவருகே போனவளை “தியா..” என்றழைத்தான்.. அவள் திரும்பி பார்க்க “உன்கிட்ட பேசணும்..இங்க வந்து உட்காரு” என அவளும் சென்றாள்..

“சொல்லு ஆதி..”

“இன்னைக்கு ஒரு கிளைன்ட் பில்டிங் விஷயமா ஒரு ப்ரோப்லேம் கோர்ட்க்கு போகவேண்டியதா இருந்தது..அதை முடிச்சிட்டு வரும்போது அவரை பார்த்தேன்..அவங்க பேமிலில கொஞ்ச பேர் மேபி அவரோட அண்ணா, தம்பி,மாமாவா இருக்கலாம்.. அவங்களையும் பாத்தேன்..”

மித்ராவிற்கு யாரை பற்றி கூறுகிறான் என புரியாமல் குழப்பமாக இருந்தாலும் அவனது தயக்கம் கண்டு ஒருவேளை என்றெண்ணியவள் “ஆதி, நீ பாத்தது உன் அப்பாவையா(முருகன்)? அவங்களை பத்தி தான் இப்போ பேசுறியா?” என தயக்கத்துடன் கேட்க அவனும் மெதுவாக தலையசைத்தான்..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’

17 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சந்தியாவும் அழுகையுடன் அவள் முதுகை வருடி கொடுத்தபடி “டேய் மித்து….இங்க பாரு…அழக்கூடாது..நான் உன்னை வம்பிழுக்க தான் டா கேட்டேன்..சரி என்ன பாரு..” என அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவள் “என் மித்து குட்டி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’

19 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மித்து அழுகையை நிறுத்தவே இல்லை..கலை கவிதா அனைவரும் அழுக மயக்கம் தெளிந்த பப்பு விழித்ததும் மித்துவின் கண்ணீரை கண்டவன் “மிட்டு பாப்பா..” என்றதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது.. “டேய் பப்பு,

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”