Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா?

ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற

ஜீவன் “டேய் செல்லம், இங்க பாரு. கண்ணை திற. நிரு மா இங்க இல்ல. அவங்க வீட்ல இருக்காங்க. நீ சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு. ஈவினிங் வேணா போயி பாக்கலாம்.” என பொறுமையாக கூற குழந்தை ஏற்கனவே தூக்கக்கலக்கம், களைப்பு என இருந்ததால் உடனே சாப்பாடு வேண்டாம் என அழ ஆரம்பித்துவிட்டான். இவனுக்கு அவனை திட்டவும் மனமில்லை சமாதானம் செய்துகொண்டிருக்க அவனுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது. அட்டென்ட் செய்ததும் “ஹலோ ஜீவிப்பா…” என குரல் கேட்க புன்னகையுடன்

ஜீவன் “டேய் ஜீவி குட்டி.. எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?”

“நான் நல்லாயிருக்கேன்ப்பா. ஜீவா என்ன பண்ரான்? அம்மா அவன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதான் உங்களுக்கு கால் பண்ணேன்..”

ஜீவன் “ஓ.. ஒரு நிமிஷம் இருடா குட்டி. நான் ஜீவாகிட்ட கொடுக்கறேன்.” என அவனிடம் “இந்தா.. உன் நிரு மா தான் பேசுறாங்க.” என்றதும் வேகமாக வாங்கியவன் “அம்மா, நீங்க என்னை தூங்கி எந்திரிச்சா வரேன்னு சொன்னிங்கள்ல. ஏன் இன்னும் வரல. எங்க இருக்கீங்க. நீங்களும் ஜீவியும் வாங்க.” என அவன் அழ

நிரு “கண்ணா, அழக்கூடாதுமா. அழுதா அம்மாக்கு பிடிக்காது. என் ஜீவா சமத்து தானே. முதல கேக்றதுக்கு பதில் சொல்லுங்க. இல்ல, நான் போன வெச்சுடுவேன்.” என செல்லமாக மிரட்ட

ஜீவா “ம்ம்..சொல்றேன்..”

“எப்போ எந்திரிச்சிங்க? டேப்லெட் போட்டியா?”

“இல்ல..”

“சாப்டிங்களா?”

“இல்ல.”

“அப்பாகிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கியா?”

“……………………………….”

“கேக்கிறேன்ல.. அப்பா சாப்பாடு குடுத்தாங்களா இல்லையா?”

“குடுத்தாங்க. நான் தான் இன்னும் சாப்படல…நேத்து ஈவினிங் வரேன்னு சொல்லிட்டு போனாரு அப்பா. ஏன் வரவேயில்லை? நான் அவரு மேல கோவமா இருக்கேன். நீங்க தானே என்னை பாத்துக்கிட்டீங்க. நீங்க குடுத்தாதான் சாப்பிடுவேன்.” என அவன் கூற அருகில் அமர்ந்திருந்த ஜீவன் இவர்கள் இருவரும் பேசியதையும் கேட்டான். அவனுக்கு புரிந்தது “ஜீவா தன்னை தேடியிருக்கிறான். இல்லை என்றதும் ஏமாந்துவிட்டான். அவனுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நிரு “ம்ம்.. தப்பு தான். அப்பாகிட்ட நேரா சொல்லி சாரி சொல்ல சொல்லு..பட் அப்பாவோட வேலை அந்தமாதிரி உனக்கு தான் தெரியும்ல. நீயும் இப்டி அவருகிட்ட கோவிச்சுகிட்டா அவரு எங்க போவாரு சொல்லு.” என ஜீவா ஓரக்கண்ணால் ஜீவனை பார்க்க அவனும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு காதில் கைவைத்து சாரி என்பது போல காட்ட ஜீவன் அமைதியாகினான்.

நிரு “இப்போ நான் வந்ததால நீ அப்பாகிட்ட கோவிச்சுக்கிட்டு என்கிட்ட வரேன்னு சொல்ற, நான் இல்லாம இருந்திருந்தா நீ அப்பாகிட்ட தானே போயிருப்ப.?”

“ம்ம்..”

“சரி, அப்பாகிட்ட பேசிட்டு, அவரோட சேந்து சாப்பிட்டு, டேப்லெட் போட்டுட்டு சமத்தா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாம தூங்குங்க. அப்பாவும் நைட் முழுக்க டியூட்டில இருந்திட்டு வந்திருக்காங்கல.. நாளைக்கு நாம மீட் பண்ணலாம். சரியா?”

ஜீவா “ஓகே மா… நான் சமத்தா இருக்கேன்…லவ் யூ மா.” என

நிரு சில நொடிகள் அமைதிக்கு பின் “லவ் யூ டூ டா கண்ணா…” என்றாள் அதை கேட்டு சில நொடிகள் உறைந்து நின்றது ஜீவனும் தான்.

[“லவ் யூ பேபி..”

“லவ் யூ டூ டா கண்ணா.. ” என செல்லமாக தலையை கலைத்துவிட

சட்டென சிரித்துவிட்டு “ஏய்.. என்ன டி குழந்தையை ட்ரீட் பண்றமாதிரி பண்ற?”

“ம்ம்ம்… நீங்க தானே என் பஸ்ட் குழந்தை. அப்போ அப்டி தான் இருக்கும்.”

“அதெல்லாம் சும்மா… குழந்தை பொறந்தா எல்லா அம்மாஸும் மாறிடுவீங்க..” என குறைபட முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள

“அட்ச்சோ… அப்படியெல்லாம் மாறமாட்டேன்… எப்போவுமே நீங்கதான் பஸ்ட்..” என தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.]

 

இங்கே ஜீவா, ஜீவியிடம் சற்று பேசிவிட்டு போனை வைத்துவிட்டு “அப்ப்பா…” என கத்த அருகில் இருந்த வசந்த் “டேய்…” என அவனை உசுப்பிவிட்டு நிகழ்உலகிற்கு வந்த ஜீவன் “ஆ.. என்ன?”

வசந்த், ஜீவா இருவரும் முகத்தை பார்த்துக்கொண்டு “எவளோ நேரமா கூப்பிடறது?, சாப்பிடலாம் வாங்க.” என பின் ஜீவன் “சாரி ஜீவா, அப்பாக்கு நேத்து ரொம்ப வேலை… இனிமேல் இப்டி நடக்காது. அப்பா மேல இன்னும் கோவமா? வேணா திட்டு சண்டைபோடு, அடி.. பேசாம இருக்காதடா” என

ஜீவா “இட்ஸ் ஓகே பா… நானும் சாரி.. உங்ககிட்ட கோவிச்சுக்கிட்டேன். மழைல நினைஞ்சுட்டேன்.. இனிமேல் இப்டி பண்ணமாட்டேன். லவ் யூ பா.” என கட்டிக்கொள்ள இவனும் அணைத்துக்கொண்டான்.

பின் ஜீவனே ஜீவாவிற்கு உணவு ஊட்டிவிட அவனும் பேசிக்கொண்டே உண்டுமுடித்தான். ஜீவி, நிரு பற்றியே விஷயம் இருந்தது. அவன் உறங்கியதும் ஜீவனை வந்ததது முதல் ஜீவா, நிரு போனில் பேசியது, ராமு கூறியது, ஜீவனின் அமைதி அனைத்தையும்  கவனித்துக்கொண்டிருந்த வசந்த் “என்னடா, நித்ராவ பத்தி நினைச்சிட்டிருக்கியா?”

ஜீவன் இல்லை என்பது போல தலையசைத்து “நிருவ பத்தி நினைச்சிட்டு இருக்கேன்… ”

புரியாமல் விழித்த வசந்த் “ஏன்டா.. அவளை பத்தி நினைக்க என்ன இருக்கு.?”

“நான் எப்படி இந்த மாதிரி ஆனேனு யோசிச்சுட்டு இருக்கேன். இத்தனை வருசத்துல நான் ஜீவாவை இப்டி விட்டுட்டு போனதில்லை. அப்டியே இருந்தாலும், சொன்ன நேரத்துக்கு வந்துடுவேன். அவன் இப்டி பீல் பண்ணி கேள்வி கேக்குற அளவுக்கு நடந்துக்கிட்டதில்லை. வெளில யாருகிட்டேயும் ஏன் பேமிலிகூட அதிகம் விட்டுட்டு போனதில்லை. ஆனா இப்போ எல்லாம், அவன் நிருகூட இருக்கான்னு மட்டும் தெரிஞ்சா போதும். நான் அடுத்த அவன் சாப்பிட்டானா தூங்குறானா படிச்சானா எதுவுமே கேக்கறதில்லை. எல்லாத்துக்கு மேல இப்போ அவனை ஒரு நாள் முழுக்க விட்டுட்டு வேலைய பாத்திட்டு இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு.. நான் ஏன் நிருவ அவ்ளோ நம்புறேன்னு புரியல. அந்த பொண்ணுக்கும் ஒரு லைப் இருக்கு… ஜீவா அவளை அம்மாவாவே பாக்க ஆரம்பிச்சுட்டான். ரொம்ப கிளோஸ பழக விடறது அவளுக்கோ அவ குடும்பத்துலையோ பிரச்சனை வந்திட்டா என்ன பண்றதுனு தோணுது. ஆனா நிருகிட்ட நீ பேசாத, விலகி இருன்னு என்னால ஜீவாகிட்ட சொல்லமுடில..அப்டி சொல்றதே ஏதோ பாவம் மாதிரி எனக்கு தோணுது. அவ்ளோ வருத்தம் அதுல தப்பு என்ன இருக்கு. ஏன் அந்த பீல்னு எனக்கு சொல்ல தெரில.” என அவன் தன் மனம் செல்கிற ஆனா முடிவு தெரியாத பாதையில் தத்தளித்துக்கொண்டிருந்தான்.

அது அவனுக்கு கோபமாக வெளிப்பட அருகில் இருந்த கதவை ஓங்கி குத்தினான்.

வசந்த் “டேய்.. ஏன்டா இவளோ டென்ஷன் ஆகுற… பிரீயா விடு. எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12

12 – மீண்டும் வருவாயா?   விஜய ஜீவிதன் – அப்பா, அம்மா, அத்தை, அக்கா மாமா, அண்ணா அண்ணி குழந்தைகள் என உறவுகள் சூழ அனைவரும் அன்பிலும் வளர்ந்தவன். மிகவும் தைரியமானவன். அவனுக்கு அவனது தாத்தாவின் பெயரை(விஜயேந்திர ராஜன்) இணைத்து

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26

26 – மீண்டும் வருவாயா?   தனியாக அமர்ந்திருந்த ஜீவி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டி, தாத்தா மாமா பெரியப்பா என அனைவரும் கூட்டமாக ஊர் பெரியவர்களோடு தூரத்தில் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் மேளதாளத்திற்கு ஏற்றவாறு இளவட்டம் ஆடிக்கொண்டிருக்க அதை பார்த்துவிட்டு திரும்ப

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?   வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?” ஜீவன்