Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13

13 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

மறுநாள் பிரியா அக்சராவிடம் வந்த வாசு “என்ன சிஸ்டர் இன்னைக்கு என்ன ஸ்பஷல்?”

அக்சரா பதில்கூற வாயெடுக்க அவளை அடக்கிய ப்ரியா “ஏன் உங்க வீட்டில சமைக்க மாட்டிங்களா? ஏதோ ஒரு தடவை இரண்டு தடவை ஹெல்ப் பண்ணா அதே வேலையாவே வெச்சுகிட்டு இங்கேயே சாப்பிடுவீங்களா?”

வாசு “ஹலோ அக்சரா என் சிஸ்டர் மாதிரி தான். சோ இதுவும் எங்க வீடு தான். ஆமா சமைக்கற அக்சராவே பெரிசா எடுத்துக்கல. சமைக்க தெரியாம சும்மா கூட நிக்கற நீ எதுக்கு இப்படி கத்தற.?

“ஹலோ யாருக்கு சமைக்க தெரியாது? அதெல்லாம் சூப்பரா சமைப்பேன்.”

“ஹாஹாஹா எங்க கனவுலையா? அதுலையாவது யாராவது சாப்பிடுவாங்களா?”

ப்ரியா முறைக்க வாசுவே “சரி மத்தவங்கள விடு நீயாவது நீ சமைச்சத சாப்பிட்டிருக்கியா?”

“போதும். இதுக்காகவே இன்னைக்கு எல்லாருக்கும் நானே சமைக்கறேன். சாப்பிட பிறகு தெரியும்.”

“என்ன தெரியும் .. நல்லால்லேங்கிறதா? அதான் இப்பவே சொல்றேனே.?”

“சும்மா விடாதிங்க.. உங்களுக்கு பயம் .. எங்க சாப்பிட்டு பார்த்து என் சமையல் சூப்பர்னு சொல்லிடுவோம்னு.. எனக்கு தெரியும். போனா போகட்டும் .. இப்பவே என் சமையல் நல்லாயிருக்கும்னு ஒத்துக்கோங்க. மன்னிச்சுவிடறேன்.”

“யாருக்கு எனக்கு பயமா? பாத்திடலாம். இதுக்காகவே இன்னைக்கு நீ சமைக்கிற. நாங்க சாப்பிட்டு சொல்றோம். அப்படி மட்டும் நல்லாயிருந்தா நீ என்ன கேட்டாலும் வாங்கிதரேன். ஒருவேளை மோசமா இருந்தா நான் என்ன சொன்னாலும் நீ செய்யணும்..என்ன அக்சரா நான் சொல்றது சரி தானே…”

“அவ என் ப்ரண்ட். எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா. ஏய் என்னடி பாத்திட்டிருக்க சொல்லு.”

அக்சரா  “ம்ம்.. இரண்டு பேருக்கும் என்ன சொல்லணும், அப்பட்டமா நீங்க நடிக்கறது தெரிஞ்சிடிச்சின்னா?”

இருவரும் திருதிருவென முழிக்க அக்சரா வாசுவிடம் “உங்களுக்கு இப்போ அவ சமைச்சத சாப்பிடணும் அதானே?”

“ச்சேசே இவ சமைக்கிறதுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல. எப்படியும் டெஸ்ட் பார்த்து எந்த லெவல்ல பாதிக்கிதுன்னு அனலைஸ் பண்ணிட்டு எனக்கு பிடிக்காதவங்க லிஸ்ட்டே போட்டு வெச்சிருக்கேன். எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வெச்சிடவேண்டியது தான்.”

அக்சரா  “அச்சச்சோ..ஆனா நீங்க மனசுல இருக்கறத பட்டுன்னு சொல்லிருக்கவேண்டாம். பாவம் பிரியா புள்ள முகம் வாடிப்போயி செவந்திடிச்சு.”

வாசு பிரியாவின் காளி அவதாரம் கண்டு மிரட்சியுடன் அவளை பார்க்க “ஏன்டா நீ சமைச்சத சாப்பிடணும்போல இருக்கு. எனக்காக செஞ்சுதரியான்னு கால்ல விழாத குறையா கெஞ்சிட்டு  இங்க இப்படி சொல்ரியா?” என அவள் கத்தியை எடுக்க

“அய்யோ இல்லடாமா நான் உன்கிட்ட சொன்னதுதான் நிஜம்.

என்னை நம்பு டா. நீதான் இப்போதைக்கு லவ் யாருக்கும் தெரியவேண்டாம்னு சொன்னேல்ல அதனால சும்மா பில்ட்டப் பண்ணேன்டா. மத்தபடி உன்னைப்போயி அப்படி நினைப்பேனா? நீயாரு…..அழகு ராணி ஜான்சி ராணி சமையல் ராணி எல்லாமே எனக்கு நீதான். நம்புமா. கத்தியெல்லாம் வேண்டாமே. “ என அவன் பேசிமுடிக்க எதிரில் அக்சரா  பார்த்து கொண்டு இருக்க பிரியா “ஒளறிக்கொட்டிட்ட.. எல்லாம் உன்னாலதான்.”

“எது நானா? கத்தியக்காட்டி முறைச்சு பயமுறுத்தினது நானா?”

அக்சரா “எதுக்கு மா எங்களுக்கு தெரியக்கூடாது?”

பிரியா “அதுஒன்னுமில்ல டி.. கொஞ்சம் கூச்சமா இருந்தது. சொன்னா நீ பயங்கரமா ஓட்டுவ.. அதான்  கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம்னு இருந்தேன்.”

அக்சரா “பின்ன வந்த அன்னைக்கே சண்டை… எப்போப்பாரு திட்டிகிட்டே இருந்திட்டு அதுவும் கொஞ்ச நாள்ல எந்த கேப்ல இந்த வேலை பாத்தேன்னே தெரில. உன்ன வேற என்ன பண்ணுவாங்களாம். ஆனாலும் உனக்கு கூச்சம் எல்லாம் வரும் தெரியும்னு நீ சொல்லி கேக்கிறதுக்கே சந்தோசமா இருக்கு. அண்ணா சூப்பர் இதெல்லாம் அவளுக்கு இருக்குன்னே அவளுக்கே இப்போதா புரிஞ்சிருக்கும். இவ்ளோ நாள் அவ பொண்ணா பையனானே தெரியாம இருந்தது. அப்டி ஒரு பஜாரி. பரவால்லை நீங்க அந்த டவுட்ட கிளீயர் பண்ணிட்டீங்க. கிரேட்.” என ப்ரியாவை வாற

வாசு “ஓ… ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.” என பிரியா பின்னால் இருந்து தலையில் அடித்துவிட்டு “அவ என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கா. நீ தேங்க்ஸ் சொல்றியா?” வாசு நே என விழிக்க “அப்போ அக்சரா பெருமையா சொல்லலையா?” என

அக்சரா  சிரிக்க பிரியா மீண்டும் கத்தியை எடுக்க வாசு மீண்டும் மன்னிப்பு படலம் வாசிக்க அக்சராவே “உங்க இரண்டுபேருக்கும் நல்லா செட் ஆகுதுன்னு கன்பார்ம் ஆயிடிச்சு. டெஸ்ட்ல நீங்க பாஸ் தான்… நீயும் அண்ணாவை மன்னிச்சுடு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. சோ ஹாப்பி போர் யூ டா பிரியா. அண்ணா என் பிரண்ட பத்திரமா பாத்துக்கோங்க. ஏதாவது மிஸ் ஆச்சு அப்புறம் உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லப்பா. இவளை கல்யாணம் பண்ணி அனுப்பும் போது கத்தி மட்டும் குடுத்து அனுப்பலாம்னு இருக்கேன்.” என அனைவரும் சிரிக்க

வாசு ” கவலையே படாத. உண்மையாவே அவளை நல்லா பாத்துக்கிட்டாதான் என்னை நல்லா வெச்சுக்குவா உன் பிரண்ட். அதுக்காகவே நான் சமத்தா இருப்பேன் பா.” என அவன் பவ்யமாக சொன்ன விதத்தில்   அனைவரும் சிரிக்க வாசலில் இவர்கள் சண்டையிட ஆரம்பிக்கும்போதே வந்த ஆதர்ஷ் இதை கவனித்துக்கொண்டே நின்றுவிட இப்போது உள்ளே வந்தவனை பார்த்து சிரிப்பை நிறுத்திவிட

ஆதர்ஷ் “அப்போ வாசு சார் லவ் பண்ணறாரா? ஏன்டா முன்னாடியே சொல்லல?”

வாசு “இல்லை லவ், கல்யாணம் இதெல்லாம் உனக்கு பிடிக்காதோன்னு தான் டா சொல்லல.”

“டேய் எனக்கு வேண்டாம்னு சொன்னா, நீயும் அந்த வாழ்க்கை வாழக்கூடாதுன்னு அர்த்தம் இல்லடா. இதுக்காக எவ்ளோ நாள் மறைச்சு வெப்ப சொல்லு. பைத்தியம் டா நீ.. உனக்கு பிடிச்சமாதிரி உன் லைப் அமைஞ்சா அதுவே எனக்கு சந்தோசம் டா.. பிரியா என் பிரண்ட் பையன் நல்லவன் தான்.பட் ரொம்ப பாசமானவன். எதுக்குடா வம்புன்னு எதையும் வெச்சுக்காம விட்டுகுடுத்துட்டு வந்துடுவான். அம்மா அப்பா குடும்பம்னு இருக்கணும்னு அவனுக்கு ரொம்ப ஆசை. அவனை இனிமேல் நீதான் எல்லாமாவும் இருந்து பாத்துக்கணும். இட்ஸ் மை ஹம்பிள் ரீகிவிஸ்ட்…” என்றவன்

பிரியா “கண்டிப்பா”

வாசுவும் “ஆனா எனக்கு குடும்பமா இருந்தா பிடிக்கும்னு நான் உன்கிட்ட சொன்னதே இல்லையேடா. உனக்கு எப்படி?”

ஆதர்ஷ் அவன் தோளில் தட்டி “டேய் நான் உன் பிரண்ட். எப்போ இருந்து உன்கூடவே இருக்கேன். நீ என்கிட்ட நேரா சொல்லணும்னு அவசியம் இல்ல. உன்னோட ஏக்கம் எதிர்பார்ப்பு இத கவனிச்சாலே எனக்கே  புரியாதா?”

வாசுவும் அவனை தழுவிக்கொண்டான். அக்சரா “வாசு அண்ணா இப்போ மட்டும் எந்த தைரியத்துல அவர்கிட்ட நீங்க லவ் பண்றத சொல்றிங்க?”

ப்ரியாவும், வாசுவும் சிரித்துக்கொண்டே “எல்லாம் நீங்க சார் லைப்ல வந்துடீங்கன்னு தெரிஞ்ச தைரியத்துல தான். ” என ஆதர்ஷ் மெலிதாக புன்னகைக்க அக்சரா “என்ன?” என ஆச்சரியமாக வினவ

பிரியா “எங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே டவுட் இருந்தது. ஆனா நீங்க இரண்டுபேரும் தான் புரிஞ்சுக்காம சண்டைபோட்டுட்டே இருந்தீங்க. அதை பத்தி பேசி திட்டி தான் கடைசில நாங்க இரண்டுபேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம். அப்போவும் நீங்க தேறல. ஒருவேளை நாம தான் ஓவரா கற்பனை பண்ணிட்டோமோன்னு நேத்து தான் நினச்சு இனி உங்கள சேத்தி வெக்கிற எண்ணத்தை ட்ராப் பண்ணலாம்னு பாத்தா நைட்க்குள்ள கதையே மாறிடுச்சு.” என பிரியா சிரிப்புடன் பெருமூச்சுவிட

வாசு தொடர்ந்து “நேத்து நீ சாப்பிடாம கொள்ளாம மூஞ்சைதூக்கிவெச்சுக்கிட்டு இருந்த, நைட் சார் வந்ததுல இருந்து அக்சரா எங்க என்ன பண்ரா? அவகிட்ட பேசணும்னு உன்னை பத்தியே விசாரணை… சரி எப்போவும் போல சாதாரணமா பேசிட்டு வந்து எங்களுக்கு பல்பு குடுப்பிங்க. லவ் எல்லாம் உங்களுக்கு வராதுன்னு நினச்சா நள்ளிரவு நாலு மணி வரைக்கும் இரண்டுபேருக்கும் வாக்கிங்.. பிரியா நீ அந்த சீன பார்த்த?” என அக்சரா வெட்கப்பட ஆதர்ஷ் அவளை ரசித்துக்கொண்டிருக்க பிரியா “ம்ம்.. அவ்ளோ சூப்பரா இருந்தது…இரண்டுபேரோட காதல் மொழி. நான் பாக்கிறேன். தூங்க வரும் போது நான் முழிச்சிருக்கேன்னு மேடம்க்கு எதுமே தெரில. அப்டி ஒரு கனவுலகத்துலையே வாராங்க.” என

சிரித்த அக்சரா “ஆமா டி, என் புருஷனை பத்தி நான் நினைக்கும்போது நீ பாத்தா என்ன? யாரு பாத்தா எனக்கென்ன? நான் எதுக்கு ரியாக்ட் பண்ணனும்.?” என வாசு “அப்படிப்போடு…. ப்ரியா நீயெல்லாம் வேஸ்ட் ஒரேநாள்ல என்ன ஒரு வெக்கம் பூரிப்பு கத்துக்க… பிரியா முறைக்க வாசு பேச்சை மாற்ற  “சார் மட்டும் என்னவாம். நான் ஸ்கூல்ல இருந்து அவனை பாக்கறேன். எவ்ளோ லேட்டானாலும் சரி, ஏன் தூங்கவேயில்லன்னா கூட காலைல 6 மணிக்கு மேல அவன் இருக்கமாட்டான். ஆனா சார் இன்னைக்கு 8 மணி வரைக்கும் அப்படி தூங்கறாரு. கலக்குங்க. கலக்குங்க. எல்லாம் லவ்னால வந்தது.”

வாசுவே தொடர்ந்து “ம்ம்ம்… அதெல்லாம் ஒரு கொடுப்பினை டா, இங்க ஒருத்தன் லவ் பண்ணிட்டு நிம்மதியா தூங்கறான். இன்னொருத்தன் லவ் பண்ணிட்டு தூக்கத்தை தொலைச்சிட்டு சுத்தறான்.” என தன்னை சுட்டிக்காட்ட பிரியா தலையில் கொட்ட ஆதர்ஷ் சிரிக்க அவனை பார்த்த வாசு “டேய்,நீ நண்பனா டா? இதெல்லாம் தட்டி கேக்கமாட்டியா?”

ஆதர்ஷ் “ஏன் பிரியா தட்டிகேக்றது பத்தாதா? உனக்கு வாய் ஜாஸ்தி டா. இங்க பாரு…அம்மா அப்பா இல்லாத பொண்ணு பெருசா கேக்க யாரும் வரமாட்டாங்கன்னு திட்றது அடிக்கிறதுன்னு ஏதாவது தெரிஞ்சது தொலைச்சிடுவேன். ப்ரியாவை பத்திரமா பாத்துக்கோ.” என வாசு “எஸ் பாஸ். அடியும் எனக்கு, அட்வைஸ்ஸும் எனக்கு…ச்ச…” என்றான். அனைவரும் சிரிக்க ப்ரியா ஆதர்ஷிடம் “நான் உங்கள அண்ணான்னு கூப்பிடலாமா?” என ஆதர்ஷ் ஒரு நிமிடம் தயங்க அக்சராவை பார்த்தவன் ப்ரியாவிடம் சரி என தலையசைத்தான்.

“தேங்க்ஸ் அண்ணா.”  அவனும் மெலிதாக புன்னகைத்துவிட்டு “சாரா, நேத்து விக்ரம் கல்யாணம் பத்தி சொன்னாங்க. எப்போ என்னன்னு எல்லாம் கேட்டுட்டு வேலை ஆரம்பிக்கணும். அதோட  பிளொவர் ஷோ (flower show) ஒர்க், சம்மர் சீசன் வரதால டூரிஸ்ட் அதிகமா வருவாங்க. காட்டேஜ் கொஞ்சம் சேஞ்சஸ் பண்ண வேண்டியது இருக்கு. எல்லாமே இன்னைக்கு ஜெயேந்திரன் அப்பாகிட்ட பேசி முடிவு பண்ணிட்டு சீக்கிரம் வேலை ஆரம்பிக்கணும். நாம போயிட்டு வந்திடலாமா?..”

அக்சரா “சரி, ஒன் ஹார்ல கிளம்பிடலாம்..”

“ஓகே… டிபன் வெளில பாத்துக்கலாம்ல?”

“எதுக்கு?.. அதெல்லாம் வேண்டாம்.. உங்களுக்கு ஹோட்டல்ல சாப்பிட பிடிக்காதில்லை? அப்புறம் ஏன்…சாப்பிட்டே போய்டலாம்..”

“இல்லை,  பிரியா சமைக்கிறதா சொன்னா.. இன்னும் நீங்க சமைக்கவே ஆரம்பிக்கல. டைம் ஆகும்ல.” என ஆதர்ஷ் வினவ

அக்சரா “அவ அண்ணா, குட்டிஸ் எல்லாரும் இங்க தானே இருக்காங்க. சமைச்சு பொறுமையா சாப்பிட்டுப்பாங்க. நான் எனக்கு உங்களுக்கு மட்டும் சமைக்கிறேன்.” என அவன் புன்னகையுடன் தலைசாய்த்துவிட்டு தயாராக கிளம்பினான்.

இதை கவனித்து கொண்டிருந்த பிரியா “உண்மையாவே இரண்டுபேரும் புருஷன், பொண்டாட்டியாவே மாறிட்டீங்களோனு தோணுது… நாம காலேஜ் படிக்கும்போது நீ கல்யாணம், லவ் பத்தி சொல்றது எல்லாம் கேக்கும்போது எனக்கே ஆசை வரும். ஆனா அதுக்கப்புறம் என்னன்னவோ நடந்திடிச்சு…நீ இப்டியே தனியா இருந்திடிவியோன்னு நினச்சு நான் ரொம்ப பீல் பண்ணிருக்கேன். ஆனா உன் நம்பிக்கை நீ ஆசைப்பட்ட மாதிரி ஒருத்தர உன்கிட்ட கூட்டிட்டு வந்திடுச்சு. இன்னைக்கு எனக்கு மனசே நிறைஞ்சிடுச்சு.. சோ லவ் யூ டியர் என பிரியா அக்சராவை கட்டிக்கொள்ள இவளும் சிரிப்புடன் கட்டிக்கொண்டு பின் விடுவித்தவள் “அங்க பாரு அண்ணாவை… முறைக்கிறாரு. நான் போறேன்பா.” என அக்சரா ஓடிவிட வாசு “பிரியா  எனக்குக்கூட சோ மச் லவ் தான்” என அருகே வர

பிரியா கருணையே இல்லாமல் கருணைக்கிழங்கை குடுத்து “அப்டியா? அப்போ இந்தா, இதெல்லாம் கழுவிட்டு வா. வேகவெக்கணும். காய் நறுக்கணும்…எனக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்ணு.” என வாசுவின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

 

பின் சிறிது நேரத்தில் அக்சராவும், ஆதர்சும் கிளம்பிவிட அவன் சாதாரணமாக இருந்தாலும் அக்சராவே “என்னாச்சு?” என்றாள்.

அவனோ ” ஒண்ணுமில்லையே.. என்ன திடிர்னு என்னாச்சுன்னு கேக்கற?”

“ஒண்ணுமிலேனு உங்க வாய்தான் சொல்லுது. உங்க மண்டைக்குள்ள ஏதோ ஓடிட்டே இருக்கு போலவே? அப்டின்னு என் இன்ஸ்டிங்ஸ் சொல்லுதே ” என

ஆதர்ஷ் “அப்படியா? சாதாரணமா தானே இருக்கேன். பேசுறத கேட்டுட்டே  தானே வரேன். உனக்கேன் அப்டி தோணுது?”

அக்சரா “இதென்ன பெரிய விஷயமா எல்லாருமே பண்றதுதான். கேக்கற கவனிக்கற மாதிரி இருந்தாலும் நாம மனசு இங்க இல்லாம ஏதோ நினைச்சிட்டு இருக்கும்.” அவன் நம்பாமல் பார்க்க

அக்சராவே “ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே அப்படித்தானே. கிளாஸ் நடந்துட்டு இருக்கும். எல்லாமே அங்கேயே கவனிக்கிற மாதிரி இருக்கும்.ஆனா மனசு அந்த நேரத்துல உலகத்தையே சுத்திட்டு வந்திடும். அப்டி இல்லாட்டி வீட்ல யாராவது அட்வைஸ் பண்ணும்போது முகத்தை பவ்யமா வெச்சு கேப்போம். ஆனா மைண்டுக்குள்ள என்னென்ன ஓடும். எவ்ளோ திட்டுவோம்? சோ நாம மைண்ட்க்கு அவ்ளோ பவர் இருக்கு. ஏன் இதெல்லாம் நீங்க பண்ணிருக்க மாட்டீங்க?” என அவள் கூறிய உதாரணத்தை நினைத்தவனுக்கு சிரிப்பு வர “சரி சரி.. அதெல்லாம் ஓகே தான். பட் இப்போ எனக்கு எதுவுமில்லை.” என

அவளும் புன்னகையுடன் “ம்ம்.. சரி. உங்களுக்கு தோணும்போது நீங்களே சொல்லுங்க.” என இவன் அவள் கோபித்துக்கொண்டு சொல்கிறாளா என திரும்பிப்பார்க்க அவள் வேடிக்கை பார்க்க அடுத்து வேறு விஷயம்  பேச என சாதாரணமாக இருக்க சிறிது நேரம் கழித்து “சாரா, நீ சண்டைபோடலையா? ”

அவள் புரியாமல் “எதுக்கு?”

“இல்லை நான் எதுவுமில்லைனு சொன்னதை நீ நம்பிருந்தா அது வேற. ஆனா உனக்கு தெளிவா தெரியுது நான் ஏதோ யோசிச்சிட்டு இருக்கேனு.. பொதுவா அப்டி கேட்டு இல்லேனு சொன்னா ஒன்னு சண்டை இல்ல நான் கேட்டாக்கூட சொல்லமாட்டீங்களா அப்டினு எல்லாம் எமோஷனல் டயலாக் இல்லை கோவிச்சுக்கறதுனு இருக்கும்.. ஆனா நீ அது எதுவுமே பண்ணாம சாதாரணமா விட்டுட்டு அடுத்த டாபிக் போய்ட்ட?”

அவள் சிரித்துவிட்டு “அது எதுக்கு அப்டி பண்ணனும்… என்கிட்ட எப்போ சொல்லணும்னு தோணுதோ நீங்களே சொல்லபோறிங்க. விளையாட்டுக்கு வேணுன்னா  அடம்பிடிக்கலாம். ஆனா உங்க முகம் இப்போ அந்த விளையாட்டை ரசிக்கற நிலைல இல்லேனு தெரியுது. அண்ட் எனக்கு அந்த விஷயத்தை விட நீங்க முக்கியம். சண்டை போடற எல்லாரும் இன்னொருத்தர் மேல இருக்கற அதீத அக்கறைன்னால தான் சண்டை போடறாங்க. ஆனா ஒரு விஷயம்  யாரு மேல இருக்கற பாசத்துல எல்லாம் சண்டைபோட்டு ஒன்னு செய்றங்களோ அவங்க சந்தோசம் அதுல இருக்கான்னு தெரிஞ்சுக்க மறந்துடறாங்க..”

அவன் அவளை பார்த்து “அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்ற? அப்போ கேக்றவங்க பிரச்சனை பண்ண கேக்கறாங்களா?”

அவள் சிரித்துவிட்டு “நான் அப்டி சொல்ல. எக்ஸாம்பில், சரி இப்போ கணவன் மனைவி இருக்காங்க.. புருஷன் தன்னோட தங்கச்சிய வீட்டுக்கு வர வழில பாக்ரான். அந்த பொண்ணு சாதாரணமா வந்து பேசிட்டு போகுது. முன்ன மாதிரி பேசுறதில்லை. குடும்பத்துல யாரும் சேந்து இருக்கறதில்லைன்னு சங்கடப்பட்டுட்டு போறா. இவனுக்கும் ஆசை தான். ஆனா மனைவிக்கும் அவங்களுக்கும் ஆகுறதில்லை. சோ கொஞ்சம் விலகி இருந்துக்கலாம்னு இப்டியே இருக்கவேண்டியதாயிடிச்சு. சரி, நம்மள நம்பி வந்தவ..அவளை நல்லா பாத்துப்போம்னு அவனும் பெருமூச்சுடன் வர புருஷன் முகம் வாடிருக்கேன்னு  பொண்டாட்டி என்னாச்சு கேக்குறா. அவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும். தங்கச்சிய பாத்தேன். பேசுனேன்னு சொன்னா இவ சங்கடப்படுவான்னு .. அதெல்லாம் ஒன்னுமில்லமா.. நான் நல்லாத்தான் இருக்கேனு புருஷன் சொல்லிடறான்.

புருசனுக்கு ஏதோ பிரச்னை ஆனா நம்மகிட்ட சொல்லாம சங்கடப்படுறாரேன்னு அவ திரும்பவும் கேக்குறா. அவனும் சொல்லல. நீங்க சொன்னமாதிரி என்கிட்ட கூட சொல்லமாட்டீங்களா? நான் முக்கியமில்லையா? நீங்க ஏதோ மறைக்கிறீங்கன்னு அவ எமோஷனலா பேச இவனும் விஷயத்தை சொல்லிடறான். அடுத்து என்ன நடக்கும். உங்க தங்கச்சிக்கு வேற வேலை இல்லையா. இங்க தனியா இருக்கும்போது நல்லா சண்டை போட வேண்டியது.. அப்புறம் வெளில பாத்தா உருகவேண்டியதுன்னு ஆரம்பிச்சு சண்டை போகும். அந்த மனைவி சொல்றதும் உண்மையா இருக்கலாம்.. அதை புரிஞ்சுகிட்டு தானே அவனே சொல்லாம விட்டரலாம்னு விட்டா அப்டியே இருந்திட வேண்டியதுதானே, எதுக்காக கஷ்டப்பட்டு எமோஷனல பேசி விஷயத்தை வாங்கி அப்புறம் மறுபடியும் கத்தி சண்டைபோடனும்.

இதுல அந்த மனைவி புருஷன் ஏதோ நினச்சு கவலைப்படறானேன்னு தான் கேட்டா. அதுல அக்கறை தான் முழுசா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் அந்தபிடிக்காத விஷயத்தை கேட்டு வந்த கோபத்துல இவன் மேல காட்டுனா, இல்ல அவளே பொலம்பிகிட்டு இருந்தா அதுனால யாருக்கு என்ன யூஸ். இப்போ அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சதால என்ன சாதிச்சிட்டா? தெரியாம இருந்திருந்தா என்ன கெட்டுப்போய்டப்போகுது… சோ அந்த விஷயம் வேணுமா? இல்ல அந்த மனுசங்க வேணுமா? எதுக்கு இம்போர்ட்டன்ஸ் கொடுக்கணும்னு நமக்கு தானே தெரியணும். மனுஷங்களோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தாலே போதும். அது புரிஞ்சுட்டாலே யாரும் தேவையில்லாம சண்டைபோட்டு பிரியமாட்டாங்க. அதோட எதுன்னாலும் கேட்கலாமே அவங்களே வந்து சொல்லுவாங்க.” என அவளது நீண்ட விளக்கத்தில் தன்னை மறந்தவன் வண்டியை ஓரம் கட்டினான்.

 

“சாரி சாரா… நான் உன்னை விரும்பறேன். என் வாழ்க்கைல நீ தான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் எனக்கு இத்தனை நாள் இருந்த எண்ணம், குழப்பம் இவளோ நாள் பாத்த விஷயங்கள்  அடுத்தவங்க உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்கமாட்டாங்க. இந்த மாதிரி சண்டை, பிரச்சனை எமோஷனல் பிளாக் மைல் எல்லாமே தான் இருக்கும்னு நினைச்சது முழுசா போகமாட்டேங்கிது. அதனால தான் என்னால சில நேரம் உன்கிட்ட கூட சாதாரணமா இருக்கமுடில. என் ஆசை எந்த தயக்கமும் குழப்பமும் இல்லாம முழுசா உன்கிட்ட வரணும்ங்கிறதுதான்.. ஆனா என்னை கண்ட்ரோல மீறி நியாபகம்வரும்போது என்னால சில நேரம் முடியல. எனக்கு கொஞ்சம் டைம் குடு சாரா.. அதுக்குள்ள நான் ஏதாவது தெரியாம கோபமா நடந்துக்கிட்டா என்னைவிட்டு நீ போயிடமாட்டேள்ல.?”

 

“ஆதவ், நீங்க எத்தனை தடவ கேட்டாலும் இதுதான் என் பதில்… நான் உயிரோட இருக்கறவரைக்கும் உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன்.” என்றதும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன் “சாரா, ப்ளீஸ் அப்டி சொல்லாத. நீ எனக்கு எப்போவுமே வேணும். என்னால உன்னை இழக்கமுடியாது. உனக்கு எது ஆகவிடமாட்டேன். யாரையும் உன்கிட்ட நெருங்க விடமாட்டேன்.” என்று எதனிடம் இருந்தோ அவளை காப்பவன் போல இறுகி அணைக்க அவனின் இந்த செயல் பதட்டம் அவளுக்கு வேறு ஏதோ அவனுக்கு பிரச்சனை இருப்பதை உணர்த்தியது. அதை புறந்தள்ளிவிட்டு அவனை முதுகை வருடிக்கொடுத்து அவனை அமைதிப்படுதினாள்.

 

விட்டுவிலகியவள் “சரி, கடைசிவரைக்கும் எதுக்கு இந்த டாபிக் ஆரம்பிச்சு எதுக்கு போயிருக்கு.?” என அவனை கேட்க அவனும் “அதுவா.. இன்னைக்கு வாசு சொன்னதை நினச்சேன். என்கூடவே தானே இருக்கான். அவனுக்கு கூட என்னை புரியாம போச்சே.. என்கிட்ட அவன் லவ் பண்ணத பத்தி சொல்றதுக்கு கூட அவ்ளோ யோசிச்சிருக்கான். இல்லை நான் இப்டி தனியா இருக்கேன். அவன் மட்டும் லவ் அது இதுன்னு சந்தோசமா இருக்கறத நினச்சு அப்டி சொன்னானா? எனக்கு தெரில. அவனை தப்பு சொல்லல. ஆனா இப்போ நான் உன்னை லவ் பன்றேன்னு தெரிஞ்சதால சாதாரணமா சொல்லிட்டான். இல்லாட்டி அவன் ஒரு உறுத்தலோடவே இருந்திருப்பான்ல. ஒருவேளை எனக்கு நீ கிடைக்காட்டி அவன் லவ்வ நான் சாதாரணமா எடுத்திட்டு இருந்திருக்கமாட்டேனா சாரா?”

 

அவள் “அப்டி யாரு சொன்னா? அதெல்லாம் எதுவுமில்லை. அது அவங்க லைப்ன்னு நீங்க சாதாரணமா தான் விட்டிருப்பிங்க. அண்ணா அப்டி எல்லாம் யோசிக்கமாட்டாரு?”

“இது வாசு யோசிச்சான்னானு தெரில, இது அவன் கேள்வி இல்லை…. ஆனா எனக்குள்ள இந்த கேள்வி இருக்கு…” என அவன் கூற இவளுக்கு என்ன சமாதானம் கூறுவது என்று தெரியவில்லை. அதற்குள் ஜெயேந்திரன்  வீடு வர இருவரும் உள்ளே சென்றனர்.

அக்சராவிற்கு அவன் எண்ணம் புரிந்தாலும், அதன் காரணமும், குழப்பங்களுக்கான விளக்கமும் தான் புரியவில்லை. சில நேரம் அவன் தன்னை மறந்து சிறுபிள்ளை அவளிடம் வம்பிழுப்பது, என இருப்பினும் அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று பல நேரங்கள் தடுப்பு சுவர் போட்டு அவனது உணர்ச்சிகளை அடக்குகிறது. அது ஏன் என அவனிடம் கேட்டு சங்கப்படுத்த விருப்பமின்றி, அவனே சொல்லட்டும் என அவளும் பொறுமையாக காத்திருந்தாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 20ராணி மங்கம்மாள் – 20

20. அபவாதமும் ஆக்கிரமிப்பும்  கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத் தொடங்கிவிட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46

உனக்கென நான் 46 கடிகார முள்ளோ தன் விளையாட்டை துவங்கிவிட்டது. அந்த ஆதவனும் இந்த காதலை பார்த்து ரசிக்க சில தினங்கள் வந்துபோய்விட்டான். அன்பரசியோ ஆசையாக அந்த நாட்காட்டியை தன் மென்கரங்களால் கிழித்தாள். இரவில் தன்னவனுடன் பேசிகலைத்ததாள்.மன்னிக்கவும் அவன் மட்டும்தான் பேசினான்.

உள்ளம் குழையுதடி கிளியே – 12உள்ளம் குழையுதடி கிளியே – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற கதைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முன்பே சொன்னது போல வேலையில் சற்று பிஸி. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். சற்று ப்ரீ ஆனதும் பெரிய பதிவாகத் தர முயல்கிறேன். இனி  இன்றைய பதிவு. உள்ளம்