ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 19

19 – மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் ஆதிக்கு வேலை அதிகம் இருக்கவே முன்னாடியே கிளம்பிவிட்டான். திவியும் முன்னாடியே கிளம்பிவிட்டாள். மதியம் அவனுக்கு திவியின் ஞாபகம் வர அர்ஜுனிடம் சென்று “டேய்… உன் தங்கச்சி என்னடா பண்ணிட்டு இருப்பா..” என கேட்க

அர்ஜுன் “அத என்கிட்ட கேட்டா? ” என எதிர் கேள்வி கேட்க அவனை முறைத்துவிட்டு “அவளுக்கு கால் பண்ணு…..”என அவனை தொல்லை செய்ய அவனும் அவளுக்கு கால் செய்ய ஆதி ஸ்பீக்கரில் போட்டான். அவள் அட்டென்ட் செய்ததும் “ஹாய் அண்ணா, என்ன இந்த நேரத்துல?”

அர்ஜுன் “ஒன்னுமில்லடா, என்ன பண்ற? என கேட்க “ஒர்க் தான் அண்ணா…சொல்லுங்க”

“ஒண்ணுமில்லடா, சாப்பிட்டியா?”

“அண்ணா, அம்மு நம்பர் மறந்துட்டு எனக்கு கால் பண்ணிட்டிங்களா…சமாளிக்க ஏதாவது பேசுறீங்களா? டோன்ட் ஓர்ரி… நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்…திட்டமாட்டேன்..”என அவள் கூற ஆதி சிரிக்க அர்ஜுன் “ஓய். …தங்கச்சின்னு பாசமா கூப்பிட்டு கேட்டா உனக்கு சேட்டைதானே. ..”

“ஹாஹாஹா… ஓகே ஓகே அண்ணா. ..திடிர்னு பாசமா சாப்பிடறது எல்லாம் கேக்குறீங்களா அதான் டவுட்…சாப்பிட தா வெளில போறேன்….”

“டைம் ஆகாதா? வெளில போயிட்டு வர… மேனேஜர் ரொம்ப லிபேர்ல விட்ருவாங்களா?”

“ஐயோ அண்ணா, அந்த மேனேஜர் இம்ச…. கேள்வியா கேப்பாரு… திட்டிட்டே இருந்தாரு. ..டென்ஷன் ஆயிடிச்சு. ..அதான் இன்னைக்கு பைனல் ரிவியூ போகவேண்டிய ஒரு கோட்ல கொஞ்சம் குளறுபடி பண்ணிட்டு வந்துட்டேன்…. சுத்தமா ஒர்க் ஆகல…. 3 வாரமா பண்ண வேலை….மனுஷன் அதோட போராடிட்டு இருக்காரு….”

“ஐயையோ… ஏதாவது ப்ரோப்லேம் ஆகாதா….?”

“அதெல்லாம் இல்ல அண்ணா, ஒரு குட்டி செக்ஷனை தூக்கிவிட்டுடேன்… அத மட்டும் போட்டுட்டா கரெக்டா வந்திடும்…”

“இருந்தாலும் அவரு மத்தவங்களுக்கு பதில் சொல்லணும்…. கஷ்டம் தானே…”

“இல்லை அண்ணா..அந்த அளவுக்கு எல்லாம் டார்ச்சர் பண்ண மாட்டேன்…என்ன இருந்தாலும் எல்லாரோட முயற்சியும் அதுல இருக்கு….அதுவுமில்லாம நம்மள திட்டுனாலும் வேலைக்காக நல்லா வரணும்னுதானே அவரும் கத்துனாரு….சோ வெளில விட்டுகுடுக்கமாட்டேன்… ரிவியூக்கு முன்னாடி போயி மாத்திவிட்ருவேன்….திட்டுனார்ல கொஞ்ச நேரம் காண்டாகட்டும்….”

“நீ இருக்கியே…. பிராடு…”

அவள் சிரித்துவிட்டு “எங்க அண்ணா ரொம்ப பிரீயா இருக்கீங்களோ? உங்ககூட ஒரு காண்டு காட்ஜில்லா இருக்குமே எங்க? ” என கேட்க ஆதியும்,அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள

“அதான் அண்ணா, உங்க ப்ரெசென்ட் பிரண்ட், பியூச்சர் மச்சான் அடங்காபிடாரி ஆதிய தான் கேக்குறேன்” என கூற ஆதி முறைக்க அர்ஜுன் சிரித்து விட்டு “அவனுக்கு கொஞ்சம் வேலை மா, அவன் பிஸி… இருந்தாலும் நீ அவனை அப்படி எல்லாம் பேசுறது அவனுக்கு தெரிஞ்சா..”

“தெரிஞ்சா என்ன? என்ன பண்ணுவாரு அண்ணா…. எப்போவும் போல ஆங்கிரி பியர்ட் (angry bird) க்கு வாய்ஸ் குடுத்தமாதிரி கத்துவாரு….பரவால்ல… சமாளிச்சிடலாம். ……அவருக்கு இன்னும் பொண்ணுங்க ஷைகோலஜி தெரில… முக்கியமா என்ன பத்தி அவருக்கு தெரியல…. பாவமா முகத்தை வெச்சுகிட்டு அர்ஜுன் அண்ணா அம்மு எல்லாரும் தான் ஆசையா நிக் நேம் வெக்க சொன்னாங்கன்னு சொல்லிடுவேன்….அவரு திட்டுனாலும் எல்லாரையும் சேத்திதான் திட்டுவாரு… கம்பெனியோட இருக்கும் போது திட்டுனா நான் சுத்தமா கண்டுக்கவே மாட்டேன்… சோ நீங்க இத எதையும் அவருக்கு தெரியாம பாத்துக்கணும். …. இல்லாட்டி உங்களுக்கு மட்டுமில்ல உங்க செல்லம் அம்முவுக்கும் சேத்தி பிளான் போட்ருவேன்…. எனக்கு நோ ப்ரோப்லேம்…” என்க,

அவனும் “அப்படி ஏதும் பண்ணிடாத மா…சரி டா பை. ..ஈவினிங் பாக்கலாம்” என்று போனை துண்டித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான்….

ஆதி “என்ன கொழுப்பு அவளுக்கு…. எப்படியெல்லாம் பிளான் பண்ரா…” என

அர்ஜுன் “இருந்தாலும், அவ உனக்கு வெச்ச நேம் எல்லாம் பாத்தியா ‘காண்டு காட்ஜில்லா’, ‘அடங்காபிடாரி ஆதி’….செமடா….உன் கோபத்தை பாத்து பயந்தவங்கள தான் பாத்திருக்கேன்…. அத வெச்சு திட்டியும் கேட்டுஇருக்கேன்…. ஆனா ‘ஆங்கிரி பியர்ட் (angry bird) க்கு வாய்ஸ் குடுத்தமாதிரி கத்துவாரு’ ன்னு அவ சொன்னாலே…உன் திட்ட, கோபத்தைக்கூட இவ்வளோ பன்னா(fun) ஒருத்தாராள எடுத்துக்கமுடியும்னு இப்போதான் தெரியுது. ரியலி என் தங்கச்சி சூப்பர்டா…..”

அவனை ஆமோதித்த ஆதி தானும் உடன் சிரித்துவிட்டு “அவ வாய்ஸ் கேக்கணும்னு நினைச்சா, வாயாடி என்ன என்ன எல்லாம் பேசுறா…. எவ்வளோ அசால்ட்டா சொல்றா….கோபம் வந்தது, சோ கோட் மாத்திட்டேன்னு…கொஞ்ச நேரம் கடுப்பேத்த என்னவெல்லாம் வேலை செய்றா…”

அர்ஜுன் “ஆமாடா ரொம்ப நீ கேர்புல்லா இருக்கனும்….திட்டுனவனுக்கே இந்த நிலைமைன்னா…. நீ அவளை அடிச்சும் அவ சும்மா இருக்கான்னா ஏதோ பெருசா பிளான் வெச்சிருப்பா போல… அத தெரிஞ்சுக்க எனக்குக்கூட ரொம்ப ஆவலா இருக்கு மச்சான். ” என்க ஆதி அவனை அடிக்கவந்தான்.

அன்று ஆதிக்கு வேலை அதிகம் இருந்ததால் 8.30 க்கு தா வீடு வந்து சோபாவில் அப்பாடி என அமர்ந்தான்.. அந்த நேரம் சுந்தர்க்கு திவியிடம் இருந்து கால் வந்தது. மகிழ்வுடன் அதை அட்டென்ட் செய்து “சொல்லு திவி ” என்றான்.

“….”

“அப்படியா? ”

“……………….”

“சரி, சரியா எந்த இடம்னு சொல்லு வரேன். ”

“…………………..”

“சரி, நான் கேட்டு பாக்கறேன். நீ பத்திரமா இரு” என முடித்தான்.

மதி “என்னாச்சு சுந்தர், திவியா? எங்க இருக்காளாம்?”

சுந்தர் “ஏதோ பிரண்ட் கூட போயிருக்கா அத்தை. அவங்க கொஞ்சம் எமெர்ஜெனசின்ன்னு கிளம்பிட்டாங்களாம். பஸ் வரலையாம். என்ன கூப்பிட வர சொல்றா. இடம் ஏதோ pk காலனி பக்கம்ன்னு சொல்றா. அந்த ஏரியா எங்க இருக்கு. ..ஆதியோட பைக் இருக்கா? நான் போயி கூட்டிட்டு வரேன்.” என அவன் கூற

இதை கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரி “ஏவா? போன அவளுக்கு வர தெரியாதா? கூட்டிட்டு போக உன்ன கூப்பிட்றா…?” என ஆரம்பிக்க

மதி “அண்ணி, பஸ் வரலை போல அதான் கூப்பிட்றா.” என கூற சுந்தர் “இப்போ நான் போயி கூப்பிட்டு வரேன்.. ஆதிகிட்ட …” என ஆரம்பிக்க

ஈஸ்வரி “டேய்.. இது என்னடா பழக்கம்…, அவங்க வீட்ல இருந்து யாரும் போகமாட்டாங்களா ? அது சரி இவ்வளோ நேரம் புள்ளைய வராம இருக்கறத கண்டுக்காம இருக்கும் போதே அவங்க லட்சணம் தெரியுது. உனக்கே இடம் அவ்ளோவா தெரியாதுல்ல… நீ எங்க போயி அலைவ? ஒன்னும் போகவேண்டாம். …அவளே வரட்டும்…..”

மதி “இல்ல அண்ணி, அவ எப்போவும் இப்படி பண்ணமாட்டா. காரணமில்லாம கூப்பிடவும் மாட்டா… அவ வரமுடிலேன்னு தான்…”

அவரை தடுத்து ஈஸ்வரி “அதேதான் நானும் சொல்றேன், இந்த நேரத்துல காரணமில்லாம ஒரு பையன கூப்டுவாங்களா?” என அவரது கேள்வியில் அனைவரும் அதிர்ந்து சங்கடத்துடன் நிற்க

சுந்தர் அவருடன் சண்டையிட தயாராக இதை அனைத்தையும் கேட்ட ஆதி அவர்களிடம் வந்து “அவங்க சொல்றதுல என்ன தப்பு…. இவ்வளோ நேரம் வராம வெளில இருந்தது தப்புதானே… அதுவுமில்லாம பேமிலி ஆளுங்ககிட்ட கேக்றத விட்டுட்டு மத்தவங்கள டிஸ்டர்ப் பண்றது தப்புன்னு தெரியவேண்டாம்.. ” என அவன் கூற இவன் ஒழுக்கம், கட்டுப்பாட்டை அறிந்த அனைவரும் எதுவும் பதில் கூற இயலாமல் நிற்க மதி அதோடு திவியை தவறாக எண்ணிவிட்டானா என திகைத்து பார்க்க ஈஸ்வரியும், சோபனாவும் இதுதான் சாக்கு என “நல்லா சொல்லுங்க… அவளுக்கு தான் அறிவில்லை… இவனுக்கும் இல்லாம போயிடிச்சு… அவ கூப்பிடாலாம், இவன் போறானாம்…” என்க,

சுந்தரிடம் திரும்பி “எங்க இருக்கன்னு சொன்னா? ” என கேட்க அவன் கூறியதும் அனைவரும் புரியாமல் விளிக்க “ஆதி, நீ…” என இழுக்க

ஆதி அம்மாவிடம் திரும்பி “நானே போயி அவளை கூப்பிட்டு வரேன். வந்ததும் அவளுக்கு இருக்கு…” என அவன் கோபமாக கூறியதை கேட்டு ஈஸ்வரியும் சோபனாவும் அவன் அம்மாவுக்காக தான் போகிறான், ஆனால் அவள் மேல் கோபமாக இருக்கிறான். அவள் அவ்வளோதான் என எண்ணி கொஞ்சம் மகிழ்ந்தாலும், ஏனோ சோபனாவிற்கு நெருடலாகவும் இருந்தது.

சுந்தர் தான் செல்கிறேன் என கூறியும் ஆதி “தேவையில்ல, அவளை நானே பாத்துக்கறேன்.” என சுந்தர் அமைதியாக நிற்க “உனக்கு இடம் தெரியாது… தேடி போகணும்… டைம் ஆகும்… சோ சீக்கிரம் சொன்னா நான் கிளம்புவேன்” என்றதும் அவனுக்கும் அதுவே சரியென பட பதில் கூறினான்.

இடத்தை கேட்டு அங்கே சீறி பாய்ந்தான் ஆதி… ஆமாம், உண்மையில் அவன் அத்தனை வெறியில் தான் இருந்தான். கத்திகொண்டே வண்டி ஓட்டினான். “இவளுக்கு இது தேவையா? எங்கேயாவது போனா சீக்கிரம் வர வேண்டியதுதானே? எங்க இருக்கோம்னு கூட சொல்ல தெரியல..இதுல அவனுக்கு வேற கால் பண்ணிருக்கா… அவங்க அம்மாதான் கண்டபடி பேசுவாங்கன்னு தெரியும்ல. இவளுக்கு எதுக்கு வேண்டாத வேலை… எனக்கு இல்ல அர்ஜூன்க்கு கூப்பிட்டிருக்கலாம் இல்ல அம்மாகிட்டேயாவது சொல்லலாம். அதைவிட்டுட்டு அவனுக்கு எதுக்கு கூப்பிட்டா….இருக்கு இன்னைக்கு அவளுக்கு” என கருவிக்கொண்டே சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41

41 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுன் வர இருந்த நாட்களில் வேலை முடியாததால் இன்னும் அங்கேயே தங்கவேண்டியதாக போய்விட்டது. அர்ஜுனிடம் பேசிய எவரும் அவனிடம் இதை கூறவில்லை. அவன் நேரில் வந்த பின்பு கூறிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அம்முவிற்கும் அதுவே சரியென

KSM by Rosei Kajan – 11KSM by Rosei Kajan – 11

  அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…     Premium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesFree Download WordPress Themesudemy course download freedownload lenevo firmwareFree Download WordPress Themeslynda