Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 9’

விமானத்தில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏன்டா இவனுடன் அமர்ந்தோம் என்று பீல் பண்ண ஆரம்பித்துவிட்டாள் காதம்பரி. அனைவரையும் சீட் பெல்ட் அணிந்துக் கொள்ள அறிவிப்பை எந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்த அந்த அழகான ஏர்ஹோஸ்டஸ் முகம் வம்சியைக் கண்டதும் சிவகாசிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டதைப் போல ஒளிர்ந்தது. சுற்றுப்புறத்தை மறந்து வம்சிகிருஷ்ணாவை நாடி ஓடி வந்தாள்.

“ஹாய் வம்சி…. வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்” என்றபடி தழுவிக் கொண்டாள்.

அவனும் விடாமல் “எனக்கும் சர்ப்ரைஸ் தான்… ஆனா இந்த பியூட்டி பெயர்தான் நினைவுக்கு வரல”

“யூ நாட்டி… சோனான்னு பொருத்தமான பெயர்ன்னு போனதடவை சொன்னிங்களே. என்னை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டிங்களே வம்சி” செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

அவள் சிணுங்க, அவன் சமாதனப் படுத்த… பார்க்கவே கடுப்பாக இருந்தது காதம்பரிக்கு. அத்துடன் முடிந்ததா என்றால் இல்லை. சோனாவுக்கு காதம்பரி வம்சி அருகில் அமர்ந்திருந்ததே பிடிக்கவில்லை. இருவரும் சிரித்து வேறு சகஜமாக பேசிக்கொண்டிருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவளால் முடிந்தால் ஜன்னலை உடைத்து விமானத்திலிருந்து காதம்பரியைத் தூக்கிப் போட்டிருப்பாள்.

“போன தடவை விமானத்தில் ஜன்னல் சீட்டில் உக்கார்ந்திருந்திங்களே… “

“அப்படியா”

“நீங்க வாஷ்ரூம் போகும் வழியில் கூட ஒரு குண்டு பொம்பளை காலை நீட்டி உக்கார்ந்திருந்தாங்களே… “

“நினைவில்லையே”

“அவங்க கூட இங்க உங்க பக்கத்தில் இருக்காங்களே அவங்க அளவுக்கு” என்றதும்தான் காதம்பரி, சோனா தன்னை மட்டம் தட்ட முயல்கிறாள் என்று புரிந்து கொண்டாள். தேவையில்லாத இந்த சீண்டலில் கோபம் லேசாக அவளைத் நெருங்கியது. அவளை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் என்னைப் பத்திக் கமெண்ட் பண்ற அளவுக்கு உனக்கு தைரியமிருக்கா என்ற சவால் தொனித்தது.

“சொல்லுங்க ஏர்ஹோஸ்டஸ்…. என் அளவுக்கு… “

“இல்லை இவங்களை மாதிரி சாதாரணமா இருந்தாக் கூடப் பரவால்ல… ரொம்ப குண்டா இருந்தாங்க… அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் தரும் அளவுக்கு”

“ஏன் அவங்க உங்க சாப்பாட்டை திருடி சாப்பிட்டுட்டாங்களா… அதுதான் நீங்க இப்படி இருக்கிங்களா… காத்தில் பறக்குற மாதிரி” என்றாள் காதம்பரியும் சளைக்காமல். சோனாவின் முகம் கோணலாகிவிட்டது.

“சோனா இவங்க என் பார்ட்னர்… ” தலையிட்டான் வம்சி. காதம்பரியின் உயரத்தை அந்த சாதாரண விமானப் பணிப்பெண்ணுக்கு உணர்த்திவிடும் எண்ணத்தில் வம்சி சொல்ல, எங்கே சோனாவைத் தான் தாளித்துவிடுவதர்க்கு முன் இவன் பாய்ந்து காப்பாற்றுகிறான் என்று காதம்பரி எரிச்சல் பட, அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் உச்சி வானை எட்டிப் பிடிக்கும் சூரியனைப் போல உயர்ந்தது.

“பிஸினெஸ்  பயணமா” என்றாள் சோனா.

ஆமாம் என்று தலையாட்டினான். வம்சியே பார்ட்னர் என்றதும் காதம்பரியை சீண்டும் தைரியம் அவளுக்கு மறைந்தது. அதன்பின் காதம்பரியை நேரடியாக மட்டம் தட்ட முயலவில்லை. இருந்தாலும் அவள் இருப்பதையே கண்டுகொள்ளாமல் வம்சியுடன் வளவளத்தாள்.

பயணத்தின் போது அழுத குழந்தையை சோனா சமாதனம் செய்தது, மூட்டு வலியால் நடக்க அவதிப்பட்ட முதியவரை நடத்தி சென்று பாத்ரூமில் விட்டது, இன்முகத்தோடு சலிக்காமல் அனைவருக்கும் உதவி செய்தது என்று அவளது பிரதாபங்களை அடுக்கி அவனுக்கு தன்னைப் பற்றி நினைவூட்டினாள். இவள் நினைவு படுத்துகிறாளா இல்லை மார்கெட்டிங் செய்கிறாளா என்று சந்தேகம் காதம்பரிக்கு.

ஒரு தடவை பயணம் செய்ததிலேயே இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறதா.. என்று வியப்பாக இருந்தது, அதன்பின் சிறிதும் இடைவேளையின்றி அந்த நாடகம் தொடர்ந்தது. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அவளுக்கு வம்சியிடம் கேட்க ஏராளமான சந்தேகங்கள் இருந்தன.

“இதென்ன எக்கனாமிக் கிளாஸில் பயணம்…”

“உன்னை சந்திக்கத்தான்னு வச்சுக்கோ சோனா…”

“பொய் சொல்லாதிங்க… என் பெயரைக் கூட மறந்துட்டிங்க… “

“இனிமே மறக்கமாட்டேன்”

“பெயர் மட்டுமில்லை வம்சி நானும் உங்க மனசில் எப்போதும் இருக்கணும்”

பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் காதம்பரி. இந்த ஷோக்கு சுந்தரி சோனா வருவாள் என்று தெரிந்திருந்தால் முதல் வகுப்பிலேயே அமர்ந்திருப்பாள். இந்த இம்சிக்கு கால்வலி வந்தால் என்ன, இல்லை…. தலையே போனால்தான்  எனக்கென்ன. அவனை கவனித்துக்கொள்ளத்தான் ஒவ்வொரு விமானத்திலும் ஒருத்தி இருப்பாள் போலிருக்கிறதே.

ஒரு வழியாக தன்னுடன் பயணிக்கும் பெண்ணிடம் பார்வையைத் திருப்பினான் வம்சி.

“அப்பறம் காதம்பரி… பெங்களூர் போயிருக்கியா”

“நாலஞ்சு தடவை… பிஸினஸ் விஷயமா..”

“அதனால்தான் எல்லா ஏற்பாடையும் நீயே கவனிக்கிறேன்னு சொன்னியா”

“ஆமாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் பேசுவது பொறுக்காமல்

“வம்சி பியூர் ஆர்கானிக் ஆப்பிள் ஜூஸ்” என்றபடி வந்தாள் சோனா.

“ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா… இந்த வகை ஜூஸ் ஆஸ்ட்ரேலியாவில்தான் கிடைக்கும். எனக்குன்னு ஸ்பெஷலா போஸ்ட் பண்ணுவாங்க” என்றாள் வம்சியின் தோள்களைப் பற்றி அவன் காதில் ரகசியம் பேசுவதைப் போல. ஒரு கோணத்தில் பார்த்தால் இந்தக் காட்சி முத்தமிடுவதைப் போலவே தெரியும்.

“தாங்க்ஸ்” என்று வாங்கியவன் காதம்பரியிடம் நகர்த்தினான்.

“இன்னொரு கப் கிடைக்குமா” எனக் கேட்க

“ஒண்ணு மட்டும்தான் எடுத்துட்டு வந்தேன்”

அவளை கேள்வியாகப் பார்க்க

“பிளைட் கிளம்பி அரைமணி நேரமாகப் போகுது. ரெகுலர் ஸ்நாக்ஸ் வித் ஜூஸ் தர இன்னும் நேரமாகும். அதுக்குள்ள உங்களுக்கு டீஹைடிரேட் ஆயிடக் கூடாதுன்னு ஸ்பெஷலா எனக்குன்னு வாங்கினதை எடுத்துட்டு வந்தேன். நீங்க என்னடான்னா வேற யாருக்கோ தந்துட்டிங்க… ” என்று சிணுங்கினாள்.

காதம்பரிக்கு அவமானமாகப் போயிற்று “வம்சி எனக்கு வேண்டாம் நீங்களே குடிங்க”

“ஹே காதம்பரி… இதென்ன… “

“இந்த ரெண்டு மணி நேரத்தில் நான் டீஹைட்ரேஷன்ல செத்துட மாட்டேன். அவங்க ஆசையா தந்ததை நீங்கதான் குடிக்கணும்” என்று அவன்புறம் நகர்த்தி வைத்து விட்டாள்.

“சோனா, என்னோட பார்ட்னர் குடிக்காம நான் குடிக்கிறது அவங்களுக்கு செய்ற அவமரியாதை. ப்ளீஸ் எடுத்துட்டு போய்டு”

காதம்பரியை கொலைவெறியுடன் முறைத்தவாரே  ஜூசை எடுத்தாள் சோனா.

“இன்னொரு விஷயம் சோனா… ரெண்டு பேர் வந்திருக்கும்போது ஒருத்தருக்கு மட்டும் ஸ்பெசல் கவனிப்பு தருவது நாகரீகமாகாது” என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்தான்.

அதே தொனியில் “நீ கொஞ்சம் பொறுமையா நடந்திருக்கலாம் காதம்பரி” என்று அருகில் இருப்பவளிடமும் அறிவுரையை வீசினான்.

“பொறுமையா உக்கார்ந்து…. இது வரைக்கும் அப்படித்தானே இருந்தேன். லுக் வம்சி நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க அது  என்னை அபெக்ட் பண்ணாத வரைக்கும் ஒகே”

“இப்ப என்ன உன்னை அபெக்ட் பண்ணுச்சு?”

“நானும் பிளைட் கிளம்பினதிலிருந்து  காதல் நாடகத்தை பாத்துட்டுத்தானே வரேன்….. உங்ககிட்ட ஜூஸ் கேட்டேனா… அவ ஆசையோட தந்தா நீங்க அதைக் குடிச்சுட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு என்கிட்டே தந்து, அவ இல்லை இது உனக்கு மட்டும்தான்னு சொல்லி, ரெண்டு பேரும் சேர்ந்து அவமானப்படுத்துறிங்களா”

“உன்னை அவமானப் படுத்துறது என்னையே நான் இன்சல்ட் பண்ணிகிரமாதிரி. கூல் பேபி… பீ கூல்… ஆமாம் இதென்ன அசிங்கமா காதல் நாடகம்னு சொல்ற”

“ஆஹா…. இதுக்கு பெயர் என்ன சகோதர பாசமா?”

“ச்சே… இது அதை விடக் கேவலமா இருக்கு. உனக்கு தெளிவா சொல்றேன்.

முதல்நாள் நீ உன்னோட பிரசென்டேஷனில் சொன்ன மாதிரி ஒரு பலசாலியான ஆணை மணக்கவே பெண்கள் விரும்புவார்கள். இந்த இடத்தில் என்னோட பணம்தான் பலம்ன்னு வச்சுக்கோயேன். அது அந்த சோனாவை ஈர்த்திருக்கு. என்னோட கவனத்தை பெற ட்ரை பண்றா. என் மனசைக் கவர்ந்த பெண்ணை நானும் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணுவேன். சோ ஆணைப் பெண் ஈர்க்க முயல்வதும், அழகான பெண்ணை ஆண் ஈர்க்க முயல்வதும் இயற்கை. மனசைப் பூட்டி வச்சுக்காம இந்த உண்மையை அப்படியே ஏத்துக்கோ”

அவனை முறைத்து விட்டு, பைனான்ஷியல் டைம் பேப்பரை பிரித்து கண்களை அதில் பார்வையை  ஓட விட்டாள் காதம்பரி.

“சரிவிடு, இதெல்லாம் உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்காது. ஏன்னா இதில் சோனாவுக்கு இருக்குற சாமர்த்தியம் உனக்கெல்லாம் இல்லை. சில விஷயங்கள் இயற்கையாவே வரணும். ஒரு நாளைக்கு இருவத்திநாலுமணி நேரமும் கடினமா உழைச்சாலும் உன்னால் கத்துக்க முடியாது. சுத்தமா வரவும் வராது.” என்று வம்சி கிண்டலாய் சொல்லவும் வெகுண்டெழுந்தாள்.

“இந்த மாதிரி ஆளை மயக்குற வேலை எனக்கு அவசியமும் இல்லை அதுக்கு நான் முக்கியத்துவமும் தரல. அதுக்காக வராதுன்னு கேவலமா பேச வேண்டாம்”

“அப்ப வரும்னு சொல்றியா… ஒரு போட்டி வச்சுக்கலாம். நம்ம ஊருக்கு மறுபடி போறதுக்குள்ள ஒருத்தனை உன் பின்னாடி சுத்த வை அப்ப நீ சாமர்த்தியசாலின்னு நம்புறேன்”

காதம்பரியின் தன்மானத்தை சீண்டிவிட, அவனது சவாலை உடனடியாக ஏற்றுக் கொண்டாள். அதன் பலன் வம்சிக்கு அன்றே தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: