
வணக்கம் தோழமைகளே,
ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’.
மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப் படிப்பவன் அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்டக் காகிதம் என்றும் அதில் புதையல் பற்றிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிகிறான். அவனது புதையல் தேடல் என்னவாயிற்று என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.