வணக்கம் பிரெண்ட்ஸ்,
‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என் முயற்சி ஓரளவு பலித்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் மனதுக்கு மிகவும் நிறைவு தந்த கதை இது.
உமைபுரம் மக்களின் வாழ்க்கை முறை, காட்டு வழிப் பயணம் பற்றிய தகவல்கள், ஸ்ரீசக்ரம் தொடர்பான விவரங்கள், இன்றும் வெப்சைட் மூலம் மாந்த்ரீகம் கற்றுத் தரவும், பில்லி சூனியம் ஏவல் வைக்கவும் அழைப்பு விடுக்கும் ஆட்கள், இப்பொழுதும் உலகில் தொடரும் பேய்க்கல்யாணம் என்ற மூட நம்பிக்கைகள் என்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பாய் எண்ணுகிறேன்.
இந்தக் கதை தொடங்கியதிலிருந்து ஒரு பகுதி விடாமல் படித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, ஆன்மிகம் சம்பந்தமான செய்திகளை மெயில் செய்து என்னை ஊக்குவித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இனி இறுதிப் பகுதி
கதையில் ஸ்பெல்லிங் திருத்தங்கள் மற்றும் ட்ரிம் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த சமயத்தில் லிங்க்கை டிஸ்ஏபில் செய்து விடுவேன்.
எனது கமிட்மென்ட்ஸ் காரணமாக இடைவெளிக்குப் பின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன். மற்ற கதையான ‘காதல் வரம் யாசித்தேன்’ வழக்கம் போலப் போஸ்ட் ஆகும்.
அன்புடன்,
தமிழ் மதுரா.



Latha Karthik
மிக அழகான படைப்பு. நிறைய விஷயங்களை எங்களுக்கு அறிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அருமையான கதை.